1 சைக்கிள் கடை பொன்னுரங்கம் உறுப்பினர் அட்டையைக் கொண்டு வந்து கொடுத்த போது அநுக்ரகா தோட்டத்தில் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள். பச்சைப் பாய் விரித்தாற்போல ஒரு சீராகக் கத்திரித்து விடப்பட்டிருந்த தோட்டத்துப் புல்வெளியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ‘இந்து’வில் மூழ்கியிருந்த முத்தையா தான் முதலில் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டார். அவருக்குள் மகிழ்ச்சி பிடிபடாது துள்ளியது. பொன்னுரங்கம் அவருக்கெதிரே உட்காரவில்லை. நின்றுகொண்டே பேசினான்: “அந்தச் செயலாளர் மாம்பழக் கண்ணனோடதான் கொஞ்சம் பேஜாராப் போச்சு சார்! ‘இது ஏம்பா? இத்தினி பெரிய ஃபேமிலியிலேர்ந்து நம்ப கட்சியிலே வந்து மெம்பராவுறாங்க? ஆச்சரியமாயிருக்குதே?’ன்னு பிடிச்சுக்கிட்டான். மெம்பர்ஷிப் அப்ளிகேஷனோடு இரண்டு பச்சை நோட்டைச் செருகி நீட்டினேன். அப்பாலே ஏன் கண்டுக்கிறான்? கப்சிப்னு ஆயிட்டான்.”
“கண்டிப்பா இருக்குங்க. சந்தேகம் மட்டுமில்லே, என்னமோ ஏதோன்னு பயப்படவும் செய்யறாங்க.” முத்தையா இவ்வளவில் அவனோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு, “அநு! இங்கே வா. பொன்னுரங்கம் வந்திருக்கான், பாரு,” என்று டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்த மகளைக் கூப்பிட்டார். உடனே விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு பெண்ணை விடை கொடுத்து அனுப்பிவிட்டுத் தந்தையருகே வந்தால் அநுக்ரகா. அவள் டென்னிஸ் உடையுடன் வந்தது முத்தையாவுக்கு உள்ளூர அவ்வளவாக ரசிக்கவில்லை. செல்லமாகக் கண்டித்தார். “உள்ளே போய் ஸாரி மாத்திக்கிட்டு வாம்மா! இன்னம் லண்டன்லே இருக்கிறதாகவே நினைப்பாம்மா உனக்கு? இப்படி டென்னிஸ் உடையிலேயும், ஸ்விம்மிங் சூட்லேயும் நின்னுட்டிருந்தால் இங்கே பாலிட்டிக்ஸ்ல புகுந்து ஒண்ணும் பண்ணிக்க முடியாது. ஃபிலிம் லயன்ல வேணா இந்த மாதிரி டிரெஸ்லே ஷைன் பண்ணலாம்.” “ஐயாம் ஸாரி டாட்!” புடவையை மாற்றிக் கொண்டு வர டென்னிஸ் மட்டையுடன் உள்ளே போனாள் அநுக்ரகா. திரும்ப வந்து அவள் தன்னிடமும் எங்கே ஆங்கிலத்திலேயே பேசிவிடப் போகிறாளோ என்று முன்னெச்சரிக்கையான ஒருவகைப் பயம் பொன்னுரங்கத்தைப் பிடித்துக் கொண்டது. வாயைத் திறந்தாலே ஆங்கிலத்தைத் தவிர வேறெதுவும் வராத இந்த வெள்ளைக்கார நாசூக்குடன் இவள் எப்படிக் குப்பனும் சுப்பனும் நிறைந்த ம.மு.க. (மக்கள் முன்னேற்றக் கட்சி)வில் இடம் பிடித்து முன்னேறப் போகிறாள் என்று தயக்கமாகக் கூட இருந்தது அவனுக்கு. முத்தையாவோ அடித்துச் சொன்னார்: “என்ன செலவானாலும் பரவாயில்லேப்பா! எனக்கு இது ஒரு சவால்னே வச்சுக்க! நம்ப அநுவைப் பாலிடிக்ஸ்ல மேலே கொண்டாந்தே ஆகணும்! இங்கிலாந்திலே படிச்சவளாச்சே, சரியாத் தமிழ் பேச வருமோ, வராதோன்னெல்லாம் கவலைப்படாதே. யாராச்சும் புலவருங்களை ஏற்பாடு பண்ணிக் கத்துக் கொடுத்திடலாம். சுளுவா எல்லாம் வந்துடும்ப்பா.” “கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த வார்த்தையும் நிக்காதும்பாங்களே, ஐயா!” “அதெல்லாம் ஹைதர் காலத்துப் பழமொழியப்பா. இப்ப செல்லுபடி ஆகாது. அநுவுக்குக் குறிப்பறிஞ்சு பழகற குணம் அதிகம். இது இது இப்படி இப்படின்னு ஜாடை காமிச்சாலே புரிஞ்சுக்குவாள். அவளோட முகராசிக்கு அவள் தப்பாத் தமிழ் பேசினாலும் கூட ஜனங்க கைதட்டிக் கொண்டாடப் போறாங்க, பாரு.” “ஆனாலாவது போனாலாவது? ஜமாய்க்கப் போறாள். பார்த்துக்கிட்டே இரு.” “நீங்க சொல்றதெல்லாம் சரிதாங்க. ஆனா அந்தக் கனிவண்ணன் ரொம்பப் பொல்லாத ஆளாச்சே.” “அவன் பொல்லாதவனா இருந்தா அது அவனோட. இன்னம் எண்ணி ஆறே மாசத்திலே என் மகள் அவனை ஓரங்கட்டி நிறுத்தறாளா இல்லியா பாரு.” முத்தையாவின் கோபத்துக்குக் காரணம் இருப்பது பொன்னுரங்கத்துக்குப் புரிந்தது. பரம்பரைப் பெரிய மனிதரான முத்தையாவை முந்தா நாள் அரசியல்வாதியான கனிவண்ணன் அவமானப்படுத்தி விட்டதுதான் இந்தக் கோபத்துக்குக் காரணம். கேவலம் ஒரு சின்ன விஷயத்துக்காக அவன் அவரிடம் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டாம் என்றே பொன்னுரங்கத்துக்குக் கூடத் தோன்றியது. ஆவாரம்பட்டு முத்தையாவின் பங்களாவை ஒட்டி இருந்த காலியான புறம்போக்கு நிலத்தில் ‘பார்க்’ ஒன்று அமைக்கும் திட்டம் இருந்தது. ‘பார்க் அவசியமில்லை, பூங்காவுக்குப் பதில் வீடற்றோருக்கு வீட்டு வசதி செய்து கொடுக்கப் பயன்படுத்தலாம்’ என்றும் ஒரு சாரார் அபிப்பிராயப்பட்டனர். இப்படி அவர்கள் பூங்காவா, வீட்டு வசதியா என்று முடிவு செய்யுமுன்பே புறம்போக்கு நிலத்தில் தாறுமாறாகக் குடிசைகள் முளைத்துக் கிளம்ப ஆரம்பித்தன. முத்தையா வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் சாத்தினாற் போலவே பலர் குடிசைகள் போட ஆரம்பித்தனர். சுகாதாரம் கெட்டு அரண்மனையாக விளங்கிய முத்தையாவின் பங்களாவைச் சுற்றிக் கொசு, சாக்கடை எல்லாம் தேங்கி நாற ஆரம்பித்தது. ‘ஆவாரம்பட்டு ஹவுஸ்’ மதில் சுவர் ஓரங்கள் திறந்த வெளிக் கழிப்பிடங்களாக ஆயின. முத்தையா நகர அதிகாரிகளுக்கும் மற்றவர்களுக்கும் கடிதம் மேல் கடிதம் எழுதிப் போட்டும் பயனில்லை. “தொகுதி எம்.எல்.ஏ.யைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லுங்க. உடனே நடக்கும்” என்று சிலர் சொல்லவே முத்தையா அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான கனிவண்ணனைப் பார்ப்பதா வேண்டாமா என்று தயங்கினார். குடிசைகளைக் காலி செய்துவிட்டுப் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்குவதைத் துரிதப்படுத்தும்படி எம்.எல்.ஏ.யை முடுக்கி விடலாம் என்றுதான் முன்னாள் ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர்.முத்தையா பி.ஏ.பி.எல். அவனைச் சந்திக்கச் சென்றார். அவர் நிலைக்கு, கூப்பிட்டனுப்பினாலே வரக்கூடிய அவனை அவர் தேடிப் போனார். மரியாதையும், பண்பாடும் பரம்பரைப் பெருந்தன்மையும் உள்ள முத்தையாவுக்குக் கனிவண்ணன் வீட்டில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. சந்தையிலோ, கருவாட்டுக் கடையிலோ இருக்கிற மாதிரி அங்கே கூட்டம். நிற்கக் கூட இடம் இல்லை. உட்காருவதைப் பற்றி எண்ணியும் பார்க்க முடியாது. ஆவாரம்பட்டு ஜமீன் திவான் பகதூர் சர்.வி.டி.முத்தையா என்று அச்சிடப்பட்ட விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுப்பினார். அப்படியும் பயனில்லை. மூன்று நாள் இப்படியே நடந்தது. நாலாவது நாள் வெளியே புறப்படும் எண்ணத்தோடு அறையிலிருந்து காருக்கு வந்த எம்.எல்.ஏ.யிடம் “ஐயாம் வி.டி.முத்தையா” என்று தாமே முன்சென்று அறிமுகப்படுத்திக் கொண்டார். “இப்போ அவசரமாகப் போய்க்கிட்டிருக்கேன். நாளை ராத்திரி ஒன்பது மணிக்குப் பார்ட்டி ஆபீசுக்கு வாங்க, பார்க்கலாம்” என்று கூறிவிட்டு அவர் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல் பொறுமையின்றிக் காரில் போய் ஏறிக் கொண்டான் எம்.எல்.ஏ. முத்தையாவுக்கு அவமானப்பட்டுவிட்ட உணர்ச்சி. யுத்த காலத்தில் சில ஆண்டுகள் லண்டனில் இருந்த போது குறித்த நேரத்தில் குறித்தபடி சென்று சர்ச்சிலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மிகவும் முயன்று இண்டர்வியூ நேரம் கேட்டுப் பெற்றுப் பக்கிங்ஹாம் பாலஸ் சென்று அரசியைக் கூட இரண்டு நிமிடம் சந்தித்திருக்கிறார்; கையுறையாக மலர்ச் செண்டும் அளித்திருக்கிறார். இன்று சுதந்திரம் பெற்ற சொந்த நாட்டில் தன்னுடைய தொகுதி எம்.எல்.ஏ.யை வேலை மெனக்கிட்டு நாலு நாள் காத்திருந்தும் பார்த்துப் பேசத் திண்டாடும் நிலை அந்த முதியவருக்கு எரிச்சலூட்டியது. பொறுமையை இழக்காமல் அவனைத் தேடி அவர் மறுநாள் இரவு போன போது கூடச் சந்திக்க முடியவில்லை. பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தோடு வந்தால் அந்தப் பிரச்சினையைக் கவனிக்கலாம் என்று உதவியாளன் ஒருவன் மூலம் அவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது. அவனை விலைக்கு வாங்குவதானாலும், பழிவாங்குவதானாலும் இரண்டிற்குமே செலவாகும். சொல்லப் போனால் விலைக்கு வாங்குவதை விடப் பழிவாங்குவதற்கு இன்னும் அதிகம் செலவாகக் கூடும். அப்படி ஆனாலும் பரவாயில்லை. கனிவண்ணனைப் பழிவாங்கியே தீருவது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருந்தார் அந்தப் பரம்பரைப் பணக்காரர். கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் தன் வயது, குடும்பம், பணம் எதையுமே லட்சியம் செய்யாமல் அவன் தன்னை அவமானப் படுத்திவிட்ட வடு அவருள் ஆறவே இல்லை. முத்தையா யோசித்தார். தன் வயதுக்கு இனிமேல் தான் அவனை எதிர்த்து அரசியலில் இறங்கி ஈடுபட்டுப் பழிவாங்குவது என்பது சாத்தியமில்லை. அது பொருத்தமாகவும் இருக்காது. ஒரே மகள் அநுக்ரகா, முந்தா நாள் வரை ஆக்ஸ்ஃபோர்டில் தங்கிப் படித்தவள். அல்ட்ரா மாடர்ன் பழக்க வழக்கங்களும் ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலமும், தமிழக - இந்தியப் பட்டிதொட்டி அரசியலுக்குத் தோதுபடுமா என்றும் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. முத்தையாவின் மூத்த தாரத்துக்கு இரண்டு பையன்கள். இருவரும் அவரோடு இல்லை. கருத்து வேறுபட்டுத் தங்களுக்குச் சேர வேண்டியதைப் பிரித்துக் கொண்டு போய் விட்டார்கள். ஐம்பது வயதில் கொச்சியிலிருந்து ஒரு மலையாளப் பெண்ணை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொண்டார். அவளிடம் பிறந்த ஒரே பெண் தான் அநுக்ரகா. மூன்று வயதிலேயே தாயை இழந்துவிட்ட அநுக்ரகா, அவள் தாயைக் கொண்டிருந்தாள். நல்ல அழகு. சொக்கத் தங்க நிறம். துறுதுறுவென்று வண்டுகளாய்க் கண்கள். சுருண்டு கருகருவென்று அடர்ந்த கூந்தல். பிரியமாக வளர்த்துக் கான்வெண்ட் கல்வி அளித்து, மேற்படிப்பை ஆக்ஸ்ஃபோர்டில் படிக்க அனுப்பி வைத்தார். ‘அநுக்ரகா’ என்று அவளுக்குப் பெயர் வைத்ததே அவளுடைய அம்மாதான். ‘நல்லதை அருளித் தீயதை விலக்கி அநுக்ரகா’ எனப் பெயராம். முத்தையா இந்தப் பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்ற போது அவர் மனைவி இதற்கு அளித்த விளக்கம் இது. “உங்களுக்கு முழுப் பெயரும் வாயிலே நுழையலேன்னா ‘அநு’ன்னு சுருக்கிக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன்” என்றாள் அவள். அநுக்ரகா பிறந்து பெயரிடும் போது இந்த விவாதம் அவர்களுக்குள் நடந்தது. “சமஸ்கிரத மயமாகப் பெயரிடுவது மலையாளிகளோடு கூடப் பிறந்த பழக்கம்” என்று அப்போது அவர் அவளைக் கிண்டல் கூடச் செய்திருக்கிறார். அவள் பெயரோ சமஸ்கிருத மயம். வாயைத் திறந்தால் ஆங்கில வாடை. இந்த லட்சணத்தில் இவளை அரசியலில் நுழைத்துக் கனிவண்ணன் போன்ற பேட்டை ரவுடி + அரசியல்வாதிக்குப் போட்டியாக ஈடுபடுத்துவது எப்படி என்று மலைத்தார் முத்தையா. கடைசியில் அதற்கும் ஒரு வழி புலப்படவே செய்தது. முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். கனிவண்ணனின் வளர்ச்சியால் ம.மு.க.வில் பாதிக்கப்பட்ட மற்றொருவர் இருக்க வேண்டும் என்ற அநுமானத்தோடு தேடிக் கண்டுபிடித்த போது தான் சைக்கிள் கடை பொன்னுரங்கம் அகப்பட்டார். மகள் அநுக்ரகாவைப் பொன்னுரங்கத்துக்கு அறிமுகப்படுத்தி, “இவளை உங்க ம.மு.க.வில் எப்படியாவது மெம்பராக்கிடணும்” என்று ஒரேயடியாய் முத்தையா வேண்டிக் கொண்டபோது, பொன்னுரங்கம் மிரண்டான். மலைத்தான். |
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF திருமால் வெண்பா - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நல்லை வெண்பா - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF முதுமொழிமேல் வைப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - Unicode - PDF திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF திருவிடைமருதூர் உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF மேகவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF பாண்டிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ரத்தம் ஒரே நிறம் வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு இல்லை விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |