24 அன்று புதன்கிழமை. நாகம்மாள் ரொம்ப முகமலர்ச்சியுடன் இருந்தாள். கண்ணாடியைச் சீந்தாதவள் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறாள். தும்பைப் பூப்போன்ற வெள்ளைப் புடவையை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி சீராகச் சொருகிக் கொள்கிறாள். இன்று ஏது இவ்வளவு குதூகலம். இன்று சந்தை நாளென்றா, இல்லை, வாரந் தவறாது தான் சந்தை வருகிறது. அப்போதெல்லாம் இவ்வளவு ஆனந்தப் பெருக்கு ஏற்பட்டதில்லையே? பின்பு பூரிப்புக்குக் காரணமென்ன, மணியக்காரர் வருகிறார்! இத்தனை நாளாக அங்குமிங்கும் பார்த்து யோசனை சொல்லி வந்தவர் இன்று நேரிலேயே வருகிறார். அவராக வீடு தேடி வருகிறதென்றால் நாகம்மாளுக்கு அதைவிட சந்தோஷச் செய்தி வேறு இருக்கமுடியுமா? வாசல் பக்கம் போவதும், உள்ளே வருவதும், பொழுதைப் பார்ப்பதும், யோசிப்பதுமாய் இருந்தாள். அவளிடம் மட்டும் அமானுஷயமான சக்தி ஏதாவது இருந்தால், அப்போது அடிக்கும் மாலை வெயிலை மாற்றி காரிருள் மயமாகச் செய்திருப்பாள். ஏனென்றால் இருட்டினவுடன் வருவதாக மணியக்காரர் தெரிவித்திருந்தார்.
“என்னைத்தான் திட்டப் போகிறாள்” என்று அவள் மனதைத் தெரிந்தவன் போலக் கெட்டியப்பன் குரல் கேட்டது. “எங்கள் முகத்திற்காக உங்களை இன்று ஒன்றும் செய்யமாட்டாள்” என்று முதலியார் தமாஷ் பண்ணினார். நாகம்மாள் விளக்கை உயர்த்தி கதவை நன்றாகத் திறந்து, “வாங்க, வாங்க” என உபசரித்தாள். பாயை எடுத்து அவள் விரிக்கும் முன்பே, “இல்லெ, இல்லெ, வேண்டாம்” என்று முதலியார் தடுத்தார். “உங்களுக்கு இல்லை - ஆனால்...” என்று மணியக்காரர் முகத்தைப் பார்த்து விட்டு நாகம்மாள் மறுபடியும் பாயை எடுக்கப் போனாள். “எனக்குத் தெரியும். இதோ பாருங்க கட்டில் இருக்கிறது. அவர் உட்கார்ந்து கொள்ளட்டுமே” என்றார் முதலியார். “எங்குதான் உக்காந்தா என்னப்பா?” என்று பெரும் போக்காகக் கூறி மணியக்காரரும் கீழேயே உட்கார்ந்தார். மணியக்காரர் அவ்வறையின் ஒவ்வொரு மூலையையும் மேலும் கீழும் நோக்கியவாறு, “வெகுநாளைக்கு முன் வந்தது. பத்துப் பனிரண்டு வருஷமிருக்கும் இங்கு அடியெடுத்து வைத்து. அதற்கப்புறம் யார் வந்தார்கள், போனார்கள்? என்ன நாகம்மா, அந்த ஓரத்திலே சின்ன மாடக்குழி ஒன்று இருந்ததே, இப்போது மூடிவிட்டீர்களா?” என்று கேட்டார். நாகம்மாள் என்னவோ யோசித்துக் கொண்டு நின்றாள். கெட்டியப்பன் ஆச்சரியத்துடன், “உங்களுக்கு அதெல்லாம் எப்படி ஞாபகத்திலிருக்கிறது?” என்றான். “இந்த ஆச்சரியத்தில் தான் பேசக்கூடத் தோன்றாது நிற்கிறதைப் பாருங்களேன்” என்று நாகம்மாளைச் சுட்டிக் காட்டினார் முதலியார். “என்னது, என்ன?” என்று நாகம்மாள் இரண்டு மூன்று தரம் கேட்டாள். நாகம்மாள் தலையைக் குனிந்தபடி, “உங்களுக்குத் தெரியாததை, நான் என்ன அதிகம் சொல்லப் போகிறேன். எல்லாம் நீங்க சொன்னா செரி” என்றாள். “காலையில் சின்னப்பன் வரப்போறானம். எனக்குத் தகவல் கிடைத்தது. அவசியம் நாளைக்கு வந்து விடுவான் என்று தான் நானும் நினைக்கிறேன். போய் பதினைந்து நாளைக்கு மேல் ஆகிறதல்லவா? தோட்டங்காடுகளை விற்க ஏற்பாடு பண்ண இவ்வளவு நாட்கள் போதாதா?” என்றார். “என்ன ஏற்பாடு ஆகிவிட்டதா?” என்று திகைப்புடன் நாகம்மாள் கேட்டாள். “ஆனமாதிரிதான். கையெழுத்து ஒன்றுதான் பாக்கி!” “அப்புறம்?” “நீ ஏன் கலங்க வேண்டும். எதுக்கும் அஞ்சாதே. எனக்கு சரி பாதியைப் பிரித்து விடு” என்று தாராளமாகக் கேளு. சும்மா மிரட்டினா ‘இதெல்லாம் தெரியுமப்பா’ என்று சொல்லிவிடு. ‘அப்படியாச்சா? லொட, புட, அது செய்திடுவேன், இது செய்திடுவேன்’ என்றால், எனக்குக் கொடுத்தபின் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று தைரியமாகச் சொல்லு. நீயேன் தயங்கோணும்; தாமதம் செய்யோணும்! இனித் தாமதித்தால் வெள்ளம் தலைக்கு மேல் போவது நிச்சயம்.” “வாஸ்தவம் தான்” என்று முதலியார் பேச்சை ஆமோதித்தார். நாகம்மாள் கொஞ்ச நேரம் மௌனமாயிருந்துவிட்டு, “நான் என்னென்ன செய்யோணும், என்ன செய்யச் சொல்றீங்க?” என்று கேட்டாள். “அன்றைக்கு மாதிரி அரண்டு போய் பதில் பேசாது விட்டுடாதே. எனக்கு உண்டானதைப் பிரித்து விடு என்று கண்டிப்பாகக் கேள். பின்னால் வருவதற்கு நாங்கள் இருக்கிறோம். அவன் என்ன ஆகாசத்திலா பறந்து விடுவான். நீ மட்டும் உறைத்து நின்றால் விலைக்கு வாங்க ஒருவன் கிட்ட வந்துவிடுவானா?” என்றார் மணியக்காரர். நாகம்மாள், “ஆகட்டும் நீங்கள் சொன்னபடிக் கேக்கிறேன்” என்றாள். பின்பு மணியக்காரர் கெட்டியப்பனிடம் “அவன் வந்த பிறகு இந்தப் பக்கம் அடிக்கடி தலைகாட்டாதே. தப்பாக நினைக்க இடம் உண்டாகும்” என்றார். “அண்ணா, இப்போதே நான் சாளைக்குப் போய்விடுகிறேன். நீங்கள் கூப்பிடுகிற சமயம் வருகிறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். “நாங்களும் அவனோடு போகிறோம்” என்று முதலியார் சொல்லவும் மணியக்காரர் சிரித்துக் கொண்டு எழுந்தார். அவர்கள் போனபின் கொஞ்ச நேரம் வரை நாகம்மாள் அப்படியே உட்கார்ந்து கொண்டிருந்தாள். கதவைத் தாளிட்டுப் படுக்கவும் இஷ்டமில்லை. உட்கார்ந்திருக்கவும் பிடிக்கவில்லை. கலவர மனதுடன் யோசனையில் மூழ்கினாள். அப்போது ‘சொத்தெ’ன்று ஒரு பூச்சி முகட்டிலிருந்து கீழே விழுந்தது. பல்லியால் கவ்வப்பட்ட பாதி பாகம் போக மீதி பாதி பாகமே தரையில் துடித்துக் கொண்டிருந்தது. அந்த மரித்துப் போகும் பூச்சியைக் கண்கொட்டாது பார்த்துவிட்டு மேலே கூரையைப் பார்த்தாள். உயர எங்கும் பூச்சிக்கூடு. ஒட்டடை அடித்து வருஷக் கணக்காகிறது. இதில் புகைக் கலப்பு வேறு கன்னங்கரேலெனக் கப்பியிருந்தது. மேலும் கீழும் பார்க்கப் பார்க்க நாகம்மாளுக்குக் கசப்பாக இருந்தது. ‘என்ன இது ஒரே குப்பை மயம். வந்தால் என்ன சொல்வார்கள்? சொல்லுவதென்ன, எனக்கே அசிங்கமாக இருக்கிறதே.’ காலடி ஓசை கேட்டது. திடுக்கிட்டு நோக்கினாள். யாரென்று தெரியவில்லை. ஒரு வேளை கெட்டியப்பனாக இருக்குமோ, அல்லது முதலியாரோ, யாரென்று அவளால் நிச்சயம் செய்ய முடியவில்லை. “என்ன கோயில் பாளத்தாளா!” என்று கேட்டுக் கொண்டு பெரியண்ண கவுண்டர் வந்தார். அயலூரிலிருந்து கலியாணமாகி வரும் பெண்களை அந்த ஊர்ப்பெயரைச் சொல்லியே தான் அநேகமாகக் கூப்பிடுவார்கள். தன்னை அவ்விதம் பெயரிட்டு அழைப்பவர் யாரென்று நாகம்மாள் நோக்கினாள். “நீங்க தான் என்னைப் பயப்படுத்தினது?” “நான் அல்ல, எங்க தாத்தா வந்தாலும் உன்னைப் பயப்படுத்த முடியுமா? இந்த அர்த்த ராத்திரியில் நீதான் யாரையோ பயப்படுத்த உக்காந்து கொண்டிருக்கிறாய். நான் அகஸ்மாத்தாக வந்து சேர்ந்தேன்” என்று சொல்லிவிட்டுப் பெரியண்ணன் சிரித்தார். நாகம்மாளும் கூடச் சிரித்து விட்டுப் பின்பு ரொம்ப அனுசரணையாக, “இன்னேரத்தில் எங்கிருந்து வாரீங்கள்?” என்றாள். பெரியண்ணன், “பேச நேரமில்லை” என்று சொல்லிச் சுருக்கமாக, “கருப்பட்டி வண்டி பின்னால் வந்தேன். நொடித்தடம், வண்டி இடறி அகாலத்தில் ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது? சின்னப்பன் இருந்தாலும் சந்தைக்குப் போயிருப்பான். என்ன பண்ணுவது? இருக்கிற வரையிலும் செய்துதானே தீரோணும்? கஷ்டம் என்று பார்த்து முடிகிறதா? நான் வருகிறேன் ஆயா? நேரமாச்சு, வண்டி வெகுதூரம் போயிட்டது” என்று அடியெடுத்து வைத்தார். “வாசலில் முளை அடிச்சிருக்குது. பாத்துப் போங்கள்” என்று நாகம்மாள் சொல்லச் சொல்ல அவர் முளையில் மோதி காலை நொண்டிக் கொண்டே போனார். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
நான் ரம்யாவாக இருக்கிறேன் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2018 பக்கங்கள்: 144 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-87636-27-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 150.00 தள்ளுபடி விலை: ரூ. 135.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘பேரலல் யூனிவர்ஸ்’ எனப்படும் இணைப் பிரபஞ்சம் குறித்த பேச்சுகள் தமிழில் இன்னும் அதிகம் உருவாகவில்லை. ஆங்கிலத்தில் இதுகுறித்து ஏராளமான திரைப்படங்களும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிவந்துவிட்டன. ‘பிக் பாங்’ வெடிப்பு ஏற்பட்டு நம் பிரபஞ்சம் உருவான அடுத்த நொடியே இன்னொரு பிரபஞ்சமும் உருவானது என்கிறது இணைப் பிரபஞ்சக் கோட்பாடு. இதைப்போல மண்ணும் மனிதர்களும் உள்ள இன்னொரு பூமியும் இருக்கிறது என்றுகூடச் சொல்லப்படுகிறது. இங்கிருக்கும் ஒருவரைப் போலவே அங்கும் ஒருவர் இருப்பார். அவர்களை நாமோ நம்மை அவர்களோ சந்திக்கும் தருணம் நெருங்கிவிட்டது என்கிறார்கள். நாம் ரம்யாவாக இருக்கிறேன் அதற்கான சுவாரஸ்யங்களை ஆராயும் நாவல், சயின்ஸ் த்ரில்லர். நேரடியாக வாங்க : +91-94440-86888
|