உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் இரண்டாவதாகிய குறுந்தொகை ... தொடர்ச்சி - 3 ... 41. பாலை
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து, சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற; அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே. பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
அணிலாடு முன்றிலார்
42. குறிஞ்சி
காமம் ஒழிவது ஆயினும்-யாமத்துக் கருவி மா மழை வீழ்ந்தென, அருவி விடரகத்து இயம்பும் நாட!-எம் தொடர்பும் தேயுமோ, நின்வயினானே? இரவுக்குறி வேண்டிய கிழவற்குத் தோழி நேர்ந்த வாய்ப்பாட்டான்
மறுத்தது
கபிலர்
43. பாலை
"செல்வார் அல்லர்" என்று யான் இகழ்ந்தனனே; "ஒல்வாள் அல்லள்" என்று அவர் இகழ்ந்தனரே; ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல், நல்அராக் கதுவியாங்கு, என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே. பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது
ஒளவையார்.
44. பாலை
காலே பரி தப்பினவே; கண்ணே நோக்கி நோக்கி வாள் இழந்தனவே; அகல் இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே. இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது
வெள்ளிவீதியார்
45. மருதம்
காலை எழுந்து, கடுந் தேர் பண்ணி, வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற மல்லல் ஊரன், "எல்லினன் பெரிது" என, மறுவரும் சிறுவன் தாயே; தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே. தலைமகற்குப் பாங்காயினார் வாயில் வேண்டியவழி, தோழி வாயில்
நேர்ந்தது
ஆலங்குடி வங்கனார்
46. மருதம்
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து எருவின் நுண் தாது குடைவன ஆடி, இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும், புலம்பும், இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே? பிரிவிடை "ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல்
என்பதுபடச் சொல்லியது
மாமிலாடன்
47. குறிஞ்சி
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல் இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை-நெடு வெண்ணிலவே! இரா வந்து ஒழுகுங்காலை, முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு
உரைப்பாளாகத் தோழி உரைத்தது
நெடு வெண்ணிலவினார்
48. பாலை
"தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு" என, ஓரை ஆயம் கூறக் கேட்டும். இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் நன்னுதல் பசலை நீங்க, அன்ன நசை ஆகு பண்பின் ஒரு சொல் இசையாதுகொல்லோ, காதலர் தமக்கே? பகற்குறிக்கண் காணும் பொழுதினும் காணரப் பொழுது பெரிதாகலின்,
வேறு பட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு, தோழி சொல்லியது
பூங்கணுத்திரையார்
49. நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப! இம்மை மாறி மறுமை ஆயினும், நீ ஆகியர் எம் கணவனை; யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே. தலைமகன் பரத்தைமாட்டுப் பிரித்தவழி ஆற்றாளாகிய தலைமகள்
அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிததானாகிய
தலைமகற்குச் சொல்லியது
அம்மூவனார்
50. மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து இலங்கு வளை நெகிழ, சாஅய்ப் புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே. கிழவர்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது
குன்றியனார்
51. நெய்தல்
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் நூல் அறு முத்தின் காலொடு பாறித் துறைதொறும் பரக்கம் தூ மணற் சேர்ப்பனை யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்; எந்தையும் கொடீஇயர் வேண்டும்; அம்பல் ஊரும் அவனொடு மொழிமே. வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு
மலிவு கூறியது
குன்றியனார்
52. குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் சூர் நசைந்தனையை யாய் நடுங்கல் கண்டே, நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல், நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை! பரிநதனென் அல்லெனோ, இறைஇறை யானே? வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான்
அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது
பனம்பாரனார்
53. மருதம்
எம் அணங்கினவே - மகிழ்ந! முன்றில் நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல், வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும் செந் நெல் வான் பொரி சிதறி அன்ன, எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, நேர் இறை முன்கை பற்றி, சூராமகளிரோடு உற்ற சூளே. வரைவு நீட்டித்த வழித் தோழி தலைமகற்கு உரைத்தது
கோப்பெருஞ்சோழன்
54. குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே, ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் கான யானை கை விடு பசுங் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே. வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
மீனெறி தூண்டிலார்
55. நெய்தல்
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப் பொங்கு பிசிர்த் துவலையொடு மங்குல் தைஇ, கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா உறையுட்டு ஆகும் சில் நாட்டு அம்ம-இச் சிறு நல்ஊரே. "வரைவோடு புகுதானேல் இவள் இறந்துபடும்" எனத் தோழி, தலைமகன்
சிறைப் புறத்தானாகச் சொல்லியது
நெய்தற் கார்க்கியர்
56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சில் நீர் வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர், வருகதில் அம்ம, தானே; அளியளோ அளியள், என்நெஞ்சு அமர்ந்தோளே! தலைமகன் கொண்டு தலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,
இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது
சிறைக்குடி ஆந்தையார்
57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு, உடன் உயிர் போகுகதில்ல - கடன்அறிந்து, இருவேம் ஆகிய உலகத்து, ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே. காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்
58. குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் கைஇல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! கழற்றெதிர்மறை
வெள்ளிவீதியார்
59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அரலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும், சுரம் பல விலங்கிய அரும்பொருள் நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே. பிரிவிடை அழிந்த சிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
மோசிகீரனார்
60. குறிஞ்சி
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப் பெருந்தேன் கண்ட இருங் கால் முடிவன், உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து, சுட்டுபு நக்கியாங்கு, காதலர் நல்கார் நயவார் ஆயினும், பல்கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே. பிரிவிடை ஆற்றாமையான் தலைமகன் தோழிக்கு உரைத்தது
பரணர்
|