(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 19
இன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன் வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்கி ஒடுங்கி விடுகிறவர்களே அதிகம். சித்ராவும் தேவகியும் வந்து கூறிய விவரங்களிலிருந்து பெரும்பாலான இந்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலையும் பரிதாபமும் கொண்டான் பூமி. தங்களை விரும்பாத பெண்களைத் தாங்கள் விரும்புகிற கழிசடைகளாகக் காமுகர்களாய், முன்னேறுகிற ஒரு சமுதாயத்தில் வெறும் 'நியூஸென்ஸ் வால்யூ' மட்டுமே உள்ளவர்களாய், இன்றைய இளைஞர் சக்தி சிதறுண்டு போவதை அறிந்து வருந்தினான் பூமி.
'இப்படி ஊர் வம்புக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு அலைய நாம்தானா அகப்பட்டோம்?' என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. 'எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில் தான் என்ன பெருமை இருக்கிறது?' - என்று எண்ணியபோது அவன் மனத்தில் பழைய கருணையும் இரக்கமும் மேல் எழுந்து மிகுந்து நின்றன. சித்ராவும் தேவகியும் தேடி வந்து வேண்டியதற்காக இந்த வம்பிலும் தானே தலையிடுவது என்று துணிந்தான் அவன். பதவியும், அதிகாரமும், பணமும் உள்ளவர்களிடம் மோதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவன் யோசிக்கவுமில்லை. தயங்கியபடி அதைத் தள்ளிப் போடவுமில்லை. உடனே துரிதமாக அந்த அநாதைக் குடும்பத்துக்காகப் பரிந்து கொண்டு போக வேண்டுமென்றுதான் முனைப்பாயிருந்தான். என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பொதுக் காரியங்களில் இப்படி ஒரு முனைப்பையும் சுறுசுறுப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. இந்த முனைப்பு அவனுடைய இரத்தத்தோடு கலந்து போயிருந்தது. இது அபாயம் தருவது, இது தனக்குக் கேடு சூழ்வது என்று பிறர் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் பாடுபடும்போதும் எந்த விநாடியும் எதற்கும் தயங்கி ஒதுங்க முடியாதது தன் பலமா பலவீனமா என்று பலமுறை அவன் தனக்குத்தானே சிந்தித்திருக்கிறான். காலையில் கல்லூரி தொடங்குகிற நேரத்துக்குப் பூமி அங்கே போய்விட்டான். அந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு நடுத்தர வயதைக் கடந்த முதியவர். கல்லூரி மாணவர்கள் படிப்பு, இளைஞர் மனப்போக்கு ஆகியவை பற்றி மிகவும் கசப்பான உணர்ச்சியோடு இருந்தார். எதிலும் நம்பிக்கையோடு பேசவில்லை அவர். 'ஏதோ காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்' - என்கிற தோரணையில் அலுத்துக் கொண்டார். விதியையும் தலை எழுத்தையுமே நிறைய நம்பினார். "உங்கள் கல்லூரியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் படிக்கிற மாணவன் இப்படி ஒரு தவறு செய்தால் நீங்கள் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டாமா? ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப் பெண் ஒருத்தியைச் சுற்றிக் கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே?" என்று பூமி பேச்சைத் தொடங்கினான். அவர் பதிலுக்குப் பூமியை நோக்கிச் சுரத்து இல்லாத குரலில் கூறலானார். "அவனைக் கண்டிக்க நான் கிளம்பினால் என் வேலைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அந்தப் பையனோட அப்பா ஆளும் கட்சியிலே செல்வாக்குள்ள பார்லிமெண்ட் மெம்பர். காலேஜ் போர்டு சேர்மன் அவர் சொல்றதைக் கேட்கக் கூடியவர். தவிர ஒரு பையன் காலேஜுக்குள்ளே தப்பாகவோ, தாறுமாறாகவோ நடந்தாலே எங்களாலே கண்டிக்க முடியலே. காலேஜுக்கு வெளியே அவன் எப்போ எந்தப் பெண்ணை துரத்திக் கொண்டிருக்கான்னு நாங்க வாட்ச் பண்றதோ கண்டிக்கிறதோ நடக்காத காரியம். இப்போ எல்லாம் நாங்க மாணவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியற காலமில்லே சார். அவங்க தான் எங்களுக்குக் கற்பிக்கிறாங்க. நாங்க படிக்கிறோம்" என்று கையை விரித்து விட்டார் பிரின்ஸிபால். இன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன்வருகிறவர்களை விட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்குகிறவர்களும் ஒடுங்குகிறவர்களுமே அதிகம் தென்படுவது புரிந்தது. தான் இனிமேல் அவரிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றெண்ணி விளையாட்டு மைதானத்துக்கு வந்தான் பூமி. கல்லூரி விளையாட்டு மைதானம் கலகலப்பாக இருந்தது. வகுப்புகளில் இருந்ததை விட அதிக மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். வகுப்புகள் அவர்களைக் கவரவில்லை. மைதானமே கவர்ந்திருந்தது. அங்கிருந்த கல்லூரி அலுவலக ஊழியன் ஒருவனை அணுகி, "இங்கே பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தின் மகன் படிக்கிறதாய்ச் சொன்னார்களே? அந்தப் பையனை எங்கே பார்க்கலாம்?" என்று பூமி கேட்டான். அந்த ஊழியன் 'கல்லூரி லேபரேட்டரி' என்று பெரிதாக எழுதிய ஒரு கட்டிடத்தின் முகப்பில் இருந்த மகிழ மரத்தடியைச் சுட்டிக் காட்டி, "பொம்புளைப் புள்ளைங்களுக்கான டேஸ்காலர்ஸ் லஞ்ச் ரூம் வாசல்லே பாருங்க. அங்கே தான் யாரு கிட்டவாவது வம்படிச்சுக்கிட்டிருப்பாரு. 'குமரகுரு'ன்னு சொல்லி விசாரியுங்க. அதுதான் அந்தப் பையனோட பேரு" என்றான். உடனே பூமி லேபரேட்டரி முகப்புக்கு விரைந்தான். நயமாக வாய் வார்த்தையாகப் பேசி எடுத்துச் சொல்லி அதற்குக் கட்டுப்படா விட்டால் தான் உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது பூமியின் தீர்மானம். கல்லூரிக் காம்பவுண்டிற்குள் உலகத்தைப் பற்றியே நினைவு இல்லாமல் எதிர்காலச் சிந்தனைகளை அறவே தவிர்த்து விட்டு அரட்டையும் சிரிப்பும், கேலியும் கிண்டலும், கும்மாளமுமாக இந்நாட்டு இளைய தலைமுறை வளைய வளைய வந்து கொண்டிருந்தது. கவலை இல்லாத கோவில் காளைகள் போல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் 'எடுப்பார் கைப்பிள்ளை'யாகி யாராலும் தட்டிக் கேட்கப்படாமல் எவராலும் கண்டிக்கப்படாமல், அங்கே மாணவர்கள் மதமதத்துக் கொண்டிருந்தனர். ஏதோ ஒரு விநோதமான புது ரக மிருகக் காட்சிச் சாலைக்குள் நடந்து போவது போல உணர்ந்தான் பூமி. ஜீன்ஸும் பெல் பாட்டமும் சஃபாரியும் டி ஷர்ட்டும் விதவிதமான நவநாகரிக உடைகளுமாக அணிந்து இளமையின் பலவிதமான பிம்பங்கள் மனிதத் தன்மையின் அடையாளங்களே அற்ற மிருகத்தனமான உற்சாகத்தில் திளைத்திருந்தன. அவர்களுக்கு மனிதத் தன்மையைக் கற்பிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த முதல்வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் டெமான்ஸ்டிரேட்டர்களும் அந்தப் புதிய நாகரிக விலங்குகளிடம் அகப்படாமலிருக்கவும், கடிபடாமலிருக்கவும், நடுங்கிப் பயந்து அந்த வளாகத்திற்குள் ஏதோ சிரம ஜீவிகளாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. அந்த மாணவன் குமரகுருவைச் சுற்றி ஜீன்ஸும், பலவிதமான வக்கிரவாசகங்கள் அச்சிட்ட பனியன்களும் அணிந்த மாணவிகள் சிலர் நின்றிருந்தனர். வெடிச் சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்து கொண்டிருந்தன. ஒரே அரட்டைதான். பூமி அருகே தென்பட்டதும் அவனை யாரென்று அறியும் முன்னரே சைகையான கேலிகளை அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். பூமி தன் அனுமானத்தில் இவன் தான் குமரகுருவாயிருக்க வேண்டும் என்று எண்ணி அவனிடம், "நீங்க தானே மிஸ்டர் குமரகுரு? பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்செல்வத்தினுடைய சன்...?" "ஆமாம்! சுருக்கமா இங்கே 'குரு'ன்னு சொன்னாலே எல்லாருக்கும் புரியும். இந்தக் 'காம்பஸ்'லே நான் தான் அத்தினி பேருக்கும் குரு." பூமி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தபடியே, "ஒண்ணும் புரியலியே? நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள்? உண்மையில் படிக்கிறீர்களா? அல்லது கற்பிக்கிறீர்களா?" "அப்படிக் கேளு சொல்றேன்... படிக்கிறேன்னு தான் பேரு. ஆனா இங்கே சுத்திக்கிட்டிருக்கிற வாத்தியானுவ நிறைய எங்கக்கிட்டக் கத்துக்கிட்டுத்தான் பெறவு சும்மா கம்னு இருக்கப் பழகிக்கிட்டாங்க..." கழுத்து முட்ட நிரம்பிய தடித்தனத்தில் வார்த்தைகள் வெளிவந்தன. பூமிக்குக் குமட்டியது. இப்படிப் பூமி கூறியதைக் கேட்டு அவன் இடி இடியென்று சிரித்தான். சிரிப்பு ஓய்ந்ததும் தன் அருகே நின்றிருந்த ஜீன்ஸ் மாணவிகளைச் சுட்டிக் காட்டியபடி, "நான் இவளுக மாதிரிப் பொம்பளைக் கிட்டத்தான் தனியாப் பேசற வழக்கம். நீங்க... என்னடான்னா..." பூமிக்கு உணர்ச்சி நரம்புகள் புடைத்தன. அடக்கமாக இருக்க முயன்றான். கல்லூரி காம்பவுண்டிற்குள் கலகம் விளைவிக்கலாமா கூடாதா என்ற தயக்கம் வேறு தடுத்தது. தந்திரமாக நடந்து குமரகுருவை அடக்க விரும்பினான். "அப்போ உங்களிடத்தில் தனியாப் பேசணும்னாப் பொம்பளைங்க கூப்பிட்டாத்தான் வருவீங்களாக்கும்..." "ஷ்யூர்! நிச்சயம் வருவேன்." "அப்படியானால் முறைப்படி அழைப்பு வரும்! வாருங்கள், சந்திக்கலாம்" என்று பூமி கூறிவிட்டுப் புறப்பட்டான். "அது சரி! நீ யாரு என்னன்னு சொல்லாமலே போறியேப்பா?" என்று மீண்டும் உற்சாகமான ஏகவசனத்திலேயே பூமியை மடக்கினான் குமரகுரு. "இப்போது வேண்டாம்! அப்புறம் நீயே தெரிந்து கொள்ளலாம் வாத்தியாரே" என்று அதே ஏக வசனத்தில் அவனுக்குப் பதில் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் பூமி. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
வெண்முரசு : நீலம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2014 பக்கங்கள்: 288 எடை: 325 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-8264-885-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நேரடியாக வாங்க : +91-94440-86888
|