அத்தியாயம் 15. விடிந்தால் கல்யாணம் மகாசமுத்திரத்தில் கப்பல் உடைபட்டுத் திக்குத் திசையற்றுத் தவிப்பவன்போல், வேலன் தத்தளித்தான். நட்டுவாய்க்காலி கொட்டினால் படும் துன்பத்தை அவன் அறிவான். அப்பொழுது, நூறு நட்டுவாய்க்காலிகள் ஒரேகாலத்தில் தன்னைக் கொட்டுவது போல் அவனுக்குப் புலப்பட்டது. ஒரு சமயம், தான் இறக்கைகள் பூண்டு ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட் டது. மறுநிமிஷத்தில், படுபாதாளத்தில் தள்ளப்பட்டு மூச்சுக்கூட விட முடியாமல், தான் கடகடவென்று உருண்டு போவதுபோலத் தோன்றிற்று. யாராகிலும் அவனுக்கு என்ன கஷ்டமென்று அவனைக் கேட்டிருந்தால், அவனால் இன்னதென்றுகூடச் சொல்ல முடியாது. இருகைகளாலும் தன் தலையை இறுகப்பிடித்துக் கொண்டு, தன் மனக்குழப்பத்திலிருந்து தப்ப அவன் முயன்றான். ஆனால், நினைக்க நினைக்கக் குழப்பம் அதிகரித்ததே யொழியக் குறையவில்லை. பிறகு, படிப்படியாக அவனுக்கும் புத்தி ஸ்திரம் ஏற்பட்டது; தன் துக்கத்திற்குக் காரணங்கள் என்ன என்பதையும் அவன் ஒருவாறு உணர்ந்தான்.
‘நன்னி நன்னிட்டு அடிச்சுக்குராறே, அது என்ன பேச்சு? நானா நன்னி கெட்டவன்? நான் என் நன்மைக்கா விக்கச் சொன்னேன்? எவ்வளவு அல்பம்! சோறு தண்ணி கொடுத்து வளத்துட்டா மட்டும் எது வேணும்னாலும் சொல்லலாமா? ஐயோ கடவுளே! நான் இப்படியும் பொளைக்கணுமா?’ என்று அவன் கதறினான். வெங்கடாசலத்தின் மீது ஒருவிதமான வெறுப்பும் அவனுக்கு உண்டாயிற்று. மனம் இந்நிலைமையில் தவிக்கும்பொழுது, அவன் தான் பிறந்து வளர்ந்த விஷயங்களைப் பற்றி நினைக்கலானான். ஆனால், அந்நினைப்பு அவன் துக்கத்தை அதிகப்படுத்தியதேயொழிய குறைக்கவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து இதுவரையிலும் தனக்குத் தன் ‘அப்பா’ செய்த நன்மைகளையும், தன்மீது அவன் பாராட்டிய அன்பையும் சற்றும் யோசியாமல், இப்பொழுது அவன் மீது கெட்ட அபிப்பிராயப்படுவது நியாயமாவென்று அவன் சிந்தித்தான். ஒருவேளைகூட வேலனை விட்டுவிட்டுப் புசிக்கமாட்டானே! அஸ்தமனமான சிறிது நேரத்திற்கெல்லாம் வேலன் வீட்டிற்கு வராவிடில், ஊரெங்கும் தேடி அவனைக் காணும்வரை ‘அப்பா’ வுக்குச் சாந்தி இராதே! அப்படிப்பட்டவனுக்கு இப்பொழுது திடீரென்று புத்தி மாறுவானேன்? ஏதாவது பேய் பிசாசு பிடித்து விட்டதா! - மறு வினாடியில், அப்பேய் மாயாண்டி உருவமாகத் தோன்றியது? ஆமாம்! அந்த மாயாண்டிப் பேய்தான்! சந்தேகமில்லை; தன் வீட்டைக் கெடுக்க, தன் ‘அப்பா’வின் மூளையைச் சிதற அடித்தது அதுதான்! ஆனால், அதனுடைய எண்ணத்தை நிறைவேற விடலாமா? ஒருகாலும் கூடாது; தன் உடலில் ஆவி உள்ளவரையில் அது நடக்காது! - திடீரென்று அவன் எழுந்தான். கை கால்களை உதறிக் கொண்டான். பிறகு, தன்முன் யாரோ நிற்பதுபோல் கண்ணடித்தான். மறுநிமிஷம், குத்துச்சண்டை செய்பவன்போல் அவன் இருகைகளாலும் குத்தத் தொடங்கினான்; பிறகு, அவன் இடி இடியென்று சிரித்தான். அப்பொழுது அவன் நடத்தையைப் பார்த்தவர்கள், அவன் மதி கெட்டவனென்றே நினைத்துக்கொள்வார்கள். அரிவாளை முத்தமிட்டு அதை இடுப்பில் செருகிக்கொண்டு, ஒரு குதி குதித்து அவன் வீட்டை விட்டு வெளியே சென்றான். அவ்வூருக்கு முன் ஒரு சிறு வாய்க்கால் உண்டு. அதற்கு ஒரு சிறிய பாலம் இருந்தது. இப்பாலத்திற்கு அருகில், காற்றினால் கீழே விழுந்த ஒரு தென்னைமரம் காய்ந்துகிடந்தது. வேலன் இதன்மேல் உட்கார்ந்துகொண்டு, தன் அரிவாளைத் தீட்டிக் கொண்டிருந்தான். அரிவாளைச் சரியாகப் பதன்படுத்துவதற்காகத் தன் காலின் கீழ் இருந்த நொய் மணலை அடிக்கடி அவன் தூவிக் கொண்டிருந்தான். அவன் இவ்வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, ஆறுமுகமும் மாசிலாமணியும் ஊருக்கப் புறமிருக்கும் கள்ளுக்கடையை நோக்கி, அவ்வழியே வந்து கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் வருவதைப் பார்த்த வேலன், அவனைக் கூப்பிட்டு, “ஏ மாமா, என்னாத்துக்கு அருவாளைத் தீட்டுறேன், தெரியுமா?” என்று கேட்டான். “ஓகோ! யாரூட்டுத் தென்னை மரத்துலேயோ பெருத்த குலையாய்த் திருடப் போராயாங்காட்டியும்,” என்று ஆறுமுகம் சிரித்தான். “இல்லே இல்லே, யோசித்துச் சொல்லேன்,” என்று வேலன் கண்ணடித்தான். “இல்லாட்டி, பந்தயத்துக்கு கரும்பு வெட்றயாங்காட்டியும்.” “போ, மாமா அதெல்லாம் ஒண்ணுமில்லே. இந்த அருவா என்ன கேக்குது தெரியுமா? அந்த மாயாண்டிப் பய பொடனி ரத்தத்தை ருசி பாக்கணுமிங்குது! இப்ப தெரிஞ்சிச்சா,” என்று அவன் தலையைப் பலமாய் ஆட்டினான். ஆறுமுகத்திற்குத் தூக்கிவாரிப்போட்டது. “பயலுக்குப் பயித்தியம் பிடிச்சுப் போச்சுபோல் இருக்குதே!” என்று மாசிலாமணியிடம் ரகசியமாகச் சொன்னான். “பின்னே பயித்தியம் பிடிக்காது? இவ்வளவு நாளாகக் காத்திருந்திட்டு, வள்ளியை மல்லன் அடிச்சுட்டுப் போறதுன்னா, அவனுக்குப் பொறுக்குமா?” என்று மாசிலாமணியும் ரகசியமாகச் சொன்னான். “ஆமா! அதுவா சங்கதி?” என்று ஆறுமுகம், அபாயமான நிலைமையை உடனே கண்டு கொண்டான். எப்படியாவது வேலனுடைய புத்தியைக் கலைத்துவிட வேண்டுமென்று, ஆறுமுகம் தீர்மானம் செய்துகொண்டான். “தம்பி வேலு, கண்ணாலம் பண்ணிக்கிட்டவங்க, என்ன சொகத்தைக் கண்டுட்டாங்கன்னு நெனைக்கிறே? ஒரு பொண்ணு போனா, பத்து வருது. அட, ஒரு மனிசனுக்குப் பொண்ணாலேதானா சுகம்? என் பின்னோடே வா நீ. உனக்கு ஒரு ஜோக்குக் காட்டுறேன், பாரு,” என்று தமாஷாக ஆறுமுகம், அவன் தோளில் கையைப் போட்டு இழுத்தான். “ஹா, ஹா, ஹா! நீ சொல்றது எனக்குத் தெரியாதூன்னிட்டு எண்ணிக்கிட்டாயா, மாமா?” என்று வேலன் சிரித்தான். “இத்தினி நாளாய் இல்லாதே, இப்போ ஏன் நான் குடிக்கணும்?” “ஏன் குடிக்கக்கூடாது, சொல்லேன்? குடிக்காத பயல்களுக்கு அந்தச் சொகம் என்ன தெரியும்? அட, பயித்திக்காரா! குடிச்சா, சொர்க்கத்தை எட்டிப் பாக்கலாம்டா,” என்று ஆறுமுகம் பகபகவென்று சிரித்தான். எப்படியாவது வேலனைக் கள்ளுக்கடைக்கு அழைத்துச் சென்று, அவனைப் போதையால் மெய்ம்மறக்கும்படி செய்ய வேண்டுமென்று, ஆறுமுகம் தீர்மானித்துக் கொண்டான். ஆறுமுகம் அயோக்கியன் அல்ல. ஆயினும், அச்சமயம் வேலனைக் குடியில் இறக்குவது சரியா தப்பா வென்பதைக் குறித்து, அவன் சற்றும் யோசிக்கவில்லை. வேலன் ஒரு க்ஷணம் யோசித்தான். பிறகு, சண்டைக்குத் தயாராயிருக்கும் சேவல்போல் அவன் தலையை நிமிர்த்தி, “சரி, மாமா போகலாம் வா. யாருக்குப் பயப்படணும்? எதாயிருந்தாலும் ஒரு கை பாத்திடறேன்,” என்று அவன் அரிவாளை இடுப்பில் செருகிக்கொண்டு, ஆறுமுகத்தைப் பின்தொடர்ந்தான். ஒரு பெரிய தென்னங் கீத்துக் கொட்டகையில் கள்ளுக்கடை இருந்தது. சிலர் குடித்துவிட்டு, மீசையைத் தடவிக்கொண்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். மற்றும் சிலர், அருகில் இருந்த வேப்பமரத்தின்கீழ் ஏதோ வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். ஒருவன் ஆனந்தமாகத் தலையை அசைத்துப் பாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவியாக ஒருவன் தாளம் போட்டான். மொச்சைச் சுண்டலை ஒவ்வொன்றாகத் தின்று கொண்டு பலர் இவர்களைச் சுற்றி நின்றனர். இதையெல்லாம் பார்த்ததும், வேலன் கள்ளுக்கடையில் நுழையச் சற்று தயங்கினான். ஆனால், ஆறுமுகமும் மாசிலாமணியும் அவனைத் தட்டிக் கொடுத்துத் தரதரவென்று உள்ளே இழுத்துச் சென்றனர். அங்கிருந்தவர்களில் சிலர், வேலனை அவ்வாறு குடிக்கச் செய்ததற்காக ஆறுமுகத்தைக் கோபித்துக் கொண்டார்கள். அதற்கு ஆறுமுகம், தான் அப்படிச் செய்திராவிட்டால், ஊரில் ஒரு கொலை நடந்திருக்குமென்று அவர்களுக்குச் சமாதானம் சொன்னான். வெகுநேரம் ஆய்விட்டது. சித்திரைச் சந்திரன், கண்ணையும் மனத்தையும் கவரும்படி காய்ந்துகொண்டிருந்தது. கள்ளுக் கடைக்கு வந்தவர்களில் அநேகர், வீடுபோய்ச் சேர்ந்தனர். கடைக்காரனும் மீதியிருந்த கள்ளை ஒரு சுரைக்குடுக்கையில் போட்டுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினான். கடைசியாகக் கடையில் தங்கியிருந்தவர்கள், ஆறுமுகமும் மாசிலாமணியும் வேலனுமே. வேலனை எவ்வாறு வீட்டிற்குக் கொண்டு போவதென்பதைப் பற்றி, ஆறுமுகமும் மாசிலாமணியும் யோசித்தார்கள். வேலன் அசைவற்றுப் பிணம்போல கிடந்தான். அவனைத் தூக்கிச் சுமந்து போவதைத் தவிர வேறு வழி அவர்களுக்குப் புலப்படவில்லை. ஆனால், தாங்களே தள்ளாடும் நிலைமையில் இருப்பதால், அப்படிச் செய்வதும் அவர்களுக்கு அசாத்தியமாயிருந்தது. அதனால், அவனை அவ்விடத்திலேயே விட்டுவிட்டுப் போவது நலமென்று அவர்கள் தீர்மானத்துக் கொண்டார்கள். ஆயினும், அவன் முகத்தில் குளிர்காற்றுப் பட்டால் போதை சீக்கிரம் தெளியுமென்று எண்ணி, அவர்கள் அவனைக் குடிசையின் வாசற்பக்கம் இழுத்து விட்டனர். வேலனைக் குடிக்கத் தூண்டும் உற்சாகத்தில் ஆறுமுகம், தன் அளவிற்கு மிஞ்சியே உட்கொண்டுவிட்டதால், அவனுக்கு அதிகமான போதை ஏற்பட்டது. குடிசையில் ஒரு மூலையிலிருந்த பானையிலிருந்த குளிர்ந்த தண்ணீரை ஒரு குடுவையில் எடுத்து, முகத்தில் விட்டுக்கொண்டான்; சிறிது குடிக்கவும் குடித்தான். ஆயினும் அவன் வேதனை சற்றும் தணியவில்லை. பிறகு அவன், மாசிலாமணியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு மெதுவாக வீட்டை நோக்கிச் சென்றான். வழியெல்லாம் அவன் தான் செய்தது சரியென்றும், வேலன் அப்படி ‘உளுந்து கிடக்காட்டி’ மாயாண்டியைக் கொன்றுவிடுவானென்றும், ‘கொஞ்ச நேரத்துக் கெல்லாம் தானே எளுந்திருச்சிடுறான்’ என்றும் சொல்லிக் கொண்டு வீடுபோய்ச் சேர்ந்தான். வேலனுக்காகக் காத்துக் காத்து, அலமேலு அலுத்துப் போனாள். சமைத்து வைத்ததெல்லாம் ஆறிப்போய் விட்டது. அன்றைக்கென்று அவள் முருங்கைக்காய்க் ‘கொளம்பு’ செய்திருந்தாள். முருங்கைக்காயென்றால் வேலனுக்கு உயிர். அவ்வளவு நேரமாகியும் அவன் வராததற்குக் காரணம் தெரியவில்லை. அண்டை வீட்டுக்காரர்களெல்லாம் இரவுக்கு வாசக் கதவுகளைத் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவளுடைய கணவனுக்கு அவள், விளக்கு வைத்ததுமே சாப்பாடு போட்டுவிடுவது வழக்கம். அவனுக்கு இதற்குள்ளே ஒரு தூக்கம் ஆயிருக்கும். சீக்கிரத்தில் ஊரில் அரவம் அடங்கிற்று. இன்னும் வேலன் வருவதைக் காணவில்லை. அலமேலுவுக்குப் பற்பல யோசனைகள் உதித்தன. இரவு அடர்ந்துகொண்டே வந்தது. ஆனால், வேலனைப் பற்றி மட்டும் பேச்சுமூச்சைக் காணவில்லை. அலமேலு திகில் அடைந்தாள். தன் புருஷனை எழுப்பலாமென்று யோசித்தாள். என்ன பயன்? தான் அவஸ்தைப்படுவது போதாமல் அவனுடைய மனத்திற்கும் கஷ்டத்தை உண்டாக்குவதைத் தவிர, வேறொன்றும் காணப்படவில்லை. கடைசியாக அவள், வாசற்கதவை வெளிப்புறம் தாழ்ப்பாள் இட்டுக்கொண்டு, வேலனுடைய தோழர்களில் ஒருவன் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி எழுப்பி விசாரித்தாள். அவன் அன்றெல்லாம் வேலனையே பார்க்கவில்லையென்று சொல்லிவிட்டான். பிறகு, அவள் மற்றொருவன் வீட்டிற்குப் போனாள். அவன் தூக்கக் கண்ணைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான். அவனும் அன்றைத் தினமெல்லாம் வேலனைப் பார்க்காவிடினும், வேலன் நாலு மைல் தூரத்திலிருந்த அமராவதிக் கிராமத்திற்குத் தான் போயிருக்கவேண்டுமென்று நிச்சயமாகச் சொன்னான். ஏனெனில், அவ்வூரிலிருந்த நண்பன் ஒருவன், அங்கே நடந்துவரும் பொம்மையாட்டத்தைப் பார்க்க வரும்படி, வேலனை ஒரு வாரமாகக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தான். ஆகையினால், வீணாகக் கவலைப்பட வேண்டாமென்றும், விடிச்ததும் வேலன் திரும்பி வந்துவிடுவானென்றும் சமாதானம் சொல்லி, அவன் அலமேலுவை அனுப்பிவிட்டான். அலமேலுவுக்கும் ஒருவாறு சாந்தி ஏற்பட்டது. ஆயினும், தன் பையன் தன்னிடம் சொல்லாம் எங்கும் போமாட்டானே; ஒருவேளை அவன் சிநேகிதன் அவசரமாக இழுத்துக்கொண்டு போனதால், வீட்டிற்கு வந்து சொல்ல நேரமில்லாமல் போய்விட்டதோ என்னமோ - இருந்தாலும் இருக்கலாம் என்று எண்ணினாள். இவ்வாறு ஆறுதல் செய்துகொண்டு வீடு சேர்ந்து, அவள் படுத்துக்கொண்டாள். ஆனால், மனக்குழப்பத்தால் அவளுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை! சங்கடப்பட்டுக்கொண்டு, இப்புறமும் அப்புறமும் புரண்டுகொண்டே இருந்தாள். பாதி இரவு கழிந்து விட்டது. காற்றும் வரவரக் குளிர்ந்து கொண்டே வந்தது. எங்கும் அமைதி குடிகொண்டிருந்தது. எங்கும் நிசப்தமாயிருந்தது. ஆனால் அலமேலுக்குமட்டும் சாந்தி ஏற்படவில்லை. தோன்றாத எண்ணங்களெல்லாம் தோன்றின. வயற்காட்டில் நடந்து வரும் பொழுது சர்ப்பம் தீண்டி, அவன் இறந்து கிடப்பதுபோலத் திடீரென்று அவளுக்கு ஒரு காட்சி புலப்பட்டது! உடம்பெல்லாம் வியர்த்தது; நெஞ்சு அடைத்தது. மூச்சு விடமுடியாமல் திக்கு முக்காடினாள். இதே சமயத்தில், “ஐயோ!” என்ற சப்தம் அவள் காதைத் துளைத்தது. சப்தம் அருகிலிருந்து வருவதுபோலவே தோன்றிற்று. பிறகு, “கொல்றானே! கொல்றா...” என்ற வார்த்தைகளுங்கூடத் தெளிவாகக் காதில் பட்டன. அப்பால் அக்குரல் தாழ்ந்து ஓய்ந்துவிட்டது - இதெல்லாம் ஒரு நிமிஷங்கூட இராது. “ஐயோ, அலமேலு, மாயாண்டி ஊட்டிலே கொலை நடந்து போச்சாமே!” என்று அக்கிழவன், கைகளை விரித்துக்கொண்டு சொன்னான். “எ...எ...என்னாது? மா...மா...மாயாண்டியை அல்ல கொன்னுட்டாங்க!” என்றான் திக்குவாய்ச் செல்வன். “மாயாண்டியையா கொன்னுட்டாங்க! ஐயோ கடவுளே!” என்று அலமேலு வாயில் அடித்துக்கொண்டாள். “காலம் என்ன கெட்டுப் போச்சு! நான் பொறந்தப்போ இருந்து இதுவரையிலும் நம்மூருலே ஒரு கொலையுண்டா?” என்றான் கிழக் குப்பன். “மாரிக்கவுண்டன் சங்கதி என்ன?” என்றான் ஒருவன் அசந்தர்ப்பமாய். “அடே, அவன் நம்மூருலேயா கொன்னான்?” என்றான் குப்பன், சற்றுக் கோபமாய். “அது போவுது, மாமா. மாயாண்டியை யாரு கொன்னாங்க? என்னாத்துக்கு?” என்று அலமேலு, படபடப்போடு கேட்டாள். “அது தெரிஞ்சா, நாங்க இப்படித் தேடி அலைவானேன்?” என்று சொல்லிக்கொண்டே கண்ணன், மற்றிருவரோடுகூட அவளைத் தள்ளிக்கொண்டு ஓடினான். அலமேலுவுக்குத் திருப்தி உண்டாகவில்லை. உண்மையாக நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் அதிகரித்தது. கும்பலைத் தள்ளிக் கொண்டு, அவள் வீட்டிற்குள்ளே நுழைய எத்தனித்தாள். ஆனால் அது அசாத்தியமாயிருந்தது. ஏனெனில், கல்யாணத்திற்காக வந்த விருந்தாளிகளில் அநேகர், யாவரும் வீட்டிற்குள் நுழையாதபடி வழியை மறித்து நின்றனர். பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாயிருந்தது. ஆகையால், அவள் திரும்பித் தனக்குத் தெரிந்த வர்களாகத் தேடிச் சிறிது சிறிதாகச் சங்கதி அனைத்தையும் கண்டு கொண்டாள். உதயத்தில் நடக்கும் கல்யாணத்திற்காக இரவில் வெகுநேரம் வரையில் மாயாண்டி ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்ததாகவும், அப்பொழுது தனியாகக் கொல்லைப்புறம் போக நேர்ந்தபோது, யாரோ ஒருவன் அவனைத் தாக்கிக் கத்தியால் குத்தி விட்டதாகவும் தெரியவந்தது. உயிர் உடனே போய்விட்டது. ஆனால், கொலையாளியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் வீட்டிற்குப் பின்புறமிருந்த அறுவடையான வயல்களின் வழியாகத்தான் ஓடியிருக்க வேண்டும். ஆனால், வெயிலில் தரை நன்றாகக் காய்ந்து கிடந்த தால், அடிச்சுவடுகள் புலப்பட இடமில்லை. மாயாண்டியைக் பாராமல் இருந்ததில் அலமேலுவுக்கு ஒரு விதத்தில் சந்தோஷந்தான். அவள் கேட்டதிலிருந்து, அக்கொடூரமான காயங்களைப் பார்த்து அவளால் சகிக்கமுடியுமென்று அவள் நம்பவில்லை. பிறகு, வெகு துக்கத்தோடு வீடு திரும்பினாள். கிராமத்தில், குஞ்சு குழந்தை பாக்கியில்லாமல் எல்லோரும் எழுந்துவிட்டார்கள். அங்கங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள், இவ்விஷயத்தைப் பற்றியே பேசிக்கொண்டு நின்றார்கள். அலமேலுவின் வீட்டிற்கு இரண்டு வீடு தாண்டி, ஒரு பாழடைந்த மனை இருந்தது. அதன் முன் சிலர் கூடி, வெகு தாபத்தோடு பலத்த குரலில் பேசிக் கொண்டிருந்தனர். அலமேலு கதவைத் திறந்து உள்ளே நுழையும் சமயத்தில், அவள் காதில் சில வார்த்தைகள் விழுந்தன. அவ்வளவுதான்; அவளுக்கு நெஞ்சடைத்துக் கண்ணிருண்டது. “இது வேலன் செஞ்ச வேலைதான். இதுலே சந்தேகமில்லை. நான்தான் என் காதாலே கேட்டேங்கிறேனே. நான் இப்படி நிக்கிறேன்; அவன் அப்படி இருந்து ஆறுமுகத்துக்கிட்டே சொல்றான்: ‘இந்த அருவா என்னா கேக்குது தெரியுமா மாமா - மாயாண்டி பொடனி ரத்தத்தை ருசிபார்க்கணுமிங்குது!’ இன்னும் என்ன சந்தேகமப்பா?” “அதுதாண்டா, இவ்வளவு கலவரத்துலே அவனை ஆளையே காணோம்,” என்றான் ஒருவன். “ஒருவேளை ஊட்டிலே அசந்து தூங்கறானோ என்னவோ,” என்றான் மற்றொருவன், “உனக்குப் பையித்தியமா? நீ வேணுமின்னா அவுங்க ஊட் டுலே போய் பாரு,” என்றான் தாதன். அலமேலுவுக்கு ஒரே நடுக்கம் எடுத்துவிட்டது. உலகத்தில் இருக்கும் பேய்களெல்லாம் அவளைப் பிடிக்கத் துரத்திவருவது போல் அவளுக்குத் தோன்றிற்று. ஒரு க்ஷணத்தில் ஓடிப் பதுங்கா விட்டால், தப்புவது கஷ்டம்போல் இருந்தது. மறு வினாடியில், உள்ளே புகுந்து அவள் கதவைப் படார் என்று தாழ்ப்பாளிட்டாள். ஹிருதயம் பட படவென்று அடித்துக்கொள்ள, அவள் ஒரு நிமிஷம் கதவண்டையே தயங்கி நின்றாள். யாரும் அவளைத் துரத்தி வருவதாகத் தெரியவில்லை. பயம் சற்றுத் தணிந்தது. ஆனால் மறு நிமிஷமே, தாதன் சொன்ன வார்த்தைகளை நினைத்துத் தலையில் இடிவிழுந்தாற்போல் அவள் கீழே சாய்ந்தாள். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
சிலைத் திருடன் மொழிபெயர்ப்பாளர்: B.R. மகாதேவன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 238 எடை: 250 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-81-8493-949-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சுபாஷ் கபூர் நியூ யார்க்கை மையமாகக் கொண்டு இயங்கிவந்த கலைப் பொருள் வணிகன். அவன் விற்பனை செய்த கலைப் பொக்கிஷங்கள் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களை அலங்கரிக்கின்றன. அக்டோபர் 2011இல் ஜெர்மனியில் இண்டர்போல் அவனைக் கைது செய்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்னதாக இந்திய அரசு, தமிழகத்தின் இரண்டு கோவில்களில் இருந்து அரிய, விலை மதிக்கமுடியாத சோழர் காலச் சிலைகளைத் திருடிக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி அவனுக்கு ரெட்-கார்னர் நோட்டீஸ் தந்திருந்தது. அமெரிக்கக் காவல்துறை அதிகாரிகள் நியூ யார்க்கில் இருந்த சுபாஷ் கபூரின் கிடங்கை அதிரடியாகச் சோதனையிட்டபோது, சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியக் கலைப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ‘உலகிலேயே மிகப்பெரிய கலைப் பொருள் திருடன்’ என்று அமெரிக்க காவல்துறை இவனை அறிவித்தது. கூட்டுக் குற்றவாளிகளான காவல்துறையினர், அருங்காட்சியக ஊழல் பேர்வழிகள், துரோகத்தால் கைவிடப்பட்ட பெண்கள், இரட்டை வேடம் போடும் ஆய்வறிஞர்கள், கூலிச் சிலைத் திருடர்கள், கடத்தல்காரர்கள் என இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் உலகம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. 21ம் நூற்றாண்டின் மாபெரும் கிரிமினல் வலைப்பின்னல் இந்தியாவின் அரிய கோவில் கலைப் பொக்கிஷங்களை எப்படிக் கொள்ளையடித்தது என்பதை விறுவிறுப்பூட்டும் நடையில் விவரிக்கிறது இந்த அரிய நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|