(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 8
எந்த முதல் தரமான நல்ல கலையும் மூன்றாந்தரமான மனிதர்கள் கைக்குப் போய்ச் சேரும் போது அங்கே அது வெறும் பாசாங்காகவும் போலிப் பாவனையாகவும் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாது. சித்ராவுக்கும் புரட்சிமித்திரனுக்கும் இருக்கும் நட்பு இப்போது பூமிக்கு எந்த விதத்திலும் கவலையளிக்கவில்லை. கேலிக்குப் பாத்திரமான விதூஷகன் ஒருவனை நடத்துவதைப் போலவே அவனை அவள் நடத்தினாள். சிறிது கூட மரியாதை கலவாத ஒருமையில் 'நீ, வா, போ' என்றுதான் அவனைப் பேசினாள் அவள். அவனுடைய புதுக்கவிதை, புரட்சி, தீவிரம் எல்லாவற்றையும் கூட அவள் கேலிப் பொருள்களாகவே கருதினாள். சிநேகிதமும் நெருக்கமும் இருந்தாலும் அவனது அரைவேக்காட்டுத் தனங்களை அவள் ஏளனமாகப் பார்ப்பது தெளிவாகவே தெரிந்தது.
இதற்கு முன்பும் இத்தகைய கராத்தே நிகழ்ச்சிகளைப் பொது விழாக்கள் சிலவற்றில் செய்து காட்டியிருந்ததால் இதற்கும் பூமி இசைந்திருந்தான். கைவிரல்களால் செங்கல் உடைப்பது, தலையால் செங்கல் உடைப்பது, சண்டை ஆகிய காட்சிகளைக் காண்பதில் மக்கள் மிகவும் ஆர்வம் காட்டினர். வெளிநாட்டுப் போர்க் கலைகளாக இருந்தும் கராத்தே, குங்ஃபூ ஆகியவை மக்களை அதிகம் கவர்ந்திருப்பதற்குக் காரணம் அவற்றின் விரைவும் துரித கதியும் என்பதைப் பூமி நன்கு உணர்ந்திருந்தான். இந்தப் போர் முறைகளின் துரித கதி வேறு எந்தப் போர் முறைகளிலும் இல்லை என்பது அவனுக்குத் தோன்றியது. கராத்தே முறையின் கவர்ச்சிக்குக் காரணமே அதுதான் என்பதையும் அவன் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தான். ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களைத் தவிரவும் மாணவர்கள், அலுவலங்களில் பணிபுரியும் இளைஞர்கள் என்று கராத்தே பயில்வதில் ஆர்வமுள்ள ஒரு பெரிய குழுவே பூமியைச் சுற்றி இருந்தது. பூமி அந்தக் குழுவுக்குத் தலைவனாக இருந்தான். நடு இரவில் டாக்ஸி ஆட்டோக்களில் இருவர் மூவராக ஏறிக் கொண்டு எதாவதொரு தனி இடம் வந்ததும் டிரைவரை அடித்து உதைத்து அன்றைய சவாரி வசூல் முழுவதையும் பறித்துக் கொண்டு போகும் சம்பவங்கள் நகரில் அதிகரித்து வந்தன. இச் சம்பவங்களால் இளைஞர்களாகிய டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களிடையே கராத்தே கற்பதில் மிக விரைந்த ஆர்வமும், எழுச்சியும் ஏற்பட்டிருந்தன. தற்காப்புக்கும் அவசர உபயோகத்துக்கும் அது பயன்படும் என்பது அக்கலை இளைஞர்களைக் கவர்வதற்குப் போதுமானதாக இருந்தது. இந்த பாலாஜி நகர் நர்ஸரிப் பள்ளியின் விழா அழைப்பிதழ் சித்ரா வேலை பார்த்த அருள்மேரி கான்வென்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கராத்தே வீரர் பூமிநாதன் என்று பார்த்ததுமே அது தனக்கு அறிமுகமான பெயராயிருந்ததை ஒட்டிச் சித்ராவின் ஆர்வம் அதன்பால் ஈர்க்கப்பட்டது. நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு "அது நம்ம பூமியா அல்லது வேறு யாராவதா?" - என்று லெண்டிங் லைப்ரரியில் பரமசிவத்திடம் விசாரித்தாள் சித்ரா. "சந்தேகம் என்ன? நம்ம பூமியே தான். அவன் பெரிய கராத்தே நிபுணனாச்சே?" - என்று சித்ராவுக்குப் பரமசிவம் மறுமொழி கூறினான். இதனால் சித்ராவுக்கு அவன் தோழி தேவகியும் பூமியின் கராத்தே டெமான்ஸ்ட்ரேஷனைப் பார்ப்பதற்காக முன் வரிசையில் வந்து அமர்ந்து விட்டார்கள். பூமிக்கு முதலில் இது தெரியாது. தற்செயலாக வெளியே என்ன கூட்டம் கூடியிருக்கிறது என்று பார்ப்பதற்காக அரங்கின் திரையை விலக்கி விட்டுப் பார்த்தபோது முதல் வரிசையில் சித்ராவையும் அவள் தோழியையும் கண்டான். அந்த நிகழ்ச்சியைப் பற்றி இப்போது முன்னை விட அதிக மகிழ்ச்சியும் பெருமிதமும் பூமிக்கு ஏற்பட்டன. தன்னுடைய கராத்தே நிகழ்ச்சி அந்த விழாவில் இடம் பெற்றிருப்பது தெரிந்துதான் சித்ராவும் அவள் தோழியும் வந்திருக்கிறார்களா அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா என்பது பூமிக்குப் புரியவில்லை. கராத்தே உடையில் பூமியும் அவனுடைய உதவியாளனும் மேடையில் தோன்றி திரை விலகியபோது எல்லாரையும் போல் சித்ராவும் அவள் தோழியும் கூட உற்சாகமாகக் கை தட்டினார்கள். பூமி மேடையில் இருந்தபடியே அதைக் கவனிக்கத் தவறவில்லை. சித்ராவையும் அவள் தோழியையும் தவிர பூமியிடம் அந்தக் கலையைக் கற்கும் வேறு பலரும் அவையில் ஆர்வமாக அமர்ந்திருந்தார்கள். பள்ளி நிர்வாகி பூமியையும் அவனுடைய சீடனையும் வரவேற்றுக் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். முதல் பத்து நிமிஷங்கள் ஜூடோ, கராத்தே, குங்ஃபூ ஆகியவற்றின் இடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகளையும் அவற்றில் உள்ள பல்வேறு ஸ்கூல்களையும் ஸ்டைல்களையும் சுருக்கமாக விளக்கினான் பூமி. கைகள், கால்கள், விரல்கள், பாதங்கள் ஆகியவற்றையே சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் போலப் பயன்படுத்திக் காட்டும் கராத்தே தத்துவத்தைச் சொல்லிச் செய்து காட்ட முற்பட்டான். செங்கல் உடைத்தல், கட்டையை உடைத்தல் ஆகியவற்றை செய்து காட்டிய துரிதகதியைக் கண்டு கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது. விரல்களிலும் மண்டையிலும் பாதங்களிலும் ஒருவன் அவ்வளவு வலிமையைக் குவிக்க முடியுமா என்பது அனைவரின் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சி முடிந்ததும் அவையினரின் மகிழ்ச்சி ஆரவாரமும் கைத்தட்டல்களும், கட்டிடத்தையே அதிரச் செய்தன. பயிற்சியாலும் முயற்சியாலும் பூமி உடம்பையே தேனிரும்பாக இறுக்கியிருந்தான். அவன் பலத்தைக் குவித்துத் தாக்கும் போதில் விரல் நுனிகளும் கைவிளிம்புகளும் தீட்டிய கத்தியைப் போல் கூர்மையாக இயங்கின. மேடையில் முத்து முத்தாக வியர்வை மின்னும் அவன் முகத்தையும் ஒளி நிறைந்த கண்களையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அவனது துள்ளலில் இருந்த விரைவு, பாய்ச்சலில் இருந்த துரிதம் அனைத்துமே தேர்ச்சியையும், முதிர்ச்சியையும் காட்டின. நிகழ்ச்சி முடிந்ததும் கிரீன் ரூமுக்குள்ளேயே சென்று பூமியைப் பாராட்ட எண்ணினாள் சித்ரா. அவள் உள்ளே சென்ற போது கராத்தே நிகழ்ச்சிக்காக அணிந்து வேர்வையால் நனையத் தொடங்கியிருந்த தொளதொளப்பான ஜிப்பாவைக் கழற்றிக் கொண்டிருந்தான் பூமி. கருங்கல் பாறை போல் இறுகிப் பரந்து பளபளவென்று வேர்வை மின்னிய அவனது பரந்த மார்பு மேற்புறம் அகன்று கீழ்ப்புறம் இடுப்பருகே சுருங்கியிருந்தது. சிக்கென்று இறுகித் திறண்டு செழித்த வளமான தோள்களும், உடம்பும் கராத்தே பயிற்சியால் தவம் பண்ணுவதுபோல் அந்த உடம்பை வசப்படுத்தியிருப்பதைக் காட்டின. பாராட்டுவதற்குச் சொற்களைத் தேடிச் சித்ரா தவித்தபோது, தேவகி பாராட்டியே விட்டாள். "ரொம்ப அற்புதமாயிருந்தது. ஒரு கராத்தே இன்ஸ்டிடியூட் ஏற்படுத்தி அதுக்கு உங்களை டைரக்டரா நியமிச்சு இந்த அபூர்வமான கலையைப் பரப்பணும்..." "அப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை யார் உதவியும் இல்லாமல் என் அளவில் நான் நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன்" என்றான் பூமி. சித்ராவின் பக்கமாகத் திரும்பிப் புன்னகையோடு அவனே மேலும் கூறினான். "நீங்கள் வந்ததில் நிரம்ப சந்தோஷம்! இன்றைக்கு இங்கே இந்த நிகழ்ச்சி இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?" "தெரியும்! எங்க ஸ்கூல் நோட்டீஸ் போர்டிலே இன்விடேஷன் பார்த்தேன். அப்புறம் லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அண்ணாச்சி கிட்டவும் விசாரிச்சேன்" என்று சித்ரா பூமிக்கு மறுமொழி கூறிக் கொண்டிருந்த போதே அவளுடைய தோழி தேவகி பூமியிடம் ஒரு கேள்வி கேட்டாள்: "நீங்க நிஜமான கன அளவு உள்ள ஒரு பெரிய செங்கல்லையும் சில செங்கல்களின் அடுக்கையுமே உடைச்சிக் காட்டறீங்க. சில சினிமா நடிகர்கள் ரொட்டித்துண்டு அளவுக்கு லேசான சீமை ஓடுகளை உடைச்சிட்டு அதையே பெரிய செங்கல் உடைக்கிற சாகஸமாக விளம்பரப்படுத்திக்கிறாங்களே?" "மிகவும் பொருத்தமான விளக்கம்." "இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள்! ஒருவன் கையில் வாளோ கத்தியோ ஏந்திச் சாதிக்க முடியாததை வெறுங் கையாலும் காலாலுமே சாதிக்க முடிந்தவன் கராத்தே வீரன். மற்றவன் கத்தியைக் கூராக்கித் தீட்டுகிறான் என்றால், கராத்தே வீரன் தன் உடம்பையே பயிற்சியால் கூராக்கிக் கொள்கிறான். சினிமாவில் இரவல் குரல், இரவல் இசை, இரவல் கத்திச் சண்டை எல்லாவற்றையும் போலச் சமயா சமயங்களில் ஆண்மை, வீரம் எல்லாவற்றையும் கூட இரவல் வாங்கிக் கொள்கிறார்கள்" என்று கூறிவிட்டுச் செங்கல்லை உடைக்கு முன் கையை ஒருமைப்படுத்திக் கூராக்கிக் கைவிளிம்புக்கு முழு வலிமையையும் கொண்டு வருவது எப்படி என்பதை அங்கேயே அந்தக் கணமே நொடிப்பொழுதில் அவர்களுக்கு 'டெமான்ஸ்டிரேட்' செய்து காட்டினான் பூமி. சித்ராவும், தேவகியும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது பூமி கேட்டான்: "எப்பொழுது புது வீட்டிற்குக் குடி வரப்போகிறீர்கள்?" "இன்னும் முடிவாகவில்லை! அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு. அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு வம்பு பண்ணுகிறார் அவர்" - என்றாள் சித்ரா. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
மருந்துகள் பிறந்த கதை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 168 எடை: 150 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: 978-93-5135-037-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. உண்ணாமல், உறங்காமல், சமயங்களில் உயிரையும் பணயம் வைத்து விஞ்ஞானிகள் இந்த மருத்துகளைக் கண்டு பிடிக்காமல் போயிருந்தால் நாம் இன்று இல்லை. மருந்துகள் மட்டுமல்ல, நவீன பரிசோதனை முறைகள், சிகிச்சைமுறைகள், மருத்துவக் கருவிகள் என்று மருத்துவ உலகம் இன்று அதிசயிக்கத்தக்க முறையில் நவீனமடைந்திருப்பதற்குப் பின்னால் முகம் அறியாத பல விஞ்ஞானிகள் இருக்கின்றனர். அந்த விஞ்ஞானிகளை நினைவுகூர்வதும் கொண்டாடுவதும் நம் கடமை. இதுவரை நாம் அறிந்திராத மாபெரும் சாதனையாளர்களை இந்நூல் நமக்கு எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்கிறது. சில முக்கியமான மருந்துகள் எவ்வாறு கண்டுபிடிக்கப் பட்டன, எத்தகைய மனித ஆற்றலும் அசாத்திய உழைப்பும் அதற்குத் தேவைப்பட்டன என்பதை டாக்டர் கு. கணேசன் விவரிக்கும்போது விஞ்ஞானிகள் மீதும் மருத்துவர்கள் மீதும் நம் வியப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரிக்கின்றன. பொதுநல மருத்துவரும் புகழ்பெற்ற மருத்துவ அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் கு. கணேசனின் இந்நூல் நம் விழிகளைக் கடந்து இதயத்தைத் தொடுகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|