முதற்பகுதி : உதயம்
அத்தியாயம் 6. பள்ளிக்கூடத்து நிழல் மேட்டுத் தெருவுக்கு வெகு சமீபத்திலுள்ள பிள்ளைமார் தெருவிலோ அக்கிரகாரத்திலோ ஏதோ சொல்பந்தான் என்றாலும் கொஞ்சமாவது ‘உடையவர்கள்’ வீட்டிலே சோமசுந்தரம் பிறந்திருப்பானேயானால், ஐந்து வயசு ஆனவுடனே அவனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்திருப்பார்கள். விஜயதசமி அன்று மேளங்கொட்டி, அவனுக்குப் புது ஆடைகள் உடுத்துத் தெருவிலுள்ள சிறுவர்களை எல்லாம் கூப்பிட்டுக் கை நிறையப் பொரிகடலை கொடுத்து, ஊரிலுள்ள பெரியவர்களை எல்லாம் கூப்பிட்டுப் பாயாசம் வடையுடன் விருந்து செய்வித்து, ஏகப்பட்ட தடபுடல்களுடன் ஊரிலுள்ள ஒரே பள்ளிக்கூடத்துக்குப் பையனை அனுப்பி வைத்திருப்பார்கள். இரண்டு மூன்று வருஷங்கள் அந்தப் பள்ளிக்கூடத்திலே படிப்பான் பையன். அதற்குள் பெற்றோரும் மற்றோரும், “படிப்பால் என்ன பிரயோசனம்?” என்று கேட்கத் தொடங்கி விடுவார்கள். வீட்டையோ வயலையோ கடையையோ கண்ணியையோ பார்த்துக் கொள்வது படிப்பதை விட இலாபமாக இருக்கும் என்று பையனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவார்கள். விடாமல் படித்துப் புரட்டியவர்கள் பலருடைய பிற்காலத்து வாழ்க்கையைக் கவனிக்கும் போது உண்மையிலேயே படிப்பை நிறுத்தி விட்டதுதான் சரியான காரியம் என்று ஒப்புக்கொள்ள யாருக்குமே ஆக்ஷேபம் இராது. பள்ளிக்கூடத்தில் இரண்டு மூன்று வருஷங்கள் படித்து அறிந்து கொண்ட எல்லாவற்றையும் பையன் இரண்டு மூன்று வாரங்களிலே மறந்து விடுவான். இதற்கு விலக்காக உள்ளவர்கள் சில ஐயர் வீட்டுப் பிள்ளைகள்தாம். சாத்தனூர் பள்ளிக்கூடத்தை முடித்துக்கொண்டு கும்பகோணத்துக்குக் கட்டுச் சாதம் கட்டிக்கொண்டு போய்ப் பெரிய பள்ளியிலே படிப்பார்கள். அதிலும் படித்துப் பாஸ் பண்ணிய பிறகு பட்டணம் கோயம்புத்தூர் என்று எங்கெங்கேயோ வேலைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு படிக்காமலே ஊரிலே தங்கிவிட்டவர்கள் சுலபமாகவே நல்ல இலாபம் அடைவார்கள். கும்பகோணத்தில் பெரிய பள்ளிப் படிப்புப் படித்து முடிந்த பின்கூட திருப்தி அடையாமல் தஞ்சாவூர், பட்டணம் என்று போய் இன்னும் மேலான படிப்புப் படித்தவர்களும் சர்வமானிய அக்கிரகாரத்துப் பையன்களிலே சிலர் உண்டு.
ஏதோ ஒருநாள் பிள்ளைமார் தெருவிலே பையனைப் பள்ளிக்கு அனுப்பும் கல்யாணம் ஒன்று நடந்தது. தெருவில் தூரத்தில் நின்றபடியே அந்தக் கல்யாணத்தைப் பார்க்கும் பாக்கியம் சோமுவுக்கு கிட்டியது. பிள்ளைமார் தெருப் பணக்காரர்கள் வீட்டுப் பையன் ஒருவனை அன்று, நாள் பார்த்துப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அதிகாலையிலிருந்து நண்பகல் வரையில் மேளகார ராமசாமி ஊதித் தள்ளிவிட்டான்; தவுல்காரன் தவுலைக் கையாலும் கோலாலும் மொத்தித் தள்ளிவிட்டான். பொரியும் கடலையும் இது ஒரு பதக்கு அது ஒரு பதக்கு கலந்து போன இடம் தெரியாமல் போய் விட்டன. இருநூறு பேருக்குமேல் வந்து விருந்து சாப்பிடக் காத்திருந்தார்கள். தெருவிலே தூரத்தில் இருந்தபடியே ஐந்தாறு வயசுப் பையன் ஒருவன், நாய்கள் பார்ப்பதுபோல ஆவலுடன் பார்த்துக்கொண்டு நிற்கிறானே, அவனைக் கூப்பிட்டு ஒரு பிடி பொரி கடலை கொடுக்கலாம் என்று கல்யாணத்திற்கு வந்திருந்த பக்கத்துக் கிராமத்து மிராசுதார் ஒருவர் அவனை அழைத்துக் கை நிறையப் பொரியும் கடலையும் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு என்றும் இல்லாத தன் அதிருஷ்டத்தைப் பாராட்டி வியந்துகொண்டே சோமு தன்னுடைய பழைய இடத்துக்குத் திரும்புகையில் கலியாண வீட்டுக்காரர் அவனைப் பார்த்துவிட்டார். “அந்தச் சோமுப் பயலை யாருடா இங்கே வரவிட்டது? கறுப்பன் மவன்தானேடா அவன்? ஏதாவது சமயம் பார்த்து அடிச்சுண்டு போய்விடுவானேடா! சந்தனப் பேலா எங்கே? இருக்கா... சரி... அடிச்சு விரட்டு அந்தப் பயலை!” என்று ஊரெல்லாம் கேட்கும்படியாகக் குரல் கொடுத்தார் அவர். சோமு திரும்பி ஒரு விநாடி அவரையே பார்த்துக்கொண்டு நின்றான். ஆட்கள் யாராவது வந்து விடும் வரையில் அங்கே காத்திருக்க அவன் தயாராக இல்லை. யாரும் தன்னை நோக்கி வரும்முன் ஒரே பாய்ச்சலில் பந்தலுக்கு வெளியே போய்விட்டான். மறுபடியும் நின்று திரும்பிப் பார்த்தான். தன் கையிலிருந்த அவர்கள் வீட்டுப் பொரியையும் கடலையையும், மண்ணை வாரி இறைப்பது போலப் பந்தலுக்குள் எறிந்தான். அவர்களுடைய சொத்தில் எதுவும் தன் கையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்கூட அவனுக்கு இஷ்டமில்லை போலும். கையோடு கையைத் தட்டித் தேய்த்து இடுப்பிலே கட்டியிருந்த வேட்டியிலே துடைத்துக் கொண்டான். தூரத்திற்கு, தன்னுடைய பழைய இடத்திற்கு நகர்ந்தான். இவ்வளவையும் கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்த அயலூர்க்காரர் மறுபடியும் சோமுவைக் கூப்பிட்டுப் பொரியையும் கடலையையும் கொடுத்தார். தமக்குள் சொல்லிக்கொண்டார்; “கெட்டிக்காரப்பயல்! ரோஷக்காரப் பயல்! பின்னர் பெரிய மனுஷன் ஆனாலும் ஆவான்! அல்லது குடித்து ரௌடியாகத் திரிந்துவிட்டு உயிரை விடுவான். உம்... இந்தப் பயலைப் படிக்கவச்சால் உருப்படுவான்... உம்... அவனைக் கண்டாலே இப்படிப் பயப்படுகிறார்களே! பலே பயல்தான் போலிருக்கு!” என்று தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டார் அவர். ஆனால் அடுத்த இரண்டொரு வினாடிக்குள்ளாகவே அந்தப் பயலுடைய ஞாபகம் அவருக்கு அற்றுப் போய்விட்டது. அதற்குள் அவரை விருந்து சாப்பிட அழைத்துப் போய் விட்டார்கள். எவ்வளவு நேரம் சாப்பிட்டார்கள் விருந்தாளிகள்! ஒன்றரை நாழிகை நேரம் சாப்பிடும்படியாகப் பலமான விருந்துதான் போலும்! எச்சிலிலைகள் வந்து விழுந்த உடனே குறப்பாளையத்துக்கும் நாய் மந்தைக்கும் பாரதப்போர் தொடங்கியது. குறப்பாளையந்தான் இறுதி வெற்றி அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா? இந்தப் பாரதப் போரின் சுவாரசியத்திலே ஈடுபட்டு நின்றான் சோமு. அதற்குள் கலியாண வீட்டிலே மீண்டும் மேளம் கொட்டத் தொடங்கிவிட்டது. பையனைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடுவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். முதலில் மேளக்காரர்கள் வாசித்துக் கொண்டே தெருவில் வந்து நின்றார்கள். விருந்து சாப்பிட்ட சிரமத்தைப் பொருட்படுத்தாத சில விருந்தாளிகளும் திண்ணையை விட்டு இறங்கித் தெருவிலே நின்றார்கள். பள்ளிக் கூடத்தில் சேர வேண்டிய பையனும் வந்து சேர்ந்தான். மாங்காய் மாங்காயாகச் சரிகை வேலை செய்த சிவப்புப் பட்டு உடுத்தியிருந்தான் அவன். மேலே ஒரு சீட்டித் துணிச் சொக்காய். அந்தச் சீட்டியிலே பெரிய பெரிய பூக்கள் போட்டிருந்தன. அவன் தலையைப் படிய வாரிச் சீவிப் பின்னி விட்டிருந்தார்கள். எலிவால் போன்ற சடையின் நுனியைச் சிவப்புப் பூநூல் அலங்கரித்தது. பையனுடைய கறுத்த நெற்றியிலே கறுப்புச் சாந்துப் பொட்டு ஒன்று ஒளியிழந்து தெரிந்தது. பெண்களின் கூந்தலிலே வைப்பதுபோல ஒரு மல்லிகைச் சரத்தை அவன் தலையிலே வைத்திருந்தார்கள். வால் பெண் ஒன்று அது அவன் அக்காளாக இருக்கும் பையன் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருந்த போது அவனுடைய எலிவால் சடையை வெடுக்கென்று இழுத்து விட்டு ஓடிப் போய்விட்டாள். பையன் மிரள மிரள நாலாபக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான். கால் நடையாகவே ஊர்வலம் கிளம்பியது. பள்ளிக்கூடம் பக்கத்துத் தெருவிலேதான் இருக்கிறது. சர்வமானியத் தெருவின் மேலண்டைக் கோடியில் உள்ள மாடி வீடுதான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தின் சொந்தக்காரர், ஹெட்மாஸ்டர், பிரதம உபாத்தியாயர் எல்லோரும் சுப்பிரமணிய ஐயர் என்பவர்தாம். அவருக்கு உதவி செய்ய இன்னோர் உபாத்தியாயரும் இருந்தார் ஆனால் அவர் அவ்வளவாக உதவி செய்தார் என்று சொல்வதற்கில்லை. சுப்பிரமணிய ஐயருடைய வீட்டு மாடிதான் சாத்தனூர்ப் பள்ளிக்கூடம். அதே வீட்டில் கீழ்ப்பகுதியில் அவர் வசித்து வந்தார். பள்ளிக்கூடத்திலே சுமார் ஐம்பது அறுபது பையன்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து வயசிலிருந்து பதினைந்து வயசு வரையில் இருக்கும். பள்ளிக்கூடத்துப் பையன்கள் எல்லோரும் அன்று தங்களுடன் வந்து சேர இருந்த புதுப் பையனைப் பார்ப்பதற்கு ஆவலாக, தெருவிலே மேளச் சப்தம் கேட்டவுடன், மாடி ஜன்னல்கள் மூன்றையும் அடைத்துக் கொண்டு நின்றார்கள். புதுப் பையன், பணக்கார வீட்டுப் பையன் அன்று வந்து சேரப் போகிற செய்தி காலையிலேயே சுப்பிரமணிய ஐயருக்குத் தெரியும். ஆகவே அவர் பள்ளிக்கூடத்தையும் பையன்களையும் தம் உபாத்தியாயரிடம் ஒப்பித்துவிட்டுப் பிரம்பும் கையுமாக வீட்டுத் திண்ணையில் வந்து நின்றார் புதுப் பையன் ஊர்வலத்தை எதிர்பார்த்துக் கொண்டு. ஊர்வலம் மாடி வீட்டு வாசலில் வந்தவுடன் திண்ணையிலிருந்து சுப்பிரமணிய ஐயர் இறங்கி ஆளோடியில் இரண்டடி முன் வந்து “வா ராமசாமி வா” என்று பையனின் தகப்பனை வரவேற்றார். அந்தப் பையனின் தகப்பன் ராமசாமியும் முன் பல வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய ஐயரிடம் படித்தவன்தான். கையில் சந்தனப் பேலாவை எடுத்து அவருக்குச் சந்தனம் கொடுத்தார் ராமசாமி. பிறகு ஒரு வெற்றிலைத் தட்டில் நிறைய வெற்றிலையும் பாக்கும் மஞ்சளும் வைத்து அதிலே ஒரு ஜோடி சேலம் பட்டுக்கரை வேஷ்டியும் சாத்தனூர்ப் பட்டுப் புடைவை ஒன்றையும் ரவிக்கை ஒன்றையும் வைத்து அவரிடம் கொடுத்தார். வாத்தியார் ஐயா அதை வாங்கித் திண்ணையில் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு பையனையும் பையனுடைய தகப்பனாரையும் ஆசீர்வதித்தார். புதுப் பையனும் அவனுடைய தகப்பன் ராமசாமியும் சுப்பிரமணிய ஐயரை விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்தார்கள். மீண்டும் ஒரு முறை அங்கிருந்தவர்கள் எல்லோருக்கும் சந்தனமும் சர்க்கரையும் வெற்றிலை பாக்கும் வழங்கப்பட்டன. வாத்தியார் ஐயாவால் அல்ல பையனின் தகப்பன் செலவில் அவரால்தாம். பிறகு பள்ளிக்கூடத்துப் பழைய பையன்களுக்கென்று கொண்டு வரப்பட்டிருந்த பதக்குப் பொரியும் கடலையும் மாடிக்குக் கொடுத்தனுப்பப்பட்டன. சற்று நேரத்துக் கெல்லாம் மாடி ஜன்னல்கள் ஒன்றிலும் பையன்கள் யாரும் இல்லை என்பதில் ஆச்சரியம் என்ன? இவ்வளவையும் கவனித்துக் கொண்டே சோமு நெருங்கி வரப் பயந்தவனாக எதிரே இருந்த வேலியோரமாக ஒரு பூவரச மர நிழலில் நின்றான். பூவரச மரக்கிளை ஒன்றிலிருந்து அவன் தலைக்கு நேரே நூல்விட்டுக்கொண்டு ஒரு கம்பளிப் பூச்சி ஊசலாடிக் கொண்டிருந்ததை அவன் கவனிக்கவில்லை. சாத்தனூர் மாடிப் பள்ளிக்கூடத்து நிழலிலே சுவரில் சாய்ந்து கொண்டு நின்றபடியே பகற் கனவுகள் காணத் தொடங்கினான் சோமு. அவன் அப்பொழுது கண்ட கனவுகளை விவரிப்பதென்பது ஆகாத காரியம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லலாம். அவனுடைய வாழக்கையிலே முதல் ஆசை, முதல் லக்ஷ்யம், உருவாகிவிட்டது. அவ்வளவு சிறு வயசிலேயே அவன் தனக்கென்று ஒரு லக்ஷ்யத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டான். பள்ளியிலே தானும் படித்துப் பெரியவனாகி... படித்துப் பெரியவனானபின் என்ன செய்வது என்று முடிவு செய்வதற்கு முன் அவன் நின்றபடியே கண்களை மூடிவிட்டான். பகற் கனவுகளிலிருந்து உண்மைக் கனவுகளுக்குத் தாண்டி விட்டான். இப்படிச் சுவரில் சாய்ந்தபடியே நின்று தூங்கிக் கொண்டிருக்கும் பையனைக் கண்டால் எந்த உபாத்தியாயரானாலும் என்ன செய்வாரோ அதைத்தான் அரை நாழிகை நேரம் கழித்துக் கீழே இறங்கி வந்த சுப்பிரமணிய ஐயர் செய்தார். தம் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த சோம்பேறிகளில் அவனும் ஒருவன் என்று எண்ணியதில் தவறில்லை. சோமுவின் இன்பக் கனவுகளைக் கிழித்துக்கொண்டு ‘சுளீர்’ என்று ஒரு சப்தம் கேட்டது. ‘பளீர்’ என்று ஓர் அடி முதுகிலே விழுந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்ட சோமு, எதிரே பிரம்பும் கையுமாக நின்ற சுப்பிரமணிய ஐயரை ஒரு தரம் பார்த்தான். பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டதே தவறு. பள்ளிக்கூடத்தின் நிழலிலே ஒதுங்கிச் சிறிது நேரம் நின்றதுகூடத் தவறு என்று ஒப்புக்கொண்டவன் போல, வில்லிலிருந்து விடுபட்ட அம்புபோல ‘ஜிவ்’ வென்று பாய்ந்து ஓடி சர்வமானிய அக்கிரகாரத் தெருத் திரும்பி மறைந்துவிட்டான். தம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பையன் அல்ல அவன் என்று சுப்பிரமணிய ஐயருக்குத் தெரிய இரண்டு வினாடி நேரம் ஆயிற்று. அதற்கும் இரண்டு விநாடி கழித்துத்தான் அப்படித் தம்மிடம் அடி வாங்கிக்கொண்டு ஓடிப்போனது மேட்டுத்தெருக் கறுப்பன் மகன் சோமு என்பதை உணர்ந்தார். முதலில் அவர் அதைக் கவனித் திருந்தாரானால் அவனை அடித்தே இருக்க மாட்டார். அவனிடமும் கறுப்ப முதலியிடமும் உபாத்தியாயர் சுப்பிரமணிய ஐயருக்கு எப்பொழுதுமே கொஞ்சம் அநுதாபம் உண்டு. அவர் ‘உடையவர்கள்’ கோஷ்டியைச் சேர்ந்தவர் அல்ல. ஊரில் மற்றவர்களெல்லோரும் கறுப்பன் மகன் என்பதற்காகச் சோமுவை எப்படி நடத்தினார்கள், என்ன என்ன சொன்னார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவனை அவர் அப்படி அடித்திருக்க வேண்டியதில்லைதான்! அடி என்னவோ அவரையும் மீறியே பலமாகத்தான் விழுந்து விட்டது. சிரித்துக் கொண்டே தம் வீட்டுக்குள் போனார் சுப்பிரமணிய ஐயர். “அடியே!” என்று தம் மனைவியைக் கூப்பிட்டார். “இதோ பார்!... அந்த மேட்டுத்தெரு கறுப்பன் பிள்ளை சோமு எப்பவாவது இந்தப் பக்கம் வந்தானானால் சாதம் கீதம் மிச்சம் இருந்தால் போடு! பாவம்; சாப்பாடே இல்லாமல் கஷ்டப்படறதுகளோ என்னவோ!” என்றார். “வள்ளியம்மை அந்த ரங்கராயர் ஆத்திலே வேலை செய்கிறாள். சாப்பாட்டுக்கு ஒரு குறையும் வைக்க மாட்டார் அந்த ராயர். ஆனால் இப்போ என்ன அந்தப் பயலைப்பற்றி ஞாபகம் வந்தது உங்களுக்கு?” என்று விசாரித்தாள் அவர் மனைவி ஜானகியம்மாள். சற்றுமுன் நடந்ததைச் சொன்னார் சுப்பிரமணிய ஐயர். அவர் சிரித்துக்கொண்டேதான் சொன்னார் என்றாலும் அனாவசியமாக ஒரு சிறு பையனை அடித்துவிட்டதைப் பற்றி எவ்வளவு வருத்தப்பட்டார் என்பது அவர் சொன்ன மாதிரியிலிருந்தும் குரலிலிருந்தும் நன்கு தெரிந்தது. “ஐயோ பாவம்!” என்றாள் ஜானகியம்மாள். சற்று நேரம் கழித்து அவள் “நல்ல வாத்தியார் வேண்டியிருக்கு! எப்போ பார்த்தாலும் பிரம்பும் கையுமாக!... இப்படிக் கொடுங்கோ பிரம்பை அதை முறித்து அடுப்பிலே போட்டுவிடறேன்!” என்றாள். “ஆத்திலே ஆரம்பிச்சூடாதேயுங்கோ! மாடிக்குப் போங்கோ!” என்றாள் அவர் சகதர்மிணி. “ஆத்திலே ஆரம்பிக்கிறதாகத்தான் உத்தேசம்! அதுக்காகத்தான் இப்போ கையோடு பிரம்பைக்கூடக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லிக்கொண்டே சிரித்துக்கொண்டு தம் மனைவியை அணுகினார் சுப்பிரமணிய ஐயர். “எங்கள் வாத்தியார் ஐயாவுடைய சமத்தைப் பார்த்து யாராவது நாப்புக் காட்டப்போறா! அசடு வழியாமே போங்கோ” என்று சொல்லிவிட்டு ஜானகியம்மாள் சமையலறைக்குள் போய் விட்டாள். சுப்பிரமணிய ஐயரும் மாடிக்குப் போய்விட்டார். |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |