சிலையும் நீயே சிற்பியும் நீயே 25. “ஆண்டவனுக்கே அர்ப்பணம்” “மனத்திற்கு அப்பாற் சென்று இறைவனின் அருளில் நம்பிக்கை வைக்கும் போது அந்த நம்பிக்கை எல்லாச் சோதனைகளையும் தாங்கிச் செல்ல உதவுகிறது. எல்லா பலவீனங்களையும் வெற்றி கொள்ளவும், இறைவனது உணர்வுடன் தொடர்பு கொள்ளவும் தேவையான பலத்தைக் கொடுத்து அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமல்லாது, உடலில் சமநிலையையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது” என்கிறார் ஸ்ரீ அன்னை. ஆம்... இறையருளில் பரிபூரண நம்பிக்கை வையுங்கள். இறையருள் தோன்றாத் துணையாக அருகிருந்து காக்கும். இறையருளில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த இறையருள் உங்கள் வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டியாகச் சென்று துணை நிற்கும். இறைவன் மீது நாம் முழு நம்பிக்கை வைக்கும் போது, இறைவன் நம் கூடவே இருந்து நம்மைக் காக்கிறான் என்பதை விளக்கும் சுவாரஸ்யமான கதை இதோ: ஆம்... இறை மீது ஆழ்ந்த நம்பிக்கை வைக்கும் போது இறையருள் நம்மை அறியாமலேயே நம்மைச் சூழ்ந்திருக்கும் இறை ஆற்றல் நம் உடலில் புகுவதோடு உயிரிலும் இரண்டறக் கலந்திருக்கும். “பசுக்கள் எந்த நிறமானாலும் பால் வெள்ளை தான். மலர்கள் பல வகையானாலும் பூஜை ஒன்று தான். மதங்கள் பலவானாலும் இறைவன் ஒன்று தான்” - எல்லா மதங்களும் போதிப்பது என்ன? “எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுங்கள் என்பதே. எனவே நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இறை அருள் என்பது ஒன்றே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள். ஏன் சமயங்களில் நீங்களே கூட நினைத்திருப்பீர்கள். “என்ன தான் திறமை இருந்தாலும் முன்னுக்கு வர முடியவில்லையே!” “இவ்வளவுதூரம் முயற்சி செய்தும் நமக்கு இந்தக் காரியம் நடக்கவில்லையே” “சிலருக்கு டக்... டக்... என்று உடனடியாக முடியும் வேலை நமக்கு இவ்வளவு தூரம் காலதாமதம் ஆகிறதே” என்றெல்லாம் குழப்பிக் கொண்டிருப்போம். இதற்கு விடையாக தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதைப் பாருங்கள்:
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.” இறையருள் என்றென்றும், எந்தத் தருணத்திலும் உங்களைச் சூழ்ந்திருக்க, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? இறைவனது கருணையை உங்கள் மீது பொழியச் செய்ய, அந்த ஆண்டவனின் பேரன்பிற்குப் பாத்திரமாகும்படி உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும். அதாவது அவரது அருள் மழையைப் பெறத் தக்க தகுதியை நீங்கள் பெற வேண்டும். இறையருள் முழுமையாக உங்களுக்குக் கிடைக்கப் பெற, இறைவன் படைத்த எல்லா உயிர்களிடத்திலும் இறைவனைக் காணும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். “எல்லாவற்றிலும் இறைவனைக் காணல்” என்பது மிக உயர்ந்த ஒரு பண்பு. சுவாமி விவேகானந்தர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இதோ: சுவாமி விவேகானந்தர் ஒரு நாள் கேஷ்டாவிடம் கேட்டார். நீங்களெல்லாம் எங்கள் வீட்டில் சாப்பிட வருவீர்களா?” கேஷ்டா கூறினான். “தவறு சாமி. நாங்கள் எல்லாம் உங்கள் வீட்டில் சாப்பிடக் கூடாது. நாங்கள் தீண்டத்தகாதவர்கள். உங்கள் வீட்டிலே நீங்கள் தொட்ட உப்பைத் தின்றால் உங்கள் சாதி கெட்டு விடும்” என்றான். சுவாமிஜி, “சரி... உப்பு வேண்டாம். உப்பு இல்லாமல் காய்கறிகளாக சமைத்துப் போடுகிறோம். சாப்பிடுவாயல்லவா?” என்று கேட்க, வேறுவழியின்றி கேஷ்டா சம்மதித்தான். அதன் பிறகு சுவாமிஜியின் உத்தரவுப்படி பருப்பு, காய்கறிகள், இனிப்புகள், தயிர் எல்லாம் மடத்தில் தயாரித்து அந்த மக்கள் அனைவரையும் உட்கார வைத்துப் பரிமாறினார்கள். சாப்பிட்டபடியே கேஷ்டா கூறினான். “சுவாமி... எங்கிருந்து இந்தத் தின்பண்டங்களைக் கொண்டு வந்தீர்கள்! மிகவும் சுவையாக இருக்கிறது. இது போல நாங்கள் எங்கள் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லையே!” என்று கூறி மிகவும் ரசித்து, ருசித்து, சாப்பிட்டான். அவர்களுக்குத் திருப்தியாக உணவு படைத்த பிறகு சுவாமிகள் அவர்களிடம், “நீங்களெல்லாம் தான் கடவுள். இப்போது நான் கடவுளுக்கு உணவு படைத்திருக்கிறேன்” என்றார். பிறகு அன்று மாலை மடத்திலிருந்த சன்யாஸிகளுக்கு அருளுரை வழங்கும்போது, “இந்த ஜனங்களைப் பார்த்தீர்களா? எவ்வளவு எளிமை! எவ்வளவு கள்ளமற்ற அன்பு! இது போன்ற மக்களை நாம் பார்ப்பது மிகவும் அரிது. எனவே இவர்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இவர்களுக்கு உணவளித்தது ஆண்டவனுக்கு உணவளித்ததற்குச் சமம். கொஞ்சமாவது இவர்கள் துயரை நீக்க முடியுமா உன்னால் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் காவி உடை உடுத்தி என்ன பயன்? இதன் பெயர் தான் உண்மையான துறவு” என்று சுவாமிஜி கூறினார். ஆம்... எல்லோரிடத்தும் கடவுளைக் காணும் அருட்பார்வை உங்களுக்குள் வந்து விட்டால் ஆண்டவன் பார்வை உங்கள் மீது விழும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, எல்லோரிடத்திலும் கடவுளைக் கண்டு எல்லோர் மீதும் இயன்ற அளவு அன்பு செலுத்தி வாழ்ந்து பாருங்கள். நடைமுறை வாழ்க்கையில் சிலரைப் பார்த்திருப்பீர்கள். வீட்டில் உறவினர்களிடமும் சரி, வெளியில் நண்பர்களிடமும் சரி தங்கள் வார்த்தைகளால் சுடும் சொற்கள் கூறி காயப்படுத்தி, அவர்கள் பூப்போன்ற மனதைப் புண்ணாக்கி, பிறகு கோவிலுக்குச் சென்று அர்ச்சனை மந்திரங்களைச் சொல்லி, பூ போட்டு, குடம் குடமாய் பால் ஊற்றிக் கொண்டிருப்பார்கள். உங்களது சுயரூபத்தைக் கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களே புரிந்து கொண்டு உங்களை விட்டு விலகி நிற்கும் போது, ஆண்டவன் மட்டும் உங்களை நெருங்கி வந்து ரட்சிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? எனவே கூடுமானவரை மனிதருக்குள் இறைவனைக் கண்டு அன்பு செலுத்தி ஆதரவுக்கரம் நீட்டி வாழப் பாருங்கள். ஆண்டவனின் பரிபூரண அன்பு உங்கள் மீது செலுத்தப்படும். அந்த இறை சக்தி பஞ்ச பூதங்களாக நிலம், நீர், தீ, காற்று, வான் என உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த இறைசக்திக்கு, பஞ்சபூதங்களுக்கு ஏழை பணக்காரர், உயர்ந்த குலம் தாழ்ந்த குலம், இன மத மொழி வேறுபாடுகள் எதுவும் இல்லை. நல்ல பரிசுத்த உள்ளங்களைத் தேடி, கருணை மழையைப் பொழியத் தயாராகத்தான் உள்ளது. அதை ஏற்றுக் கொள்ளத் தகுதியான உள்ளங்கள் தான், நல்ல ஆத்மாக்கள் தான் கிடைப்பது அரிதாக இருக்கிறது. சறுக்கி விழுந்த சின்னச் சின்ன சறுக்கல்களில் சோர்வில்லாமல் மறுபடி எழுந்து நிற்க, இழந்து விட்டதற்கான கவலை நம்மை ஆட்கொள்ளாதிருக்க, இழந்து விடுவோமோ என்கிற பயம் நம்மை எதிர்கொள்ளாமலிருக்க, உங்களை முழுமையாக ஆண்டவனிடம் அர்ப்பணித்து உங்கள் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் ஆண்டவனிடம் ஒப்படைத்து நிம்மதியாக இருங்கள். “என்னை அடைக்கலமாகக் கொண்டு கவலையற்று இருப்பாயாக.” கவலையற்று மனம் சந்தோஷமாக எந்த நேரத்திலும் இருந்துவிட்டாலே போதும். பெரும் பாறை போன்ற பிரச்சினை கூட சிறு தூசியாகக் கண்ணுக்குத் தெரியும். கண்ணதாசனின் வரிகளை இங்கே நினைவு கூர்வோமா?
“நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி. நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே.” கடமையில் ஒன்றி, நெஞ்சிலே நிம்மதியை நிலை நிறுத்தி அனைத்து பாரத்தையும் ஆண்டவன் மீது போட்டுவிட்டுப் பணியாற்றுங்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேர்வது நிச்சயம்! சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |