(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 21
சமூகத்தில் அந்தஸ்தினால் எவ்வளவு உயரத்திலுள்ள எந்த வசதி படைத்த அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடிமட்டத்திலுள்ள வசதியேயற்ற ஒவ்வொரு யோக்கியனுக்கும் வேண்டும். எல்லாமே ஏற்பாடு செய்திருந்தபடி நடந்தன. நாகேஸ்வரராவ் பூங்காவில் அந்தப் பெண் காமாட்சியை, ரௌடியும் கல்லூரி மாணவனுமான குமரகுரு சந்தித்த பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. குமரகுரு தாங்கிக் கொள்ள முடியாத உற்சாகத்தோடு இருந்தான். ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த காமாட்சியே வெறுப்பு மாறித் தன்னை வலிய அழைத்திருந்த பெருமையில் திளைத்து அவளிடம் காதல் கனிமொழிகளைப் பறிமாறத் தொடங்கியிருந்தான் குமரகுரு. நன்றாகவே உளறத் தொடங்கியிருந்தான்.
கயமை நிறைந்த விடலையும், காமுகனும், வசதியுள்ள குடும்பத்துப் பொறுக்கியுமான குமரகுருவோ தன் குலாவல் பேச்சின் மூலம் அவளிடம் எல்லை மீறி விரசத்துக்குப் போய்க் கொண்டிருந்தான். "கண்ணே! எந்த ஹோட்டலில் ரூம் புக் பண்ணலாம்? மெட்ராஸா? பெங்களூரா? என் உள்ளம் இப்பவே இன்பக் கனவுகளிலே திளைக்கிறது" என்று கூறிக் கொண்டே அவளைத் தோளிலும் இடுப்பிலும் தொட முயன்றான் அந்த விடலை. அவன் இஞ்சி தின்ற குரங்கு போல பரபரப்பாயிருந்தான். அவ்வளவில் அவள் நெளிந்து வளைந்து விலகி அவன் தன்னைத் தீண்டவிடாமல் பாதுகாத்துக் கொண்டாள். முள் மேல் அமர்ந்திருப்பது போல் சிரமமாயிருந்தது அவளுக்கு. பார்க்கில் கூட்டம் குறைந்து கொஞ்சம் அமைதி சூழட்டும் என்று பொறுத்திருந்தனர் மறைவில் இருந்த பூமி குழுவினர். தாங்கள் குமரகுருவுக்குப் பாடம் கற்பிப்பதற்கு முன்னர் காமாட்சியை எப்படியாவது அவனிடம் இருந்து விலகி விடைபெற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டமாயிருந்தது. அதை எப்படிச் செயற்படுத்துவது என்று தயங்கி யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஓர் ஆட்டோவை அனுப்பி வீரப்பெருமாள் முதலி தெருவில் வசிக்கும் தங்களுக்குத் தெரிந்த குடும்பத்துப் பெண் ஒருத்தியை வரவழைத்தார்கள். அவளிடம் சாதுரியமாக எல்லாம் சொல்லிக் காமாட்சி உட்கார்ந்திருந்த இடத்துக்கு அனுப்பினார்கள். அந்தப் பெண் நேரே போய் அந்தப் பூங்காவில் காமாட்சியும், குமரகுருவும் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கமாக நின்று, "வெளியிலே உங்கம்மா ஆட்டோவில் வந்து காத்திருக்காங்க... ஒரு நிமிஷம் இப்பிடி வந்திட்டுப் போ" என்று காமாட்சியை நோக்கிச் சத்தம் போட்டுச் சொன்னாள்:- "நீங்க இருங்க... நான் என்னன்னு கேட்டிட்டு வந்துடறேன்" என்று குமரகுருவிடம் சொல்லிவிட்டு காமாட்சி அந்தப் பெண்ணை நோக்கி வந்தாள். அவள் அருகே வந்ததும், "பூமி அனுப்பிச்சாரு! நேரமாச்சு நீ அவங்கிட்டச் சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய் மெஸ்ஸிலே இருக்கணுமாம். உன் கூடவே அவனும் கிளம்பிடாமே, 'நீங்க கொஞ்சம் இருந்து வாங்க. வெளியே எங்கம்மா காத்திருக்காங்காங்களாம். அவங்க நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க வேணாம்'னு அவனிடம் சொல்லி விட்டு வா, மத்தது தானே நடக்கும்" என்றாள் பூமியால் அனுப்பப்பட்ட பெண். குறிப்பறிந்து காமாட்சி அப்படியே செய்தாள். குருட்டு மோகத்திலிருந்த அந்தப் பையனும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே இல்லை. அவளை முதலில் போக அனுமதித்துவிட்டுத் தான் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவன் மனத்தில் ஒரே குஷி. அதுதான் சமயமென்று, தெரிந்த ஆளான அந்தப் பார்க் வாட்ச்மேனிடம் கூறி உள்ளே பூங்காப் பகுதிகளில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைக்கச் செய்தான் பூமி. பார்க்கில் இருள் சூழ்ந்தது. வானில் மேகமூட்டம் வேறு. அவனும் குழுவினரும் இருளில் பாய்ந்தார்கள். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாத அளவு இருட்டு இருந்தது வசதியாக போயிற்று. ரௌடி குமரகுரு வசமாகச் சிக்கிக் கொண்டான். "ஏண்டா பொம்பளைப் பொறுக்கி! தெருவிலே போற பொம்பிளைங்களைச் சுத்திக்கிட்டு மிரட்டறதை இனி மேலாவது விடுவியா இல்லியா? உதை போதுமா? இன்னும் வேணுமா?" "ஐயோ என்னை விட்டுடுங்க... கொன்னுப்புடாதீங்க..." என்ற குமரகுரு பரிதாபகரமாக அலறுவது இருளிலிருந்து கேட்டது. "நீ இப்பிடி எத்தனை அநாதைப் பொண்ணுங்களை அலற அலறத் தொல்லைப் படுத்தியிருப்பே. இப்ப அதுக்கு வட்டியும் முதலுமாச் சேர்த்து அநுபவிடா அயோக்கிய நாயே." அங்கே மறுபடி பார்க்கில் வெளிச்சம் வந்த போது மூர்ச்சையுற்றுக் கிடந்த குமரகுருவின் உடல் மேல் வால் போஸ்டர் போலப் பெரிய தாளில், 'அபலைப் பெண்களின் பின்னால் சுற்றித் திரியும் திமிர் பிடித்த காமுகர்களுக்கு இதுதான் நேரிடும்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது. வாட்ச்மேன் ஓடிப்போய்ப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தான். கீழே கிடந்த உடலில் மார்புப் பகுதியை மறைத்துக் கிடந்த போஸ்டர் பரபரப்பை உண்டு பண்ணவே அந்த நேரத்திலும் ஒரு கூட்டம் கூடி விட்டது. பல்லக்குமானியம் குடியிருப்புப் பகுதிக்குத் தகவல் எட்டி அங்கிருந்து வேறு நிறைய ஆட்கள் வேடிக்கை பார்க்க வந்தார்கள். "யாரோ பொம்பிளையை இட்டுக்கினு வந்து பேசிக்கிட்டிருந்தாரு. ஒரு அஞ்சு நிமிஷம் ஃப்யூஸ் போய் லைட்டு அணைஞ்சு போயிருந்துச்சு. அப்ப யாரோ அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டாங்க" என்று வாட்ச்மேன் பட்டுக் கொள்ளாமல் போலீஸாரிடம் சொன்னான். அன்று அங்கே பொது இடத்தில் அடிபட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் மகன் என்று தெரிவதற்கு சிறிது நேரம் ஆயிற்று. உடனே பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டார்கள். அவர் ஊரில் இல்லை என்றாலும் வீட்டிலிருந்து கார் அனுப்பப்பட்டது. அதற்குள் குமரகுருவின் உடல் மேல் பரப்பப்பட்டிருந்த சுவரொட்டியுடன் சில பத்திரிகை நிருபர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். பொது இடத்தில் அடிபட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினரின் மகன் என்று தெரிந்த பின்பும் கூடியிருந்த பொதுமக்களின் கோபமும் ஆத்திரமும் மாறவில்லை. பார்க் வாட்ச்மேன் கூறியதிலிருந்தும் அங்கே மூர்ச்சையாகிக் கிடந்தவன் மேல் விரிக்கப்பட்டிருந்த போஸ்டரிலிருந்தும் நடந்ததைப் புரிந்து கொண்டிருந்த பொதுமக்கள் தங்களுக்குள் ஆத்திரமாகவும் கோபமாகவும் பேசிக் கொண்டார்கள். "பெண்களைத் துரத்துகிற காமவெறியன் ஒவ்வொருவனுக்கும் இப்படி உறைக்கிற விதத்தில் ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும். அப்பொழுதுதான் விடலைகளுக்குப் புத்தி வரும்" என்றார் ஒருவர். "நக்ஸலைட்டுகள் தான் இப்படி எல்லாம் தாக்கி விட்டுப் பக்கத்தில் எழுதியும் போடுவார்கள்." "இதை அவர்கள் செய்திருந்தால் இதற்காக அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும்." "சமூகத்தின் அந்தஸ்தில் எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வசதியுள்ள அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடிமட்டத்தில் உள்ள வசதியற்ற ஒவ்வொரு யோக்கியனுக்கும் வேண்டும்." "இன்றைய நிலையில் சட்டமும், நீதிமன்றங்களும், வக்கீல்களும், நீதிபதிகளும் தவறு செய்கிறவர்களை உடனே தண்டிக்கவோ, கண்டிக்கவோ விடாமல் தடுக்கும் அல்லது தள்ளிப் போட உதவும் சாதனங்களாகவே பயன்படுகிற நிலைமைதான் நீடிக்கிறது." என்றெல்லாம் கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டார்கள். யாரும் அடிபட்டு விழுந்தவனுக்காக இரக்கப்படவில்லை. பொது உணர்ச்சி அப்போது அவனுக்கு எதிராகவே இருந்தது. பூமியும் நண்பர்களும் நாடகம் போல இதை நடத்தியிருந்தார்கள். தாங்கள் யாரும் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. காரியம் முடிந்ததும் மெஸ்ஸில் காத்திருந்த சித்ராவிடமும் தேவகியிடமும் அந்தப் பெண் காமாட்சியைப் பத்திரமாக ஒப்படைத்திருந்தான் பூமி. சித்ரா மட்டும் சிறிது சந்தேகத்துடன் பூமியை ஒரு கேள்வி கேட்டாள். "இவளோடு பேச இங்கே பார்க்குக்குத் தேடி வந்ததனால் தான் அப்படி எல்லாம் நடந்ததென்று வன்மம் வைத்துக் கொண்டு அந்தப் பையன் மறுபடி இவளைத் தேடிப் பழி வாங்கக் கிளம்பினால் என்ன செய்வது?" "கனவில் கூட இனிமேல் இந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டான். ஒரு வேளை கொழுப்பு எடுத்துப் போய் மறுபடியும் வாலாட்டினால் மறுபடி பாடம் கற்பிப்போம்" என்று பூமி சிரித்துக் கொண்டே பதில் கூறினான். சித்ராவும் தேவகியும் அவனுக்கு நன்றி தெரிவிக்க முற்பட்டார்கள். அவன் குறிக்கிட்டுத் தடுத்தான். "நெருங்கிப் பழகறவங்க ஒருத்தருக்கொருத்தர் நன்றியே சொல்லக்கூடாது. நல்ல காரியத்தை யாராவது செய்தால் அவங்களை அளவு கடந்து பாராட்டறதும் கூடச் செயற்கையான எல்லை வரை போயிடுது. நல்லது செய்யறதே அபூர்வம்னு நினைக்கிற அளவுக்கு அது அதிகமாகப் பாராட்டப் படுகிறது இங்கே. நல்லதுதான் செய்யணும் - செய்ய முடியும் - செய்யப்பட வேணும்னு - இயல்பான நினைப்பே வர்றது இல்லை." பூமி சொல்லியதில் இருந்த நியாயம் சித்ராவுக்குப் புரியச் சிறிது நேரம் பிடித்தது. புரிந்தவுடனே இதைச் சொல்லியதின் மூலம் அவன் எவ்வளவிற்கு உயர்ந்தவன் என்பதும் சேர்ந்தே புரிந்தது. சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
எஸ். ராமகிருஷ்ணன் நேர்காணல்கள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : நேர்காணல் ISBN: 978-93-88474-70-2 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப் பகிர்ந்துகொள்கிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|