சிலையும் நீயே சிற்பியும் நீயே 12. “பிறருக்காகவும் வாழுங்கள்” “இந்த ஒன்றை நான் அறிவேன். உங்களில் யாரெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ, அவர்களெல்லாம் சேவை செய்வதற்கான வாய்ப்பைத் தேடிக் கண்டுபிடித்து செய்து வருபவர்களாக இருப்பீர்கள்” என்கிறார் ஆல்பர்ட் ஸ்வைட்சர் எனும் இசைக் கலைஞர். ஆம்... நீங்கள் மக்களை மகிழ்வூட்டுவதற்காக இசைச் சேவை செய்து வரும் இசைக் கலைஞராக இருக்கலாம். மக்களை நன்னெறிப்பௌத்துவதற்காக எழுத்துச் சேவை செய்து வரும் எழுத்தாளராக இருக்கலாம். மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகாசனம், தியானம் கற்றுத் தரும் சேவை புரிபவராக இருக்கலாம். ‘கல்விச் சேவை, மருத்துவச் சேவை, கலைச் சேவை, ஆன்மீகச் சேவை’ இப்படிப் பல சேவைகளில் ஈடுபடுபவராக இருக்கலாம். நீங்கள் அனைவரும் ஒன்றை ஆத்மார்த்தமாக உணர்ந்திருப்பீர்கள். அதாவது ‘ஆத்ம திருப்தி’. இந்த ஆத்ம திருப்தி என்பது மற்ற ஆத்மாக்களைத் திருப்திப் படுத்தும் போது மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. ‘ஷிவ் கெரா’ எனும் சிந்தனையாளர் தாம் எழுதிய ‘யு கேன் வின்’ (உங்களால் வெல்ல முடியும்) எனும் ஆங்கில நூலில் ‘வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் பிறரைப் பற்றியும் எண்ண வேண்டும். தன்னலம் கருதாமல் பிறருக்காக வாழும் பண்பு இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார். அதற்கு அவர் சொன்ன குட்டிக் கதை இதோ: ஒரு பத்து வயதுச் சிறுவன் ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் அமர்ந்த அவன் அங்குள்ள பணிப்பெண்னிடம் ஒரு குறிப்பிட்ட ஐஸ்கிரீம் பேரைச் சொல்லி அதன் விலை என்ன என்று கேட்க, அவளும் அது ‘எழுபத்தைந்து சென்ட்கள்’ என்றாள். உடனே அந்தப் பையன் தன் கையில் உள்ள சென்ட்களை எண்ணத் தொடங்கினான். பிறகு அவளிடம் ‘அதிலேயே சின்ன கப் என்ன விலை?’ என்று கேட்டான். அவள் பொறுமை இழந்தவளாக ‘அறுபத்தைந்து சென்ட்கள்’ என்று சொன்னாள். அந்தப் பையன் அந்தச் சிறிய கப் ஐஸ்கிரீமையே கொண்டு வரச் சொல்லி ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு பில் தொகையை செலுத்தி விட்டுக் கிளம்பி விட்டான். காலித் தட்டை எடுக்க வந்த பணிப்பெண் மனமுருகிப் போனாள். காரணம் அந்தத் தட்டுக்கு அடியில் பத்து சென்ட் சில்லறைகள் அவளுக்காக டிப்ஸாக வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சிறுவன் ஐஸ்கிரீம் வாங்குவதற்கு முன் அந்தப் பெண்ணிற்கு டிப்ஸாக ஏதாவது தர எண்ணி இருந்திருக்கிறான். பெரிய கப் ஐஸ்கிரீம் சாப்பிட சரியான சில்லறை அவனிடம் இருந்த போதும், அவளுக்காக ஏதாவது கொடுக்க நினைத்து சிறிய கப் தனக்குப் போதும் என்று நினைத்திருக்கிறான். அதாவது தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன் பிறரைப் பற்றி எண்ணி இருக்கிறான். அந்த நிமிடம் அவன் பிறருக்காக வாழ்ந்திருக்கிறான். ஐஸ்கிரீம் கப்பின் அளவு சிறியதாக இருந்த போதும் அவன் மனம் வெகுவாகக் குளிர்ந்திருந்தது. காரணம் பிறருக்கு ஒன்றைத் தந்த சந்தோஷம் அவனுக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது. இதையே ஈத்துவக்கும் இன்பம் என்பார்கள்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர்.” என்கிறார் திருவள்ளுவர். அதாவது தனக்காகவே பொருளை வைத்திருந்து பிறகு இழக்கும் கல் நெஞ்சர் வறியவருக்கு ஒன்றை ஈந்து அதனால் பெறும் இன்பத்தை அறியாதவரே என்கிறார். உதாரணமாக ஒரு தாய் தன் குழந்தையின் கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைக் கொடுக்கிறாள். அந்தக் குழந்தையும் அந்த பிஸ்கெட்டைப் பிரித்து, அதிலுள்ள பிஸ்கெட்டை ஒவ்வொன்றாக எடுத்து அருகில் உள்ளவர்களுக்குக் கொடுத்துத் தானும் சாப்பிடுகிறது. அதைப் பார்த்த தாய் உடனே முகம் மலர்கிறாள். குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறாள். “பார்த்தீர்களா என் குழந்தையை, எல்லோருக்கும் கொடுத்துட்டுதான் தான் சாப்பிடுகிறான்” என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள். மற்றவர்களை நினைத்துப் பார்க்கிறது தன் குழந்தை என்பதை நினைக்கும் போது தாய்க்கு அவ்வளவு பூரிப்பு. பெற்ற தாயைப் போலத்தான் நம்மைப் படைத்த ஆண்டவரும். மற்றவர்களுக்கு உதவுவதற்காக நிறைய சந்தர்ப்பங்களை நம் கையில் கொடுத்து நாம் என்ன செய்கிறோம் என்று வேடிக்கை பார்க்கிறார். மற்றவர்களை நினைத்துப் பார்க்கிறோம். அவர்களுக்கு நம்மால் முடிந்த சேவைகளைச் செய்கிறோம். மற்றவர்கள் மீது அன்புப் பார்வை பார்க்கிறோம் என்று அறியப்படும் போது அந்த ஆண்டவனின் அருட் பார்வை நம் மீது விழுகிறது. நாமும் வாழ்க்கையின் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுகிறோம். அன்றைய இதிகாச உலகில் பிறருக்காக வாழ்ந்து தனது கொடை சேவையால் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவன் கர்ணன். இன்றைய சமுதாய உலகில் பிறருக்காக வாழ்ந்து தனது தன்னிகரற்ற தொண்டினால் இன்றளவும் நம் மனதில் இடம் பிடித்தவர் மதர் தெரஸா. பிறருக்காகவே வாழ்ந்த மேலும் இருவரை நினைவு கூறலாம்: கிடைத்த எல்லா வேலைகளையும் பார்த்து, சேமித்து சேமித்ததை வைத்தே எண்ணெய்க் கிணறு சம்பந்தப்பட்ட தொழிலில் பங்குதாரர் ஆனார் ராக்பெல்லர். பிறகு ஸ்டாண்டர்டு ஆயில் கம்பெனி தலைவராக, தொழில் அதிபராக மாபொரும் கோடீஸ்வரர் ஆனார். கோடீஸ்வரர் ஆன போதும் தனக்காக வாழ விரும்பாது, தான் சம்பாதித்ததை மனித குலத்துக்காக உதவ முன் வந்து கல்வி வளர்ச்சி, மருத்துவ ஆராய்ச்சி, மத சேவை என்ற இந்த மூன்றுக்கும் செலவிட்டார். சம்பாதித்தது அனைத்தையும் பிறருக்கே திருப்பித் தந்ததால் இவர் வாழ்க்கையில் தோல்வி என்பதே காணாத, சந்தோஷ மனிதராக தனது 98 வயது வரை வாழ்ந்து மறைந்தார். பிறருக்காக வாழ்வதிலேயே நிறைவைக் காண்கிறேன் என்று சொன்ன அவரை உலகம் எளிதில் மறக்காது. “திருமணம், வசதியான வாழ்வு இரண்டையுமே விரும்பவில்லை. மனித குலத்துக்குத் தொண்டு செய்யவே விரும்புகிறேன்” என்று கூறிய தன் மகளின் விருப்பத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் பெற்றோர்கள். இருப்பினும் அவளது விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர். மகளும் நவீன நர்சிங் முறையை அறிமுகப்படுத்தி பிரிட்டீஷ் மருத்துவமனைகளை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அவர் தான் தொண்டு செய்தவாறே தனது 96 வயது வரை வாழ்ந்து மறைந்த ஃப்ளாரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். நாம் பிறருக்காக வாழும் போது நம் எண்ணங்கள், சொல், செயல் யாவும் இறையருளோடு சேர்ந்த ஒன்றாகி விடுகிறது. இறையருள் உடனிருக்க வெற்றி நம் பக்கம் இருக்கும் என்பதை விளக்கும் குட்டிக் கதை இதோ: பிறருக்காக அன்றாடம் ஒரு சின்ன உபகாரமாவது செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்னச் சின்ன உபகாரங்கள் உங்கள் உள்ளத்தில் உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களாலும் உங்கள் உதவிகள், உபகாரங்கள் நினைத்துப் பார்க்கப்படும். உங்களுக்கு ஒரு தேவை எனும் போது அவர்கள் உதவிக்கரம் விரைந்து உங்களுக்காக செயல்படும். பிறருக்காக அன்றாடம் ஒரு சின்ன உபகாரமாவது செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் செய்யும் சின்னச் சின்ன உபகாரங்கள், உங்கள் உள்ளத்தில் உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களாலும், உங்கள் உதவிகள், உபகாரங்கள் நினைத்துப் பார்க்கப்படும். உங்களுக்கு ஒரு தேவை எனும்போது அவர்கள் உதவிக்கரம் விரைந்து உங்களுக்காக செயல்படும். “வெற்றி பெற்ற மனிதனாக வாழ முயல்வதை விட பிறருக்கு உபயோகமுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்” என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். எப்போதும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை நினைத்துப் பாருங்கள். ஆண்டவன் எப்போதும் உங்களைச் சுற்றியே இருப்பார். சிலையும் நீயே சிற்பியும் நீயே : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |