http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.




1. நம்பி கை வை! நம்பிக்கை வை!

... தொடர்ச்சி ...

     போலியோவால் கால்களில் சக்தி இழந்து, மருத்துவரால் நடக்க இயலாதவர் என்று கைவிடப்பட்ட வால்டர் டேவிஸ். தன் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்ககயால், உயரம் தாண்டும் போட்டியில் நிறைய பயிற்சிகள் எடுத்து 6 அடி 11 1/2 அங்குலம் தாண்டி உலக சாதனை படைத்தார்.

     ஏழை விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரஹாம் லிங்கன் தன் மேல் எவ்வளவு தூரம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தால் அமெரிக்க ஜனாதிபதி அந்தஸ்து அளவிற்கு உயர்ந்திருக்க முடியும்!

     வலது கால் முழுவதும் செயலற்ற நிலையில் சக்கர நாற்காலியிலேயே உலகைச் சுற்றி வந்து 12 ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாகப் பணியாற்றிய ரூஸ்வெல்ட்டின் தன்னம்பிக்கையை அளவிட முடியுமா?

     காது தனக்கு சுத்தமாகக் கேட்கவில்லையே என்று சோர்ந்து விடவில்லை பீத்தோவன். 'ஒன்பதாவது சிம்பொனி' என்ற இசையை அமைத்து உலகப் புகழ் பெற்ற இசை அமைப்பாளரானார்.

     "பாரடைஸ் லாஸ்ட்" உள்பட புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகளை மக்களுக்கு வழங்கிய கவிஞர் மில்ட்டன் பார்வையற்றவர்.

     "கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் பெறுவோம்" என்ற ஆழ்ந்த நம்பிக்கையால் அஹிம்சை முறையினால் சுதந்திரம் பெற்றுத் தந்தாரே நம் மகாத்மா.

     இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

     உங்களில் பலருக்கு பல விஷயங்களில் நல்ல திறமை இருக்கலாம். உழைக்கும் தன்மையும் இருக்கலாம். ஆனால் இவை இருந்தும் நீங்கள் இன்னும் சாதனையாளர் வரிசையில் சேராமல் தடுப்பது எது? 'நிச்சயம் வெற்றி பெறுவேன்' என உங்களை நீங்கள் முழுமையாக நம்பாததே காரணம்.

     முதலில் "உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். அதன்பின் இறைவனை நம்புங்கள். உங்களால் இந்த உலகையே அசைத்துக் காட்ட முடியும்" என்கிறார் சுவாமி விவேகானந்தர். உங்கள் மேல் நீங்கள் முழு நம்பிக்கை வைத்தால் போதும். இறை நம்பிக்கையும் கூடவே இருந்தால், இறையருள் ஓடி வந்து உங்களுக்கு உதவும்.

     "இறை சக்தியானது நம் கண்ணுக்குத் தெரியாமலேயே பின்புலத்தில் நமது பலவீனத்திற்கு மாற்றாகச் செயல்படுகிறது. நம்முடைய நம்பிக்கையும், வைராக்கியமும் தோற்றவிடத்தும் அது நம்மை ஆதரித்துக் காக்கிறது. பார்வை இழந்தவர்களுக்குப் பார்வை அளிப்பதும், முடவர்களை மலையேற வைப்பதும் இந்த சக்தியே" என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

     பஞ்ச பூதங்களில் கலந்துள்ள இறை சக்தியின் ஒரு துகளே உங்களில் உயிர் சக்தியாக இருக்கிறது. உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உயிர் சக்தியை இயக்கிப் பாருங்கள். இறை சக்தியும் உங்களுள் கலந்துவிட, பிறகென்ன... சாதனையாளர் பட்டியலில் உங்கள் பெயரும் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.

     உங்களை நீங்களே செதுக்க ஆரம்பித்து விட்டீர்கள் அல்லவா? நிச்சயம் அழகிய சிற்பம் உருவாவது உறுதி, வாழ்த்துக்கள்.




இணைய பக்க முகவரி:
http://www.chennailibrary.com/geethadeivasigamani/silaiyumneeyae/snsn2.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs