7 நாகம்மாள் தோட்டத்திற்கு வந்து சேர்ந்த போது சூரியன் மரக்கிளைக்கு மேலே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். நாற்புறமும் அசைந்தாடிக் கொண்டிருந்த கிளைக்கு மேல் சூரிய வெளிச்சம்பட்டு மின்னிக் கொண்டிருந்தது. காக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மண்ணுக்கு மேல் சிதறிக் கிடந்த எள்ளுகளைக் கொத்த ஆரம்பித்தன. வேலியோரத்தில் ஒரு மாடு மேய்ச்சலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அப்போது இரண்டு நெடும் பாத்திக்கு மேல் சின்னப்பன் உழுதிருந்தான். காளைகள் பஞ்சுப் பூமியை உழுவதைப் போல் சுலபமாக தலைகுனியாமல் போய்க் கொண்டிருந்தன. சின்னப்பன் கையிலிருக்கும் உழுக்கோலால் கொழுவில் கட்டிக் கொள்ளும் மண்ணை அடிக்கடி தடவிவிட்டுக் கொண்டே சென்றான். இவ்வளவு நேரம் சாலிட்டுக் கொண்டிருந்த கருப்பன் எள்ளுக் கூடையை நாகம்மாளிடம் கொடுத்துவிட்டுப் பட்டி திறந்து விடுவதற்காகப் போனான்.
“ஆமாம், நான் தான் ஊட்டியிலிருந்து கருப்புக் கம்பளியைப் போத்திக்கிட்டு வந்திருக்கேன்; உங்களைக் கண்டா எல்லாரும் பயப்படுவாங்க” என்றாள் நாகம்மாள். “ஏன் அவனை மறுபடியும் கூப்பிட்டீங்க?” “தண்ணி கொண்டாரத்தான். குடிக்காமே தாகமாகவே இருந்திரமுடியுமா?” “தண்ணீங்கிற பேச்சே எடுக்கக் காணாமே. நீங்க மனசுக்குள்ளவே சும்மா நெனச்சிருப்பீங்க” என்றான் சின்னப்பன். அவள் வெறுப்போடு அவன் முகத்தைப் பார்க்காமல் கூடையிலிருந்து குத்துக் குத்தாக எள்ளை வாரி இறைத்தாள். கருப்பன் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக நடந்தான்; ஏனென்றால் பார்த்து விட்டால் அது கூட ஒரு குற்றம் ஆகிவிடாதா? நேர் கோடு கிழித்ததைப் போல கலப்பை பூமியைப் பிளந்து கொண்டு தெற்கே போகும். பின்பு வளைந்து மறுபுறம் திரும்பும். நாகம்மாள் மௌனமாகச் சாலிட்டுக் கொண்டே வந்தாள். இள மத்தியானத்துக்குள் பாதிக்காடு உழுதாகிவிட்டது. அப்போது ஒரு சிறுமி பழைய சாதத்தைக் கொண்டு வந்து வேலா மரத்தடியில் இறக்கி வைத்தாள். சின்னப்பனும் ஏரை நிறுத்திவிட்டுக் கை கால் அலம்பிக் கொள்ள கிணற்றுப் பக்கம் போனான். நாகம்மாள் கூடையை வரப்போரத்தில் வைத்துவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டாள். வந்த பெண், கூடைக்குள்ளிருந்து சோற்றுக் கலயத்தை எடுத்து வெளியே வைத்தாள். ஒரு கொட்டைச் செடியிலிருந்த இலையைக் கிள்ளி வந்து சோற்றுக் கலயத்தை மூடிவிட்டு, “ஏக்கா பல் விளக்கியாச்சா” என்று நாகம்மாளைப் பார்த்துக் கேட்டாள். நாகம்மாள் அவள் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லை. “உங்க அம்மா உன்னைச் சோறு கொண்டு போகச் சொன்னாளா?” என்றாள். வழக்கத்துக்கு மாறாக இன்று பக்கத்து வீட்டுச் சிறுமி சாதம் கொண்டு வந்ததால் இப்படிக் கேட்டாள் நாகம்மாள். “எப்பவும் இல்லாத அதிசயமா இன்னைக்கு ஏது போகச் சொல்லீட்டா” என்று சிரித்துக் கொண்டே நாகம்மாள் கேட்டாள். “எங்கம்மா ‘நீயாச்சு கொண்டு போய் சோறு கொடுத்திட்டு வா; பாவம் ராமாயி ஒருத்தியா கஷ்டப்படுறா’ என்றாள். நானும் எங்க தோட்டத்துக்கு இதுலே தானே போகவேணும்; இதையும் வாங்கிட்டு வந்தேன் என்றாள். இந்த சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு இன்னும் நடந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிய வேண்டி, “பாப்பா உங்குணம் தங்கமான குணம்; அதனாலேதான் உன்னைக் கண்டாலே எனக்குப் பேச வேணுமினுருக்குது. உம், அப்புறம் என்ன பேசினாங்க?” என்றாள். பாப்பாவும் உலகத்தைப் புரட்டிவிடுகிற பெரியதொரு ரகஸ்யம் தன்னிடம் இருப்பதைப் போல, “உன்னைப்பத்தித் தான் என்னமோ பேசீட்டிருந்தாங்க” என்றாள். சிறு குழந்தைகளுக்கு இம்மாதிரி விஷயங்களில் சிரத்தையே கிடையாது. வீணாக அவர்களுடைய வாயைக் கிளறினால் இல்லாததைக் கூடக் கண்டபடி சொல்ல ஆரம்பிப்பார்கள். பின்பு அதனால் எத்தனை சண்டைகளோ? நாகம்மாள் துருவிக் கேட்டாள். அவளுக்குத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பேரவா மிகுந்திருந்தது. இதற்குள் சின்னப்பன் அருகில் வந்துவிட்டான். அவன், தலைத் துண்டை விரித்துப் போட்டு அதன்மேல் உட்கார்ந்தான். சிறுமி, சாதத்தைக் கரைத்து கையில் ஊற்றினாள். நாகம்மாள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அசையவில்லை. அவள் மனதில் பல சிந்தனைகள் உருண்டோடிக் கொண்டிருந்தன. இந்தப் பரந்து கிடக்கும் காட்டிலும், தோட்டத்திலும் தன் கணவனுக்குச் சேர வேண்டிய பாகம் பாதி இல்லையா? தானும் தன் குழந்தைக்கு அழகான சீலை, ஒரு நகை நட்டு பண்ணிப் போட்டு பார்த்தால் எப்படியிருக்கும்? மாதத்திற்கு நாலு பேருக்குக் குறையாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள். இதெல்லாம் யார் சம்பாதித்தது? நல்லதோ, கெட்டதோ எதுவும் இப்படித்தான். ஒரு சிறு வித்து எப்படி பிஞ்சும் பூவும் குலுங்கும் விருக்ஷமாகி அதன் நிழலிலே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்த மாதிரி இந்தச் சிறு கனல் பொரியும் அவள் மனதில் மகாப் பெரிய அனல் மலையை வளர்க்கலாயிற்று. அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்து கொண்டிருந்தாளேயொழிய எழுந்திருக்கவில்லை. சின்னப்பன் பாப்பாவிடம் மெதுவாக, “அவுங்களையும் சோறு குடிக்கச் சொல்லு” என்றான். “பல்லு விளக்கச் சொன்னேன்! அதையே கேக்கலையே” என்றாள் பாப்பா. அவள் சொல்லியது அருகிலிருக்கும் பத்துப் பேருக்குக் கேட்கும் போலிருந்தது. நாகம்மாள் வெடுக்கென்று, “இந்தத் தலைவலியில் பழைய சோத்தை நான் வாயில் கூட ஊத்த மாட்டேன்” என்றாள். சின்னப்பன் அதைக் கேட்டு “தலைவலியானால் ஊட்டுக்குப் போயிடறது” என்றான். “போயிட்டா சாலிட வேறே ஆள் இருக்குதாக்கும்?” “அடே, மாரா, மாரா” என்று கூப்பிட்டான் சின்னப்பன். “மாரனும் வேண்டாம் செல்லனும் வேண்டாம்” என்று தானே எழுந்தாள். “இல்லை, வெயிலில் இருந்தால் இன்னும் நோவு எச்சாகிவிடும்” என்று சின்னப்பன் மறுபடியும் மாரனைக் கூப்பிட ஆரம்பித்தான். மாடு மேய்த்துக் கொண்டிருந்த மாரன் சத்தத்தைக் கேட்டு எழுந்து ஓடி வந்தான். நாகம்மாள் சற்று நிழலில் உட்கார்ந்தாள். பாப்பாத்தி மீதி சாதம் எவ்வளவு இருக்கிறதென்று அளவு பார்த்துக் கொண்டே குடிக்க ஆரம்பித்தாள். இதைக் கண்ட நாகம்மாள் அவசர அவசரமாகக் கையைக் கழுவிக் கொண்டு, “கலயத்தை இப்படிக் கொடு” என்று கையை நீட்டினாள். சின்னப்பனுக்கு இதைக் காண ஆச்சரியமா யிருந்தது. திடீரென்று தோன்றிய நோவு மாயமாகத் தான் மறைந்து விடுமாக்கும் என்று நினைத்துக் கொண்டு ‘தாய், தாய்’ என்று காளையைத் தட்டினான். அந்தி வானத்தைக் கிழித்துக் கொண்டு செல்லும் சூரியனைப் போல கலப்பையும் பூமியைக் கிழித்துக் கொண்டு சென்றது. |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ரெயினீஸ் ஐயர் தெரு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2012 பக்கங்கள்: 96 எடை: 150 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-82648-06-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 70.00 தள்ளுபடி விலை: ரூ. 65.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|