சிலையும் நீயே சிற்பியும் நீயே 4. “சிந்திக்க சில மணித்துளிகள்” “என் வாழ்க்கையில் பெரிய வெற்றி பொறுமையாக நீண்ட நேரம் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றதுதான்” என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல் வாழ்க்கையில் மகத்தான வெற்றிகளைத் தரவல்லது என்று புரிகிறதல்லவா? உங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதித்தாக வேண்டும் என்று தணியாத தாகம் இருக்கிறதா? மற்றவர் மத்தியில் சாமான்யராக வாழாமல், சாதனைகள் பல புரிந்து சரித்திர நாயகராக இடம் பெற வேண்டும் என்று கொள்கை இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது சிந்திக்க ஒதுக்க வேண்டும். அதாவது உங்களுக்காக, உங்கள் முன்னேற்றத்திற்காக, உங்களைப் பற்றி... உங்களைப் பற்றி மட்டுமே உங்கள் வெற்றியைப் பற்றி மட்டுமே சிந்திக்க சில மணித்துலிகளை ஒதுக்க வேண்டும். யோசித்துப் பாருங்கள். இதுவரை உங்களைப் பற்ரி நீங்கள் சிந்தித்ததுண்டா? சிந்தித்திருப்பீர்கள். ஓரிரு மணித்துளிகள் போகிற போக்கில், பல சிந்தனைகளுக்கு நடுவில், ‘இப்படி நாமும் வந்திருக்கலாம், பரவாயில்லை, பார்ப்போம்’ என்று ஏதோ மேம்போக்காக நம்மைப் பற்றிச் சிந்தித்திருப்போம். மேல் நாட்டுப் பணக்காரர் நம்பீல்டு பிரபு “தினமும் பத்து நிமிடங்கள் சிந்திப்பதன் மூலம் பத்து புதுத் துறைகள் புலப்படும். பத்தில் ஒன்பதாவது பின்பற்றக் கூடியதாக இருக்கும். அந்த ஒன்பதிலும் ஒன்றையாவது பின்பற்றினால் கூடப் போதும். நீங்கள் வாழ்வில் முன்னேறி சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்று விடலாம்” என்கிறார். பூமியில் ஒரு விதை விழுந்து மரமாகிறது என்றால் கூட அதாவது ஒரு ஆரோக்கியமான விதை ஒரு பக்குவப்பட்ட மண்ணில் விழுந்து, குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் முளை விட்டு, வளர்ந்து மரமாகிறது அல்லவா? அதே போல் தான் நீங்களும் பிற்காலத்தில் சாதனை மரமாகி, பல வெற்றிக் கனிகளைப் பறிக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? ஒரு ஆரோக்கியமான எண்ண விதையை ஒரு பக்குவப்பட்ட தெளிவான மனநிலையில் வித்திட வேண்டும். இந்த ஆரோக்கியமான எண்ண விதை உருவாவதற்கு நம்மைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம். நல்ல சிந்தனை நல்ல எண்ண விதையை உருவாக்கும். சிந்திப்பதென்றால் எவ்வாறு சிந்திப்பது? உங்களிடமுள்ள திறமை என்ன? அது வெளிப்படையாகவும் தெரியலாம். மற்றவர்களுக்கோ ஏன் உங்களுக்கோ கூடத் தெரியாமல் ஒளிந்து கொண்டு இருக்கலாம். உங்களிடம் ஒளிந்து கொண்டுள்ள திறமையைத் தேடிக் கண்டுபிடியுங்கள். திறமையை வெளிக் கொண்டு வர வாய்ப்பு வசதிகள் நம்மிடம் உள்ளதா? குடும்பத்தில் ஒத்துழைப்பு கிடைக்குமா? நண்பர்கள் உதவி கிடைக்குமா? நேரம் ஒதுக்க முடியுமா? இவ்வாறெல்லாம் சிந்தித்து, ‘நான் சிறந்த எழுத்தாளராவேன்’, ‘நான் சிறந்த மருத்துவராவேன்’, ‘சிறந்த ஓவியராவேன்’, ‘சிறந்த விளையாட்டு வீரராவேன்’, ‘சிறந்த விஞ்ஞானியாக ஆவேன்’ இப்படி அவரவருக்குத் தகுந்த எண்ண விதைகளை முதலில் தேர்ந்தெடுத்து மனதில் விதைக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அலை அலையாக உள்ள கலங்கலான குளத்தில் முகம் பார்க்க முடியாது அல்லவா? அதே போல் நம் அலைபாயும் கலங்கலான மனத்தில் நம் சாதனை முகத்தைப் பார்க்க முடியாது. மனம் கலங்கலாக, அலை பாயாமல் இருக்க ஒரு தெளிந்த நீரோடையைப் போல் ஆக, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து சிந்திக்கத் தொடங்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க மனம் தெளிவு பெறும். சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? இப்போது சிலவற்றை மனதில் கொள்ளுங்கள். - நம் சிந்தனை தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக இருக்க வேண்டும். தன்னம்பிக்கை மனதில் வேர் ஊன்றினாலே போதும். தைரியம் தன்னால் வர ஆரம்பிக்கும். தைரியம் வர வர அனைத்து வெற்றிகளும் வர ஆரம்பிக்கும் அல்லவா? - சிந்திக்கும் போது நாம் எந்த நிலையை அடைய விரும்புகிறோமோ அந்த நிலையை அடைந்த மனிதனாக வெற்றியை எட்டிவிட்ட மனிதனாக, புகழ் பெற்ற நாயகனாக அதனால் மனமகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்து திருப்தியுடன் வாழும் வாழ்வை அடைந்துவிட்ட மாதிரியாக நம்மை நாமே கற்பனை செய்து பார்க்கலாம். - சிந்திக்கும் போது ஒரு போதும் நெகடிவ் எண்ணம் தலை தூக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அழிந்து விடுவோம் என்று நினைப்பவருக்கு, வெற்றிக் கனி எட்டாக் கனிதான். ‘நெகடிவ் எண்ணம்’ தலை தூக்கினால், உடனே ‘இல்லை, இல்லை... நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்று நம் எண்ணங்களை பாஸிடிவ்வாகத் திருப்பி விடத் தெரிந்து கொள்ள வேண்டும். - சிந்திக்கும் போது நாம் தோற்று விட்ட தருணங்கள், நம்மைப் பார்த்து எள்ளி நகையாடிய விஷமிகள், வருத்தப்பட்டு தலை குனிந்த நேரங்கள் இவற்றைப் பற்றியெல்லாம் நினைத்தே பார்க்கக் கூடாது. ஏனெனில் இறந்த காலம் என்றுமே இறந்து விட்ட காலம் தான். அது திரும்பி வரப் போவதில்லை. - நம் சிந்தனையின் போது, நம் வெற்றிக்காக அன்றன்று நடந்த செயல்கள், அன்றன்று சந்தித்த நபர்கள், அன்றன்று நடந்த உரையாடல்கள் இவற்றைப் பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் போதுதான் நம் செயல்களை மேம்படுத்திக் கொள்ளும் திட்டம் உருவாகும். அந்த மாதிரி உருவான திட்டங்களை நடைமுறைப் படுத்திக் கொண்டே வரலாம். எனவே இன்றிலிருந்தே சிந்திக்க ஆரம்பியுங்கள். இன்றைய சிந்தனைதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கைப் பாதையையே நிர்ணயிக்கிறது. “சிறுவன் எண்ணுகிறான். இளைஞன் முயற்சிக்கிறான். மனிதன் அதை அடைகிறான்” என்கிறார் அறிஞர் கார்லைல். சிந்தனையால் சாதனை சிகரத்தைத் தொட்ட சிலரை நினைவு கூர்வோமா? - பூகோள உலகில் கொலம்பஸ் மனதில் விழுந்த சிறிய எண்ண விதை தான் ‘அமெரிக்கா’ எனும் புதிய உலகைக் கண்டறிந்த முன்னோடி என்னும் சிறப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. - சரித்திர உலகில் சித்தார்த்தர் எனும் மன்னனின் மனதில் தோன்றிய எண்ண விதை தான் பிற்காலத்தில் பௌத்த மதம் எனும் அமைப்பையே ஏற்படுத்தியது. - அறிவியல் உலகில் ஜார்ஜ் ஸ்டீவென்ஸன் மனதில் விழுந்த சிந்தனை தான் இரயில் என்ஜினைக் கண்டு பிடித்த விஞ்ஞானி எனும் சிறப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. - இலக்கிய உலகில் ஹோட்ட சமையலறையில் எடுபிடியாளனாக இருந்த ஹெரால்ட் ராபின்சன் மனதில் தோன்றிய சிந்தனை பிற்காலத்தில் 50 ஆண்டுகளாக எழுத்துலக முடிசூடா மன்னனாக சாதனை புரியக் காரணமாக இருந்தது. - சமுதாய உலகில் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தியின் மனதில் விழுந்த அஹிம்சை என்னும் எண்ண விதை மகாத்மா என்னும் சிறப்பை அவருக்குப் பெற்றுத் தந்தது. - ஓபராய் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. 1900 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஒரு ஓட்டைக் குடிசையில் ஒரு ஏழ்மை நிலையிலிருந்த தாய்க்குப் பிறந்தவர் தான் ஓபராய். ஆனால் இன்று சர்வதேச அளவு வசதிமிக்க ஹோட்டல் எனப் பெயர் பெற்றது ‘ஓபராய் ஹோட்டல்’ தான். தன் வாழ்க்கையை வெறும் 25 ரூபாயில் மட்டுமே ஆரம்பித்தார். “எதையும் பெரிது பெரிதாகவே சிந்திப்பேன். மிகப் பெரிய சாதனை ஒன்றிலேயே மனதை மூழ்கடிப்பேன்” என்று சொல்லும் இவருக்கு இன்று 11 நாடுகளில் 31 பிரம்மாண்டமான ஹோட்டல்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு குவிந்து கிடக்கிறது. தன் வளர்ச்சி பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்காமல் இருந்திருந்தால் ஓபராய் இன்று இந்த மாபெரும் வெற்றியைக் கண்டிருக்க முடியுமா? “சிந்தனையில் செல்வத்தைத் தேடு. சிந்தனையிலேயே நீ பணத்தைப் பார்க்கா விட்டால் நீ உன் நிஜ வாழ்க்கையில் அந்தப் பணத்தைப் பார்க்க முடியாமலே போய்விடும்” என்கிறார் எமர்ஸன். எனவே... இன்றிலிருந்து சிந்திக்க சில மணித் துளிகளை ஒதுக்குங்கள். சிந்திக்க சிந்திக்க வாழ்க்கையில் உன்னதமான சில தருணங்களை நிச்சயமாக சந்திப்பீர்கள்! இது உறுதி. சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |