அத்தியாயம் 19. விசாரணைக்குத் தயாரித்தல்

     ஒரு வாரம் கழிந்தது; இரண்டும் சென்றன. அப்பொழுதும் விசாரணைத் தேதி நிச்சயப்படவில்லை. சுப்பையா பிள்ளையின் அபிப்பிராயத்தில், வேலனுடைய கேசு சீக்கிரத்திலே முடிந்து விடும்போல் இருந்தது. ஏனெனில், விசாரிப்பதற்குச் சாக்ஷிகள் மிகக் குறைவு. இருந்தபோதிலும், வேலனுக்கு உத்தேசமாய் நியமிக்கப்படக்கூடிய வக்கீல்களில் தனக்குத் தெரிந்தவர்களைப் பார்த்து, அவர்களிடம் அவன் வேலனின் கதையெல்லாம் சொல்லிவந்தான். ஒருநாள் அவன் மதுரையையும் வீரப்பனையும், வேலனைக் கண்டு பேசுவதற்காக ஜெயிலுக்கும் அழைத்துக் கொண்டு போனான். வேலன் அடையாளமே தெரியாதபடி மாறிவிட்டான். அவன், ஒருமாதப் பட்டினி கிடந்தவன்போல் காணப்பட்டான். அவன் முதல் கேள்வி, அவன் ‘அப்பா’வைக் குறித்துத்தான். அவனுக்கு உடம்பில் யாதொரு கோளாறும் இல்லையென்றும், அவன் படும் வியாகூலமெல்லாம் வெங்கடாசலத்தைப் பற்றியே என்றும், வீரப்பனுக்கும் மதுரைக்கும் நன்றாய் விளங்கின.


கே.பாலசந்தர்
இருப்பு உள்ளது
ரூ.105.00
Buy

கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.445.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஆளண்டாப் பட்சி
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

வாஸ்து : இந்தியக் கட்டடக் கலை
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

ஒரே ஒரு விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.200.00
Buy

வாழ்ந்தவர் கெட்டால்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy

குறிஞ்சித் தேன்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

The Rule of 5: Leadership and The E5 Movement
இருப்பு உள்ளது
ரூ.370.00
Buy

பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

உங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

கடலுக்கு அப்பால்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

நளபாகம்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

ஆழ்மனத்தின் அற்புத சக்தி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

அலெக்சாண்டர்
இருப்பு உள்ளது
ரூ.250.00
Buy

100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
இருப்பு உள்ளது
ரூ.900.00
Buy

ஏன் பெரியார்?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

எங்கு செல்கிறோம்?
இருப்பு உள்ளது
ரூ.130.00
Buy

திருப்பட்டூர் அற்புதங்கள்
இருப்பு இல்லை
ரூ.115.00
Buy
     “ஏ, மாமா! எதுநாச்சியும் கன்னாப்பின்னான்னு ஆயிட்டா, எங்கப்பாரைக் கை உடாதே!” என்று அவன், வீரப்பனுடைய மோவாய்க்கட்டையைப் பிடித்துக்கொண்டு ‘ஹோ’வென்று கதறி அழுதான்.

     “அட பயித்தியக்காரா! உனக்கு உளுமை தெரியாது. இன்னும் பத்துப் பதனஞ்சு நாளுலே, நாமெல்லாம் சேந்து ஊருக்குப் போவவேண்டியதுதானே? வேணுங்கற எற்பாடுங்களெல்லாம் பண்ணியாச்சுதே. ஈரங்கி எப்போ வருதூன்னிட்டு அல்ல காத்துக்கிட்டு இருக்கோம். வக்கீலய்யா ஒனக்குச் சொல்லிவச்சாப்போல நீ சொல்லணும். அத்தோடு காரியம் முடிஞ்சுது. உன் விடுதலையைப் பத்தி யாருக்கும் சந்தேகமில்லை. அந்த உளுமையை வெங்கடாசலங்கூட கண்டுகிட்டு, எவ்வளவோ தெம்பா இருக்கான். நீ என்னடான்னா, வீணாக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கே. இந்த அம்மாசி போச்சு; அடுத்த அம்மாசிக்குள்ளே நாமெல்லாம் ஊருக்குப் போயிடமாட்டோம்? சந்தேகமில்லை; என் பேச்சை நம்பு, வேலு.”

     மதுரையின் சொற்கள் வீண்போகவில்லை. வேலனுக்குத் தைரியம் ஏற்பட்டதற்கு அறிகுறியாக, அவன் முகத்தில் ஒரு வித ஒளி பிறந்தது. அப்பொழுது, வீரப்பன் சற்றும் முன்பின் யோசியாமல், “நீ செஞ்சுது நெசந்தனா?” என்று கேட்டான். மதுரைக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. அவன் பல்லைக் கடித்து, வீரப்பனை மென்று தின்று விடுபவன் போலப் பார்த்தான். வேலன் ஏதோ சொல்ல வாயை எடுத்தான். அதற்குள் ஜெயில் சேவகன், சூபரிண்டெண்டு வருவதாகச் சொல்லி, வேலனை உள்ளே இழுத்துக்கொண்டு போனான்.

     அன்றிரவு மதுரை, வீரப்பன், சுப்பையாபிள்ளை மூவருமாகச் சேர்ந்து, வெங்கடாசலத்திற்கு உற்சாகத்தை உண்டுபண்ணும் படியான ஒரு கடிதத்தை எழுத யோசித்தார்கள். வீரப்பன் படிப்பு, அவன் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டதோடு நின்று விட்டது. மதுரை, தட்டுத்தடுமாறி ஒருவாறு படிப்பான். ஆனால், எழுதுவது அவனுக்கு அசாத்தியமென்றே சொல்லலாம். அப்படிக் கஷ்டப்பட்டு அவன் எழுதினாலும், அவன் எழுத்தைப் பிறர் வாசிக்க முடியாது. கடைசியாக அந்தப் பாரம், சுப்பையா பிள்ளை மேல் போடப்பட்டது. கடிதத்தில், சமாசாரத்தோடு சமாசாரமாய், மதுரை தாயம்மாளையும் புகழ்ந்து எழுதச் சொன்னான்.

     “நல்லாயிருக்குது! என்பேரை ஏன் இழுக்கிறீங்க?” என்றாள் தாயம்மாள், புன்முறுவலுடன். பசுவுக்கு வியாதி நீங்க நீங்க, அம்மாளுக்கும் அவர்களிடம் பக்ஷம் அதிகப்பட்டுக்கொண்டு வந்தது.

     “தாயே, ஒங்களைப் பத்தி வெங்கடாசலத்துக்கு நான் எளுதித் தான் தீருவேன்; இது எங்க சங்கதி; நீங்க தலையிட்டுக்காதீங்க. இந்தப் பட்டணத்துலே கூடப் பொறந்தவங்களாட்டம், இவ்வளவு ஒவகாரம் எங்களுக்கு யாரு பண்ணுவாங்க? நான் இது ஒங்க எதுருக்க சொல்ற பேச்சு இல்லே,” என்றான் மதுரை. அதன்மேல், சுப்பையா பிள்ளை அவன் வார்த்தைகளைச் சிறிது மாற்றி எழுதினார். மதுரைக்கு உண்மையிலேயே தாயம்மாளிடம் அதிகக் கௌரவம் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில், அந்த அம்மாள் மிகவும் தாராளபுத்தியுடையவள். அவளிடத்திலிருந்த கெட்ட குணம் ஒன்றே; அதாவது, தன்னைக் கேளாது தன் புருஷன் யாதொரு காரியமும் செய்யக்கூடாதென்பதுதான்.

     ஐந்து, ஆறு தினங்களுக்கெல்லாம், விசாரணைத் தேதி வெளியிடப்பட்டது. வேலனுக்காக நியமிக்கப்பட்ட வக்கீல், சிறு வயதுள்ளவராயிருந்த போதிலும், அதற்குள்ளே நல்ல கியாதியை அடைந்திருந்தார். ஆனால், சுப்பையா பிள்ளை அவரை அறிய மாட்டார். ஆகையினால், அவருடைய சிநேகிதர் ஒருவர் மூலமாகச் சுப்பையாபிள்ளை அவருடைய அறிமுகத்தைச் செய்து கொண்டார். பிறகு, வேலனுடைய விருத்தாந்தங்கள் அனைத்தையும் அவர் எடுத்துச் சொன்னார். கடைசியாக, தயைசெய்து தம் சொந்த விஷயம்போல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்பொழுது அந்த வக்கீல் சிரித்தார்.

     “இவ்வளவு அனுபவப்பட்டவர்கூட இப்படிப் பேசுகிறீரே! என் சமாசாரம் உமக்குத் தெரியாது. ஒரு வேலை ஒப்புக்கொண்டு விட்டால், நான் வேறு இல்லே, என் கக்ஷிக்காரன் வேறு இல்லே. நாங்கள் ரெண்டுபேரும் ஒண்ணுதான்; இது வக்கீல் பிழைப்பின் தர்மம். எனக்கு யோசனைகளெல்லாம், கேஸை ஒப்புக்கொள்வதற்கு முன்தான்; அதற்கு அப்புறம் இல்லே. ஆகையினாலே, நீர் ஒன்று கவலைப்படாதேயும். நான் ரிகார்டுகளைப் பார்த்த வரையில், உம்ம ஆளுக்கு ஒரு பயமும் இல்லை.”

     “நமக்கு விரோதமாய் ஒரு சாக்ஷிதான் இருக்கான். அதாவது, வாய்க்காலுலே ரத்தத்துணியை அலம்பியதைப் பார்த்தவன். அவனையும் வழிக்குக் கொண்டுவரப் பார்த்துக்கொண்டு இருக்கோம்.”

     “அவனைப்பத்தி நீங்கள் ஒண்ணும் கவலைப்படாதேயுங்கள். அவன் சாக்ஷி பலிக்காமல் நான் பார்த்துக்கறேன். உங்க ஆள் தப்பிச்சுப்பான், போங்கள். ஆனால், நான் அவனைப் பார்த்துக் கொஞ்சம் பேசவேணும். என்னை நம்பி நிஜத்தைச் சொல்வானோ இல் லையோ?”

     “அதுலே சந்தேகமென்ன, ஸார்! அவன் ரொம்ப நல்ல பையன். அதுவும் தவிர, அவன் சொந்தக்காரர்கள் இரண்டு பேர் என் வீட்டில்தான் இறங்கியிருக்காங்கள். அவங்களையும் வேணு மின்னா, அவனுக்கு நல்ல பேச்சுச் சொல்ல அழைத்துக்கொண்டு வறேன்.”

     “ஓ, ரொம்ப ஸௌகரியமாப் போச்சு. அப்போ, நாளைக்குச் சாயந்திரம் சரியாய் நாலுமணிக்கு, அவங்களையும் அழைச்சுக் கிண்டு, இங்கே வந்துடுங்கள் - அவ்வளவுதானே? வேறே ஒண்ணு மில்லையே? சரி, அப்போ போய்வாரேளா?” என்று சொல்லிக் கொண்டே, அவர் ஒரு கட்டை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். சுப்பையா பிள்ளை ஓசை செய்யாமல் வெளியே சென்றார்.

     ‘ஈரங்கி’த் தேதியை வெங்கடாசலத்திற்குத் தெரியப்படுத்துவதா இல்லையா என்பதைப்பற்றி, அவர்களுக்குள் ஒரு தர்க்கம் வந்து விட்டது. வீரப்பனுக்கு, தெரிவிக்க இஷ்டமில்லை. அவன், “வெங்கடாசலம் பயந்து செத்துப்போவான்,” என்றான். ஆனால், சுப்பையா பிள்ளை சமாசாரத்தை மறைத்து வைப்பது தப்பென்றும், வெங்கடாசலத்திற்கு மனசு நோவாதபடி சாதுரியமாக ஒரு கடிதம் கட்டாயம் எழுதவேண்டுமென்றும் தீர்மானமாகச் சொன்னார். பிறகு, அக்கடிதத்தை எழுதும் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டார்.

     மறுநாள் சாயங்காலம் வக்கீல், மதுரையையும் வீரப்பனையும் அழைத்துக்கொண்டு, ஜெயிலுக்குள் சென்றார். போகும் வழியிலே, அவர் வேலனோடு பேசும்பொழுது அவர்கள் குறுக்கிடக் கூடாதென்று அவர் சொல்லிவிட்டார். ஏனெனில், ஆளுக்கொன்று சொன்னால், வேலனுக்குப் புத்திக்கலக்கம் ஏற்படுமென்பதுதான் அவர் கருத்து. வக்கீல் இவ்வாறு எச்சரிக்கை செய்ததற்கு, மதுரை மிகவும் சந்தோஷப்பட்டான். இல்லாவிடில், மடத்தனமாக வீரப்பன், “நெசமாச் செஞ்சயா? பொய்யாச் செஞ்சயா?” என்று கேள்விகளைக் கேட்க ஆரம்பிப்பான்.

     வக்கீல், வேலனுக்குச் சில கேள்விகளைப் போட்டு, அவைகளுக்கு எவ்வாறு பதில் சொல்லவேண்டுமென்பதைத் திருப்பித் திருப்பிப் போதித்தார். கடைசியில், அவன் விஷயங்களை அறிந்து கொண்டுவிட்டானென்று அவருக்குப் புலப்பட்ட பிறகு, அவர் கேட்டார்: “எங்கே, நீ மறக்காமலிருக்கவேண்டிய முக்கியமான,‘பாயிண்டு’களைச் சொல்லு, பார்ப்போம்.”

     “நான் வாய்க்காலுக்கு வந்தது ஒண்ணு, அப்பாலே என் இடுப்புலே கட்டியிருந்த துணிபோனது ஒண்ணு,” என்றான் வேலன்.

     “சரி, அதுக்கு உன் ஜவாபு என்ன?”

     “வளக்கம்போல, காலங்காத்தாலே நான் வாய்க்கால் கரையிலே பல்லுத் தேய்ச்சுக்கிட்டு இருந்தேன். அப்போ மல்லன், தாதனையும் இன்னும் சில பேரையும் ஏவிவிட்டு, என்னை அடிக்கச் சொன்னான். அவுங்க என்னைச் சேத்துலே பெரட்டி, என் வேட்டித் துணியெல்லாம் கிளிச்சு எறிஞ்சு, என் வேட்டியெல்லாம் ரத்தமாயிருந்திச்சு; நான்தான் மாயாண்டியைக் கொன்னுட்டேனின்னு ஒரு கதையையும் கட்டிட்டாங்க. இது அவ்வளவும் மல்லன் செஞ்ச வேலை. சாமி, நான் வள்ளியை இளுத்துக்கிட்டுப் போயிடுவேன்னிட்டு அவனுக்கு எப்பவும் பயம். அதுக்காவ, கொலைக் கேசுலே மாட்டிவச்சு, என்னைத் தொலைச்சிடணு மின்னிட்டு, இப்படிச் செய்திட்டானுங்க. சாமிக்குப் பொதுவா, நான் ஒரு பாவமும் அறியேஞ்சாமி” என்றான் வேலன்.

     “ரொம்ப சரி. அடுத்த வாரம் நீ ஊருக்கும் போகலாம், போ,” என்றார் வக்கீல், புன்முறுவலுடன்.

     “ஆனா, மெய்யாலும் சாமி, நான் அந்த வேலை செஞ்சாப் போல எனக்குப் பொலப்படவில்லையே. நான் அருவாளை எடுத்துக்கிட்டு ஊட்டை விட்டுப் பொறப்பட்டது என்னமோ நெசந்தான். வளியிலே ஆறுமுக மாமன், நான் வாணாம் வாணாமின்னு சொல்லிக்கிட்டே இருக்கச்சியே, என்னைக் கள்ளுக்கடைக்கு இளுத்துக்கிட்டுப் போயி கள்ளை ஊத்திடுச்சு. குடிச்சதுக்கு அப்புறம் என்ன நடந்திச்சு இன்னே எனக்கு ஞாவகம் இல்லே, சாமி; போதையிலும் எதுநாச்சும் செஞ்சா, அப்பாலே தெரியாதோ மாமா?” என்று அவன் மதுரையைப் பார்த்து வெகு வருத்தத்தோடு கேட்டான்.

     வக்கீல், மதுரையைப் பேசவேண்டாமென்று ஜாடை காட்டினார்.

     “நீ ஒண்ணும் செய்யவில்லையின்னுதான் நான் சொல்றேனே. மடத்தனமாய்ப் பேசாதே. உனக்குச் சம்பந்தமில்லாத பேச்சு, உனக்கு எதுக்கு? இப்படி உளற ஆரம்பித்தால், நீயும் சாவாய்; உன் அப்பனையும் கொல்லுவாய். உன் அப்பன் பிழைத்திருக்க வேண்டுமென்று உனக்கு இருந்தால், நான் சொல்றபடி கேள். கிளிப்பிள்ளைபோல், நான் சொன்னதை நீ திருப்பிச் சொல்ல வேண்டியதுதான் - தெரிந்ததா? மறுபடியும் சொல்லித் தரட்டுமா?” என்று வக்கீல் கேட்டார்.

     “வாணாம் சாமி. எனக்கு நல்ல ஞாவகம் இருக்குது. உங்க பேச்சுக்கு மீறி நடக்கமாட்டேனுங்க,” என்று கைகட்டி, மிகவும் வணக்கமாக வேலன் சொன்னான். வக்கீல், மதுரையையும் வீரப்பனையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

     விசாரணைக்கு முதல் நாள், பிற்பகல் சுமார் மூன்று மணிக்கு, ஆறுமுகமும் வேலனுடய தோழர்களில் சிலரும், வெயிலில் வியர்க்க வியர்க்கச் சுப்பையாபிள்ளை வீட்டிற்கு வந்தார்கள். அவர்களுடைய வரவு எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

     “நாங்க, இங்கே இருக்கோமின்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிச்சு!” என்றான் வீரப்பன், வியப்புடன்.

     “என்ன கேள்வி கேக்கறேடா! வெங்கடாசலத்துக்கு வர கடுதாசையெல்லாம் நான் பார்த்துக்கிட்டுதானே இருக்கேன்? எனக்கு உங்க விலாசம் தெரியாமெ போயிடுமா?”

     “அது போவுது, வெங்கடாசலம் சொகமாயிருக்கானல்ல?” என்றான் மதுரை.

     “ஒரு மாதிரிதான் இருக்கான். ஈரங்கித் தேதி நெருங்க நெருங்கக் கவலை அதிகமாவுது. ஆவாதா பின்னே? நாங்க எவ்வளவோ சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். விடுதலையின்னு தீர்ப்பு சொல்லிட்டாக்க, அன்னிக்கு ராவே அவனுக்குச் சேதி எட்டிடாது! நம்ம பையனுக முப்பத்தாறு கல்லும் ஓடியல்ல சங்கதி தெரிவிப்பாங்க,” என்று தன்னுடன் வந்த வாலிபர்களைப் பார்த்து ஆறுமுகம் சொன்னான்.

     “யாரப்பா இப்படி அலைஞ்சு திரியுவாங்க! ஒரு நல்ல காரியத்துக்குப் பாடுபட்டா, அது வீணாப் போவாது, ஆறுமுகம்,” என்றான் மதுரை.

     “அது கடக்குது; இந்தக் காலத்துலே நல்லதையும் பொல்லாததையும் எவன் கண்டான், இருந்தாலும், எனக்கு ஒரு சந்தேகம்; நான் கள்ளை ஊத்தினதாலேதான், அவன் துணிஞ்சிட்டானோ என்னமோ! அப்படியிருந்திச்சின்னா, நான்தானே அவனை வம்புலே இளுத்துப் போட்டாப்போல ஆவுது! அவனைத் தண்டிச்சிம்புட்டா...? அய்யோ சாமி...!”

     “ஊம்... அதெல்லாம் ஒண்ணும் ஆவாதப்பா,” என்று மதுரை சமாதானமாகச் சொன்னான்.

     “ஆறுமுகம் மாமனுக்கு எங்குமில்லாத யோசனை வந்திடுது. தான்தான் மாயாண்டியைக் கொன்னுட்டாப்போல அதுக்கு எண்ணம்! இந்த எளவுக்கு என்னா பண்றது? - அது போவுது, நாங்க வந்த சங்கதி வேறே, மாமா,” என்று ஓர் இளைஞன் மதுரையைப் பார்த்துச் சொன்னான்.

     “வேலுக்கு விரோதமா சாச்சி சொல்றதில்லையின்னு, தாதன் எங்களுக்குச் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கான். அவன் கோர்ட்டிலே பேச்சுத் தவர்றானான்னிட்டுப் பார்க்க வந்திருக்கோம் நாங்க. அவன் பித்தலாட்டம் கித்தலாட்டம் செஞ்சானோ, தொலஞ்சான். (மதுரை சிரித்தான்; அவ்வாலிபனுக்கும் சிரிப்புத் தட்டிற்று.) நெசமாலும் மாமா, ஒரு கை பாக்கிறதூன்னே வச்சிட்டோம். நீ என்னமோ ரெண்டு மூணு சாச்சிதானின்னு சொன்னே, நம்ம கிராமத்திலே இருந்தே எட்டுப் பேரு வந்திருக்காங்களே.”

     “அவங்கெல்லாம் ஏதோடு கணக்கு? தாதன் ஒருத்தனாலே தான், கொஞ்சம் வம்பு வரலாம்,” என்றான் மதுரை.

     “அவன் வாயைத் தெறக்கமாட்டான்; நீ பயப்படாதே, மாமா,” என்றான் முன் பேசின வாலிபன்.

     “மல்லன், கச்சிக்காரங்கேளாடுதான் எறங்கி இருக்கான். அது, அவங்கிட்ட துட்டுப் பிடுங்கத்தான்; வேறொண்ணுக்கு மில்லை.”

     “சரி, உங்க சாப்பாடு சங்கதி என்னா? பக்கத்துலே ஓட்டலுலே ஏற்பாடு செய்யலாமா?” என்று மதுரை விசாரித்தான்.

     “நீ ஒரு பக்கம்! நம்ப ராஜா சத்திரம் எங்கே போச்சு? நான் உன்கிட்ட சொல்ல மறந்திட்டேன். எங்களோடுகூட இன்னும் ரொம்ப சனம் வந்திருக்குது. அப்பா, அங்கே கண்ணாலம்போல, சாப்பாட்டுக்குப் பெரிய ஏற்பாடுங்கல்ல ஆயிக்கிட்டு இருக்குது. விருந்து சாப்பாடு வேணுமின்னா, நீங்க ரெண்டுபேருங்கூட எங்களோடு வாங்க,” என்று ஆறுமுகம் அழைத்தான்.

     “அய்யோ! நாங்க எப்படி வாரதப்பா? ஐயாவை உட்டு ஒரு நிமிஷங்கூட அப்பாலே இப்பாலே போகமுடியாது. அவரு இல் லாட்டி, நம்மாலே என்ன முடியும்? இப்பக்கூட, நம்ப சங்கதிக்காவத்தான் போயிருக்காரு,” என்றான் மதுரை.

     “அட, நான் சும்மநாச்சிக்கும் சொன்னேன். தின்னுட்டுக் கொம்மாளம் அடிக்கறதுக்கா, நாம இங்கே வந்திருக்கோம்? நீ மவராசனா வேலையைப் பாரு. அப்பா, எங்க பேச்சையே நீ மறந்திடு. எனக்குக் கோர்ட்டுக்கு வளி தெரியும். நான் எல்லாரையும் அளச்சுக்கிட்டு வந்திடறேன்,” என்றான் ஆறுமுகம்.

     “நெய்யி, காய்கறியை மறந்திட்டயே, மாமா,” என்றான் கோணிமூட்டை ஒன்றை வைத்துக்கொண்டிருந்த ஒரு பையன்.

     “அட, மறந்தே போனேண்டா, மனசு ஒண்ணும் சரியா இல்லையப்பா. மதுரே, நம்மூருலேயிருந்து பிள்ளைக்காவக் கொஞ்சம், நெய்யும் காய்கறியும் கொண்ணாந்திருக்கோம் அப்பா.”

     “ஓ! நீ யோசனைக்காரன்தான், ஆறுமுகம். அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க,” என்று சொல்லிக்கொண்டு, அவன் ஆறுமுகம் முதலானவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போனான். தாயம்மாளுக்குச் சந்தோஷம் பொறுக்க முடியவில்லை.

     “ஏன் இந்தக் கஷ்டம் உங்களுக்கு? அவ்வளவு தூரத்திலிருந்து இதையெல்லாம் சுமந்துகொண்டு வரணுமா? உங்க ஊரு ஜனங்க எல்லாம் ஒரே மாதிரியிருக்காங்களே. நீங்க செய்வதைப் பார்த்தால், நான் உங்க ஊரைக் கட்டாயம் வந்து பார்க்கணும்போலிருக்கே.”

     “நீங்க வரணுமே, அம்மா! நாங்க என்னமோ ஏளைப்பட்டவங்கதான். ஆனா, வஞ்சனையில்லாதே நாங்க திங்கறதை உங்களுக்கு வைப்போம்,” என்றான் ஆறுமுகம்.

     “பணத்தாலேயே எல்லாம் ஆயிடுதா? இந்தமாதிரி கத்திரிப் பிஞ்சுங்க, பவுன் குடுத்தாக்கூட இந்த ஊருலே அம்புடாதே. ஒ, எவ்வளவு தினுசுங்க? நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுச் சேகரிச்சிருக்க வேணும்.”

     “இது ஒரு கஷ்டமா? தாயே, நீங்க பண்ணுற ஒவகாரத்துக்கு, நாங்க என்னதான் செய்யக்கூடாது? இப்போ ஐயா ஊட்டுலே இல்லையேன்னிட்டு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குது. அவ்வளவு தங்கமான மனிசரை நேருலே பாத்து நான் கும்பிடவாணாமா? - ஒண்ணு செய்றேன்; சாப்பாடு ஆன பொறவு மறுவிடியும் வாறேன்,” என்றான் ஆறுமுகம்.

     “வாணாம், ஆறுமுகம். எல்லாம் அலுத்து இருக்கீங்க. சாப்பிட்டு நல்லாப் படுத்துத் தூங்குங்க. நீ முந்தி சொன்னாப் போலவே, நாளைக்கு நாம் எல்லாம் கோட்டுலே கலந்துக்கலாம்,” என்றான் மதுரை.

     அதன்மேல், ஆறுமுகமும் அவனோடு வந்த வாலிபர்களும் விடைபெற்றுக்கொண்டு ராஜா சத்திரத்துக்குச் சென்றனர்.


மண்ணாசை : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22சமகால இலக்கியம்

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

கல்கி கிருஷ்ணமூர்த்தி
அலை ஓசை - Unicode - PDF - Buy Book
கள்வனின் காதலி - Unicode - PDF
சிவகாமியின் சபதம் - Unicode - PDF - Buy Book
தியாக பூமி - Unicode - PDF
பார்த்திபன் கனவு - Unicode - PDF
பொய்மான் கரடு - Unicode - PDF
பொன்னியின் செல்வன் - Unicode - PDF
சோலைமலை இளவரசி - Unicode - PDF
மோகினித் தீவு - Unicode - PDF
மகுடபதி - Unicode - PDF
கல்கியின் சிறுகதைகள் (75) - Unicode

தீபம் நா. பார்த்தசாரதி
ஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF
கபாடபுரம் - Unicode - PDF
குறிஞ்சி மலர் - Unicode - PDF - Buy Book
நெஞ்சக்கனல் - Unicode - PDF - Buy Book
நெற்றிக் கண் - Unicode - PDF
பாண்டிமாதேவி - Unicode - PDF
பிறந்த மண் - Unicode - PDF - Buy Book
பொன் விலங்கு - Unicode - PDF
ராணி மங்கம்மாள் - Unicode - PDF
சமுதாய வீதி - Unicode - PDF
சத்திய வெள்ளம் - Unicode - PDF
சாயங்கால மேகங்கள் - Unicode - PDF - Buy Book
துளசி மாடம் - Unicode - PDF
வஞ்சிமா நகரம் - Unicode - PDF
வெற்றி முழக்கம் - Unicode - PDF
அநுக்கிரகா - Unicode - PDF
மணிபல்லவம் - Unicode - PDF
நிசப்த சங்கீதம் - Unicode - PDF
நித்திலவல்லி - Unicode - PDF
பட்டுப்பூச்சி - Unicode - PDF
கற்சுவர்கள் - Unicode - PDF - Buy Book
சுலபா - Unicode - PDF
பார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF
அனிச்ச மலர் - Unicode - PDF
மூலக் கனல் - Unicode - PDF
பொய்ம் முகங்கள் - Unicode - PDF
தலைமுறை இடைவெளி - Unicode
நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode
ராஜம் கிருஷ்ணன்
கரிப்பு மணிகள் - Unicode - PDF - Buy Book
பாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF
வனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF
வேருக்கு நீர் - Unicode - PDF
கூட்டுக் குஞ்சுகள் - Unicode
சேற்றில் மனிதர்கள் - Unicode - PDF
புதிய சிறகுகள் - Unicode
பெண் குரல் - Unicode - PDF
உத்தர காண்டம் - Unicode - PDF
அலைவாய்க் கரையில் - Unicode
மாறி மாறிப் பின்னும் - Unicode - PDF
சுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book
கோடுகளும் கோலங்களும் - Unicode - PDF
மாணிக்கக் கங்கை - Unicode - PDF
குறிஞ்சித் தேன் - Unicode - PDF
ரோஜா இதழ்கள் - Unicode

சு. சமுத்திரம்
ஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF
ஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF
வாடா மல்லி - Unicode - PDF
வளர்ப்பு மகள் - Unicode - PDF
வேரில் பழுத்த பலா - Unicode - PDF
சாமியாடிகள் - Unicode
மூட்டம் - Unicode - PDF
புதிய திரிபுரங்கள் - Unicode - PDF

புதுமைப்பித்தன்
சிறுகதைகள் (108) - Unicode
மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode

அறிஞர் அண்ணா
ரங்கோன் ராதா - Unicode - PDF
பார்வதி, பி.ஏ. - Unicode - PDF
வெள்ளை மாளிகையில் - Unicode
அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode

பாரதியார்
குயில் பாட்டு - Unicode
கண்ணன் பாட்டு - Unicode
தேசிய கீதங்கள் - Unicode

பாரதிதாசன்
இருண்ட வீடு - Unicode
இளைஞர் இலக்கியம் - Unicode
அழகின் சிரிப்பு - Unicode
தமிழியக்கம் - Unicode
எதிர்பாராத முத்தம் - Unicode

மு.வரதராசனார்
அகல் விளக்கு - Unicode
மு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode

ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode

லா.ச.ராமாமிருதம்
அபிதா - Unicode - PDF

சங்கரராம் (டி.எல். நடேசன்)
மண்ணாசை - Unicode - PDF
தொ.மு.சி. ரகுநாதன்
பஞ்சும் பசியும் - Unicode
புயல் - Unicode

விந்தன்
காதலும் கல்யாணமும் - Unicode - PDF

ஆர். சண்முகசுந்தரம்
நாகம்மாள் - Unicode - PDF
பனித்துளி - Unicode - PDF
பூவும் பிஞ்சும் - Unicode - PDF
தனி வழி - Unicode - PDF

ரமணிசந்திரன்

சாவி
ஆப்பிள் பசி - Unicode - PDF - Buy Book
வாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF
விசிறி வாழை - Unicode

க. நா.சுப்ரமண்யம்
பொய்த்தேவு - Unicode
சர்மாவின் உயில் - Unicode

கி.ரா.கோபாலன்
மாலவல்லியின் தியாகம் - Unicode - PDF

மகாத்மா காந்தி
சத்திய சோதன - Unicode

ய.லட்சுமிநாராயணன்
பொன்னகர்ச் செல்வி - Unicode - PDF

பனசை கண்ணபிரான்
மதுரையை மீட்ட சேதுபதி - Unicode

மாயாவி
மதுராந்தகியின் காதல் - Unicode - PDF

வ. வேணுகோபாலன்
மருதியின் காதல் - Unicode

கௌரிராஜன்
அரசு கட்டில் - Unicode - PDF - Buy Book
மாமல்ல நாயகன் - Unicode - PDF

என்.தெய்வசிகாமணி
தெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode

கீதா தெய்வசிகாமணி
சிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF

எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
புவன மோகினி - Unicode - PDF
ஜகம் புகழும் ஜகத்குரு - Unicode

விவேகானந்தர்
சிகாகோ சொற்பொழிவுகள் - Unicode
கோ.சந்திரசேகரன்
'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode

பழந்தமிழ் இலக்கியம்

பிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்!
ரூ. 1180/- : 15 வருடம்
ரூ. 590/- : 5 வருடம்
ரூ. 118/- : 6 மாதம்
ரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்! (குறைந்தது 1 வருடம்)
      

எட்டுத் தொகை
குறுந்தொகை - Unicode
பதிற்றுப் பத்து - Unicode
பரிபாடல் - Unicode
கலித்தொகை - Unicode
அகநானூறு - Unicode
ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode

பத்துப்பாட்டு
திருமுருகு ஆற்றுப்படை - Unicode
பொருநர் ஆற்றுப்படை - Unicode
சிறுபாண் ஆற்றுப்படை - Unicode
பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode
முல்லைப்பாட்டு - Unicode
மதுரைக் காஞ்சி - Unicode
நெடுநல்வாடை - Unicode
குறிஞ்சிப் பாட்டு - Unicode
பட்டினப்பாலை - Unicode
மலைபடுகடாம் - Unicode

பதினெண் கீழ்க்கணக்கு
இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF
திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF
கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF
திருக்குறள் (உரையுடன்) - Unicode
நாலடியார் (உரையுடன்) - Unicode
நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF
ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF
திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode
பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode
சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF
முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF
ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF
திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF
ஐம்பெருங்காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - Unicode
மணிமேகலை - Unicode
வளையாபதி - Unicode
குண்டலகேசி - Unicode
சீவக சிந்தாமணி - Unicode

ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயண குமார காவியம் - Unicode
நாககுமார காவியம் - Unicode
யசோதர காவியம் - Unicode - PDF

வைஷ்ணவ நூல்கள்
நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode
திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF
மனோதிருப்தி - Unicode - PDF
நான் தொழும் தெய்வம் - Unicode - PDF
திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF
தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF
திருப்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF

சைவ சித்தாந்தம்
நால்வர் நான்மணி மாலை - Unicode
திருவிசைப்பா - Unicode
திருமந்திரம் - Unicode
திருவாசகம் - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode
திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode
சொக்கநாத வெண்பா - Unicode - PDF
சொக்கநாத கலித்துறை - Unicode - PDF
போற்றிப் பஃறொடை - Unicode - PDF
திருநெல்லையந்தாதி - Unicode - PDF
கல்லாடம் - Unicode - PDF
திருவெம்பாவை - Unicode - PDF
திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF
திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF
பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF
இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF
இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF
இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF
இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF
இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF
சிவநாம மகிமை - Unicode - PDF

மெய்கண்ட சாத்திரங்கள்
திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF
திருவுந்தியார் - Unicode - PDF
உண்மை விளக்கம் - Unicode - PDF
திருவருட்பயன் - Unicode - PDF
வினா வெண்பா - Unicode - PDF
இருபா இருபது - Unicode - PDF
கொடிக்கவி - Unicode - PDF

பண்டார சாத்திரங்கள்
தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF
தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF

சித்தர் நூல்கள்
குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF
நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF
ஞானம் - 100 - Unicode - PDF
நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF
பூரண மாலை - Unicode - PDF
முதல்வன் முறையீடு - Unicode - PDF
மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF
பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF

கம்பர்
கம்பராமாயணம் - Unicode
ஏரெழுபது - Unicode
சடகோபர் அந்தாதி - Unicode
சரஸ்வதி அந்தாதி - Unicode
சிலையெழுபது - Unicode
திருக்கை வழக்கம் - Unicode

ஔவையார்
ஆத்திசூடி - Unicode - PDF
கொன்றை வேந்தன் - Unicode - PDF
மூதுரை - Unicode - PDF
நல்வழி - Unicode - PDF
குறள் மூலம் - Unicode - PDF
விநாயகர் அகவல் - Unicode - PDF

ஸ்ரீ குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் - Unicode - PDF
கந்தர் கலிவெண்பா - Unicode - PDF
சகலகலாவல்லிமாலை - Unicode - PDF

திருஞானசம்பந்தர்
திருக்குற்றாலப்பதிகம் - Unicode
திருக்குறும்பலாப்பதிகம் - Unicode

திரிகூடராசப்பர்
திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode
திருக்குற்றால மாலை - Unicode - PDF
திருக்குற்றால ஊடல் - Unicode - PDF

ரமண மகரிஷி
அருணாசல அக்ஷரமணமாலை - Unicode
முருக பக்தி நூல்கள்
கந்தர் அந்தாதி - Unicode - PDF
கந்தர் அலங்காரம் - Unicode - PDF
கந்தர் அனுபூதி - Unicode - PDF
சண்முக கவசம் - Unicode - PDF
திருப்புகழ் - Unicode
பகை கடிதல் - Unicode - PDF
மயில் விருத்தம் - Unicode - PDF
வேல் விருத்தம் - Unicode - PDF
திருவகுப்பு - Unicode - PDF
சேவல் விருத்தம் - Unicode - PDF

நீதி நூல்கள்
நன்னெறி - Unicode - PDF
உலக நீதி - Unicode - PDF
வெற்றி வேற்கை - Unicode - PDF
அறநெறிச்சாரம் - Unicode - PDF
இரங்கேச வெண்பா - Unicode - PDF
சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF
விவேக சிந்தாமணி - Unicode - PDF
ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF
நீதி வெண்பா - Unicode - PDF
நன்மதி வெண்பா - Unicode - PDF

இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை - Unicode
நேமிநாதம் - Unicode - PDF
நவநீதப் பாட்டியல் - Unicode - PDF

நிகண்டு நூல்கள்
சூடாமணி நிகண்டு - Unicode - PDF

உலா நூல்கள்
மருத வரை உலா - Unicode - PDF
மூவருலா - Unicode - PDF
தேவை உலா - Unicode - PDF

குறம் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF

அந்தாதி நூல்கள்
பழமலை அந்தாதி - Unicode - PDF

கும்மி நூல்கள்
திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF
திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF

இரட்டைமணிமாலை நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF
பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF

பிள்ளைத்தமிழ் நூல்கள்
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode

நான்மணிமாலை நூல்கள்
திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF

தூது நூல்கள்
அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF
நெஞ்சு விடு தூது - Unicode - PDF
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF
மான் விடு தூது - Unicode - PDF
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF

கோவை நூல்கள்
சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF
சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF
பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF

கலம்பகம் நூல்கள்
நந்திக் கலம்பகம் - Unicode
மதுரைக் கலம்பகம் - Unicode
காசிக் கலம்பகம் - Unicode - PDF

சதகம் நூல்கள்
அறப்பளீசுர சதகம் - Unicode - PDF
கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF
பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF
சோழ மண்டல சதகம் - Unicode - PDF
குமரேச சதகம் - Unicode - PDF
தண்டலையார் சதகம் - Unicode - PDF

பிற நூல்கள்
கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode
முத்தொள்ளாயிரம் - Unicode
காவடிச் சிந்து - Unicode
நளவெண்பா - Unicode

ஆன்மீகம்
தினசரி தியானம் - Unicode


RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?

ஆசிரியர்: குகன்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2017
பக்கங்கள்: 148
எடை: 200 கிராம்
வகைப்பாடு : அரசியல்
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 130.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ரா’ அமைப்பு பற்றிய பல தகவல்களை எளிய நடையில் சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார் குகன். ‘ரா-வின் அம்மா’, ‘ரகசியமாக உள்ளே வா’, ‘அது ஒரு கவலைக் காலம்’, ‘கருப்புப் புலி கருப்பு ஆடு ஆன கதை’ என துணைத் தலைப்புகளே நம்மைப் படிக்கத் தூண்டுகின்றன.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)