இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

சென்னைநூலகம்.காம் உறுப்பினராக
6 மாதம்
ரூ.100 (வெளிநாட்டினர்: $ 5)
2 வருடம்
ரூ.300 (வெளிநாட்டினர்: $ 10)
6 வருடம்
ரூ.500 (வெளிநாட்டினர்: $ 15)
15 வருடம்
ரூ.1000 (வெளிநாட்டினர்: $ 20)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க...
வெளிநாட்டில் வசிப்போர் $ / பிற கரன்சியில் எமது வங்கி கணக்கிற்கு நன்கொடை அளிக்கலாம்:
(Axis Bank | Anna Salai, Chennai | SB Account | A/c Name : G.Chandrasekaran | A/c No.: 168010100311793 | IFS Code: UTIB0000168 | SWIFT Code : AXISINBB168)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888
  மொத்த உறுப்பினர்கள் - 451 
புதிய உறுப்பினர்: Hashan Basha.M.A
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது
புதிய வெளியீடு
7. “எழாவிடில் பயனில்லை”

     “எழுவாய் - பயனிலை” என்று பள்ளிப் பாடங்களில் நீங்கள் படித்திருந்தது நினைவிருக்கலாம். இப்போது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான புதுமொழி என்ன தெரியுமா? “எழாவிடில் பயனில்லை”. அதாவது “அதிகாலையில் எழாவிட்டால் நீ வாழ்க்கையில் பயன் பெறப் போவதில்லை” என்பதுதான் அது.

     வாழ்க்கையில் முன்னேற, முன்னேறி சாதனை புரிய சில அடிப்படைப் பழக்க வழக்கங்கள் அவசியம். அத்தகைய பழக்கங்களில் தலையானது ‘அதிகாலை எழுதல்’ என்னும் நல்ல பழக்கம்.

     “நீ அதிகாலையில் எழாவிட்டால் எதிலும் உருப்பட மாட்டாய்” என்கிறார் அறிஞர் கான்ராட்.

     “உன் முன்னேற்றம் கருதி நீ ஒரு பெரிய மனிதரை சந்திக்க விரும்பினால் அதிகாலையில் செல். தாமதித்தால் அவர் அவரது முன்னேற்றம் கருதி அவரை விடப் பெரிய மனிதரைச் சந்திக்கக் கிளம்பியிருக்கக் கூடும்” என்கிறார் ஓர் அறிஞர்.

     அதிகாலைப் பொழுது ஓர் அற்புதமான பொழுது. இருள் செல்லமாக விலக, மெல்ல மெல்லப் பெருகி வரும் சூரிய ஒளி, சூரிய ஒளியில் தவழ்ந்து வரும் இளங்காற்று, இளங்காற்றில் மிதந்து வரும் புல்லினங்களின் கீச், கீச் மெல்லிசை. மெல்லிசை கேட்டு மலரும் நம் இமை மொட்டுக்கள். இப்படி அதிகாலைப் பொழுதை வர்ணித்துக் கொண்டே போகலாம். அதிகாலைப் பொழுது ஒவ்வொருவரும் எழுந்து அனுபவிக்க வேண்டிய பொழுது.

     உங்களில் பெரும்பாலானோரைக் கேட்டுப் பாருங்கள். காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீர்கள்? பதில்: ‘ஆறரை மணியிலிருந்து ஏழுக்குள் எழுந்திருப்பேன்’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். அதிகாலை நேரத்தில் எழாத நீங்கள் என்னென்ன இழக்கிறீர்கள் தெரியுமா?

     - முதலில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை இழக்கிறீர்கள். சுவரை வைத்துத்தான் சித்திரம். நீங்கள் என்ன தான் முன்னேற விரும்பி, பல்வேறு முயற்சிகள் செய்தாலும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் பல்வேறு சாதனைகளைத் திறம்படச் சாதிக்க முடியும். அதிகாலை நேரத்தில் பீச்சிலும், சாலை ஓரங்களிலும் ‘வாக்கிங்’ செல்பவர்களைப் பாருங்கள். அவர்களைப் பார்த்தாலே ‘ஆரோக்கியசாலிகள்’ என்று எழுதி ஒட்டப்பட்டிருக்கும். கேட்டுப் பார்த்தால் நான் 15 வருடங்களாக ‘வாக்கிங்’ செல்கிறேன். 20 வருடங்களாக நடைப் பயிற்சியை நாள் தவறாமல் செய்கிறேன் என்று சொல்லுவார்கள். உடல் ஆரோக்கியத்தை எவ்வளவு தூரம் அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தால் இவ்வாறு நாள் தவறாமல் வாக்கிங் செல்வார்கள் என்று நினைத்துப் பாருங்கள். அதிகாலைக் காற்றிலேயே ‘ஓஸோன்’ நிறைந்திருக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ‘ஓஸோன்’ மிக மிகத் தேவை. அதிகாலை துரித நடையால் இந்த ஓஸோன் அதிக அளவு உட்கிரகிக்கப்பட்டு இரத்த செல்களுக்குள் புகுந்து ஆரோக்கியத்தை வாரி வழங்குகிறது. இருதயத்திற்குப் புதுப்புது மெல்லிய நுண் இரத்தக் குழாய்களும் நடைப் பயிற்சியால் உருவாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த அதிகாலை நடைப் பயிற்சியை அதிகாலை எழாதவர்கள் இழக்கிறார்கள். அதன் மூலம் ஆரோக்கியத்தையும் இழக்கிறார்கள்.

     - நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்தில் மிக நன்றாகப் பணி புரிகிறது என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. அதன்படிப் பார்த்தால் பெருங்குடல் காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை நன்கு சுருங்கி விரிந்து பணியாற்றுகிறது. அதிகாலையில் எழுபவருக்கு ‘மலச்சிக்கல்’ பிரச்சனை என்பதே இருக்காது. அதிகாலையில் வயிறு சுத்தமாகக் கிளியராகி விட்டாலே போதும். அன்று பாதிப் பிரச்சனை கிளியரான மாதிரிதான். அதிகாலை எழாத போது கழிவுகள் தங்கி ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு உடலுக்கு ஒரு அசதியையும் நோவையும் கொடுக்கிறது.

     - அதிகாலை எழாத நீங்கள் உடற்பயிற்சி செய்யும் வாய்ப்பை இழக்கிறீர்கள். உங்களில் பலருக்கு வெளியே சென்று நடைப் பயிற்சி செய்ய இயலவில்லையா? அதிகாலை எழுந்து வீட்டிற்குள்ளாகவே உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவற்றில் ஈடுபடலாமே. காலை எட்டு மணி ஆகிவிட்டாலே அலுவலக வேலை, வீட்டு வேலை எனப் பல வேலைகளும் உங்களைச் சூழ்ந்து கொள்ள உடற்பயிற்சிக்கு நேரம் தான் ஏது? அதிகாலை நேரந்தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற நேரம்.

     - நேரம் கழித்து எழுவதால் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. டென்ஷன் நிறைந்த வாழ்க்கையில் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளப் பெருமளவு உதவுவது தியானம். தியானம் செய்ய அதிகாலைப் பொழுதே ஏற்றது. ஆரவாரமில்லாத, அமைதியான, அதிகாலைப் பொழுதில் செய்யும் 20 நிமிடத் தியானம் உங்கள் வாழ்க்கையையே அமைதிப் பூங்காவாக மாற்றிவிடும். மேலும் இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்த்மா, இருதய நோய் போன்றவற்றிற்குத் ‘தியானம்’ மிகச் சிறந்த நிவாரணி என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. அதிகாலை எழாவிட்டால் தியானம் செய்யும் நேரத்தையும், வாய்ப்பையும் இழக்கிறீர்கள் அல்லவா?

     - அடுத்து அதிகாலை எழாத நீங்கள் இழப்பது எதைத் தெரியுமா? “மதிப்பை” - “அந்த ஆள் எப்பப் பார்த்தாலும் ஆபிஸிற்கு லேட், அது, இதுன்னு காரணம் சொல்வாரு.” “அந்த அம்மாவா, அப்பப்பா எதற்கெடுத்தாலும் ‘வள்’ளுனு விழுவாங்க. இதெல்லாம் அதிகாலையில் எழாதவர்களைப் பார்த்துச் சொல்லப்படும் வார்த்தைகள். பார்க்கப் போனால் இவை யாவும் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளே அல்ல. உண்மையான வார்த்தைகள். அதிகாலை எழாததால் உங்களை விட்டு சுறுசுறுப்பு தேவதை விலக, சோம்பல் பிசாசு பலமாகப் பிடித்துக் கொள்கிறது. லேட்டாக எழுந்து அரக்கப் பறக்கக் கிளம்பி, அவசரமாக புட்போர்டில் தொற்றி, பிதுங்கி வழியும் கூட்டத்தில் உடை கசங்க லேட்டாகப் போய் மேனேஜர் முன் அசடு வழியும் உங்களிடமிருந்து ‘மதிப்பு’ மதிப்பாக விலகிப் போகாதா என்ன?

     - அதிகாலை எழாத நீங்கள் செல்வத்தை இழக்கிறீர்கள். அதிகாலை எழுந்து உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு மணி நேரம் நீங்களே பாடம் சொல்லிக் கொடுத்துப் பாருங்கள். டியூஷன் தேவையில்லை. பணமும் மிச்சம். மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெற வைத்தால் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில் கல்விக்கு நுழைவுக் கட்டணமாகப் பெரும் தொகை செலவழிக்க வேண்டி இருக்காது.

     - அதிகாலை எழாத நீங்கள் வாய்ப்புகளை இழக்கிறீர்கள். எப்படி? இசைத்துறை போன்ற கலைத்துறைகளில் பயிற்சி மிக மிக அவசியம். இன்று முன்னணியில் இருக்கும் பாடகர்களையும், நடனக் கலைஞர்களையும் கேட்டுப் பாருங்கள். தினமும் நாள் தவறாமல் அதிகாலையில் அவர்கள் செய்யும் பயிற்சியைப் பற்றிச் சொல்வார்கள். அதிகாலையில் தினமும் செய்யும் ஓரிரு மணி நேரப் பயிற்சி மிகச் சிறந்த வாய்ப்புகளை உறுதியாகத் தேடித் தரும். கலைத் துறையில் ஈடுபடுபவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்து எல்லா இடங்களுக்கும் குறித்த நேரத்தில் போய் வாய்ப்புகளைப் பெருக்கிப் பாருங்கள். வசதிகள் உங்களைத் தேடி வாசலில் வந்து நிற்கும்.

     - அதிகாலை எழாத நீங்கள் உங்கள் முன்னேற்றத்தை இழக்கிறீர்கள். நீங்கள் எழுத்தாளரா? கவிஞரா? ஓவியரா? அதிகாலை எழுந்து உங்கள் கற்பனைக் குதிரையைக் கிளப்பிப் பாருங்கள். நீங்களே நினைத்துப் பார்த்திராத அளவுக்கு உங்கள் கற்பனைக் குதிரைக்கு சிறகு முளைத்துப் பறக்க ஆரம்பித்துவிடும். பறந்து போய் உங்களுக்கு வாய்ப்புகளையும், வசதிகளையும் தானே தேடித் தந்துவிடும். அதாவது உங்கள் கற்பனை விரிய விரிய, உங்கள் திறமையில் விரிவு ஏற்பட்டு மிகச் சிறந்த படைப்புகளைப் பார்ப்பீர்கள்.

     - சரி... இனி நாளை முதல் அதிகாலையில் எழுவது என்று முடிவு செய்து விட்டீர்கள். அதற்கு என்ன செய்வது?

     - இரவு 1 மணி நேரம் முன்னதாகவே படுக்கைக்குச் செல்லுங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு பத்து நிமிடம் மனதை தியான நிலையில் வைத்து அமைதிப் படுத்திவிட்டு அந்த நிலையில் உறங்கச் செல்வதே நல்லது. ஒரு மணி நேரம் முன்னதாகப் படுத்தாலும் பல்வேறு தேவையற்ற சிந்தனைகளால் மூன்று மணி நேரம் புரண்டு புரண்டு படுத்துவிட்டு பிறகு தூங்குவது அதிகாலை விழிப்பை நிச்சயமாக பாதிக்கும்.

     - படுக்கைக்கு செல்வதற்கு முன் குடும்பத்தில் குட்டி குட்டி சண்டைகள், வாக்குவாதங்கள், பிரச்சனை விவாதங்கள், தொலைபேசி வீண்வம்பு, தொலைக்காட்சி சீரியல் சோகங்கள் போன்றவைகளை அதிகாலையில் எழ விரும்பும் நீங்கள் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

     - இன்றிலிருந்து அலாரம் வைத்துக் கொண்டு எழுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். முதல் ஓரிரு மாதங்கள் அலாரம் உங்களை எழுப்பிவிட்ட பிறகு பழக்கம் காரணமாக நீங்கள் அலாரத்திற்கு முன்னால் எழுந்து அதை நிறுத்த ஆரம்பிப்பீர்கள். அலாரம் வைத்து எழுபவர்களுக்கு ஒரு குறிப்பு! அலாரம் அடித்ததும் அப்படியே அதன் தலையில் ஓங்கி அடித்து நிறுத்தி விட்டு, விட்ட தூக்கத்தைப் பிடிக்காதீர்கள். திரும்பிப் படுத்த உடன் வரும் ஆழ்ந்த தூக்கம் ஒரு மணி நேர அசந்த தூக்கத்தில் கொண்டு போய் விட்டு விடும். அலாரம் அடித்ததும் எழுந்து உட்கார்ந்து விடுங்கள். உட்கார்ந்த நீங்கள் கண்டிப்பாக எழுந்து விடுவீர்கள்.

     - நீங்கள் காப்பி அல்லது டீ பிரியரா? எழுந்த உடன் ஆவி பறக்கும் சூப்பரான காப்பியை மனக் கண்ணால் கற்பனை செய்யுங்கள். காப்பி எண்ணம் தூங்கும் எண்ணத்தைக் கைவிடச் செய்யும்.

     - அதிகாலை அலாரம் வைத்து எழுவது உங்கள் ஆக்கப்பூர்வமான வேலைகளை கவனிக்கத்தான் என்பது நினைவில் இருக்கட்டும். உடற்பயிற்சி, தியானம், இறைவழிபாடு, அன்றைய வேலைகளைத் திட்டமிடல் இப்படி ஏதாவது ஒன்றில் ஈடுபடுங்கள். அதைவிடுத்து அதிகாலையிலே வீட்டில் மற்றவர்களை வம்புக்கிழுப்பது, வீண் விவாதம் பேசுவது இப்படி ஆரம்பித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதோடு, அடுத்தவர் நிம்மதியையும் அடியோடு கெடுக்காதீர்கள். இதற்கு நீங்கள் படுக்கையில் படுத்துக் கிடப்பதே மேல்.

     - சரி... ஒரு சின்னக் கணக்குப் போட்டுப் பார்க்கலாமா? சுமாராக ஏழு மணிக்கு எழும் நீங்கள் இனி 5 மணிக்கு எழுவதாக வைத்துக் கொள்வோம். இதனால் உங்களுக்கு அதிகப்படியாகக் கிடைப்பது என்ன? 2 மணி நேரங்கள். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் என்றால் வாரத்திற்கு 7 x 2 = 14. மாதத்திற்கு, 30 x 2 = 60 மணி நேரங்கள். அதாவது மாதத்திற்கு 60 / 24 = 2 1/4 நாள். இப்படியும் கணக்குப் பண்ணலாம். ஒரு நாளைக்கு 2 மணி நேரம் எனில் வருடத்திற்கு 365 x 2 = 730 மணி நேரங்கள். அதாவது நாள் கணக்குப் பார்த்தால் 730 / 24 = கிட்டத்தட்ட 30 நாட்கள். அதாவது ஒரு மாதம். அதிகாலை 5 மணிக்கு எழுபவருக்கு வருடத்திற்கு 1 மாத வாழ்க்கை போனஸ்.

     அங்கே அது வாங்கினா இது போனஸ் என்று அலையும் நாம் விலை மதிக்க முடியாத போனஸான நேரத்தின் மதிப்பை உணர்ந்து அறிவைப் பெருக்கி, ஆற்றலை விரிவாக்கி முன்னேறலாமே!


சிலையும் நீயே சிற்பியும் நீயே :  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23 24 25 26 27 28 29 30 
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்

வெளியிடப்பட்டுள்ள நூல்கள் : 17
அரசு கட்டில்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
கபாடபுரம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
சிவகாமியின் சபதம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
சோலைமலை இளவரசி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
நித்திலவல்லி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பாண்டிமாதேவி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பார்த்திபன் கனவு
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
புவன மோகினி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பொன்னகர்ச் செல்வி
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
பொன்னியின் செல்வன்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மணிபல்லவம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மதுராந்தகியின் காதல்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மாலவல்லியின் தியாகம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
மோகினித் தீவு
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
ராணி மங்கம்மாள்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
வஞ்சிமா நகரம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்
வெற்றி முழக்கம்
     - யூனிகோட் வடிவில் - பிடிஎப் வடிவில்


எமது இணையதளங்கள்

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | ஸ் | | க்ஷ

A | B | C | D | E | F | G | H | I | J | K | L | M | N | O | P | Q | R | S | T | U | V | W | X | Y | Z


1801 | 1802 | 1803 | 1804 | 1805 | 1806 | 1807 | 1808 | 1809 | 1810 | 1811 | 1812 | 1813 | 1814 | 1815 | 1816 | 1817 | 1818 | 1819 | 1820 | 1821 | 1822 | 1823 | 1824 | 1825 | 1826 | 1827 | 1828 | 1829 | 1830 | 1831 | 1832 | 1833 | 1834 | 1835 | 1836 | 1837 | 1838 | 1839 | 1840 | 1841 | 1842 | 1843 | 1844 | 1845 | 1846 | 1847 | 1848 | 1849 | 1850 | 1861 | 1862 | 1863 | 1864 | 1865 | 1866 | 1867 | 1868 | 1869 | 1870 | 1871 | 1872 | 1873 | 1874 | 1875 | 1876 | 1877 | 1878 | 1879 | 1880 | 1881 | 1882 | 1883 | 1884 | 1885 | 1886 | 1887 | 1888 | 1889 | 1890 | 1891 | 1892 | 1893 | 1894 | 1895 | 1896 | 1897 | 1898 | 1899 | 1900 | 1901 | 1902 | 1903 | 1904 | 1905 | 1906 | 1907 | 1908 | 1909 | 1910 | 1911 | 1912 | 1913 | 1914 | 1915 | 1916 | 1917 | 1918 | 1919 | 1920 | 1921 | 1922 | 1923 | 1924 | 1925 | 1926 | 1927 | 1928 | 1929 | 1930 | 1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018


சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விளம்பர வீதி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தேவதை உலா
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)