சிலையும் நீயே சிற்பியும் நீயே 27. “ஆழமனதின் அற்புதம்” “எண்ணம் ஒரு துளிர். பேச்சு ஒரு மொட்டு. செய்கை அதன் பின்னால் உள்ள பழம்” என்கிறார் எமர்ஸன். ஆம்... வெற்றி பெற்ற சாதனையாளர்களது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அவர்கள் சாதனை என்கிற ஆலமரத்தின் விதையாக ஆழ்மனதில் ஒரு எண்ணம் இருந்திருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இன்றைய நவீன மருத்துவம் ‘ஆழ்மனம்’ பற்றிய பிரமிக்கத்தக்க உண்மைகளைக் கண்டறிந்து வெளியிட்டிருக்கிறது. டானாஸ்லித் என்கிற அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் தன் ஆழ்மனதின் எண்ணங்களும் அவை அப்படியே ஈடேறிய விதங்களும் பற்றித் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ஏன் ஆழ்மனதைப் பயன்படுத்த பலரும் கற்றுக் கொள்ளவில்லை என்பது எனக்கு வியப்பை அளிக்கிறது. நான் என்னுடைய பிரச்சனைகளுக்கான தீர்வை ஆழ்மனதின் மூலமாகக் கண்டுபிடித்திருக்கிறேன். நான் எழுதும் கட்டுரைகளுக்கான எண்ணங்களை ஆழ்மனதின் மூலமாகவே பெறுகிறேன். மேலும் எந்த ஒரு பொருளும் தொலைந்து போய்விட்டால் கூட நான் ஆழ்மனதின் மூலமாகவே மிக விரைவில் தேடிக் கண்டு பிடித்துவிடுகிறேன். ஆழ்மனதின் ஆற்றலை வைத்தே நான் மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார். நீங்கள் ஒரு மிகச்சிறந்த தொழிலதிபராக உருவாக விரும்பினால் உங்களது வெற்றி பெற்றுவிட்ட அந்த உருவத்தை ஆழ்மனதில் சிந்தித்துப் பாருங்கள். மிகச் சிறந்த இசைக் கலைஞராகவோ, பாடகராகவோ ஆக விரும்பினால் ஒரு பெரிய இசைப் பேரவை முன்பு நீங்கள் இசை நிகழ்ச்சி நடத்த, எண்ணற்ற ரசிகர்கள் கேட்டு இன்புறுவதைப் போல ஆழ்மனதில் தினமும் நினைத்து வாருங்கள். உங்கள் எண்ணம் ஒரு நாள் நிச்சயமாக நிறைவேறும். மிகச் சிறந்த எழுத்தாளராகவோ, கவிஞராகவோ ஆக விரும்புகிறீர்களா? உங்கள் எழுத்துக்கள் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுவது போலவும், அதற்கான விருதுகளையும், கேடயங்களையும் நீங்கள் அள்ளிக் குவிப்பது போலவும் உங்களை நீங்களே ஆழ்மனதில் உருவகப்படுத்திக் கொண்டு, அந்த நிகழ்ச்சிகளையே மனத்திரையில் நினைத்து, நினைத்துப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் மனத்திரை நிகழ்ச்சிகள் அரங்கேறும் நாள் நெருங்கி வரும். மீனவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்கிற சிலருக்கு அதிக மீன்கள் கிடைக்கும். சிலருக்கோ மிகக் குறைவான மீன்களே கிடைக்கும். இதற்கு என்ன காரணம் என்று பார்த்த போது, ‘இன்றைக்கு நிறைய மீன்கள் அள்ளப் போகிறோம்’ என்று கற்பனையாக நினைப்பவர்களுக்கு, ஆழ்மனதில் ஆசைப்படுபவர்களுக்கு வலையில் நிறைய மீன்கள் அகப்படுகின்றன. ஒரு தொழிலாக மட்டும் நினைத்து ‘ஏதோ வருவது வரட்டும்’ என்று நினைத்து வலையை வீசுபவர்களுக்கு மிகக் குறைந்த அளவே அகப்படுகின்றன என்பது தெரிய வந்தது. அதே போல் பள்ளி வகுப்பறையில் மாணவர்களைப் பாருங்கள். முதல் ரேங்க் எனக்குத்தான் என்று திண்ணமாக எண்ணிப் படிக்கும் மாணவன் முதல் ரேங்க்கையே பெறுகிறான். ‘ஏதோ படிக்கிறேன். மார்க் வரவா போகுது’ என்று ஏனோ தானோ என்று பேசும் மாணவன் பெறும் மதிப்பெண்களும் ஏனோதானோவென்று தான் இருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளில் கூட வென்றே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஆடும் வீரனே வெற்றி பெறுகிறான். பொதுவாக வாழ்க்கையில் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் வெற்றி பெறவே விரும்புகிறார்கள் என்பது பொதுக் கருத்தாக இருந்த போதிலும், அவர்களில் யார் சாதனையாளர்கள் ஆகிறார்கள் என்று பார்த்தால், வெற்றியை யார் ஆழ்மனதில் தீவிரமாக தினந்தோறும் சிந்தித்துப் பார்க்கிறார்களோ, ஆழ்மனதில் வெற்றியை ஒரு தவமாக, தியானமாக எண்ணி எண்ணிக் கற்பனை செய்கிறார்களோ அவர்களே சாதனையாளர்கள் ஆகிறார்கள், சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள். உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம். நிறைய கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி விட்டீர்கள். நிறைய தகுதிகள் இருந்தும் நேர்முகத் தேர்வின் போது ஏதோ காரணத்தால் வெற்றி பெற முடியவில்லை. தேர்வாளர் முன்னிலையில் ஏதோ ஒரு அச்சத்தால் சரிவர பதில் சொல்ல முடியாமல் போய்விடுகிறது என்று சொல்கிறீர்களா? இப்போது கூறும் ஆலோசனைப்படி முயற்சி செய்து பாருங்கள். அடுத்த நேர்முகத் தேர்வில் வெற்றி நிச்சயம். தனியாக ஒரு அறையில் அமர்ந்து கண்மூடி ஒரு பத்து நிமிடங்கள் கீழ்க்கண்ட காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். நேர்முகத் தேர்வாளர் அறைக்குள் நீங்கள் மிகவும் தைரியமாக, சந்தோஷமாக நுழைகிறீர்கள். தேர்வாளர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமானவராகக் கண்ணுக்குத் தெரிகிறார். வணக்கம் சொல்லி அமர்கிறீர்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் புன்சிரிப்புடன் மிக அழகாக பதில் சொல்கிறீர்கள். அவர் முகமும் திருப்திகரமாக மலர்வதைக் கண்டு கொள்ள முடிகிறது. திருப்தியடைந்தவராய் கை குலுக்குகிறார். நீங்களும் நன்றி கூறி வெளியே வருகிறீர்கள். இந்தக் காட்சியை ஒரு நாளைக்குக் குறைந்தது இரு முறையாவது ஆழ்மனதில் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்த வாரம் நடக்கும் நேர்முகத்தேர்வின் போது, ஏற்கனவே எல்லாம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதைப் போன்று மனதில் தைரியம் பிறக்க, அந்த இன்டர்வியூவில் நிச்சயம் வெற்றிதான். இதே போல் தான் சொந்தமாகக் கடை ஒன்றை வைத்திருக்கிறீர்கள் என்றால் அதிகாலையில் எழும் போதே படுக்கையில் இருந்தபடியே கூட இந்த ஆழமான சிந்தனையைத் துவங்குங்கள். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆண்டவனை நினைத்து வேண்டிவிட்டு, உங்கள் கடையைப் பற்றிய ஆழ்மன கற்பனையைத் துவங்குங்கள். கடைக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவது போலவும், ஜோராக விற்பனை நடைபெறுவது போலவும், அதிக அளவில் வருமானம் வந்து குவிய நீங்கள் சந்தோஷமாக வீடு திரும்புவது போலவும் மனக்கண்ணால் ஆழ்மனதில் திரைப்படம் போல காட்சிகளைப் பாருங்கள். அன்றைக்கு உங்கள் கடையில் வியாபாரத்தை கவனித்துப் பாருங்கள். மனக்கண் காட்சிகள் கண்முன் நிச்சயமாக நடக்கும். தினம் தினம் விற்பனை சூடுபிடிக்க பிறகென்ன பிஸினெஸில் நீங்கள் புலிதான். அதாவது நாம் எதை அடைய விரும்புகிறோமோ அதை அடைந்துவிட்டதாகக் கற்பனை செய்து ஆழ்மனதில் ஒரு காட்சியாகக் கண்டுகொள்வது நம் வெற்றிக்குப் பெருமளவில் துணைபுரியும். இதை அக்கால ஆன்மீகக் கதைகள் வாயிலாகவும் அறியலாம். இறைவனைக் காணவேண்டி மனதளவில் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இறைவனைக் காண்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு தவம் இயற்றிய ரிஷிகள் தவப்பயனின் வாயிலாக இறைவனைக் கண்டிருக்கிறார்கள். ஆழ்மன எண்ணங்களே செயலாகிற என்பது நிச்சயமாக சாத்தியம். எவ்வாறெனில், அருட்தந்தை திரு.வேதாத்திரி மகரிஷி அவர்கள் தனது மனவளக்கலை மூலமாகக் கூறுவது என்னவென்றால் கடவுள் என்பது பிரபஞ்சப் பேராற்றலே. பிரபஞ்சப் பேராற்றல் வான் காந்தமாக எங்கும் பரவியுள்ளது. இதன் ஒரு சிறு துகளே ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஜீவகாந்தமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக வான் காந்த சக்தியின் சிறு பகுதியே ஜீவ காந்த சக்தி. நம் எண்ணங்கள் விரிய விரிய ஜீவ காந்தத்தின் சக்தி விரிவுபட்டு வான் காந்தம் எனப்படும் பிரபஞ்சப் பேராற்றலுடன் தொடர்பு கொள்ள விழைகிறது. அப்போது அந்த ஜீவகாந்த சக்திக்குத் தனி ஆற்றல் பேராற்றல் வந்து சேர்கிறது. ஆழ்மன எண்ணங்கள் பேராற்றல் துணை நிற்க பெரும் சாதனைகளாகின்றன, சரித்திரங்கள் படைக்கின்றன. இந்த ஆழ்மன எண்ணங்களை ஒத்திகை பார்க்கும் போது சிலவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். தினமும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களானாலும் சரி, அவர்களிடம் இன்று காலை நான் இவ்வாறு செய்தேன். பலன் அபரிமிதமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். கேட்கும் உள்ளங்கள் எப்படிப்பட்டவை என்று சொல்ல முடியாது. சமயத்தில் இது குறித்து உங்களைக் கேலி, கிண்டல் செய்யலாம். எனவே எப்போதும் மிகச் சிறந்த விஷயங்களை உங்களுக்குள்ளாகவே, உங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக வைத்துக் கொள்வதே நல்லது. அடுத்து ஒரு போதும் ஆழ்மனதில் தோல்வி அடைவது போலவும், விரக்தி மனப்பான்மையுடன் இருப்பது போலவும் கற்பனை செய்யாதீர்கள். எதை ஆழமாக எண்ணினாலும் அப்படியே செயல்படுத்துகிற சக்தி ஆழ்மனதிற்கு உண்டு அல்லவா? எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். மனம் வருந்திக் கொண்டிருப்பது போன்ற சூழ்நிலையையே மனம் திரும்பத் திரும்ப எண்ணினால், உங்கள் வாழ்க்கையும் வருத்தம் நிறைந்ததாகவே மாறிவிடக் கூடும். அடுத்து ஒரு முக்கியமான கருத்து. ஆழ்மனதில் ஒன்றைக் குறித்து மட்டுமே ஒரு நேரத்தில் எண்ண வேண்டும். பல்வேறு எண்ணங்களை ஒரே நேரத்தில் நினைத்து நீங்களும் குழம்பி, ஆழ்மனதையும் குழப்பிவிடாதீர்கள். ஒரே எண்ணம் ஒன்றாகக் குவிகிற போது தான் அந்த எண்ணத்திற்கு ஒரு வலிமை கிடைக்கிறது. எனவே, இன்றிலிருந்து நீங்கள் செய்ய வேண்டியது என்ன? உங்கள் சாதனையை ஒரு மனச்சாட்சியாக மாற்றி, ஆழ்மனதில் நிலைநிறுத்தி அதன் மீது உங்கள் எண்ணத்தை அவ்வப்போது செலுத்திப் பாருங்கள். வெற்றி உறுதி. ஆஞ்சநேயருக்கு அவரது பலம் என்னவென்று தெரியாது என்று புராணத்தில் சொவார்கள். அதுபோல உங்கள் பலம் என்னவென்று நீங்கள் தெரியாமல் இருக்கிறீர்கள். ஆழ்மன அற்புதத்தின் மூலம் உங்கள் பலத்தை முழுமையாக உணர்ந்து, வெளி உலகத்திற்குக் காட்டுங்கள். மகத்தான ஆழ்மன சக்தி உங்களிடம் இருப்பதை முழுமையாக நம்பி செயல்படுங்கள். ஆழ்மன சக்தி பல்வேறு அற்புதங்களை உங்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடத்தும் என்பது உறுதி. சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |