10 செல்லக்காள் ஏனோ சில நாளாக ராமாயி வீட்டுப் பக்கம் வருவது இல்லை. முன்பெல்லாம் இரண்டு நாளைக்குச் சேர்ந்தாற் போல் வராமல் இருக்க மாட்டாள். இங்கே வந்து எங்கெங்கே என்ன நடக்கிறதோ அதையெல்லாம் விஸ்தாரமாகப் பேசுவாள். அவள் ரொம்பவும் ராமாயிக்கு நம்பிக்கையுள்ளவள். இங்கே பேசுவதை வேறு எங்கும் சொல்ல மாட்டாள். அதனால் இவர்களுக்குள் எப்பொழுதும் மனஸ்தாபம் வருவதற்கிடமில்லை. ராமாயிக்குச் சில சமயம் ஆறுதல் சொல்லவே இங்கு வருவாள். அதோடு சில விசேஷ நாட்களில் ராமாயி பண்ணும் பலகாரங்களை ருசி பார்க்கவும், சாதாரண நாட்களிலும் குழம்பு, பொரியல் தினுசுகளுக்கு உப்பு, காரம் சொல்லவும் வரத் தவற மாட்டாள். செல்லக்காள் வீடு தென்புறம் அடுத்ததுதான். ஒரே ஒரு சுவர். அதுவும் கொஞ்சம் இடிந்த குட்டிச் சுவர் தான் இவர்களிருவருக்கும் மத்திய பாலம். அநேகமாக அந்த மதில் ஓரத்தில் நின்று கொண்டு தான் இருவரும் பேசுவார்கள். பக்கத்து நடைக் கதவைத் திறந்து கொண்டு அந்தப்புறம் போவதில் சலிப்பு ஏற்படும் போது ராமாயி இந்த முறையைக் கையாள்வாள். செல்லக்காளும் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று கொண்டே ‘உனக்குப் பல ஜோலியிருக்கும், வரமுடியாது. எனக்கும் வேலை தலைக்கு மேலிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டே மணிக்கணக்காகப் பேசுவாள். இப்படிப்பட்ட அருமையான சிநேகிதையைக் காணாவிட்டால் யாராயிருந்தாலும் என்ன சங்கதி என்று தெரிய முயற்சி செய்வார்களல்லவா?
அவன், “என்னமோ தெரியலீங்க. ஆனா, அவுங்க மகள் ஊரிலிருந்து வந்திருக்காங்க. மகளுக்குத்தான் ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு உடம்புக்கு வந்திருமே! உங்களுக்குத் தெரிஞ்சதுதானே” என்றான். இந்தப் பேச்சிலிருந்து செல்லக்காள் ஏன் வரவில்லையென்று சுத்தமாகத் தெரியாவிட்டாலும், மகள் நோயுற்றிருக்கிறாள் என்றால் தாயார் வேண்டிய சிசுருஷை செய்து கொண்டிருப்பாளல்லவா? அதனால் வர நேரமில்லை என்ற அர்த்தம் கலந்திருந்தது. இதையெல்லாம் யோசித்து அறிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர்களுக்கு இது ரொம்ப சுலபம். இன்னும் சொன்னாலும் தெரிந்து கொள்வார்கள். ஊரில் உள்ள பண்டாரங்கள் மாத்திரம் அல்ல; மற்ற சாதிகளும் எதிலும் கவுண்டர்களிடம் பிடி கொடுத்து விடுகிற மாதிரி பேசிச் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்காது அவர்கள் பேச்சு. ரொம்ப ரொம்ப சாதுரியமாகப் பதில் சொல்லுவதிலும், தளுக்காக நடந்து கொள்வதிலும் கைதேர்ந்தவர்கள். இவர்கள் கூடிக் கொட்டம் அடிக்கும் போது பார்க்க வேண்டும் அந்த வேடிக்கையை! ராமாயி ஒரு நாள் மதில் புறம் போய் எட்டிப் பார்த்தாள். அங்கு பின்புறத்தில் ஒரு கட்டில் போடப்பட்டு பாயும் விரித்திருந்தது. தலையணை காலுக்கு ஒன்று தலைக்கு ஒன்று இன்னும் ஒன்று எச்சாக இருப்பதிலிருந்து செல்லக்காளின் மகளே தன் படுக்கையையும் ஊரிலிருந்து தயாராகக் கொண்டு வந்து விட்டாளென்பது விளங்கிற்று. அதே சமயம் செல்லக்காள் தன் மகளை உள்ளேயிருந்து கூட்டி வந்து கட்டிலில் படுக்க வைத்தாள். “ஏக்கா, உடம்புக்கு எப்படியிருக்குது? எனக்கு இத்தனை நாளாத் தெரியாது போ” என்றாள் ராமாயி. செல்லக்காள் தலையை நிமிர்ந்து பார்த்து, “ஐயோ, நீயா ஆயா! ஆரோன்னு இருந்தேன்; ஆமாத்தா, இந்த பாழு முண்டைக் காச்சல் தான் இருபது நாளா கனலாக் காயுது” என்று வாய்மேல் கையை வைத்தாள். “உம்! என்னத்தைப் பண்ணிப் போடுது? எதாச்சும் மருந்து கொடுக்கறீங்களா?” என்றாள் ராமாயி. “ஆமாம், கொடுத்துக்கிட்டுத்தான் வருது. என்ன பண்றது? இதை விட்டுவரத் துளி கூட நேரமில்லெ. இங்கேயே காத்துக்கிட்டுக் கிடக்கிறேன். அதுதான் உங்க வளவுப் பக்கம் கூட எட்டிப் பாக்க முடியலெ.” ஆனால் அவள் மனதிற்குள், ‘ஐயோ பாவம், இது எங்கே நன்றாகப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டாள். செல்லக்காள் மகளுடைய சமாச்சாரம் குழந்தையிலிருந்தே ஒரே மாதிரியாகத்தான் இருந்து வருகிறது. சதா நோய்வாய் படுவதே அவள் தொழிலாய் விட்டது. அவள் ரத்தத்திலே அணு அணுவாய் நோய்க் கிருமிகள் கலந்து தேகம் பூராவும் வியாபித்து விட்டதால் கஷாயமும், பத்தியமும், அதுவும், இதுவும், எதுவுமே அவளைக் குணப்படுத்து வதாய்க் காணோம். அவள் கலியாணம் செய்து கொண்டு ஒரு சுகத்தையும் காணவில்லை! ஒரு காடு, தோட்டம், பருத்தி பம்பலுக்குப் போய் நாலோட ஒன்றாய்த் திரிந்து, வேலை வெட்டியிலே கெட்டிக்காரியாயிருந்தால் தன் கட்டினவனுக்கும் சந்தோஷமா யிருக்கும். புகுந்த இடத்திலும் போற்றுவார்கள். இந்த நோக்காட்டுச் சீவனைக் கண்டால் யாருக்குத்தான் பிடிக்கும்? அதற்குத் தான் பத்திலே, பதினைஞ்சிலே தாய் வீட்டிற்கே வந்துவிடுவது. செல்லக்காள் சொல்வது போல, “அவள் தலையிலே இதையெல்லாம் காண எழுதியிருக்கிறதாக்கும்.” “கால் வலிக்குமே, என்னேரம் நின்னபடியிருப்பாய்? எனக்குத் தான் வர முடியல்லெ. போகுது. இதென்ன ராமாயி ஊருக்குள்ளே ‘கசமுச’ன்னு பேசிக்கிறாங்களே, நிசம்தானா?” “என்ன அது?” “அது என்னன்னு சொல்றது போ, அந்த மானங்கெட்ட பேச்சை!” என்று செல்லக்காள் நிறுத்தினாள். ராமாயிக்கு உள்ளுக்குள் வருத்தமும், கோபமும் பொங்கிக் கொண்டு வந்ததானாலும், “என்ன அக்கா வாயை உட்டுச் சொன்னாத் தெரியுமா? சொல்லாது போனால்தான் போ” என்று அந்தப் பேச்சை அப்படியே மறைக்கப் பார்த்தாள். “நாம் இருந்திடலாம்; ஆனா உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியுமா?” என்று இவள் உள் கருத்தை அறிந்தவள் போலச் செல்லக்காள் பேசினாள். “என்னம்மோ நீ பேசறது மூடு மந்திரமாயிருக்குது. சரி, நேரமாச்சு மாட்டுக்குத் தண்ணி வைக்கோணும்” என்று கிளம்பினாள். “என்ன இருந்தாலும் நாகம்மாள் இப்படியா கெட்டுத் திரிவா!” என்று செல்லக்காள் பேசி முடிப்பதற்குள், “எம் பேச்சை ஆராச்சும் எடுத்தால் கையிலிருப்பது தான் கிடைக்கும்” என்று நாகம்மாள் சொல்லிக் கொண்டே அங்கு வந்தாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த ராமாயி நடுங்கிப் போனாள். அப்போது நாகம்மாளுடைய கையில் விளக்குமாறு வைத்திருந்தாளாகையால் அந்தப் பேச்சு அப்படியே அடங்கிவிட்டதென்பதையும், செல்லக்காள் இழுக்குப் பொடுக்கெனப் பேசவில்லையென்பதையும் தெரிவிப்பதே போதுமானது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ரஷ்ய புரட்சி மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2006 பக்கங்கள்: 136 எடை: 150 கிராம் வகைப்பாடு : வரலாறு ISBN: 978-81-8368-145-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: 'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள். ஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான். 'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் அச்சத்துடன் உச்சரிக்கத்தொடங்கியதும்அன்றிலிருந்துதான். மக்கள் என்ன பெரிய மக்கள்! அவர்களால் என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்புடன் சீட்டுக்கட்டைப் போல அவர்களைக் கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள் ஜார் மன்னர்கள். அந்த ஜார் வம்சத்தையே கலைத்துப்போட்டுக் காணாமல் போகச் செய்தது ரஷ்யப் புரட்சி. உலக சரித்திரத்தையே மாற்றியமைத்த இந்த சிலிர்ப்பூட்டும் சாதனை எப்படி நிகழ்த்தப்பட்டது? இந்த மாபெரும் போராட்டத்தை எப்படித் திட்டமிட்டார்கள்? எப்படிச் செயல்படுத்தினார்கள்? மனித குலத்தின் மாபெரும் புரட்சியாக இன்றுவரையில் ரஷ்யப் புரட்சியைச் சொல்வதற்கு என்ன காரணம்? சிலிர்க்க வைக்கும் இந்த வரலாற்றுப் பதிவில் அத்தனை கேள்விகளுக்கும் விடைகள் உள்ளன. நூலாசிரியர் என். ராமகிருஷ்ணன், ஒரு பத்திரிகையாளர். தீக்கதிர் இதழில் தொடர்ந்து எழுதுபவர். 'மார்க்ஸ் எனும் மனிதர்', 'அயர்லாந்து - எண்ணூறு ஆண்டு விடுதலைப்போர்' உள்ளிட்ட ஐம்பது நூல்களின் ஆசிரியர். நேரடியாக வாங்க : +91-94440-86888
|