![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
அகல் விளக்கு (www.agalvilakku.com) - தற்போதைய வெளியீடு :
அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் |
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981) |
சென்னை நெட்வொர்க் (www.chennainetwork.com) - தற்போதைய வெளியீடு :
ஒட்டகம் (Camel) |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : சோலைக் கிளி - 9 |
8 வழுக்கை மண்டையில் சித்திரை வெயில் கருணையின்றித் தாக்கியது. வேலாயுதத்திற்கு இப்போதெல்லாம் முன் போல அலைய முடியவில்லை. வயசு சென்ற பங்குனிக்கே அறுபத்தாறு போய்விட்டதே? “மண்டையில் வேர்வை ஊற்றுகிறது. அப்பாடா... இந்தாங்கப்பா!” என்று பரிவுடன் செங்கமலம் முற்றத்துக் கொடியிலிருந்த துவாலையை எடுத்துக் கொண்டு வந்தாள். அப்போதுதான் தபால்காரர் அலட்சியமாக ஒரு காகிதத்தை அந்த வாயிற்படியில் விட்டெறிந்து விட்டுச் சென்றார். வேலாயுதம் அந்தக் கடிதாசியைக் குனிந்து எடுத்துப் பார்த்தார். ஆங்கிலப் பழக்கம் மிக அதிகமாக இல்லாது போனாலும் ஓர் எழுத்திலிருந்தே விஷயத்தைக் கிரகித்துக் கொள்ளும் அனுபவசாலி அவர். முத்திரையைக் கண்டே பரபரப்புடன் கடிதத்தை உடைத்துப் பிரித்தார். தமிழ் தான் உள்ளடக்கம். எங்கோ சென்னைப்பட்டினத்துப் பாங்கிலிருந்து, அவருடைய மைந்தன் பூபதியின் பேருக்குக் கடிதம் வந்திருந்தது. அவன் முந்நூறு ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்த தங்க நகை, வட்டி கட்டாமல் முழுகுவதாகச் செய்தி உணர்த்தியது கடிதம். அவர் திடுக்கிட்டார். ஒற்றைப் பையனின் கையில் நகையைத் தூக்கிக் கொடுக்கும் அளவுக்கு மரகதம் குருடாகி விட்டாளா? குடும்பத்தில் பழைய நாட்களில் பூமி விளைந்து, பொன் கொழித்தது என்றால் மிகையில்லை. அவருடைய தாய்க்குப் பொன்னாலும் பட்டாலும் அழகு செய்து சீராட்டி மகிழப் பெண் மக்களில்லை. சவரன்களாகவே பெட்டியில் நிரப்பி வைத்திருந்தாள். அந்தச் சேமிப்புத் தங்கம், கண்டானும் முண்டானுமாக நகைகளாக மரகதத்தின் மேனியில் காட்சியளித்ததை அவர் கண்டிருக்கிறார். பிறகு அது அவருடைய சொந்தப் பெண் மக்களையும் அழகூட்ட உருமாறியதுண்டு. சுப்பையாவுக்குச் சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உண்டு. அவன் அதில் ஒரு நாளும் பாடுபட்டதில்லை. வீட்டுக்குத் தெரியாமல் அவன் எங்கோ போய் மணமுடித்துக் கொண்டு மணவாழ்வின் வரலாற்றையே முடித்துக் கொண்ட பிறகு வீட்டிலேயே ஒட்டவில்லையே? அதன் விளைவைக் கூட வேணிக்காக, பொன்னாக்கியே மரகதம் வைத்திருந்தாள் என்பதையும் அவர் அறிவார். எந்த நகையில் மைந்தன் கை வைத்திருக்கிறான் என்று புரியவில்லையே? துவாலையைத் தந்தையிடம் நீட்டிய வண்ணம் அவருடைய முகமாறுதல்களைக் கவனித்துக் கொண்டிருந்த செங்கமலம் , “வருகிற மாசத்துக்குள் ஒரு விசிறியைப் போட்டு விட வேண்டும் கூடத்துக்கு. என்னென்னவோ செலவாகிறது” என்றாள். ஆனால், அவர் அதையெல்லாம் செவிகளில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. “எங்கே உங்கம்மா? கூப்பிடு அவளை!” என்றார். தாய்க்குத் தலைமகளாய் வீட்டோடு இருந்து எல்லாச் சுகதுக்கங்களிலும் பங்கு பெற்றாலும் அவளை நேராக வைத்துக் கொண்டு மனைவியிடம் தாமாகக் கோபித்துக் கொள்ளும் நிலையை அவர் எட்டியதில்லை. விஷயம் தம்பியைப் பற்றியதென்று புரிந்து கொள்ள முடியாதா அவளால்? “வாத்தியாரம்மா வீட்டில் மங்கைக்கு நோவெடுத்ததென்று போனார்கள். என்ன காகிதம் அது...?” “இந்த வீட்டுத் தலைவலியைத் தீர்க்க வழியில்லை” என்று உள்ளூறப் பொங்கி எரிந்து விழுந்து கொண்டிருந்தார் அவர். “போய் மருதப்பனைக் கூப்பிட்டு அழைத்து வரச் சொல்!” என்றார். கொட்டிலில் மாட்டுத் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த மருதப்பனை அழைத்து அனுப்பினாள் செங்கமலம். பிறகு கவலையுடன் அவரைப் பார்த்துக் கொண்டே முற்றத்து நெல்லைத் துழாவலானாள். வெய்யிலும் மழையும் பட்டு உரமேறிக் கறுத்த நெற்றியில் அவருக்கு நரம்புகள் புடைத்திருந்தன. நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த அவர் உழைத்து பெரிய குடும்பத்தைச் சமாளித்து, செலவு செய்யத் தெரிந்த ஒரு செல்லப் பிள்ளைக்கு ஈடுகொடுத்து, அதிகமாக ஒரு கிணறு வெட்ட அவரால் முடியவில்லை. மண்ணைக் கொடுக்கவும், மாட்டைப் பிரியவும் அவருக்கு எப்படி மனசு வராதோ அப்படிப் பொன்னைக் கொடுக்கவும் பெண்களுக்கு மனம் வராது என்று திடமாக அவர் நம்பியிருந்தார். படிப்புப் படிப்பு என்று நகர வாழ்வில் பணத்தை வாரிவிட்டான். கடைசியில் ஒரு பட்டமும் ஒட்டவில்லை. எங்கோ ஆபீசில் சம்பாதிக்கிறானாம். பெயர்தான் மீதி. ஐம்பது நூறும் அம்மாவிடம் கேட்டு இன்னமும் வாங்கிப் போவதில் குறைவில்லை. கிணறு வெட்ட வேண்டும், நகையைக் கொடு என்று ஒரு சொல் கேட்க அவர் துணிந்ததில்லையே! வேலாயுதத்துக்கு நினைக்கையிலேயே பகீரென்று பற்றி எரிந்தது. “கைகால் கழுவிக் கொண்டு வாங்கப்பா, இலை போடுகிறேன்” என்றாள் செங்கமலம். “சோறு கீறு எனக்கு இப்போது செல்லாது. மோர்த் தண்ணீர் இருந்தால் கொண்டா...” யாரோ ஒரு பெண்ணுக்குப் பேறு பார்க்கச் சென்றிருந்த மரகதம் ஓடோடி வந்தாள் அப்போது. “என்னங்க? உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” அவர் அவளை ஊடுருவிப் பார்ப்பது போல் பார்த்தார். செவிகளில் பெரிய ஓலை, வடம் போன்ற தாலிக்கயிற்றைத் தவிர, ஒரு குன்றிமணி தங்கம் மேனியில் இல்லை. மரகதம் ரவிக்கை போடாத பழைய நாளைக்காரி. கிராமத்து மூலையில் இருக்கும் அபூர்வ அதிசயங்களில் ஒன்று. கையில் காப்பு, கொலுசு ஒன்றும் கிடையாது. ஒரு பச்சைச் சேலை, எள்ளும் அரிசியுமாகிவிட்ட கூந்தலில் நெய்ப்பசையே இல்லை. அதை அள்ளிச் செருகியிருந்தாள். ஒட்டி உலர்ந்த உடல், அந்தப் பயல் இவளை அம்மா என்று சொல்ல வெட்கப்படுவான். பணப்பசை, வேணியின் மீதுள்ள ஆசை, இரண்டுக்காகவும் அவன் அம்மாவின் உறவும், வேலை என்ற பேருக்கு பொறுப்பும் வைத்துக் கொண்டிருக்கிறான். இவளுக்கு மண்ணை வாழ வைக்கப் பாடுபடும் புருஷனை விட, அந்தப் பயலிடம் இத்தனை பாசமா? “அட, என்னமோ மாதிரி பார்க்கிறீங்க? தலைப்பிள்ளைக்காரி, இசை கேடாக இருக்கும் போலிருந்தது, அவசரமாகக் கூப்பிட்டு விட்டீங்களே?” “ஆமாம். உன் பெட்டியிலிருக்கும் நகை நட்டெல்லாம் கொண்டு வா. நீதான் ஒண்ணும் போடுவதில்லையே?” மரகதத்தின் பார்வை அவர் கைக் காகிதத்தின் மீது சென்றது. “என்ன காகிதம் அது?” “பேச்சை மாற்றாதே. பெண் மக்களுக்குப் பொன்னை வாங்கிப் போட்டு சந்தோஷப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பொன்னைக் கேட்பது இழிவு என்றிருந்தேன். எத்தனை கஷ்டம் வந்தாலும் பெண்சாதி நகையைக் கேட்பது பிச்சை வாங்குவதை விடக் கேவலம் என்று இருந்தேன். அப்படி வீட்டுப் பெண்களின் மலர்ச்சியைக் கொண்டு போய்க் கிணற்றில் போட்டால் ஊற்றுச் சுரக்காதோ என்று அஞ்சினேன். இப்போது என் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறேன். ஏன் செக்குலக்கை போல் நிற்கிறாய்? போய்ப் பெட்டியை எடுத்து வா” என்று கத்தினார் அவர். அந்தக் கடைசிச் சொல்லில் அனல் பறந்தது. புடைக்கும் நரம்பையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதையும் கண்ட மரகதம் பயம் கொண்டாள். “ஏன் இப்படி ஆத்திரப்படுறீங்க? முற்றத்து நிழல் அவருக்கு ஏறிப் போச்சு. செங்கமலம், ஐயனுக்கு சோறு வைத்த பிறகு அந்தக் காகிதத்தைக் கொடுக்கக் கூடாதா? காகிதம் ஏது, தம்பி ஏதானும் எழுதியிருக்கிறானா?” “உன்னை அதெல்லாம் கேட்கவில்லை. நகைப் பெட்டியைக் கொண்டு வா?” என்றார் அவர் வீடே அதிர. இடி விழப் போவது போன்ற கிலி அவள் முகத்தில் பரவியது. அடுத்த கணமே உள்ளே சென்றாள். பட்டுத் துணிக்குள் சுற்றி வைத்திருந்த நகைப் பெட்டியை எடுக்கையில் அவளுடைய கைகள் நடுங்கின. அவர் முன் கொண்டு வந்து வைத்தாள். “எங்கே நழுவுகிறாய்? எல்லாவற்றையும் திறந்து எடு!” பட்டுத் துணிக்குள் பெரிய பெட்டி. அதற்குள் ஒரு சிறிய பெட்டி. அதற்குள் வேணியின் குழந்தைக் காப்புக்களையும் சங்கிலி, திருகு பில்லையையும் தவிர பெரும்படியான பண்டங்களே இல்லையே? அவருடைய அம்மாளுடைய நான்கு வரிச் சங்கிலி எங்கே? கெட்டிக் கொலுசு எங்கே? செங்கமலத்துக்கு அவர் செய்து போட்ட மாலை எங்கே? மகனின் குருட்டுப் பாசத்துக்கு இழந்து விட்டாளா? மரகதம் தயங்கிக் கொண்டே, “ரங்கன் மக கல்யாணத்துக்கு அட்டியல் வந்து கேட்டான்... கல்யாணம் முடிஞ்சதும் தந்து விடுவான்...” என்றாள். அவருடைய தாயார் காலத்தில் இருந்தே இது நடைபெறும் வழக்கம். “அம்மா சங்கிலி?” மரகதம் கண்ணீரைக் கொண்டு வந்து விட்டாள். “நான் தப்புப் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. உங்களிடம் சொல்ல வேணுமின்னுதான் நினைப்பு. நிலைமை சரியில்லே. “...லட்சுமி கல்யாணம் முடிஞ்சு நீங்க அதைக் கூட்டிட்டுப் போனீங்க. பரீட்சைக்குப் பணம் கட்டணும்னு தம்பி அவசரப்பட்டான்... அப்ப...” “அதைத் தூக்கி பையனிடம் கொடுத்து, இந்தாடா பையா, வைத்துக் கொண்டு உருப்படாமல் போ என்றாய்! என் வயிறு எரிகிறது... ஒரு குன்றுமணி பொன் வாங்க முடியுமா? பரீட்சைக்குப் பணம் கட்டினானாம். பணம்! பற்றி எரிகிறது. நீ மட்டி என்று உன்னை அவன் ஏய்க்கலாம். நான் கொதிக்கிறேன். மிளகாய்ச் செடி வாடி நிற்கையிலே கேணி கேணி என்று நெஞ்சு சொன்னாலும், பெண்கள் நகையைக் கேட்பது பாவம் என்று இருந்தேன். அந்தப் பயல் உருப்படாமல் கெட்டுக் குட்டிச் சுவராக பொன்னில் கை வைத்து விட்டாய், இல்லை!” போட்ட இரைச்சலில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அயர்ந்து சாயப் போகையில் மரகதம் தலையைத் தாங்கிக் கொண்டாள். செங்கமலம் ஓடோடித் தலையணையை எடுத்து வந்தாள். முகத்தில் தண்ணீரைத் தெளித்து மோர் நீரை வாயில் ஊற்றி ஆசுவாசப்படுத்தினார்கள். “கேணி வெட்ட நகை உங்களுக்கில்லாமல அப்பா? இதற்கெல்லாம் போய் மனசை அலட்டிக் கொள்கிறீர்களே?” - விசிறியால் விசிறிக் கொண்டு செங்கமலம் தந்தைக்கு ஆறுதல் கூற முயன்றாள். மரகதம் டாக்டர் கந்தசாமியின் டிஸ்பென்ஸரியை நோக்கி ஓடினாள். அப்போதுதான் அவன் வீட்டுக்குச் செல்லக் காரில் ஏறும் தருணம். “என்னங்க அத்தை? மருதை இல்லையா? யாருக்கு என்ன? இப்படி ஓடி வந்தீங்க?...” அவள் அமைதியாக இருக்க முயன்றாலும் கண்களில் நீர் துளித்து விட்டது. “மாமாவுக்குத்தான் கந்தசாமி, ஏதோ மயக்கமாக வந்தாற் போலிருக்கிறார்...” “அடடா... மருதையை அனுப்பினால் ஓடி வர மாட்டேன்? இந்த வெயிலில் நடந்தா வந்தீர்கள்?” அவன் கார்க் கதவைத் திறந்து விட்டு அவளை ஏறச் சொன்னான். அவள் ஏறிக் கொண்டாள். கந்தசாமி, பூபதியை விட நான்கு வயது இளையவன். ஊரிலே அவர்களைப் போல் விவசாயக் குடும்பம் தான். பட்டணத்தில் போய்ப் படித்தான். டாக்டராக வந்து விட்டான். எவ்வளவு நல்ல குணம்! பெரியவர்களிடம் எத்தனை மரியாதை! பெரிய இடத்தில் பெண் கட்டியிருக்கிறான். கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். கிராமத்திலும் டவுனிலும் ஆஸ்பத்திரி வைத்திருக்கிறான்... பிள்ளையைப் பெற்றால் போதுமா? மரகதம் டாக்டரை அழைத்து வரப் போயிருப்பாளென்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவன், அவரை வெகுநேரம் குழாய் வைத்துப் பரிசோதனை செய்ததைச் செங்கமலம் கவலையுடன் நோக்கிக் கொண்டிருந்தாள். “உடம்புக்கு எப்படி இருக்கு தம்பி?” “ஒன்றுமில்லை அத்தை. அறுபது வயதுக்கு மேல், கோபப்படாமல், ஆத்திரப்படாமல், அலட்டிக் கொள்ளாமல், பேரப் பிள்ளைகளுக்குச் சமமாக விளையாட வேண்டும். வீண் கவலைப்படக் கூடாது...” என்று சிரித்தான் கந்தசாமி. ஊசி மருந்துக்கான சீட்டொன்று கைமாறியது. கந்தசாமி போன பிறகு, மரகதம் அவளுக்கே உரிய வகையில் யோசனை செய்யலானாள். சுப்பையாவுக்கு ஒரு கடிதம் போயிற்று. |