16 தலைவருக்கு மாலையணிவித்து விட்டு வீடு திரும்பியதும் பொன்னுரங்கம் முத்தையாவையும் உடன் வைத்துக் கொண்டு டெலிஃபோன் அருகில் போய் உட்கார்ந்தான். முத்தையா ஓர் அரசியல் குருநாதரின் அருகில் அமரும் குட்டி சீடனைப் போல் அவனருகே கவனித்தபடி இருந்தார். “எம்.எல்.ஏ. அநுக்கிரகா வீட்டிலிருந்து பொன்னுரங்கம் பேசறேன். காலையில முதல் ஆளா அம்மாதான் தலைவரைப் போய்ப் பார்த்து மாலை போட்டாங்க. தலைவரிட்ட பிரியமாப் பேசிக்கிட்டிருந்தாங்க. இன்னிக்கு மத்தியானம் ஹோட்டல் ரோஸ் கார்டன்ஸ்லே அம்மா பத்திரிகைக்காரங்களுக்கு ஒரு லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருக்காங்க. அவசியம் வந்துடுங்க. ஏதாச்சும் நியூஸ் உண்டான்னு தானே கேட்கறீங்க? உண்டு. நிச்சயமாப் பெரிய நியூஸே இருக்கு. பிரஸ் கான்பரன்ஸுக்கு வந்துடுங்க. அங்கே சொல்றேன் என்று எல்லாப் பத்திரிகைகளுக்கும் செய்தி ஸ்தாபனங்களுக்கும் ஃபோன் பண்ணி முடித்த பின் முத்தையா பக்கம் திரும்பி, “ரோஸ் கார்டன்ஸ் ஹோட்டல் ஏ.சி. டீலக்ஸ் - கான்பரன்ஸ் ரூமிலே ஒரு அம்பது லஞ்சுக்குச் சொல்லிடுங்க,” என்றான் பொன்னுரங்கம். “சோத்தைப் போட்டு மத்தியானம் ரெண்டு மணிக்குச் சொல்லி அனுப்பிட்டோம்னா சாயங்காலம் எல்லாப் பேப்பரிலேயும் வந்துடும். முதல் பக்கத்திலேயே போட்டுருவாங்க.” “எதைப் போடுவாங்க? கொஞ்சம் புரியறாப்பல தான் சொல்லேன் பொன்னுரங்கம்.” “பார்த்துட்டே இருங்க! என்ன மாதிரி மாயாஜாலம்லாம் நடக்குதுன்னு?” அப்போது பொன்னுரங்கம் படு உற்சாகமாக இருந்தான். பகலில் ரோஸ் கார்டன்ஸ் விருந்து முடிந்ததும், “இனிமே நீங்க இங்கே இருக்கப்படாது. நீங்களும், பாப்பாவும் நைஸாக் கழட்டிக்குங்க. நான் பார்த்துக்கறேன்,” என்று அவர் காதருகே பொன்னுரங்கம் முணுமுணுத்தான். இருவரும் அப்படியே செய்தார்கள். “வாங்க! நியூஸ் சொல்றேன்,” என்று பத்திரிகைக்காரர்களோடு தனியே போனான் பொன்னுரங்கம். மாலைச் செய்தித்தாள்களில் எல்லாம் அநுக்கிரகா கட்சி தலைவருக்கு முதல் மாலை அணிவித்ததாகவும், அரை மணி நேரத்துக்கு மேல் பல விஷயங்கள் குறித்துத் தன் தந்தையோடு அவரிடம் அந்தரங்கமான முறையிலே பேசிக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ‘இவர்களது இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு பட்டதாரியும், புகழ் பெற்ற ஆவாரம் பட்டு ஹவுஸ் பெண்மணியுமான அநுக்கிரகா புதிய மந்திரி சபையில் வீட்டு வசதி அமைச்சராகப் பதவி ஏற்கக் கூடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிகிறது’ - என்ற கடைசிப் பாரா எல்லாச் செய்தித் தாள்களிலும் தடித்த எழுத்துக்களில் பிரசுரமாகி இருந்தது. வெற்றிச் சிரிப்புடனும் மாலைப் பத்திரிகைகளுடனும், முத்தையாவையும், அநுக்கிரகாவையும் சந்திக்க வந்தான் பொன்னுரங்கம். இருவரும் சந்தேகத்தோடு அவனை வினவினர் : “அதெப்படி? இவங்களா முடிவு பண்ணிட்டாங்களா என்ன? ‘ஹவுஸிங் மினிஸ்டர்’னு போர்ட்ஃபோலியோ கூட ஹேஷ்யத்திலேயே போட்டிருக்காங்களே?” “என்ன போட்டிருக்காங்களோ அது நான் சொல்லி போடச் சொன்னதுதான். அரசியல்லே இது ஒரு உத்தி. நாம நினைக்கிறதை - ஆசைப்படறதை - எல்லாருமே நம்பத் தகுந்த வட்டாரங்களிலே பேசற மாதிரி பேப்பர்லே வர்ற மாதிரிப் பண்ணிடணும். அப்புறம் அதை யாரும் மறுக்க மாட்டாங்க. பயப்படுவாங்க. அதுவே உண்மை போல ஆயிடும்.” “விடறாங்களா இல்லையான்னுதான் பாருங்களேன்? இன்னும் மூணு நாளிலே இதே நியூஸ் பேப்பருங்களிலே, அநுக்கிரகாதான் பெண்கள் சார்பில் அமைச்சராகணும்னு மற்ற அஞ்சு பெண் எம்.எல்.ஏ.க்களுமே அவங்களா அறிக்கை விட்டுத் தலைவரை வேண்டிக்கப் போறாங்க.” “அது எப்படி சாத்தியம் பொன்னுரங்கம்?” “ஒரு காரையும், கொஞ்சம் பணத்தையும் எங்கிட்டக் குடுத்துப் பாருங்க. ரெண்டே நாளிலே முடிச்சுக் காட்றேன்.” முத்தையா காரையும் அவன் கேட்ட பணத்தையும் கொடுத்தார். ராசிபுரம் முத்தம்மாள், மருக்கொழுந்துப் பேட்டை மங்கையர்க்கரசி, கோவாலனூர்க் கண்ணம்மாள், பிச்சாண்டிபுரம் மாரியம்மாள், கள்ளப்பள்ளம் காமாட்சி ஆகிய ஐந்து பெண் எம்.எல்.ஏ.க்களையும் சந்திக்கப் புறப்பட்டான் பொன்னுரங்கம். “பெரிய பெரிய கொம்பன்லாம் வெளியே மாலையோட காத்திருக்கிறப்ப, நம்ம தலைவரு முந்தா நாள் கட்சியிலே சேர்ந்த இந்த அநுக்கிரகாவைத் தான் முதல்லே மாலை போட வரச் சொல்லி உள்ள கூப்பிட்டாரு. இவங்க சேர்ந்த வேளை தான் கட்சி சட்டசபையில இத்தினி அறுதிப் பெரும்பான்மையா வந்திருக்குன்னு தலைவர் நினைக்கிறது தான் காரணம். மத்தவங்களை அரை செகண்ட் ஆனாலே, ‘டயமில்லே, புறப்படுங்க. அப்புறம் பார்க்கலாம்’னு கையைக் கூப்பி, வெளியே தலையைப் பிடிச்சுத் தள்ளாத குறையாகத் துரத்தி விடற தலைவர், இந்த அநுக்கிரகா கிட்டவும், அவங்க ஃபாதர் சர்.வி.டி. முத்தையா கிட்டவும் அரை மணிக்கு மேல உட்கார்த்தி வச்சிப் பேசிக்கிட்டிருந்தாருன்னா பார்த்துக்கங்களேன். இவங்க தான் அடுத்த ஹவுஸிங் மினிஸ்டர். முன்னாடி நீங்களே வேண்டிக்கிட்ட மாதிரிப் பண்ணினா, மத்தப் பெண் எம்.எல்.ஏ.க்களான உங்களுக்கும் மரியாதை. அவங்களுக்கும் மரியாதை. தலைவரும் தன் மனக்குறிப்பறிஞ்சு நீங்க நடந்துக்கிட்டீங்கன்னு உங்களுக்கு வேற ஏதாச்சும் கமிட்டித் தலைமை - வாரியத் தலைமைன்னு மத்தப் பதவிகளைக் கொடுப்பாரு. தலைவர் மனசு புரிஞ்சு தான் நான் இதைத் தயாரிச்சுக்கிட்டு வந்திருக்கேன். உங்க கிட்ட கையெழுத்துக்காக வந்திருக்கேன்,” என்று சவிஸ்தாரமாக எடுத்துக் கூறி தயாராக எழுதி வைத்திருந்த காகிதத்தில் கையெழுத்துக்கு நீட்டினான் பொன்னுரங்கம். ஐந்து பெண் எம்.எல்.ஏ.க்களில் யாருமே தட்டிச் சொல்லவில்லை. உடனே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார்கள். “ஆமாம். நீங்க சொன்னதெல்லாம் ஏற்கெனவே பேப்பர்லே பார்த்தோம். தலைவர் அவங்களைத்தான் முதல்லே பார்த்தாருன்னாங்க. மந்திரியாப் போடலாம்னு கூடப் பேப்பர்லியே போட்டிருந்தான்” என்று கூடச் சிலர் ஒத்து பாடினார்கள். பொன்னுரங்கத்தின் முயற்சி முழு வெற்றி அளித்தது. “கொஞ்சம் இருங்க! பார்ட்டி ஹெட் குவார்ட்டஸுக்கு ஒரு எஸ்.டி.டி. போட்டு மாம்பழக் கண்ணன் சார் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிட்டுக் கையெழுத்துப் போடறேன்,” என்று கொஞ்சம் டபாய்த்த கள்ளப்பள்ளம் காமாட்சியை, “மாம்பழம் அனுப்பித்தானே நானே கிளம்பி வந்திருக்கிறேன். போன் போட்டா உங்களைத் தான் கோபிச்சுக்குவாரு,” என்று சவடாலாக அடித்துச் சமாளித்தான் பொன்னுரங்கம். அப்புறம் போன் பேசுகிற அளவு துணிவு அவளுக்கு எங்கிருந்து வரும்? உடனே அவன் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டாள். பொன்னுரங்கம் தனது கையெழுத்து வேட்டைத் திக் விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பினான். அறிக்கை, போட்டோஸ்டெட் பிரதி எடுக்கப்பட்டது. பிரஸ்மீட் இரவு டின்னருடன் ஏற்பாடாயிற்று. மறுபடியும் ரோஸ் கார்டன்ஸ் ஹோட்டல் விருந்து நடந்தது. மறுநாள் காலைப் பத்திரிகைகளில் ‘பெண்கள் சார்பில் அநுக்கிரகாவுக்கே மந்திரி பதவி தரப்பட வேண்டும். ம.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்களின் ஏகோபித்த அறிக்கை. கட்சி தலைவருக்கு வேண்டுகோள்’ - என்று செய்திகள் தடபுடலாகப் பிரசுரமாயின. முத்தையாவுக்கு ஒரே ஆச்சரியம். “உன்னை என்னமோ ஏதோன்னு நினைச்சேன். நீதாம்பா ரியல் கிங் மேக்கர்” என்று அவனை வியந்தார். தேர்தலில் வென்றதும், அதிகாலையிலேயே தலைவரை முதலில் பார்த்து மாலை போட வைத்தது தொடங்கி, அவன் செயல்பட்ட வேகத்தையும், விவேகத்தையும் பார்த்து வக்கீலான முத்தையாவே அயர்ந்து போனார். ‘சீஸண்டு பாலிட்டீஷியன்’ என்பார்களே அப்படி ஆகியிருந்தான் சைக்கிள் கடைப் பொன்னுரங்கம். சர்.வி.டி. முத்தையாவுக்கு எல்லாமே கனவு போல் தோன்றியது. அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆகி மந்திரியும் ஆகப் போகிறாள். அதுவும் அவருக்கு மிகவும் பயன்படக் கூடிய ஹவுஸிங் மந்திரியாகவே ஆகப் போகிறாள். கனிவண்ணனைப் பழி வாங்கியாயிற்று. அரண்மனை போன்ற ஆவாரம் பட்டு ஹவுஸ் மாளிகையைச் சுற்றி முளைத்திருக்கும் குடிசைகள் அகன்று தென்றல் வீசும் சிங்காரப் பூங்காவாக உருவாகப் போகிறது. முத்தையா பொன்னுரங்கத்தைக் கேட்டார்: “ஏம்பா பொன்னுரங்கம்? இது எப்படிப்பா? ஹவுஸிங் மினிஸ்டர்னு நீயா நியூஸ் குடுக்கற? அதை உங்க தலைவரோ, கட்சி ஆளுங்களோ சந்தேகப்பட்டுத் தட்டிக் கேட்க மாட்டாங்களா?” “தலைவர் விருப்பம் அதுதானோ என்னவோன்னு தொண்டருங்க கேட்கவே மாட்டாங்க. கட்சித் தொண்டருங்க விருப்பம் இதுதானோ என்னமோன்னு தலைவரும் கேட்காம விட்டுடுவாரு. எங்க கட்சியிலே தலைவரைப் பார்க்கிறதே குதிரைக் கொம்பு! மீறிப் பார்த்தாலும் சாமி கும்புடற மாதிரிக் காலைத் தொட்டு விழுந்து கும்பிட்டுட்டு ஓடியாந்துடுவாங்க. பேசவோ, கேள்வி கேட்கவோ, விவாதிக்கவோ முடியாது. தலைவர் பக்கத்திலே சமதையா உட்கார்ந்து, ‘அவங்களை ஏன் எம்.எல்.ஏ. ஆக்கினீங்க? இவங்களை எப்பிடி மந்திரியாக்கலாம்?’ என்றெல்லாம் தட்டிக் கேட்க யாருமே கிடையாது. அதனாலேதான் என்னாலே சுளுவா இதெல்லாம் பண்ண முடிஞ்சது.” பொன்னுரங்கத்தின் அனுபவ ஞானத்தை வியந்தார் முத்தையா. அவனே மேலும் கூறினான். “இதெல்லாம் பண்ணியும் கூடப் பிரயோசனமில்லே! கைக்கெட்டினது வாய்க்கு எட்டாமப் போகவும் நேரிட்டுறலாம். எப்படித் தெரியுமா?” அவன் இப்படிக் கேட்டதும் துணுக்கென்றது அவருக்கு. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |