http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
செய்திகள்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வசதிகளை குறைக்கக் கூடாது:நீதிமன்றம்  -  சென்னை மாணவனை கடத்திய 2 பேர் கைது  -  மின்வெட்டைக் கண்டித்து 24ம் தேதி பாஜக ஆர்ப்பாட்டம்  -  தங்கம் தென்னரசு உதவியாளர் மதுரை வீட்டில் போலீசார் சோதனை  -  வேட்பாளர் தேர்வுக்குப்பிறகு தி.மு.க. தீவிர பிரசாரம்  -  விஷம் குடித்து தற்கொலை செய்வோம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள்  -  உடுமலை பள்ளியில் மீண்டும் தற்கொலை- ஆசிரியர் கைது  -  சாகும்வரை உண்ணாவிரதம்: சித்தா மாணவர்கள்  -  மின்வெட்டுக்கு எதிராக திருப்பூர் மாவட்டத்தில் 22ஆம் தேதி பந்த்  -  மின் உற்பத்திக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் தயார்  -  சட்டசபையில் ஆபாசப் பட விவகாரம்: 3 முன்னாள் அமைச்சர்கள் பதில் மனு  -  கோத்ரா கலவர வழக்கு: மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்  -  அசாம் தலைமைச்செயலகத்தில் தீ விபத்து  -  காஷ்மீரில் நிலச்சரிவு : 3 பேர் பலி  -  முன்கூட்டியே தேர்தல் நடத்த எதிர்கட்சிகளுடன் கிலானி ஆலோசனை  -  ஒசாமாவை பாதுகாப்பாக தங்கவைத்திருந்தார் முஷாரப்: ஐ.எஸ்.ஐ சீன சுரங்க விபத்து : 15 பேர் பலி  -  சுழற்சி முறையில் மாற்றமில்லை! கம்பீருக்கு ஓய்வு  -  5 பந்துகள் வீசிய விவகாரம்: தவறு இயல்பானதுதான்: ஐ.சி.சி.  -  2020 ஒலிம்பிக் போட்டி: ரோம் விலகல்  -  ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக பாண்டிங் நியமனம்  -  இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோ டேவ்ஸ் நியமனம்  -  எஸ்ஸார், லூப் சம்மன்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  -  ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்: அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு  -  ஆந்திர அரசின் 21 இணைய தளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டது  -  பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு  -  புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு  -  ஆப்பிளின் அடுத்த படைப்பு 4ஜி ஐ பாட்கள்  -  சேவை வரி:தமிழகம் முழுவதும் பிப்.23 சினிமா காட்சிகள் ரத்து!  -  விஜய்யின் துப்பாக்கி, தோட்டாவாக ஜெயராம்  -  தயாரிப்பாளர்கள் - பெப்சி இடையே 16ம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை  -  பிரபல நடிகர் ஆர்.என்.கே.பிரசாத் மரணம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்



1. நம்பி கை வை! நம்பிக்கை வை!

     "ஒரு சிறிய விதைக்குள் தான் மாபெரும் தேக்கு மரம் உறங்கிக் கொண்டு இருக்கிறது. ஒரு முட்டைக்குள் தான் பறவை வெளிவரக் காத்திருக்கிறது. ஒரு பாறைக்குள் தான் ஒரு அழகிய சிற்பம் ஒளிந்து கொண்டு இருக்கிறது. உங்கள் உயர்ந்த கனவுகளுக்குள் தான் உங்கள் இலட்சியம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது" என்கிறார் இங்கிலாந்து சிந்தனையாளர் ஜேம்ஸ் ஆலன்.

     ஆம்... உங்களுக்குள் தான் ஒரு சாதனையாளர் ஒளிந்து கொண்டு இருக்கிறார். சாதிக்க ஆசைப்பட்டு, தன் திறமையையும், உழைப்பையும் பெருக்கிக் கொள்பவர்களுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் சாதனையாளர் மெல்ல மெல்ல வெளிப்படுகிறார். ஒரு பாறை வெறும் பாறையாக, குத்துக்கல்லாக ஒரு இடத்தில் இருக்கும் போது அது யார் கண்ணிலும் படுவதில்லை. போவோர் வருவோரின் கவனத்தையும் ஈர்ப்பதில்லை. அதுவே சிற்பி ஒருவரால் திறம்பட செதுக்கப்பட்டு, சுற்றிலுமுள்ள தேவையற்ற கற்துகள்கள் உளி கொண்டு நீக்கப்பட்டு, சிலையாக வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்படும் போது, அது அனைவராலும் கவரப்பட்டு ஒரு தனி அந்தஸ்தைப் பெற்று விடுகிறது.

     நீங்கள் வெறும் பாறையாக - சாதாரண மனிதராகவே இருந்து விடுகிறீர்களா? அல்லது அழகிய சிற்பமாக சாதனையாளராக உருவாக விரும்புகிறீர்களா? யாருக்குத்தான் சாதனையாளராக வேண்டும் என்ற ஆசை இருக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? அப்போது இன்றிலிருந்தே ஆரம்பியுங்கள். அதாவது உங்கள் 'மனம்' என்னும் உளி கொண்டு உங்களிடமுள்ள கோபம், பேராசை, பொறாமை, சோம்பல் போன்ற தேவையற்ற கற்துகள்களை நீக்கிவிட்டு உங்களை நீங்களே செதுக்கினால் அழகிய சிற்பமாக, ஒரு சாதனையாளராக சாதிப்பீர்கள். இது உறுதி. ஆம்... உங்கள் சிலையை வடிவமைக்கும் சிற்பி நீங்கள் தான். சிலையும் நீயே! சிற்பியும் நீயே!

     உங்களைச் சாதனையாளராக்க, வெற்றி கண்ட மனிதராக்க, சரித்திர நாயகராக்க பின்பற்றக் கூடிய ஒரு சில சுய முன்னேற்றக் கருத்துக்களைக் கூறும் கட்டுரைத் தொகுப்பு இது.

     எந்த ஒரு சாதனையாளராகட்டும், எந்த ஒரு சரித்திர புருஷனாகட்டும் அவர் வாழ்க்கை வரலாற்றை - வெற்றிச் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால் அதில் ஆணிவேராக இருப்பது எது தெரியுமா? 'நம்பிக்கை'. நம்மால் அதைச் சாதித்து விட முடியும், நம்மால் வெற்றி காண முடியும் என்று ஆழ் மனதில் விதைக்கப்பட்ட நம்பிக்கை விதைதான், விருட்சமாகி சாதனைக் கனிகளைத் தந்திருக்கிறது.

     "மனிதன் நம்பிக்கை (சிரத்தை) மயமானவன். நம்பிக்கை அவனவனிடம் உள்ள இயல்புக்குத் தக்கபடி இருக்கும். எவனுக்கு எதில் நம்பிக்கை உண்டாகிறதோ அவன் அதுவாகவே ஆகிறான்" என்கிறது பகவத் கீதை. ஆம்... ஆழ் மனதில் நம்பிக்கை வையுங்கள். நிச்சயம் வெல்வீர்கள். 'நம்பிக்கை' பற்றி ஒரு சிறு கதை உண்டு.

     ஒரு நாட்டில் பல மாதங்களாக மழையே இல்லை. வானம் பொய்த்து விட்டதை நினைத்து உழவர் தவிக்க, உணவுப் பஞ்சத்தால் மக்களும் தவிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு துறவியின் கூற்றுப்படி, ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி வருண பகவானை நோக்கி ஜெபம் செய்ய ஆரம்பித்தார்கள். வரும் போது ஒவ்வொருவரும் உட்கார விரிப்பு, குடிக்கத் தண்ணீர் என அவரவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வந்திருந்தார்கள். ஜெபம் ஆரம்பித்து ஓரிரு மணி நேரம் ஆனது. மேகங்கள் திரள ஆரம்பித்தன. வருண பகவான் கண் திறந்தார். மழை கொட்டியது. யாருக்காக? ஒரே ஒரு குழந்தைக்காக. ஆம்... அந்தக் கூட்டத்தில் ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை மட்டும் நிச்சயமாக மழை வரும் என்று நம்பி, மனதில் ஆழமாக நினைத்து 'குடை' எடுத்து வந்திருந்தது. மற்ற அனைவரும் ஏதோ ஜெபம் செய்கிறோம், மழை உடனே வரவா போகுது? என்ற ஒரு அவநம்பிக்கையில் குடை தேவையில்லை என்று நினைத்திருக்கிறார்கள்.

     ஒரு சிறு குழந்தையின் ஆழ்ந்த நம்பிக்கைக்கு இறைவன் இறங்கி வருகிறான் என்றால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் உங்களைப் பற்றி, உங்கள் சாதனை பற்றி ஆழ்ந்த நம்பிக்கை வைத்தால் தெய்வ பலம் நிச்சயமாகக் கை கொடுக்கும் என நம்பலாம் அல்லவா? "யானையின் பலம் எதிலே? தும்பிக்கையிலே! மனிதனோட பலம் எதிலே? நம்பிக்கையிலே!" என்ற திரைப்படப் பாடல் வரிகளை நினைவு கூறுங்கள்.

     சாதனையாளர்கள் சிலரை நினைவு கூர்வோமா?




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn.html



சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 

சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. (உறுப்பினர் பட்டியல்). இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. இரண்டாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் ரூ.50 (ரூபாய் ஐம்பது மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. எந்த காரணத்தைக் கொண்டும் உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணம் திருப்பி தர மாட்டாது.
5. இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவரும் உறுப்பினர் எண் வழங்கப்படும். அந்த எண்ணை அவர்களின் தங்களின் அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.
7. உறுப்பினர் பெயர் மற்றும் முகவரி சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

பயன்கள்
1. உறுப்பினர் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருட இறுதியில் தாங்கள் செலுத்திய உறுப்பினர் கட்டண தொகையில் பாதியளவிற்கு அதாவது ரூ.50 பெறுமானத்திற்கு தங்களுக்கு விருப்பமான நூல்களை எமது கௌதம் பதிப்பகத்தில் இருந்து இலவசமாக பெறலாம்.
2. உறுப்பினர்கள் எமது கௌதம் பதிப்பக வெளியீடுகள் அனைத்தையும் 25% சலுகை விலையில் பெறலாம்.
3. உறுப்பினர்கள் சென்னைநூலகம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து நூல்களையும் பிடிஎப் வடிவில், தலா ரூ.5 (ரூபாய் ஐந்து மட்டும்) என்ற கட்டணத்தில் பெறலாம். (குறைந்தபட்சம் 10 நூல்களை ஒருங்கே பெற வேண்டும்). இவை அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
4 வருடத்திற்கு ஒரு முறை சிறப்பு பரிசாக உறுப்பினர்களுக்கு நூல்/குறுந்தகடு அளிக்கப்படும். 5. இச்சலுகைகள் அல்லாது பிற சலுகைகளும் அவ்வப்போது சேர்க்கப்படும்.
6. மேலே சொன்னப்பட்ட சலுகைகளை தக்க காரணங்களால் மாற்றம் செய்யவோ முற்றிலும் விலக்கிக் கொள்ளவோ சென்னைநூலகம்.காம் தளத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இருந்தாலும் இயன்றவரை அவைகள் உறுப்பினரை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


தொடர்புக்கு
பேசி: +91-9176888688, 9025888988
மின்னஞ்சல்: admin@chennailibrary.com





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs