(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 3
தமிழ்நாட்டு இளைய தலைமுறைக்குத் திரு.வி.க.வைத் தெரியவில்லை. சிவாஜிகணேசனைத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை ஜெயமாலினியைத் தெரிகிறது... உருப்படுமா இது? தனி மனிதனின் சிறிய துயரங்கள் எந்த நகரத்தின் பெரிய வாழ்க்கை வேகத்தையும் எள்ளளவு கூடத் தடுத்து நிறுத்துவதில்லை. ஒரு நகரத்தின் அடையாளம் புரியாத பொது உல்லாசங்களை, அடையாளம் புரிந்த தனி மனிதர்களின் துயரங்கள் ஒரு விநாடி கூடத் தடுத்து நிறுத்த முடியாது. இயலாது, சௌகரியப்படாது. மாபெரும் சென்னை என்கிற ஜன ஆரண்யத்திற்குள் பூமி தாயை இழந்ததும், சித்ரா தந்தையை இழந்ததும் நடந்து மறந்த நிகழ்ச்சிகளாக மறைந்து மங்கிவிட்டன. மறைந்தவர்களை மறப்பதும் மறந்தவர்களை மறைப்பதும், பெரிய நகரங்களின் கலாச்சார குணாதிசயங்களில் ஒன்று.
எங்கும் ஓடியாடிச் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அவனுக்குப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்துக் கொண்டே வீட்டில் புதைந்து கிடப்பது அலுப்பூட்டுவதாயிருந்தது. தேங்குகிற தண்ணீர் மெல்ல மெல்ல நாற்றமெடுத்துக் கொசு மொய்ப்பதற்கு இலக்காகி விடுவதைப் போல இயக்கமற்றுப் போகிற மனிதனும் ஆகிவிடுகிறான். உடலால் இயக்கமற்று முடங்குவதைவிட மோசமானது மனத்தால் இயக்கமற்று முடங்குவது. தன் தாயின் மரணம் பூமியின் உடல் இயக்கத்தை மட்டும் பாதிக்கவில்லை. மன இயக்கத்தையும் பாதித்திருந்தது. தாயைப் பிரிந்து வாழவே முடியாத அளவு செல்லப் பிள்ளையாக அவன் வளர்ந்து விடவில்லை. ஆனாலும் தாயின் பிரிவு அவனைப் பாதிக்கவே செய்திருந்தது. பாரதியாரின் கவிதைகள் அவனுக்குத் தெம்பும் நம்பிக்கையும் ஊட்டின. தமிழ்ப் பத்திரிகைகளின் நைந்து போன ஃபார்முலா எழுத்துக்கள் அவனுக்கு அவநம்பிக்கையும் சலிப்பும் ஊட்டின. வைக்கோலை தின்பது போல் சக்கை சக்கையாயிருந்தது. வாழ்க்கையின் ஆழத்தையும், அகலத்தையும் அவை சார்ந்திருக்கவில்லை. வீடுதோறும் விளங்கி அலங்கரிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் படுபிரபலமான குடும்பப் பத்திரிகை ஒன்று 'வெல்வெட் விநோதாவுக்கு தோளில் மச்சமிருக்கிறதா இடுப்பில் மச்சமிருக்கிறதா?' என்பதைக் கண்டு பிடிக்கும்படி தன் வாசகர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு போட்டி வைத்திருந்தது. கொஞ்சம் சிரமமானாலும் வாசகர்கள் தலை எழுத்து, அதைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இயல்பாகப் பூமி, தமிழ் பத்திரிகைகளை அதிகம் படிப்பதில்லை. தமிழில் பாரதியார், புதுமைப்பித்தன், கு.ப.ரா. போன்றவர்களின் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் வீக்லி, இண்டியா டுடே முதல் பல பத்திரிகைகளையும் படிப்பது அவன் வழக்கம். இப்படி வீட்டிலே அடைந்து கிடக்கிறானே என்று அவன் மேல் இரக்கப்பட்டு கன்னையன் லஸ் கார்னரிலுள்ள ஒரு கடையிலிருந்து வாங்கிக் கொண்டு வந்து தள்ளியிருந்த தமிழ்ப் பத்திரிகைகள் பல இரண்டு வாரக் காலம் வெந்நீர் அடுப்புக்கு உதவுகிற அளவு போதுமானவை. தாயின் படம் ஒன்றை என்லார்ஜ் செய்து வீட்டு முகப்பில் மாட்ட வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது. தனித்தனியான பாலிதின் உறைகளில் சேர்த்து வைத்துக் கொணர்ந்திருந்த சிங்கப்பூர் நெகடிவ்களைத் தேடிக் குடைந்து தாய் சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் அருமையான படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்தான் பூமி. சாயங்காலம் அதை இராயப்பேட்டை ஹைரோடிலுள்ள ஸ்டூடியோ ஒன்றில் கொடுத்துப் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டான். கிருஷ்ணாம்பேட்டை மயானத்து முகப்பில் தாயின் இரண்டாம் நாள் காரியத்துக்காகப் போயிருந்த காலை வேளையில் சித்ராவைச் சந்தித்த பின் மறுபடி பூமி இன்று வரை அவளைச் சந்திக்கவே நேரவே இல்லை. அன்று இரண்டாம் நாள் காலையில் சந்தித்த போது தான் பாலாஜி நகரில் குடியிருப்பதாக அவள் கூறியிருந்தது பூமிக்கு நினைவு வந்தது. பாலாஜி நகரிலிருந்து மாம்பலத்தில் உள்ள பிரைவேட் நர்ஸரி ஸ்கூலுக்கு வேலை செய்யப் போகிறாள் என்பதை நினைத்தபோது கொஞ்சம் அநுதாபமாகக்கூட இருந்தது. தாம்பரம், பம்மல், குரோம்பேட்டை போன்ற இடங்களிலிருந்து வருகிறவர்களின் தொலைவை நினைத்தபோது இவள் நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றும் தோன்றியது. பாலாஜி நகரில் வசிப்பவள் முதல் முறையாகத் தன் ஆட்டோவில் ஏற நேர்ந்த போது எப்படி மயிலாப்பூரில் ஏறினாள் என்று சிந்தித்தான் அவன். ஏதாவது காரியமாக அவள் அங்கே வந்திருக்க வேண்டும் என்று அநுமானிக்க முடிந்தது. வெளியே ஆட்டோவில் சவாரிக்காகவும், சவாரியோடும் சுற்றுகிற போது புத்தகம் படிக்க விரும்புகிற மாதிரி இப்போது வீட்டில் அடைந்து கிடக்கிற போது அதிகம் விரும்ப முடியவில்லை. திகட்டியது. எல்லாப் பத்திரிகைகளும் ஒரே மாதிரி இருந்தன. அப்பட்டமான வர்த்தக யந்திரத்தின் போட்டி, வெறி என்ற வக்கிரமான கலாசாரத்தில் இதழ்கள் சீரழிந்திருப்பதைத் தான் கன்னையன் வாங்கிக் குவித்திருந்த பத்திரிகைகள் நிரூபித்தன. பத்திரிகைகளை விலக்கி விட்டுப் பார்த்தால் கையிலிருந்த புத்தகங்களை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. அவனுக்கு வழக்கமாகப் புத்தகங்களை வாடகைக்குத் தரும் லெண்டிங் லைப்ரரி லாயிட்ஸ் சாலையும் இராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கிற முனையில் இருந்தது. 'திரு.வி.க. நூல் நிலையம்' என்ற பெயரில் அந்த லெண்டிங் லைப்ரரியை நடத்தி வந்த பரமசிவமும் பூமியைப் போலவே ஒரு படித்த வேலையில்லாப் பட்டதாரிதான். அவன் சுயமுயற்சியாக அந்த லெண்டிங் லைப்ரரியைத் தொடங்கியிருந்தான். மாதம் ஐந்து ரூபாய் சந்தாவில் முந்நூறு முந்நூற்றைம்பது பேர் சேர்ந்திருந்தார்கள். கிடைக்கிற மொத்த வருமானத்தில் இட வாடகை, தமிழிலும் ஆங்கிலத்திலுமாகப் புதிய புத்தகங்கள் வாங்கி முதலீடு ஆகியவை போகப் பரமசிவத்துக்கு மாத ஊதியமாகக் கொஞ்சம் மிஞ்சியது. ஊதியம் கொஞ்சமென்று பாராமல் அயராமல் உழைத்தான் பரமசிவம். படித்து பட்டம் பெற்றுவிட்டுத் தேசிய குணசித்திரங்களில் ஒன்றான சோம்பலுடனும் கையாலாகாத்தனத்துடனும் பெற்றோர் செலவில் சாப்பிட்டுக் காலந்தள்ளும் பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவனாக இருந்து விடாமல் எதையாவது சுயமுயற்சியாகத் தொடங்க வேண்டுமென்று தொடங்கி நடத்தும் பரமசிவத்தைப் பூமி மிகவும் விரும்பினான். தானே முயன்று சொல்லியும் சிபாரிசு செய்தும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்கு நிறையச் சந்தாதாரர்களைச் சேர்த்து விட்டு உதவியிருந்தான் பூமி. பரமசிவம் அந்த லெண்டிங் லைப்ரரியையே ஓர் இலக்கிய இயக்கமாக நடத்தி வந்தான். பரமசிவத்தைச் சந்தித்துப் பேசினால் ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கும். பரமசிவம் தெளிவான திட்டவட்டமான மனிதன். பூமியின் தாய் இறந்த தினத்தன்று இரவு எல்லாரையும் போலப் பரமசிவமும் துக்கத்துக்கு வந்து விட்டுப் போயிருந்தான். அதற்குப் பின் பூமியும் பரமசிவமும் சந்தித்துக் கொள்ள நேரவில்லை. பரமசிவத்தின் மேல் பூமிக்கு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்தது ஒரு சம்பவம். பரமசிவத்தின் கொள்கைப் பிடிப்பும் திட நம்பிக்கையும் பூமிக்கு அப்போது புரிந்தன. முன்பு பூமி பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போயிருந்த ஒரு சமயம் ஒரு வாடிக்கைக்காரர் அவனோடு சத்தம் போட்டு இரைந்து கொண்டிருந்தார். "என்ன சார் லைப்ரரி இது? ரொம்ப ஸ்டாண்டர்டு புக்ஸா வெச்சிருக்கீங்க? எங்களுக்கு வேண்டியது செக்ஸ், கிரைம் இம்மாதிரிக் கதைப் பொஸ்தகங்கள் தான். படிச்சுட்டு உடனே மறக்கற மாதிரி லைட் புக்ஸ்தான் வேணும்." "மறக்கறதுக்குத்தான் படிக்கணும்னா நீங்க ஏன் படிக்கணும் சார்? மாட்னி ஷோவிலே தமிழ் சினிமா பாருங்க... இல்லாட்டி இந்திப் படம் பாருங்கள்..." "அந்த நாள்ளே வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாள் எல்லாம் எழுதினாங்களே, அது மாதிரி விறுவிறுன்னு ஓடற நாவல்ஸ் வேணும் சார்." "வடுவூர் அய்யங்கார் மாதிரி எழுதறவங்க யாராவது இந்தக் காலத்திலேயும் இருப்பாங்க! தமிழ் மாகஸீன்ஸிலே தேடிப் பாருங்க. இங்கே மாகஸீன்ஸ் லெண்ட் பண்றதில்லே. சமூக நலனுக்கும் இலக்கியத் தரத்துக்கும் எட்டுகிற மாதிரி உள்ள தமிழ், இங்கிலீஷ் புக்ஸ் மட்டும் தான் லெண்ட் பண்றோம்" என்று கூறியபடி அவருடைய சந்தா ஐந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தான் பரமசிவம். "இவ்வளவு ரஃபா பிஹேவ் பண்ணினா உங்க பிசினஸ் என்ன ஆவும்? கொஞ்சம் கஸ்டமர்ஸைத் தட்டிக் குடுத்து அநுசரிச்சிப் போகணும் சார்? "தட்டிக் குடுக்கறதுக்கு எங்கியாவது 'பார்க்' பக்கமா பாடி 'மஸாஜ்' பண்றவன் காத்துக்கிட்டு இருப்பான். அவங்ககிட்ட போய்க் கேளுங்க தட்டிக் குடுத்து மஸாஜ், மாலிஷ் எல்லாமே பண்ணுவான்; இதமாக இருக்கும்." "சுயமரியாதைக்கு முட்டாள்கள் தருகிற புதுப்பெயர் திமிர் என்பது." இதைக் கேட்டுக் கொண்டு நின்ற பூமி 'சபாஷ்' என்று பரமசிவத்துக்கு ஆதரவாகக் கரகோஷமே செய்துவிட்டான். இந்தத் தலைமுறை இளைஞர்களில் கொள்கைத் தெளிவுள்ளவர்களுக்கே உரிய கம்பீரம் கோபம் எல்லாம் பரமசிவத்தினிடம் இருப்பதைப் பூமி இரசித்தான். இரண்டு மூன்று நாள் அஞ்ஞாத வாசத்துக்குப் பின் தாயின் நெகடிவ்வை ஸ்டூடியோவில் பிரிண்ட் போடக் கொடுத்து விட்டுப் பரமசிவத்தின் 'திரு.வி.க. லெண்டிங் லைப்ரரி'க்கும் போய்விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினான் பூமி. லெண்டிங் லைப்ரரி இராயப்பேட்டை வட்டாரத்தில் இருந்ததால் அதே வட்டாரத்தில் வாழ்ந்து மறைந்த தமிழ் அறிஞர் திரு.வி.க.வின் பெயரை அதற்குச் சூட்டியிருந்தான் பரமசிவம். இந்தத் தலைமுறைத் தமிழ் வாசகர்களில் சிலர் "திரு.வி.க. என்பது யாருடைய பெயர்?" என்று விசாரிக்கிற அளவு அறியாமை நிறைந்தவர்களாக இருப்பது பற்றியும் பரமசிவமே பூமியிடம் மனம் நொந்து வருந்தியிருந்தான். "பூமி! இந்தத் தலைமுறையைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவர்களுக்குத் திரு.வி.க.வைத் தெரியவில்லை; சிவாஜி கணேசனைத் தெரிகிறது. திருவள்ளுவரைத் தெரியவில்லை; ஜெயமாலினியைத் தெரிகிறது. உருப்படுமா இது?" கலாசாரச் சீரழிவு என்ற தொத்து நோயில் தமிழகம் திளைத்திருக்கிறது என்னும் பரமசிவத்தின் கருத்து பூமிக்கும் உடன்பாடுதான். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அதைப் பூமி ஒப்புக் கொண்டான். அன்று மாலை அவன் ஸ்டூடியோவுக்குப் போய்த் தாயின் 'நெகடிவ்'வைக் காபினட் சைஸ் பிரிண்ட் போடக் கொடுத்து விட்டு திரு.வி.க. லெண்டிங் லைப்ரரிக்கு வந்தான். அப்போது பரமசிவம் அங்கே இல்லை. பரமசிவத்தின் தம்பி முருகேசன் இருந்தான். விசாரித்த போது பரமசிவம் ஹோட்டல் 'ஸ்வாகத்' வரை காபி குடிக்கப் போயிருப்பதாகவும் பத்து நிமிஷத்தில் திரும்பி வந்துவிடுவான் என்றும் தெரிந்தது. நடந்து வந்திருந்ததால் பூமிக்கு மிகவும் நா வறட்சியாயிருந்தது. எதிர்ப்பக்கம் பிளாட்பாரத்தில் கரும்பு ஜூஸ் பிழிந்து கொடுத்துக் கொண்டிருந்த ஒருவனிடம் போய் இஞ்சித் துண்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து கரும்பு ஜூஸ் பிழிந்து வாங்கிக் குடித்தான் அவன். பரமசிவம் இன்னும் திரும்ப வரவில்லை. தற்செயலாக அவன் மறுபடி நிமிர்ந்து லெண்டிங் லைப்ரரிப் பக்கம் பார்த்தபோது அங்கே சித்ரா ஓர் இளைஞனுடன் நின்று புத்தகம் தேடிக் கொண்டிருந்தாள். முருகேசன் அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சித்ராவோடு நிற்கும் ஸஃபாரி சூட் அணிந்த அந்த இளைஞன் யாரென்று தான் பூமிக்குப் புரியவில்லை. சித்ராவைப் போல் அந்த இளைஞனும் தனியாக லைப்ரரிக்கு வந்த வேறு ஒரு கஸ்டமராக இருக்கலாமோ என நினைக்கவும் முடியாமல் அவன் அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். பூமிக்கு அத்தனை தாகத்திலும் கரும்பு ஜூஸ் இரசிக்கவில்லை. ஐஸ் கட்டிகளோடு பாதி கிளாஸ் ஜூஸை அப்படியே மீதி வைத்தான் அவன். இன்னும் பரமசிவம் ஸ்வாகத்திலிருந்து திரும்பவில்லை. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
புல்புல்தாரா மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: பிப்ரவரி 2020 பக்கங்கள்: 192 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-86737-90-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 245.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கணக்கற்ற ரகசியங்களைத் தூக்கிச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தைக்கும் ஒளியை நிகர்த்த வெளிப்படைத்தன்மை கொண்ட மகளுக்குமான உறவைச் சொல்கிறது இந்நாவல். தனது துயரத்தின் ஒரு துளியை இறக்கி வைக்கக்கூட இடமின்றிக் கதை நெடுக அலையும் நாயகி, அத்துயரங்களின் மையப்புள்ளியைக் கண்டடையும்போது அனைத்துத் தளைகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறாள். பெரும் துயரத்துக்கும் அதன் நிழல் படியாத முழு மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட பெருவெளியில் மேற்கொள்ளும் பயணத்தில் அவளுக்குப் புதிர்களின் கவித்துவம் ஒரு தரிசனமாகக் கிடைக்கிறது. வாழ்வினும் பெரும் புதிர் வேறேது? நேரடியாக வாங்க : +91-94440-86888
|