(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 30
ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகு வைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பல பட்டிணத்தில் நிறையவே இருந்தன. பூமியே மேலும் தொடர்ந்து சொன்னான்: "பயத்துக்கு அடிப்படை சுயநலம். சுயநலமுள்ள ஒவ்வொருவனும், எதற்கும் பயந்து தானாக வேண்டும்." "அப்படியானால் இந்த நகரத்தினுள் முரடர்கள், ரௌடிகள், பயமே இல்லாத காலிகள் எல்லாருமே சுயநல மற்றவர்கள் என்று அர்த்தமா?" "அவர்கள் முரடர்கள். முரடர்களைச் சுயநலமற்றவர்கள் என்று சொல்ல முடியாது. கையாலாகாதவர்கள் தங்களைப் பொறுமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் நகரம் இது."
"அப்படிப்பட்ட ஏனோதானோ மனப்பான்மைதான் அராஜகத்துக்கு இடப்படும் உரம் ஆகிறது." "திருட்டு என்பதும் வன்முறை என்பதும் தேசியத் தொழில்களில் சில வகைகளாகவே ஆகிவிட்டன." "பஸ்ஸில் பார்த்த அந்த அப்பாவி மனிதரைப் போலச் சிலர் அவற்றைத் தேசியத் தொழில்களாக மதித்து அவற்றுக்குத் தலை வணங்கிப் பணிந்து நடக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்." "முதல் மனிதனைத் தொடர்ந்து பின்பு தற்செயலாகப் பலர் செய்யும் தவறுகள் எல்லாமே இங்கே ஏற்றுக் கொள்ளப்பட்ட வாடிக்கைகள் ஆகிவிட்டன. லஞ்சம் முதல் பதவி வெறி வரை அனைத்திற்கும் இது பொருந்தும். தீயதை அது நுழைய முயலும் முதல் எல்லையிலேயே எதிர்த்து நிற்கும் மூர்த்தண்யம் மறைந்து 'சரி தொலையட்டும்' என்று உள்ளே விட்டு விடுகிற மனப்பான்மை எங்கும் எதிலும் வந்துவிட்டது. இன்றைய சீரழிவுகள் எல்லாவற்றுக்குமே இதுதான் காரணம்." அந்த வார இறுதியில் அவர்கள் கல்வி இலாகாவுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்த புகார் கடிதத்தின் விளைவு தெரிந்தது. அரசாங்க அலுவலகங்களில் சித்ராவும், தேவகியும் பணி புரிந்து வந்த பள்ளியின் நிர்வாகிக்கு உளவு சொல்லக் கூடியவர்கள் இருந்தார்கள். புகார் வந்திருப்பதையும், அதில் சித்ரா, தேவகி இருவரும் கையெழுத்து இட்டிருப்பதையும், பள்ளி நிர்வாகி தெரிந்து கொண்டார். உடனே அவருக்கு ஆத்திரம் மூண்டது. அவர்கள் இருவரையும் பழிவாங்கினார். 'நடத்தைக் கோளாறு' - 'சீரியஸ் மிஸ்காண்டெக்ட்' - என்று சித்ரா, தேவகி இருவர் மேலும் குற்றம் சாட்டி இருவரையும் வேலையிலிருந்து நீக்கினார் பள்ளியின் நிர்வாகி. எதிர்பார்த்ததுதான். ஆனால் 'நடத்தைக் கோளாறு' என்று குற்றம் சாட்டியது தான் எரிச்சலூட்டியது. பூமி இதைப் பற்றிச் சித்ராவிடம் விசாரித்தான். "தனியார் நிர்வாகத்திலுள்ள இம்மாதிரிப் பள்ளிக் கூடங்களில் பிடிக்காதவர்களை வெளியே அனுப்புவதற்கு என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுவார்கள். நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி நாகேஸ்வரராவ் பார்க்கில் உங்களைச் சந்தித்த என் தோழிகளாயிருந்த ஆசிரியைகளில் யாராவது இப்போது எனக்கு எதிராகவும் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், சாட்சி சொல்லும்படி வற்புறுத்துவார்கள்." "பொய்ச் சாட்சி சொல்ல முன் வருகிறவர்கள் தங்கள் ஆத்மாவுக்கே துரோகம் செய்கிறார்கள்." "ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகுவைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பட்டிணத்தில் நிறைய இருக்கின்றன." "அங்கிருந்து வெளியேறி விட எனக்குச் சம்மதம் தான். ஆனால் நடத்தை கெட்டுப் போன அயோக்கியன் ஒருவன் கையால் நான் நடத்தை கெட்டவள் என்று பட்டம் வாங்கிக் கொண்டு வெளியேற விரும்பவில்லை." "உன்னை நடத்தை கெட்டவள் என்று கூறியதற்காக ஒரு லட்ச ரூபாய் மான நஷ்டம் கோரி வழக்குத் தொடுக்கலாம்." சித்ரா அப்படி ஒரு மானநஷ்ட வழக்குப் போடுவதற்குத் தான் தயாராயிருப்பதாகச் சொன்னாள். தேவகிக்கு வேறு ஓரிடத்தில் வேலை கிடைத்து விட்டது. சித்ரா வேலைக்கு முயற்சி செய்யவில்லை. பரமசிவத்தின் நூல் நிலையத்தில் அரை நாளும், மெஸ்ஸில் அரை நாளுமாகப் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவளும் தேவகியுமாகச் சேர்ந்து தங்கள் மேல் பொய்க் குற்றம் சாட்டி வெளியேற்றிய பள்ளி நிர்வாகி மேல் மான நஷ்ட வழக்கும் போட்டிருந்தார்கள். இப்போது மெஸ்ஸில் லாபம் கணிசமாக வந்தது. மெஸ் இருந்த பழைய கால ஓட்டடுக்கு வீட்டுக்காரர் ஆறு மாதத்துக்கு ஒரு தரம் வாடகையை ஏற்றிச் சொல்லித் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அந்தப் பழைய காலத்து வீட்டையே விலைக்கு வாங்கி விட்டால் தான் வாடகைப் பிரச்னை தீருமென்று முத்தக்காள் அபிப்பிராயப்பட்டாள். பூமிக்கும் அது சரி என்றே தோன்றியது. சென்னை நகரில் பரபரப்பான வியாபாரப் பகுதிகளில் கையகல இடமானாலும் நாலு லட்சம், ஐந்து லட்சம் என்று விலை கூசாமல் சொன்னார்கள். நெல் விளைகிற நன்செய்க்கு இருந்த விலை மதிப்பைப் போல் பத்து மடங்கு விலைமதிப்பு எதுவுமே விளைய முடியாத வீடு கட்ட முடிந்த களர்நிலத்துக்குக் கூட இருந்தது. விவசாய நிலத்துக்கு இல்லாத விலை மதிப்பு நகரங்களில் உள்ள வீடு கட்டும் மனைகளுக்கு ஏற்பட்டிருந்தது. நகரங்களில் கால் மனையை விற்ற தொகையை வைத்து வேறு இடங்களில் ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விடலாம் போலிருந்தது. வீட்டை வாங்கி விட்டால் இடித்துக் கட்டி மாடியில் வரிசையாக நாலைந்து அறைகளைப் போடலாம் என்று முத்தக்காள் எண்ணினாள். அந்த அறைகளில் வேலை பார்க்கும் திருமணமாகாத இளைஞர்களை வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது. ஓர் அறைக்கு மூன்று கட்டில்களைப் போட்டு விட்டால் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் தங்க முடியும். கணிசமான வாடகையும் வரும். இதற்காக வீட்டுக்காரருடன் பேரம் நடந்து கொண்டிருந்தது. அந்த வாரம் பிரபலமான ஜப்பானியக் கராத்தே வீரர் ஒருவர் பம்பாய் செல்கிற வழியில் சென்னையில் இறங்கி இரண்டு நாள் தங்குவதாக இருந்தது. மாநில உடற்பயிற்சிக் கழகம் அவருக்குச் சென்னையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தது. அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாகப் பம்பாய் செல்ல இருந்தார். சிங்கப்பூரில் இருந்த பூமியின் நண்பர்கள் இது பற்றிப் பூமிக்கு எழுதியிருந்தார்கள். பூமி தானும் தன்னால் கராத்தே கற்பிக்கப்பட்ட சீடர்களுமாகச் சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்க முடிவு செய்திருந்தான். மெஸ் இருந்த வீட்டை விலைக்கு வாங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் நடுவில் இந்த வேலை வந்து சேர்ந்தது. தான் செய்த இந்த ஏற்பாடு புதுமையாகத்தான் இருக்கும் என்பது அவன் கருத்து. உண்மையில் அது புதுமையாகத்தான் இருந்தது. ஒரே விதமான கராத்தே உடையில் இருபது முப்பது பேரை விமான நிலையத்தில் கூட்டமாகப் பார்த்ததும் வந்த விருந்தினருக்கே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பூமி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவருக்கு மாலையணிவித்த போது அருகிலிருந்த சித்ராவைச் சுட்டிக் காட்டி 'உன் மனைவியா?' என்று அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் உற்சாகமாக விசாரித்தார். பூமி, "இல்லை" என்றான். "அப்படியானால் காதலியா?" என்று அவரே மீண்டும் கேட்ட போது, "இவள் என் சிநேகிதி" என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் பூமி. "ஆமாம்! சில சமயங்களில் காதலியை விடச் சிநேகிதிதான் உயர்ந்தவள்" என்று பூமிக்கு அவர் புன்னகையோடு மறுமொழி கூறினார். பூமியும் சித்ராவைப் பார்த்துப் பொருள் நயம் பொதிந்த புன்னகை புரிந்தான். அங்கே வந்திருந்த கராத்தே நண்பர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தினான் பூமி. சிங்கப்பூரில் நண்பர்கள் பூமியைப் பற்றிச் சிறப்பாக கூறியதை எல்லாம் அவர் பூமியிடம் விவரித்தார். அவரை அவர் தங்க ஏற்பாடாகி இருந்த ஹோட்டலில் கொண்டு போய் விட்டு விட்டு மெஸ்ஸுக்குத் திரும்பினார்கள் பூமியும் சித்ராவும். அவன் மெஸ்ஸுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே முத்தக்காள் எதிர்பாராத விதமாக அவனிடம் வந்து சத்தம் போட்டுச் சண்டை பிடிக்கத் தொடங்கினாள். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
புத்தர்பிரான் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘கீழ்த்திசை சிந்தனை’ என உலக நாடுகள் கொண்டாடும் பல தத்துவங்களில் முதன்மையானது பௌத்தம். இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னரே மேற்கத்திய நாடுகள் மனித இனத்தின் மாண்பை உணர்ந்தன. ஆனால் அதற்கும் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக நம் மண்ணில் உதித்த செழுமையான சிந்தனையே பௌத்தம். உலகத்துக்கே அன்பின் வழியை உணர்த்திய புத்தர்பிரானின் மகத்துவமான வாழ்வையும், அவரது போதனைகளையும், அவர் விட்டுச் சென்ற நம்பிக்கைகளையும் முழுமையான நூலாகத் தந்திருக்கிறார் கௌதம நீலாம்பரன். பல ஆண்டுகள் உழைப்பில் உருவான நூல் இது. மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களையும், பிறப்பால் இழிநிலை என ஒதுக்கி வைத்த சமூக அவலங்களையும் எதிர்த்து உருவானதே பௌத்தம். எனவேதான் மக்களின் மதமாக இது செழித்து வளர்ந்தது. போர்வெறியோடு ரத்த வேட்கையில் அலைந்த பல பேரரசர்களை பௌத்தம் ஆற்றுப்படுத்தி இருக்கிறது. எனவேதான் அவர்கள் இதைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். பௌத்தம் இந்தியாவில் பிறந்து, சீனாவில் வளர்ந்து, ஜப்பானில் முழுமையடைந்ததாகச் சொல்வார்கள். இன்றைக்கும் மன அமைதி தேடும் அத்தனை பேருக்கும் புத்தனே பேராசானாகத் தெரிகிறான். ஆசைகளைத் துறக்கச் சொன்னவனாக மட்டுமே பலர் புத்தனை அறிவார்கள். அவன் அளித்துச் சென்ற அத்தனை ஞானப் பொக்கிஷங்களையும் ஒரு பெரும் விருந்தாகத் தந்திருக்கிறார் கௌதம நீலாம்பரன். நேரடியாக வாங்க : +91-94440-86888
|