![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 17 ... 321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன், சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன், நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்- மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை; மன்ற மரையா இரிய, ஏறு அட்டு, செங் கண் இரும் புலி குழுமும்; அதனால், மறைத்தற் காலையோ அன்றே; திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே. தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தொடு நிற்பேன்
என்றது.
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
322. குறிஞ்சி
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, கானம் நண்ணிய சிறுகுடி பட்டென, இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து, மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ? செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே. தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது
ஐயூர் முடவன்
323. முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்- பாணர் படுமலை பண்ணிய எழாலின் வானத்து அஞ்சுவர நல் இசை வீழ, பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசு முகைத் தாது நாறும் நறு நுதல் அரிவை தோள்-அணைத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழும் நாளே. வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது
பதடி வைகலார்
324. நெய்தல்
கொடுந் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந்துறை, இன மீன் இருங் கழி நீந்தி, நீ நின் நயன் உடைமையின் வருதி; இவள் தன் மடன் உடைமையின் உவக்கும்; யான் அது, கவை மக நஞ்சு உண்டாஅங்கு, அஞ்சுவல்-பெரும!-என் நெஞ்சத்தானே. செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரா வாராவரைவல்' என்றாற்கு,
தோழி அது மறுத்து, வரைவு கடாயது
கலைமகன்
325. நெய்தல்
"சேறும் சேறும்" என்றலின், பண்டைத் தம் மாயச் செலவாச் செத்து, "மருங்கு அற்று மன்னிக் கழிக" என்றேனே; அன்னோ! ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? கருங்கால் வெண் குருகு மேயும் பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே. பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து
உரைத்தது
நன்னாகையார்
326. நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர் கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!- ஒரு நாள் துறைவன் துறப்பின், பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே. சிறைப்புறம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
327. குறிஞ்சி
"நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின் நயன் இலர் ஆகுதல் நன்று" என உணர்ந்த குன்ற நாடன் தன்னினும், நன்றும் நின்நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி! நம் மனை மட மகள், "இன்ன மென்மைச் சாயலள்; அளியள்" என்னாய், வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே. கிழவன் கேட்கும் அண்மையானாக, அவன் மலையினின்றும் வரும்
யாற்றறோடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது
அம்மூவனார்
328. நெய்தல்
சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி அலவன் சிறு மனை சிதைய, புணரி குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் நல்கிய நாள் தவச் சிலவே; அலரே, வில் கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றை, பாணர் புலிநோக்கு உறழ் நிலை கண்ட கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. வரைவிடை வேறுபடும் கிழத்தியை, அவர் வரையும் நாள் அணித்து
எனவும், அலர் அஞ்சல் எனவும், கூறியது
பரணர்
329. பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு, களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து, பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி, தெள் நீர் நிகர் மலர் புரையும் நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே. பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு யான்
ஆற்றுவல் என்பது படச் சொல்லியது
ஓதலாந்தையார்
330 மருதம்
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும் புன்கண் மாலையும், புலம்பும், இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது
கழார்க் கீரன் எயிற்றியன்
331. பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை, ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று, கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் கடுங்கண் யானைக் கானம் நீந்தி, இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப் பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன நல் மா மேனி பசப்ப, நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே. செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழில்
சொல்லியது
வாடாப் பிரமந்தன்
332. குறிஞ்சி
வந்த வாடைச் சில் பெயற் கடைநாள், நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து கூறின் எவனோ-தோழி!-நாறு உயிர் மடப்பிடி தழீஇத் தடக்கை யானை குன்றகச் சிறுகுடி இழிதரும் மன்றம் நண்ணிய மலைகிழவோற்கே? வரையாது வந்தொழுகாநின காலத்து, கிழவன் கேட்பக் கிழத்திக்குத்
தோழி கூறியது
மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தன்
333. குறிஞ்சி
குறும் படைப் பகழிக் கொடு விற் கானவன் புனம் உண்டு கடிந்த பைங் கண் யானை நறுந் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு கறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் பணிக் குறை வருத்தம் வீட, துணியின் எவனோ-தோழி!-நம் மறையே? 'அறத்தொடு நிற்பல்' எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது
உழுந்தினைம் புலவன்
334. நெய்தல்
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப, பனி புலந்து உறையும் பல் பூங் கானல் இரு நீரச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம் இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே? 'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குத் கிழத்தி சொல்லியது
இளம் பூதனார்
335. குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச் சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினைஇழிந்த, பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும் வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல் வல் விற் கானவர் தங்கைப் பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே. இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
336. குறிஞ்சி
செறவர்க்கு உவகை ஆக, தெறுவர, ஈங்ஙனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!- சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் கடு மா நெடுந் தேர் நேமி போகிய இருங் கழி நெய்தல் போல, வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோரே. தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது
குன்றியன்
337. குறிஞ்சி
முலையே முகிழ் முகிழ்த்தனவே, தலையே கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே; செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின; சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு எனயான் தன் அறிவல்; தான் அறியலளே; யாங்கு ஆகுவள்கொல் தானே- பெரு முது செல்வர் ஒரு மட மகளே? தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது முறை அறியக் கூறியது
பொதுக் கயத்துக் கீரந்தையார்
338. பாலை
திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ, வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல, செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை, பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம் வந்தன்று, பெருவிறற் தேரே-பணைத் தோள் விளங்கு நகர் அடங்கிய கற்பின் நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே. பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது
பெருங்குன்றூர் கிழார்
339. குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை உறை அறு மையின் போகி, சாரல் குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க் குவளை உண்கண் கலுழப் பசலை ஆகா ஊங்கலங்கடையே. வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ்சொல் சொல்லி வற்புறீஇயது
பேயார்
340. நெய்தல்
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து, நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி, ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை, அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல் கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் பெயர் தரப் பெயர்தந்தாங்கு, வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே. இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது
அம்மூவன்
|