![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
காகம் (Crow) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
10 தபால்காரர் குளிர்ந்த நீர் மோரைக் குடித்து விட்டுக் கொடுத்து விட்டுப் போன கடிதம் சுப்பையாவைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. அநேகமாக மாசம் ஒரு முறையேனும் நாற்பது மைல்களுக்கப்பாலுள்ள தமக்கையின் இருப்பிடத்துக்கு அவர் போய் வருவார். கடிதம் எழுதி கொள்ளச் செய்திகள் கிடையாது. ஏன், நேரில் பேசக் கூடத்தான் செய்திகள் இருந்ததாகத் தெரியவில்லை. மாலை பஸ்ஸில் சென்றால், அதிகாலை பஸ்ஸில் கிளம்பித் திரும்பி விடுவது அவருடைய வழக்கம். “எல்லோரும் சுகந்தானே!” என்று கேட்பார். அநேகமாக அத்தான் வேலாயுதம் அவர் கண்களில் தட்டுப்பட மாட்டார். செங்கமலம் தான் உணவு படைப்பாள். அவருக்கோ இரவுச் சாப்பாடு கிடையாது. திண்ணையிலே துண்டை உதறிப் போட்டுக் கொண்டு படுத்திருக்கையில் வேலாயுதம் ஏதேனும் பேசுவார். “வேணி எப்படி இருக்குது?” என்று கேட்பார். “பெண்கள் படித்து விட்டால் தான் நல்லது. நீ ஒரு நல்ல வேலை செய்திருக்கிறாய். வேணியைப் படிக்க வைத்தாய். ஒரு நல்ல வேலைக்கும் அனுப்பியிருக்கிறாய்” என்று சென்ற முறையில் கூடத் தெரிவித்தார். நானா செய்தேன்? நீங்கள் அல்லவா செய்தீர்கள் என்று சுப்பையா நினைத்துக் கொண்டார். அந்த அத்தானுக்கு உடல் நலமில்லை என்று பிடியாள் பிடித்து அக்கா கடிதம் எழுதியிருக்கையில் அவர் வாளாயிருப்பாரா? வாடிக்கையாளர்களைப் பட்டினி போடாமல் ஏதோ வழியைச் செய்து விட்டு அன்றே பஸ் ஏறினார் சுப்பையா. கூடத்திலிருந்த பழைய நாளைய மரக்கட்டிலில் வேலாயுதம் படுத்திருந்தார். அக்கா மரகதம் அதற்குள் குச்சியாகப் போயிருந்தாள். செங்கமலம் ஆரஞ்சுப்பழம் உரித்துக் கொண்டு இருந்தாள். அவர் யாருடனும் பேசாமல் முற்றத்துத் தொட்டியின் பக்கம் சென்று காலைக் கழுவிக் கொண்டு வந்தார். “எத்தனை நாளாய் உடம்பு சரியில்லை!” “ரெண்டு நாள் தான் தம்பி, கந்தசாமி வந்து வார்த்தான், ஊசி போடுகிறான். மயக்கம், இளைப்பு...” என்றாள் அக்கா. “பூபதி எங்கே?” “ஆபீசு வேலையாக வெளியூர் போயிருக்கிறான். அத்தான் உடம்புக்கு ஒன்றுமில்லைன்னு சொன்னாலும் எனக்கு கவலையாக இருக்கு தம்பி, ஒண்ணுமே ஓடலே...” “இவள் சொல்வதைக் கேட்டுச் சிரி. சுப்பையா, நல்லாச் சிரி!” என்றார் வேலாயுதம் அடக்கி வைத்த ஆத்திரம் குமுறி வர. “சிரிக்க என்ன இருக்கிறது இதில்? ஊர் உலகமெல்லாம் நடக்கும் வழக்கம் தான் இது. பொறூப்புன்னு வர, அதுங்களுக்கும் ஒரு தொழுவம் வேணும்தான். அவன் தான் விளையாட்டுப் புத்தியாக இருந்தால் நாமும் சும்மா இருப்பதா?” சுப்பையா உடனே பேசவில்லை. மரகதத்துக்கு அதுவே மனத்தாங்கலாக இருந்தது. “தம்பி ஏன் பேசவில்லை? மகளுக்கு வேறூ மாப்பிள்ளை பார்க்க எண்ணமா?” “அப்படி எனக்கு எப்படி இஷ்டம் இருக்கும் அக்கா? என்னை விட நீங்களே அவளுக்குச் சொந்தமானவர்கள். நான் நடுவில் வந்தேன். நடுவில் போகிறேன். பூபதிக்கு அவளைக் கட்டிக் கொள்ள விருப்பம் தானா என்பதை மட்டும் கேட்டுக் கொண்டால் போதும். இந்தக் காலத்தில் அவர்களைக் கேட்காமல் கல்யாண விஷயம் மட்டும் நிச்சயம் செய்வது சரியல்ல...” என்றார். தம் மகளுக்கு விருப்பமுண்டா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தை இதற்கு மேல் நாசுக்காக அவரால் வெளியிட முடியவில்லை. “அதைப் பற்றிச் சந்தேகமே வேண்டாம். வேணி ஸ்கூல் படித்து முடித்த உடனேயே நீயாகக் கேட்பாயென்று இருந்தேன். நம் இஷ்டம் மீறி அவனுக்கு மட்டும் எங்கிருந்து விருப்பம் வரும்? ஜாக்கெட் துணி, நாடா எல்லாம் கூட லட்சுமியிடம் வேணிக்காக வாங்கிக் கொடுத்தானாம். இந்தக் கல்யாணத்தை முன்னமே முடிச்சிருந்தால் கூட அப்பவே சீர்பட்டிருக்கும். அவன் சாதக ரீதியாகக் கூட, பெண்சாதி வந்த பிறகுதான் பொருந்தியிருப்பான்னு இருக்குதாம்” என்று மரகதம் முடித்தாள். வேணியிடம் சம்மதம் கேட்கும் பிரச்னையே எழவில்லை. இதுவரை பேசாமலிருந்த வேலாயுதம் இப்போது நிமிர்ந்தார். “சுப்பையா அது என்னமோ உண்மைதான். இவனைக் கட்டுகிற பெண், இவனைத் தலைகுனிய வைக்க வேணும். அவன் கண்முன்னே அவள் மதிப்பு உயர்ந்து அவன் தலை தாழ வேணும். அப்போது ரோசம் வரும். இங்கேயே அதுவும் வேலைக்குப் போகவேணும். பிறர் கையை எதிர்பாராமல் வரும் காசைப் பொறுப்பாய் வைத்துச் செலவு செய்ய ரோசம் வரும் அப்போதுதான். பெண் பிள்ளைகளை எல்லாம் படிக்க வைக்க வேணும். அதுதான் அவர்களுக்கு அழியாத சொத்து. இந்தச் செங்கமலத்தை ஒருவர் கையை எதிர்நோக்க வைத்து விட்டேன் பார்த்து விட்டாயா? விதி மங்கலத்தை அழித்தது. நான் அப்போது புத்தியில்லாமலிருந்து விட்டேன். என் வருத்தம் சொல்ல முடியாது. நகை நட்டு ஒரு பொண்ணுக்குச் சொத்து என்று நினைத்தேன். அது வினை. பெண்கள் அதில்தான் ஏமாந்து போகிறார்கள்...” “போதுமே, நீங்கள் ஏன் நிறுத்தாமல் பேசுறீங்க? உடம்புக்கு ஆகாது” என்று மரகதம் குறுக்கிட்டாள். வேலாயுதம் நகைத்தார். “உன் மகனைப் பற்றி உன் தம்பிக்கு நானொன்றும் புதிதாகச் சொல்லவில்லை. நகையைப் பற்றிய பேச்சு எடுத்ததும் ரோசம் வருகிறது! தம்பி, இவள் நகையைக் கேட்கக் கூடாதென்று பயிர் தீய்வதைப் பார்த்துக் கொண்டு நான் கேணி வெட்டுவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். இவள் எல்லாவற்றையும் இந்த அருமை மகன் விற்கவும் அடமானம் வைக்கவும் கொடுத்திருக்கிறாள்.” மரகதம் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக நொந்து கொண்டாள். சவாரியை வண்டியில் ஏற்றூ முன் எந்த முட்டாளேனும் என் குதிரை ஊனம் என்று சொல்வானா? ஆனால் வேலாயுதம் நிற்கவில்லை. அவர் என்னென்னமோ கூறிக் கொண்டு போனார். செங்கமலத்தைப் படிக்க வைக்காமல், ஊன்றி நிற்க வழியில்லாமல் செய்து விட்ட குற்றத்துக்காகத் தன்னையே கொத்திக் கொண்டார். வேணி அந்த வீட்டுக்கு மருமகளாகாமல், வேறொரு பெண் வர நேர்ந்தால், செங்கமலம் தன் உடைமைகளை இழந்து அநாதையாக நிற்க நேருமோ என்ற தம் அச்சத்தை அவர் வெளியிட்ட போது, சுப்பையா உருகிப் போனார். செங்கமலத்தை மைத்துனனுக்கே அந்த அத்தான் கட்ட நினைத்ததும், ‘அழகு’ என்ற கவர்ச்சி அவர் கருத்தில் முட்டி முரண்டி நின்றதும், அதை நாசூக்காக மறுக்கவே அந்த வீட்டை விட்டுச் சென்றதும், பிறகு... பிறகு... எல்லாம் வேதனையைக் கிளற நினைவில் வந்து விட்டன. வேணிக்கு இந்தச் சொந்தமான வீட்டை விட, அன்பான புதிய வீட்டை அவர் எங்கிருந்து தேடுவார்? எப்படித் தேடுவார்? பையனின் குற்றங்களை முன்பே நினைவூட்டும் இந்தப் பெரிய மனிதரின் பெருந்தன்மைக்கு நிகராக அவரை மதிக்க நிச்சயமாக எவருமே கிடைக்கப் போவதில்லை. வேணி மறுப்புத் தெரிவித்து விடக் கூடாது. பால் மனசு படைத்த குழந்தை அவள். பூபதியின் மீது தான் அவள் அன்பு பற்றி வளர வேண்டும். சுப்பையாவும் உறுதி செய்து கொண்டார். |