3 சுஜி வீடு வரும் போது மணி ஏழடிக்கும் தருவாயாகி விடுகிறது. குழந்தை, குழந்தைப் பை, இரண்டையும் சுமந்து கொண்டு வருகிறாள். வாசல் கேட் தாழ் திறக்கும் 'கிளிக்' ஓசை கேட்டதும், உள்ளே இருந்து அபிராமி விரைந்து வந்து குழந்தையைக் கையில் வாங்கிக் கொள்வாளே? இன்று அவள் நெஞ்சுள் குற்ற முள் உறுத்துகிறது. வாயில் விளக்கைப் போட்டு விட்டு நிற்கிறாள். அக்கம் பக்கக் குழந்தைகள் சத்தம் கூடக் கேட்கவில்லை. தொலைக்காட்சி செய்திச் சுருக்கம் செவிகளில் விழுகிறது. சுஜி அறைக்குள் சென்று, குழந்தையைத் தொட்டிலில் விடுகிறாள், அது சிணுங்குகிறது. "இருடா கண்ணா, அம்மா, மூஞ்சியலம்பிட்டுப் பால் கொண்டு வருவேன். சமர்த்தில்ல?" முத்தமிட்டு விட்டுக் குளியலறைக்குச் செல்கிறாள்.
"நீ என்னம்மா சாப்பிடறே? காபி கலக்கட்டுமா?..." "குழந்தைக்கு உடம்பு சுடுவது போலிருந்தது. டாக்டர்ட்டப் போகலாம்னு நின்னேன். இந்தத் தாட்சாயணிக்கு எத்தனை கூட்டம்? சரின்னு பேசாமல் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை பிரேம் கிட்டக் கொண்டு போய்க் காட்டணும்... என்னமோ மனசே சரியில்ல. காப்பி தான் ஒருவாய் கலந்து குடுங்க போதும்..." அபிராமி காபியைக் கலந்து கொடுக்கிறாள். சுஜி காபியுடன் அறைக்கு வந்து, குழந்தைக்குப் பால் கொடுத்து விட்டு, அவளைத் தட்டி உறங்கச் செய்கிறாள். பிறகு முன் அறைக்கு வந்து, டி.வி.யைப் போடுகிறாள். செவ்வாய்க்கிழமை நாடகம்... மேசை மீதிருக்கும் குங்குமம் திருநீற்றுப் பூப் பிரசாதம், எலுமிச்சம்பழம் சட்டென்று அவள் கண்களில் பட்டு விடுகிறது. சுஜாவின் முகம் இறுகிப் போகிறது. அடுத்தகணம் அந்த எலுமிச்சம் பழத்தைத் தூக்கி எறிகிறாள். "ஆரம்பிச்சாச்சா இந்த பிஸினஸ்?" அபிராமி நடுங்கிப் போகிறாள். எலுமிச்சம்பழம் அவள் காலடியில் உருண்டோடுகிறது. "கோவிலுக்குப் போய்த்தான் இந்த கதிக்கு வந்திருக்கேன். நான் பாட்டில வேலை செஞ்சிட்டு ஏதோ சந்தோஷமாய் வேண்டியதை வாங்கிச் சாப்பிட்டு, உடுத்தி வாழ்ந்திருப்பேன். கல்யாணமாம், கல்யாணம். புடிச்சுக்கன்னு விலங்கைமாட்டி ஒரு பொறுப்பையும் கொடுத்திட்டு இன்னும் பத்தலியா?... இத பாருங்க? உங்கள் பிள்ளையோட நான் குடும்பம் பண்ண முடியும்னு எனக்குத் தோணல?" அபிராமி அவளருகில் சென்று அவள் கையை ஆதரவோடு பற்றுகிறாள். "சுஜாம்மா, வருத்தப்படாதே. என்னமோ எனக்கு அஞ்ஞானம், கோயிலுக்குப் போகலாம், அவ கூட்டி வச்சது தானேன்னு தோணித்து போனேன். எலுமிச்சம் பழமெல்லாம் நான் வாங்கிட்டுப் போகல - அப்படியெல்லாம் ஒரு தீர்மானமும் இல்ல. ஏதோ மனசு ஆறுதல் - யாரிட்டயேனும் சொல்லி ஆறணும், எங்க போக?... சாந்தமடை சுஜா, உன் கஷ்டம் எனக்கும் தெரியிதம்மா. காபி ஆறிச் சில்னு போயிட்டுதே... ஓவல்டின் வாணா கரைச்சிட்டு வரேன். அலைஞ்சிட்டு வரே..." "தப்புத்தாம்மா..." "எப்படியானும் கழுத்தில தாலி விழணும். எவளானும் ஏமாந்தவளப் புடிச்சிக் கட்டணும். அத்தோட உங்க பிறவி மோட்சம் வந்துடும். அப்படித்தானே நினைக்கிறீங்க?" அபிராமிக்குத் துயரம் பொங்கி வருகிறது. "இப்படி எல்லாம் பேசாதே சுஜா, என் மனசு எவ்வளவு வேதனைப் படுகிறதுன்னு உனக்குச் சொல்ல முடியல..." "நீங்க தான் வேதனைப் படுறீங்க. எனக்கு குளுகுளுன்னு சந்தோஷமா இருக்கு, இல்ல?... ஆபீசில கூட தலைதூக்க முடியாதபடி அவமானமா இருக்கு. அங்க வந்து நாலு பேர் முன்னே வாடி போடின்னு பேசறான். என் கண் முன்ன, வேணுன்னு, எவ தோளிலோ கையப் போட்டுப் போறான்..." "ஆ...? யாரம்மா?" "யாரு? அவன் தான்? அவன் இவன் தான்னு சொல்லுவேன். தினமும் குடிச்சிட்டுக் கண்ட நேரத்துக்கு வந்தா நீங்க கதவத் திறந்து விடுறீங்க. நான் சொல்றேன் நீங்க குடுக்கிற இடம் தான் இவ்வளவுக்கு வந்தது. அப்படி என்ன பிள்ளை?..." "சரி, இன்னிக்குக் கதவு திறக்கல..." கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள். அபிராமிக்குத் தாலி கட்டியவன், இந்தப் பையனைத் தவிர அவள் நினைவில் நிற்க எந்த ஒரு நலமும் இன்பமும் கொடுக்கவில்லை. என்றாலும் இன்று வரை அவனை ஏக வசனத்தில் அவன் இவன் என்று குறிப்பிட்டதில்லை. இதுவேறு தலைமுறை; நியாயம் கேட்கிறாள். நியாயம்; நியாயம். "எங்கிட்டக் கேக்காம எதுக்குக் கோயிலுக்குப் போகணும்? ஆறு வாரத்துக்குள்ள தாலி ஏறிடும்... தாலி! பிள்ளைக்கு இன்னும் எவளானும் ஏமாந்த சோணகிரி மஞ்சக் கயிறுக்கு ஏங்கி நின்னிட்டிருப்பா, கட்டி வக்கலாம்னு நினைச்சிருப்பிங்க!... அப்படித்தானே! ஆறுவாரம் இப்ப நீங்க போயி வரத்துக்குள்ள ஏறின இது எறங்கிடும்னு நினைச்சிக்குங்க! இந்த மஞ்சக் கயிறு மகத்துவம், எல்லாம் கூடி இருந்தாத்தான். இல்லேன்னா வெறும், வெறும் கயிறு! இது கழுத்தை - இல்ல - வாழ்க்கையை அறுக்கிற கயிறு!" கழுத்திலிருக்கும் அந்தக் கயிறை வெறுப்புடன் கையில் சுற்றி முறுக்குகிறாள். பிறகு கையில் கழற்றி வைத்துக் கொள்கிறாள். அபிராமி இடித்த புளிபோல் நிற்கிறாள். "நீங்க வாழ்க்கையில் பட்டவங்கதானே? நீங்களே சொல்லுங்கம்மா! உங்களுக்கு, புருசன்ங்கறவன் இந்தப் புள்ளயைக் குடுத்ததைத் தவிர ஒண்ணும் நல்லதச் செய்யல, அந்தப் பெண்சாதிக்கும் மூணுநாலு பந்தம். நாளெல்லாம் ரேசு, குடின்னு ஆடிட்டு ஒருநா கண்ணை மூடிட்டான். எம்புள்ளக்கி அப்பா முகம் கூட நினைப்பிருக்காதுன்னு சொன்னீங்க. அப்படி இருந்தும், புள்ள மேல கேட்ட போதெல்லாம் பணம் குடுக்கும் பாசம் எப்படிம்மா வந்தது உங்களுக்கு?" நியாயம்... நியாயம்... "ஹனிமூன்லயே இவன் சாயம் வெளுத்துப் போச்சி. 'தபாரு சுஜி, அதோ அந்தப் பொண்ணுகள்ளாம் என்னயே வச்சகண் வாங்காம பாக்குறாங்க. நா என்ன செய்ய, நா அவ்வளவு அழகா இருக்கிறேன்... இல்ல'ன்னு கண் சிமிட்டினான். எனக்கு எப்படி இருந்திருக்கும், நினைச்சிப்பாருங்க..." "சுஜிம்மா, இப்ப அதெல்லாம் என்னத்துக்கு... நா தப்புதா பண்ணிட்டேன். நிமிர்த்த முடியாம ஒரு வளைசல்ல நெருக்க வச்சிட்டேன். என்ன மன்னிச்சிடும்மா..." "அம்மாக்கு, சுஜி, பிரதர்ஸ்னா ஒரு வீக்னஸ். டெல்லில இருக்கிற மாமா ஸர்வோதய காலனில ஃப்ளாட் வாங்கினாரா - ஒரு ஃப்யூ தௌஸன்ட்ஸ் குறையிதுன்னு கேட்டாரு. நாங்க வேற இங்க வீடு கட்டிருக்கமா? அதனால ஹெவி ஸ்ட்ரெயின். என் சம்பளம் அப்படியே அம்மாவிடம் தான் கொடுத்திடுவேன். இப்ப அம்மாட்ட அன்னன்னிக்குச் செலவுக்கு வாங்க வேண்டி இருக்கு. இப்பப்பாரு, உனக்கு - இஷ்டப்பட்ட ஸாரி வாங்கிக் குடுக்கணும், ஸ்டார் ஓட்டலுக்குக் கூட்டிப் போகணும்னெல்லாம் ஆசையாக இருக்கு. இந்த இளம் வயசில அநுபவிக்காம எப்ப அநுபவிக்கிறது? ஆனா... அம்மா... அம்மாட்ட நீ கேக்காதே. அவங்க ரொம்ப கன்ஸர்வேடிவ் ஓல்ட் ஃபாஷன்ட் வியூஸ் உள்ளவங்க. இதெல்லாம் அநாவசியம்னு நினைப்பா. 'இப்ப எதுக்குடா அவளுக்குப் புடவை? அம்பது புடவை வச்சிட்டிருக்கா. ஹாங்கரில் அடுக்கடுக்காத் தொங்குது'ம்பா... என் பாலிஸி அது இல்ல. என் சுஜிக்கு எப்படியெல்லாமோ அலங்காரம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசை. ஸல்வார் கமிஜ் போட்டுட்டா உனக்கு ரொம்ப எடுப்பா இருக்கும்..." இவளிடம் என்ன சொன்னான்? "அம்மா, உன் மருமகள் என்னமோன்னு நினைச்சியே? சம்பளம் எல்லாம் ஒரு காசு மிச்சம் இல்லாம அம்மா வீட்டில குடுத்திட்டுத்தா வாரா. அவ கல்யாணத்துக்குக் கடன் வாங்கி இருக்கிறாளாம். நியாயம்தான." "எல்லாமே குடுத்துடறாளா? ஆயிரத்துக்கு மேலே வருமானமாச்சே?" "வெக்கக் கேடம்மா, பஸ் பாஸ், கான்டீன், எல்லாச் செலவுக்கும் நான் தான் கொடுக்கிறேன். வாந்தியா எடுத்திட்டு ஒண்ணும் சாப்பிடாம ஆபீஸில இருந்திருக்கா. நல்ல வேளை நான் போயி டாக்டரிடம் கூட்டிப் போனேன்... டாக்டர் செலவெல்லாம் நாந்தான் கொடுக்கிறேன்... ரிஎம்பர்ஸ்மண்ட் வரும்னு கூட அவ சொல்லல..." "அப்படியா?..." "ஆமாம். மாமியார் எதானும் சொல்லுவாங்கன்னு பயப்படுறா. நீ ஒண்ணும் கேட்டுக்காதே. நீ வரதட்சணை வாணாம், அது இதுன்னு சொல்ல, அவங்க ஒரேயடியா லெவலை எறக்கிட்டாங்க..." இருவரிடமும் பெரிய பிளவைத் தோற்றுவிக்க அவன் மிகச் சாமர்த்தியமாகப் போட்ட நாடகம்... எவ்வளவு எளிதாகப் பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்? கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செய்ய வேண்டிய வண்மை வரிசைகள் செய்யக் கூட அவர்கள் வீட்டில் இடம் கொடுக்கவில்லை என்று உறுகினான்! அவள் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்திருக்கக் கூடாது. ஒழுங்கில்லை என்று தெரிந்து... தன் உலகமும் அவன் உலகமும் வெவ்வேறு துருவங்களில் போய்விட்டன என்று தெரிந்து... அவளால் அவனைத் தட்டிக் கேட்க முடியவில்லை, ஏன்? பி.எஸ்ஸியில் தேறவில்லை. பிறகு அவிழ்த்து விட்ட கழுதைதான். "சீனி, மேல அதைப்படிச்சு பாஸ் செய்ய வேண்டாமா? எதானும் ட்யூட்டோரியலில்..." "அம்மா, இந்த டிகிரில ஒரு மண்ணும் கிடையாது. நான் முதல்லயே தப்புப் பண்ணிட்டேன். இப்ப கூட, எலக்ட்ரானிக்ஸ், டி.வி. மெக்கானிஸம் கோர்ஸ் இருக்கு, பண்ணலாம்னு இருக்கேன், ஒண்ணரை வருஷம்..." அது பற்றியானும் அபிராமி விசாரித்தாளா? பையன் சொன்னால் அதற்கு மேல் விசாரணையே இல்லை. சீனி கெட்டிக்காரன், பிழைக்கச் சாமர்த்தியம் உண்டு... என்று ஒரு உறுதியான நம்பிக்கை மலை போல் இருந்தது. கேட்பவர்களிடமெல்லாம், "எலக்ட்ரானிக்ஸ், டி.வி. மெக்கானிஸம் படிக்கிறான்" என்று சொன்னாள். படித்து, ஆசிரியைத் தொழில் செய்தும் எத்தனை பெரிய முட்டாள் அவள்? சில ஆயிரங்கள் இந்தச் சாக்கில் அவன் கறந்தான். ஒரு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளாமல், அம்பது பைசா காபி வாங்கிக் குடிக்காமல் உழைத்துச் சேமித்த பணம், கிடுகிடென்று எப்படிக் கரைந்தது! கல்லூரி - அது மாலை நேரந்தான். இவன் பள்ளிக்குச் செல்கையில் அவன் எழுந்திருந்திருக்க மாட்டான். "சீனி? எழுந்திரப்பா! கதவைச் சாத்திக்கோ. நான் ஸ்கூலுக்குப் போறேன். ஃபிளாஸ்கில் காபி இருக்கு. சாப்பாடெல்லாம் எடுத்து வச்சிருக்கேன். அவல் டிஃபன் பண்ணி டப்பில வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு இன்ஸ்டிட்யூட்டுக்குப் போ!" அவன் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து கதவைப் பூட்டிக் கொள்வான். அவள் மாலையில் திரும்பி வரும் போது, வீடு அலங்கோலமாக இருக்கும். இளவட்டங்கள் கூடி அரட்டையோ சீட்டாட்டமோ நடத்தின தடயங்கள் இருக்கும். ரேடியோவைக் கூட மூடியிருக்க மாட்டான். விசிறி ஓடிக் கொண்டிருக்கும். ஆங்காங்கு சிகரெட் துண்டுகளுடன் கதவைத் திறந்ததுமே புகையிலைப் புகையின் நெடி நாசியில் ஏறும். இவன் சாப்பிட்ட தட்டும், பாத்திரங்களும் மிச்சம் மீதி கூட மூடப்படாமல் இரைந்து கிடக்கும். பால் பாக்கெட் அப்படியே இருக்கும். அழுக்குப் பனியன், ஈரத்துண்டு கண்ட இடத்தில் விசிறப் பட்டிருக்கும்... இலை மறை காய்மறையாக... அப்போதே குடிக்கப் பழகியிருக்கிறானோ என்ற சந்தேகம் தோன்றியிருந்தது. ஆனால், அம்மாவின் இயல்பை எவ்வளவு சாதுரியமாக இவன் பயன்படுத்திக் கொண்டான்! குடிப்பவர்களைப் பற்றி கேவலமாகப் பேசுவான். "அம்மா, அந்த போஜு, சிவராம், பாலு எல்லாம் என்னமா குடிக்கறாங்கறே?..." போஜு, அவளுக்கு தெரிந்து மிக நல்ல ஒழுக்கமான பையன். இவனுடன் அதே பேட்டையில், அரிச்சுவடியில் இருந்து படித்தவன். அண்ணாமலையில் கெமிகல் இன்ஜினியரிங் படித்து, நகரில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். சிவராம், எம்.ஏ. பண்ணிவிட்டு, எங்கோ அலுவலகத்தில் வேலை செய்கிறான். பாலு... எல்.ஸி.இ. பண்ணிவிட்டு எங்கோ தாற்காலிகமாக வேலை செய்கிறான். "ஏ.எம்.ஐ.சி. பண்றேன் டீச்சர்" என்று சொன்னான். இந்தப் பிள்ளைகளைப் போல் எத்தனையோ பையன்கள் இவன் வயசுக்குப் பொறுப்பாக இல்லையா. இவன் மட்டும் காலம் கடத்துகிறானே என்று அவள் நினைத்து விடாமல் இருக்க, அவர்கள் எல்லாரையும் விடத் தான் உயர்வு என்று கண்ணை மூடி மண் பூசி விட்டான். "ஏண்டா போஜுவா?..." "பின்னென்னம்மா? உனக்கு இன்னிக்கு உலகம் தெரியாது... தே... டிரிங்க் லைக் ஃபிஷ்..." ஒன்றரை வருஷம் ஓடிற்று. ஆனால் இவனுடைய கொட்டம் அதிகமாயிற்று. "அந்த இன்ஸ்டிட்யூட்டே ஃப்ராடம்மா! தெரியாமயே போயிட்டுது. நான் ஸீரியஸ்ஸா பிஸினஸ் பண்றதைப் பத்தி யோசனை பண்றேம்மா!" என்று சொல்லிவிட்டு, இவன் போக்கிரி அரசகுமரானாக அவளை உரித்தெடுத்தான். வீட்டிலேயே சில நாட்களில் சிநேகிதர்கள் வந்து கொட்டம் அடிப்பார்கள். டிரான்ஸிஸ்டர் காட்டுக் கத்தலாக இரைச்சல் போட, இவர்களும் இரைச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள். வாசலில் மோட்டார் பைக் செருப்புகள் இவள் வீட்டில் இல்லை என்று அறிவிக்கும். இவள் வீடு திரும்பியது, (இவர்கள் யாருமே அவளுக்குத் தெரிந்த, அவன் மாசு கற்பிக்கக் குறிப்பிட்ட பிள்ளைகளாக இருக்க மாட்டார்கள்) எல்லோரும் எழுந்து வெளிக் கிளம்பி விடுவார்கள். அவனும் வெளிக் கிளம்பு முன், பணம், பணம் என்று இறந்து, கெஞ்சி, அழுது, அடம்பிடித்து வாங்கிக் கொண்டு போவான். வெளியே அக்கம்பக்கங்களில் சீனியின் நடத்தை விமரிசனத்துக்குள்ளாகக் கூடாது என்று கௌரவம் கட்டிக்காப்பதில், இடைநிலை வருக்கத்துக்குரிய போலித்தனமான ஒரு கருவம் அவளுக்கு இருந்தது. சீனியுடன் உரத்துக் குரல் கொடுத்துச் சண்டை போடாமல் அவள் தவிர்த்ததற்கு அதுவும் ஒரு காரணம். அவளுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி, ஆலோசகர், ஆதரவாளர் என்று நம்பியவள் - சுந்தரம்மாதான். இன்று அவள் வேலை பார்த்த மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியப் பொறுப்பில் இல்லை எனினும் தாளாளராக இருக்கிறாள். அவள் தான் "எத்தனையோ மோசமான பிள்ளைகள் திருந்தியிருக்கிறார்கள். வேலை என்று ஒன்றையும் கூட்டி, கால்கட்டையும் போட்டுவிட்டால், திருந்திவிடுவான்" என்று யோசனை சொன்னாள். வேலை... அது எப்படி இவனுக்குக் கிடைக்கும்? இவனுக்கென்று பட்டம், பயிற்சித் தகுதிகள் இல்லாமல் வெறும் வாயரட்டை அடிப்பவனுக்கு, இந்தப் போட்டா போட்டி யுகத்தில், வேலை எப்படிக் கிடைக்கும்? மதிக்கவில்லை என்று ரோசத்துடன் கழித்து விட்ட உறவுத் தொடர்பாக, அபிராமியின் ஒன்று விட்ட அத்தை குடும்பம் - பெரிய தொழிலதிபர் வாரிசாக அத்தையின் பெண் வயிற்றுப் பேரன், இளைய மகன், இருவரும், தொழில்-வர்த்தக உலகில் பெரிய புள்ளிகள். அவர்களுக்குச் சொந்தமாகக் கிண்டியில் பல தொழிலகங்கள் இருக்கின்றன. பென்சிலில் இருந்து பிஸ்கோத்து வரையிலும் அவர்கள் தயாரிப்பதாக அறிந்திருக்கிறாள். வெட்கத்தைவிட்டு அபிராமி அங்கே சென்றாள். ஸாந்தோம் சாலையில் அவர்கள் பங்களாவில் நுழைவதற்கும் கூடக் கூச்சமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்து நவராத்திரி மற்றும் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு இன்று வரை அழைப்பு வராமல் இல்லை. பேத்தி கல்யாணத்துக்கு காலை முகூர்த்தத்தில் தலைகாட்டிவிட்டு, அத்தை மகளைப் பார்த்து, உள்ளே படுத்திருக்கும் அத்தையைப் பற்றி விசாரித்து விட்டு வந்திருக்கிறாள். இதுவரையிலும் அவள் எந்த உதவி நாடியும் உறவு சொல்லிச் சென்றதில்லை. அத்தை மகள் சிங்காரி, பறங்கிப் பழம் போல், நரைத்த தலையும், வெண்பட்டுச் சேலையுமாக உட்கார்ந்திருந்தாள், உள் அறையில். "ஒண்ணுமில்ல அக்கா, சீனி விஷயமாத்தான்... அவனை ஒரு வேலையில் சேர்த்து விடணும். ரொம்ப கஷ்டமாயிருக்கு. நாதனில்லாம, சேர்வாரோடு சேர்ந்து கெட்டுப் போயிடுமோன்னு பயமா இருக்கு. அவனும் எங்கெல்லாமோ போடறான்; ஒண்ணும் கூடி வரல... காலைப் பிடிக்காத குறைதான். "நீதான் வந்து போறதில்லன்னு வச்சிட்ட. யார் யாருக்கெல்லாமோ செய்யிறான். காலம ஏழரை மணிக்குள்ள அவனை வரச் சொல்லு. பரசுட்டச் சொல்றேன்..." என்றாள். இவனை, முதலில் நானூறு ரூபாய் சம்பளமும், அன்றாடம் வெளியூர்ப் படியும் கொடுத்து, விற்பனைப் பிரதிநிதியாகப் போட்டார்கள். இந்த ஊர் சுற்றல் தொழில் - அவனுடைய சவடாலுக்கும் கட்டற்ற வாழ்வுக்கும் சாதகமாக இருந்தனவே ஒழிய திருந்தவில்லை... அடுத்த இலட்சியமான கல்யாணம்... அவள் எதிர்பார்த்தபடி அவன், "அடபோம்மா, இப்ப எதுக்குக் கல்யாணம்" என்று கேட்கவில்லை. முரண்டவில்லை. "கமர்ஷியல் டாக்ஸில வேலையா?... ஆயிரத்துக்கு மேல தேறும்..." என்றான் பச்சையாக. "இத பாரு சீனி, நீ நல்லபடியாத் திருந்தணும்னு நம்பி நான் கல்யாணம்னு இறங்கறேன். சொற்பமா ஸ்கூல் மாஸ்டரா இருந்தவர். இந்தம்மா ரெண்டாந்தாரம். பொண்ணு லட்சணமா குடும்பப் பாங்கா இருக்கா. அவ காலில நிக்கறவ. அதப்போடு இதப்போடுன்னு நான் கேட்கப் போறதில்ல. வடபழனி கோவில்ல வச்சு சுருக்கமா கல்யாணத்த முடிச்சிடலாம்னு இருக்கேன். அவரால வெளில வாசல்ல வரமுடியாதாம். அந்தம்மா, கொழுந்தனார் மகனைக் கூட்டிட்டு வரேன்னா. நீ நாளைக்கு தானே டூர் போற?..." "சரி வரட்டும்மா..." "ஆமா... ஒழுங்கா... நல்லபடியா இரு..." என்றாள். வெற்றிலை பாக்கு பழம், லாலாகடை இனிப்பு, காரசேவு வாங்கி வைத்தாள். ஒரு பாக்கெட் பால் கூட வாங்கிக் காய்ச்சி, காபி டிகாஷனும் போட்டு வைத்தாள். சீனி, முகம் வழித்து குளித்து, நெற்றியில் துளி நீறு தரித்து, மிகவும் யோக்கியமான தோற்றத்துடன் வீட்டில் இருந்தான். எல்லாம் சொல்லி வைத்தாற் போல் கச்சிதமாக அமைந்து விட்டது. அவர்களுக்கு இவனுடைய தோற்றம், பேச்சு, அடக்கம், எல்லாம் மிகவும் பிடித்து விட்டன. மறுநாள் வந்து பெண் பார்க்கவும் ஒப்புக் கொண்டான். "எனக்கு ரொம்ப நம்பிக்கைங்க. இது தெய்வ சித்தமாக ஏற்பட்டது இல்லையா? பையனுக்குப் பெண்ணைப் புடிச்சி பொண்ணும் சரின்னு சொல்லுவான்னு. எங்களுக்கு இவ ஒரே பொண்ணுதா, அதனால, அதது குறை வைக்க மாட்டோம்..." என்று மங்களம்மா, மனம் பூரித்துப் போனாள். ஆனாலும் அபிராமிக்கு உள்ளே முள் அவ்வப்போது உறுத்திக் கொண்டிருந்தது. "அவங்கிட்ட எல்லாம் நல்லாப் பேசிக்கங்கம்மா. ஆயிரங்காலத்துப் பயிரு. வேலை, சம்பளம், மற்ற எல்லா சமாசாரமும் நான் சொல்லிட்டேன்னாலும், நீங்க தா குடும்பம் பண்ணப் போறீங்க. நல்லாப் பேசி முடிவு பண்ணிக்கங்கம்மா?" என்றாள் பெண்ணின் பக்கம் அமர்ந்தபடி. கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. அவன் சுற்றுப் பயணம் கிளம்பிவிட்டான். அபிராமிக்கு உள் உறுத்தல் குடைச்சலாகி விட்டது. என் பையன், யோக்கியமானவன் அல்ல - என்பதை எப்படிச் சொல்ல? ஆனால் சொல்லாமல் எப்படி மறைக்க? பள்ளியில் இருந்து ஓய்வு பெற்றுவிடவில்லை அப்போது. ஞாயிற்றுக்கிழமை காலையில், பத்தரை மணி சுமாருக்குக் கதவைப் பூட்டிக் கொண்டு பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனாள். புரட்டாசிப் புழுக்கம்; வெயில். வீட்டில் மங்களம் இல்லை. சுஜாவும் இல்லை. பெரியவர்தாம், பழைய நாளைய அந்த வீட்டின் முற்றக் குறட்டில், ஏதோ பழைய கணக்கைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். "வாங்கோ... வாங்கோம்மா...! இப்பத்தான் ரெண்டு பேரும் டவுனுக்குப் போனா. வெள்ளி சாமான் ரெண்டு ரொம்பப் பழசா இருந்தது. தோது பண்ணிண்டு வரேன்னு போனா... உட்காருங்கோ..." அபிராமி கீழே உட்கார்ந்தாள். "பரவாயில்லை. வசதியாயிருக்கு..." என்று முகத்தைத் துடைத்துக் கொண்டாள். இறுக்கம்... எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. "இந்தப் பக்கம் வேற ஒரு காரியமா வந்தேன். அப்படியே பாத்துட்டுப் போகலாம்னு... எதுக்குச் சொல்றேன்னா. தெய்வசித்தம்னு வச்சாக் கூட, நாமும் பத்துத் தடவை யோசனை பண்ணிச் செய்வது நல்லதுன்னு தோணுது..." "ஆமாம் வாஸ்தவம். நல்ல குடும்பம் குலம் எல்லாம் அதான் விசாரிக்கிறது. நீங்க ஸித்தா இண்டஸ்ட்ரீஸ் ஃபாமிலின்னு சொன்னதே வேற விசாரிக்கணும்னு அவசியமில்லாம போயிட்டுது. நம்ம வீட்டிலும் பயங்கள்ளாம் அங்கங்க இருக்கிறாங்க. கல்யாணம்னா முத நா வந்திட்டு மறுநா போவானுக. எல்லாருக்கும் ஐப்பசில முகூர்த்தம்னு எழுதிப் போட்டிருக்கே..." "அதுக்குச் சொல்லல... இந்தக் காலத்தில என்ன நெருக்கம்னாலும் தாய் புள்ள கூட வேற வேற உலகமாப் போயிடுது. எங்க குடும்பம் சீனி அப்பா பத்தி..." "அதெல்லாம் தெரியும். அப்படிப் பாத்தா எங்க குடும்பத்திலியும் ஒரு இசுக்கு இல்லாம இல்ல. இதெல்லாம் இப்ப யாரம்மா பாக்கிறாங்க? இதெல்லாம் தப்புன்னு இந்த காலத்தில யாரானும் சொல்லுவாங்களா?" "அதில்ல... இந்தக் காலத்துப் பையன்கள், நடவடிக்கை நாம எதிர்பார்க்கிறாப்பல இருக்கிறதில்ல. சீனி வீட்டில எனக்கு முன்ன சிகரட் குடிச்சதில்ல. டிரிங்க் பண்ணதில்ல. ஆனா, நாலு இடம் போகிறவன். பார்ட்டி, கீர்ட்டின்னு போகாதவன் இல்ல. நாளைக்கு நீங்க, இந்தம்மா, சொல்லாம மறச்சிட்டாளேன்னு நினைக்கக் கூடாது. நல்லா நாலிடத்தில விசாரிச்சிக்குங்க..." இதைச் சொல்வதற்குள் அவளுக்குக் குப்பென்று வியர்வை பூத்துவிட்டது. "இதென்னம்மா, இதைப் போய் மூட்டை கட்டிண்டு சொல்ல வரேள்? சிகரெட் பிடிக்காத பையன் இந்தக் காலத்துல சலிச்சாக் கூடக் கிடைக்காது. என் மூத்த மாப்பிள்ளை, மூத்த பையன் எல்லாரும் சிகரெட் குடிக்கிறவா தான். பார்ட்டி கீர்ட்டி எல்லாம் இப்ப சர்வ சகஜமாய் போயிட்டுது. சுஜாவே சொல்றா, 'என்னப்பா, பொம்பிளங்கல்லாம் குடிக்கிறா'ன்னு. அரசு மட்டத்திலியே குடிக்கிற நாகரிகம் பரவிருக்கு. அதுவும் பிஸினஸ் லைன்னா நாலும் தானிருக்கும். இதெல்லாம் குடுத்துக் காரியத்தைச் சாதிக்கிறது தான் இன்னிக்குக் கெட்டிக்காரத்தனம்..." "நா... உங்ககிட்டச் சொல்லிடனும்னு தான் வந்தேன். நாளைக்கு நான் மறைச்சிட்டேன்னு நினைக்கக் கூடாது..." "இதென்னம்மா, நீங்கள் இவ்வளவு டெலிகேட்டா இருக்கீங்க? இது குத்தமேயில்ல, இந்தக்கால ஸ்டான்டர்டுக்கு. சுஜிக்குப் புடிச்சிருக்கு. அவ கெட்டிக்காரி. குடும்பம்னு ஆனதும் அவங்கவங்களுக்குப் பொறுப்பும் வந்திடும்..." மனசிலிருந்து பாரம் அப்போதைக்கு இறங்கியிருந்தது. திருமணநாள் வரையிலும் கூட, அவன் இலட்சியமான பிள்ளையாக நடந்தான். மனமகிழ்ந்த அபிராமி, தேன் நிலவுக்காக இரண்டாயிரம் வைத்திருந்து செலவு செய்யக் கொடுத்தாள். தேன் நிலவு முடிந்து வந்த புதிதில், இவள் எதிர்பார்த்தபடி, சுஜி, இவளிடம் அவன் பழக்கங்கள் குறித்து வெளிப்படையாகச் சாடவில்லை. ஆனால் இரகசியமாகக் கண்டிக்கிறாள் என்பதை ஊகிக்க முடிந்தது. ஊசிக்குத்து விழுந்து விட்டது. பலூன் எத்தனை நாட்கள் தாங்கும்? அபிராமி அந்த முதல் சில மாதங்களில் மாலை நேரங்களில் சமைத்து வைத்து விட்டு, தொலைக்காட்சி பார்க்கும் சாக்கில், பக்கத்து வீட்டுக்குச் சென்று விடுவாள். திரும்ப, எட்டு மணிக்கு வருகையில், அவர்கள் கலகலப்பாகப் பேசிச் சிரிக்கும் ஒலி இருக்காது. அவள் மட்டும் ஏதேனும் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். "ஏம்மா? சீனி இல்ல?..." "இல்ல. வெளில போயிட்டு வரேன்னாரு..." "உங்க மகன் குடிச்சிட்டு வரார்?" என்று அவள் வெடித்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. ஆனால் அவளுக்கும் தெரியாதோ? |
பாப்லோ நெரூதா கவிதைகள் ஆசிரியர்: பாப்லோ நெரூதாமொழிபெயர்ப்பாளர்: சுகுமாரன் வகைப்பாடு : கவிதை விலை: ரூ. 270.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
வேழாம்பல் குறிப்புகள் ஆசிரியர்: சுகுமாரன்வகைப்பாடு : கட்டுரை விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|