(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 13
செயலுக்குச் சோம்புகிறவர்களை விட செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச் சதை போல வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள். முத்தக்காளுக்கு ஒரு பிரமிப்பே ஏற்பட்டிருந்தது. எதிரிகள் துவம்சம் பண்ணிவிட்டுப் போயிருந்த நிலையில் நீண்ட காலத்துக்கு அந்த மெஸ்ஸை ஒழுங்கு செய்து நடத்தவே முடியாமற் போகுமோ என்று பயந்திருந்தாள். அப்புறம் அதை அங்கே நடத்த விடுவார்களோ என்று தயங்கும் அளவிற்கு அவளை அச்சுறுத்திவிட்டுப் போயிருந்தார்கள் கலகக்காரர்கள். அதனால்தான் அவளுடைய ஆற்றாமையும் கோபமும் கலந்த மனநிலையில் 'இவ்வளவிற்கும் காரணம் பூமிதானே?' என்று ஆத்திரம் ஏற்பட்டிருந்தது. பூமியும் சித்ராவும் தன்னைப் பார்க்க இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு வந்த போது கூட அவள் ஆத்திரத்தோடும் மனத்தாங்கலோடும்தான் அவர்களை எதிர்க்கொண்டாள்.
மாலை வேளை முடிந்து இருட்டுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் சித்ரா தற்செயலாக மெஸ் பக்கம் வந்தாள். அவள் வந்த போது மெஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பின் பக்கத்து அறையில் முத்தக்காள் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து படுத்திருப்பதைச் சொல்லி அவளோடு சிறிது ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்குமாறு சித்ராவை அனுப்பி வைத்தான் பூமி. சித்ரா அவன் சொன்னபடியே செய்தாள். நீண்ட நாள் பழக்கமுள்ள வாடிக்கையாளர்களான வேறு இரண்டொரு டாக்ஸி டிரைவர்களும் முத்தக்காளைப் பார்த்துப் பேச வேண்டுமென்று பூமியிடம் கேட்டுக் கொண்டு பின்பக்கத்து அறைக்குப் போய் விசாரித்துப் பேசிவிட்டு வந்தார்கள். மற்றபடி மெஸ் விஷயமாக அவளை யாரும் போய்த் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டான் பூமி. மனமும் உடலும் நொந்து போயிருக்கும் அவளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று பூமி எல்லாவற்றையும் மற்றவர்களும் தானுமாகச் சமாளித்துக் கொண்டான். ஆட்டோ - டாக்ஸி டிரைவர்கள் யூனியன் பூமியின் மேல் கொடுக்கப்பட்டிருந்த புகாரையும் வழக்கையும் சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறச் செய்யும்படி முயன்று கொண்டிருந்தது. அந்தத் தகவலையும் சம்பந்தப்பட்ட ஓர் ஆள் வந்து தெரிவித்து விட்டுப் போனான். மெஸ் தாக்கப்பட்டது சம்பந்தமாக யூனியன் முயற்சியால் மயிலாப்பூர் தேரடியில் ஒரு கண்டனக் கூட்டத்துக்கு வேறு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். தாக்கப்பட்டு மறுபடி புதிதாக நடக்கத் தொடங்கிய பிறகு மெஸ்ஸில் கூட்டமும் வரவும் அதிகரித்திருந்தன. டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களின் ஒற்றுமை உணர்வு முன்னெப்போது இருந்ததையும் விட அதிக இறுக்கமாகி இருந்தது. அந்த வார இறுதியில் சித்ரா அப்பர்சாமி கோயில் தெருவில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வீட்டிற்குக் குடியேறிவிட்டாள். பூமியின் வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டுக் காலையிலும் மாலையிலும் அவள் மெஸ்ஸுக்கு வந்து வரவு செலவு சரி பார்ப்பது, கணக்கு எழுதுவது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டாள். அதிகாலையில் கொத்தவால் சாவடியிலிருந்து மொத்தமாகக் காய்கறிகள் வாங்கிக் கொண்டு வந்து போடும் பொறுப்பைப் பூமியின் ஆட்டோ உட்பட நாலைந்து ஆட்டோக்கள் தங்களுக்குள் நாள்முறை வைத்துக் கொண்டு மாற்றி மாற்றிச் செய்தன. ஒரு பழங்காலத்துத் தண்ணீர்ப் பந்தலைப் போல நடந்து வந்த பழைய மெஸ்ஸைப் புதிதாகவும், பெரிதாகவும், விரிவாகவும் ஆக்கியிருந்தான் பூமி. அந்தச் சில நாட்களில் அவன் ஆட்டோ பக்கமே போகவில்லை. எடுத்துக் கொண்ட சவாலை ஏற்று வெற்றியாக்கிக் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் பூமி பம்பரமாகச் சுறுசுறுப்புடன் உழைத்தான். நடுவில் ஒருநாள் லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி கூட வந்து பார்த்துவிட்டுப் போனார். "உண்மையான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எதையும் வெற்றிகரமாகச் செய்து காட்ட முடியும் பூமி! இன்று இந்த நாட்டில் உழைக்க முடியாத, உழைக்க நினைக்காதவர்களை விட, உழைக்கவேண்டும் என்று நினைக்கவே சோம்பல் படுகிறவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். செயலுக்குச் சோம்புகிறவர்களை விடச் செய்ய நினைக்கவே சோம்பல்படுகிறவர்கள் ஒரு தேசத்தின் உடம்பில் ஊளைச்சதை போல வேண்டாதவர்களாகத் தங்கி இருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களை உன் அருகில் கூட அண்டவிடாதே" என்று பூமியை அக்கறையோடு எச்சரித்து விட்டுப் போயிருந்தான் பரமசிவம். முத்தக்காள் உடல்நிலை தேறி எழுந்து நடமாடுகிற அளவு அபிவிருத்தி அடைந்திருந்தாள். அவளுக்கு வேண்டியவர்களெல்லாம், "காலம் ரொம்பவும் கெட்டுக் கிடக்கு. இனிமே நீ தனி ஆளா மெஸ்ஸை நடத்தறது முடியாத காரியம். அந்தப் பையன் பூமியையும் கூட இருக்கச் சொல்லு, விட்டு விடாதே!" என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். முத்தக்காளுக்கும் அந்த யோசனை சரி என்றே பட்டது. ஹோட்டலோ, சினிமாக் கொட்டகையோ எதுவானாலும் அக்கம் பக்கத்தில் நாலு பேர் பரிந்து கொண்டு வருவதற்கு இல்லாவிட்டால் எந்த சமூக விரோதி வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கலகம் பண்ணுகிற மாதிரித்தான் ஆகியிருந்தது. எல்லாப் பகுதிகளிலும், எல்லாப் பேட்டைகளிலும் மிரட்டி ஏய்த்துப் பிழைக்கிற ரௌடிக் கூட்டம் ஒன்று இருந்தது. சில சமயங்களில் அப்படிக் கூட்டம் ஏதாவதோர் அரசியல் கட்சியின் சார்பையும் தோதாகத் தேடி வைத்துக் கொண்டிருந்தது. வசூல்களே சில கட்சிகளின் அன்றாடக் கொள்கையாக இருந்தன. பிளாட்பாரத்தில் கடை வைக்கிற பங்காரம்மாள் முதல் பளபளப்பான ஷோரூமுடைய கடை வரை எல்லாரையும் மிரட்டிப் பணம் பண்ண அவர்கள் கற்றிருந்தார்கள்! முத்தக்காள் பூமியிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அந்தத் தம்பி தன்னோடு இருந்து, மெஸ்ஸை நிர்வாகம் செய்ய ஒப்புக் கொள்ளுமா கொள்ளாதா என்பது அவளுக்குப் புரியவில்லை. அநுமானிக்க முடியாமலும் இருந்தது அது. ஒரு நாள் மாலை இதைப் பற்றி பேசுவதற்காக முத்தக்காள் பூமியை அழைத்துக் கொண்டு தன்னுடைய பின்பக்கத்து அறைக்குப் போனாள். அந்த நேரத்தில் சித்ரா கல்லாப் பெட்டிக்கு அருகே அமர்ந்து பில்களுக்கு பணம் வாங்கிப் போடும் வேலையைச் செய்து கொண்டிருந்தாள். அப்போது, சில்க் சட்டை, முகத்தையே மறைக்கிற அளவு பெரிதாகக் கருப்புக் கண்ணாடி, வாயில் பைப் சகிதம், மினுமினுப்பான மேனியோடு ஓர் இரட்டை நாடி ஆள் பூமியைத் தேடி வந்தார். "இங்கே பூமிங்கறது யாரும்மா?" "உள்ளே வேலையா இருக்காரு... உட்காருங்க... இதோ வந்துடுவாரு." வந்த ஆள் ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி, "எனக்கு உட்கார நேரமில்லை... அவசரம்! நான் பூமியை உடனே பார்த்தாகணும்" என்று பறந்தார். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
பிக்சல் மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: 2014 பக்கங்கள்: 175 எடை: 350 கிராம் வகைப்பாடு : சினிமா ISBN: 978-81-92562-75-9 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலான ”அசையும் படம்” நூலின் ஆசிரியர் சி.ஜெ.ராஜ்குமாரின் அடுத்த நூல் “பிக்சல்”. இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இவ்வேளையில் வெளிவந்திருக்கும் இப்புத்தகம் முழுக்க முழுக்க டிஜிட்டல் சினிமா ஒளிப்பதிவு மற்றும் டிஜிட்டல் சினிமா பின் தயாரிப்பு பற்றி எளிய தமிழில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. டிஸ்கவரி புக் பேலஸின் வெளியீடாக வந்திருக்கும் ”பிக்சல்”லில் 200 க்கும் மேற்பட்ட புகைப்பட விளக்கங்களுடன் சினிமாவின் ஆரம்பம் முதல் 1670 தொடங்கி 2012 வரை நடந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளது. மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் பல்வேறு டிஜிட்டல் காமிராக்களையும் அது அறிமுகமான விவரங்களையும் அலசுகிறது. இந்நூலில் இந்திய சினிமாவில் டிஜிட்டல் ஒளிப்பதிவின் பங்கு பற்றியும், சில முக்கியமான டிஜிட்டல் திரைப்படங்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் சிறப்பம்சம் கேனான் 5டி காமிரா முதல் ரெட், ஆரி அலெக்ஸா, சோனி போன்ற அனைத்து விதமான காமிராக்கள், அதன் செயல்பாடுகள் பற்றி மட்டுமல்லாமல் அவற்றை எப்படி இயக்குவது என்பது படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது. மிக சமீபத்திய வரவான ரெட் டிராகன் சென்சார் மற்றும் இனிமேல் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பமான “சினிமா க்ளவுட் கம்ப்யூட்டிங்” இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|