இணைய தமிழ் நூலகம்
25.09.2006 முதல் - 13வது ஆண்டில்
     

6 மாதம்
ரூ.118/-
பணம் செலுத்த
5 வருடம்
ரூ.590/-
புதிய உறுப்பினர்:
Suresh Nagarajan (11-11-2019)
மொத்த உறுப்பினர்கள் - 292
தமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்!
இந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க
இந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:
(Gowtham Web Services | Current A/C No.: 50480630168 | Allahabad Bank, Nolambur Branch, Chennai | IFS Code: ALLA0213244 | SWIFT Code : ALLAINBBMAS)
(நன்கொடையாளர்கள் விவரம்)
உறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்
1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது

  புதிய வெளியீடு!21

     காசுளையும், ரெளடிகளையும் ஏவி விட்டுத் தன்னைத் தாக்கி எழுதிய அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்குத் தீ வைக்கவும், சேதம் விளைவிக்கவும் ஏற்பாடு செய்தான் திரு. பொறுப்பில்லாமல் ஆளும் கட்சியைத் தாக்கி எழுதியதற்காக மக்களே கொதிந்தெழுந்து அந்தப் பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கித் தீயிட்டனர் என்பது போல் பின்னால் திரு வகையறாவினரால் அந்த நிகழ்ச்சி வர்ணிக்கப்பட்டது. தாங்கள் எது செய்தாலும் அதை ஆதரிப்பவர்கள் மக்கள், எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள் என்று துணிந்து சொல்வதற்கு அவன் பழக்கப்படுத்திக் கொண் டிருந்தான். ஜனநாயகம் என்பது அந்த எல்லைக்குமேல் விரிவாக அவனுக்குப் புரியவில்லை.

     அப்போதுதான் பொறுப்பேற்றிருந்த அமைச்சின் இலாகா காரணமாகவும், பதவி காரணமாகவும் பல பணக்காரர்கள் தொழிலதிபர்களின் நட்பும், பழக்கமும் அவனுக்கு ஏற்பட்டன. அண்ணனை நெருங்கியும், நெருக்கியும் வசப்படுத்த முடியாத பலர் அவனைச் சுற்றிச் சூழ்ந் தனர். நாளடைவில் அவன் அவர்களுடைய நெருங்கிய நண்பனாகி விட்டான்.

     அவர்களில் தாண்டவராயன் என்கிற உருக்கு ஆலை அதிபர் ஒருவர் தாம் அவனுக்கு அளித்த விருந்து ஒன்றிற்குப்பின் இரவு அகாலத்தில் ஓர் அழகிய ஆங்கிலோ இந்திய யுவதியையும் நைஸாக அறிமுகப்படுத்தி வைத் தார். அவளை அவனோடு நெருக்கமாகப் பழகும்படியும் செய்தார்.

     “வாருங்கள்! மூவருமாகச் சீட்டாடலாம்” - என்று தான் முதலில் அழைத்தார், சிறிது நேரத்தில் விருந்து நடந்த தம் ‘கெஸ்ட் ஹவுஸ்’ மாடி. ஏ.சி. அறையில் அவர்கள் இருவரையும் மட்டும் தனியே விட்டு விட்டுத் தாண்டவராயன் எங்கோ மெல்லத் தலைமறைவாகி விட்டார். இப்படி ஆரம்பமான அந்தப் பழக்கம் தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது. தவிர்க்க முடியாததாகியும் விட்டது.

     “ரோஸி உங்களுக்கே ஃபைல்கள் பார்க்க, தப்பில்லாமல் ஆங்கிலத்தில் ஒரு வரி, ரெண்டு வரி நோட் போட இதற்கெல்லாம். ரொம்ப உதவியிருப்பாள். கூட வைத்துக் கொள்ளுங்கள், விட்டு விடாதீர்கள். அவளுடைய சம்பளம் எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை” என்றார் தாண்டவராயன்.

     வாழ்வில் ஏற்கெனவே தனியாயிருந்த அவனுக்கு இப்படி ஒரு துணை வேண்டும் என்று தான் தோன்றியிருந்தது. இப்போது தாண்டவராயனே சொல்லிய பின் அவனும் இசைந்து விட்டான். ஃபைல்கள் அவன் மாலை யிலும், இரவிலும் ரோஸியின் வீட்டில் இருக்கும்போது அங்கே கொண்டு வந்து வைக்கப்பட வேண்டுமென்று ஏற்பாடாகியது. இந்த ஏற்பாட்டின் மூலம் தொழில் வளர்ச்சித் துறையே தாண்டவராயனின் கவனிப்பில் சிக்கியது. ரோஸி ஃபைல்களையும், திருவையும் சேர்த்தே கவனித்துக் கொண்டாள். திருவுக்கு அவனே வேண்டிக் கொண்டபடி ஆங்கிலமும் கற்பிக்கத் தொடங்கினாள். அவனுக்கு ஒத்து வரக்கூடிய ஓர் இளம் அதிகாரி காரியதரிசியாக இருந்ததினால் ஃபைல்களைத் தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸிற்கோ, ரோஸியின் வீட்டிற்கோ, எங்கு வேண்டுமானாலும் அனுப்பத் தயாராயிருந்தார். மந்திரியின் மாணவனைப் போல அடக்க ஒடுக்கமாக அவர் நடந்து கொண்டாரே ஒழிய மந்திரிக்கு வழிகாட்டிச் சர்க்காரை இயக்கிச் செல்ல வேண்டிய பொறுப்புள்ள அதிகாரியாக நடந்து கொள்ளவில்லை. கட்சியில் திருவின் செல்வாக்கையும், வலிமையையும் புரிந்து கொண்டிருந்த மூலவர்கள் இது பற்றி லேசாக ஏனோதானோ என்று எச்சரித்தார்களே ஒழிய வற்புறுத்திக் கண்டிக்கவில்லை. முதல்வர் இது விஷயமாகத் திருவைத் தானே நேரில் எச்சரிப்பதற்குப் பதில் வயது மூத்தவரும் அநுபவசாலியுமான தலைமைச் செயலாளரிடம் சொல்லி அனுப்பினார். தலைமைச் செயலாளர் அவனை அவனுடைய வீட்டிலோ, கோட்டையிலோ சந்திக்கவே முடியவில்லை. சிவனே என்று தலை யெழுத்தை நொந்து கொண்டு அவர் தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸுக்குத்தான் அவனைத் தேடிப் போக வேண்டியிருந்தது. அவருக்கு இது புது அநுபவம்.

     ஃபைல்கள் பிரித்துக் கிடந்தன. லுங்கி பனியனோடு இருந்த திருவுக்கு சிவாஸ்-ரீகல்-விஸ்கியை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ரோஸி. தலைமைச் செய லாளருக்கு ‘ஏனடா இங்கு வந்தோம்?’ - என்று அருவருப்பாக இருந்தது. ஆனாலும் முதலமைச்சரின் கட்டளையை அவர் புறக்கணிக்க மூடியவில்லை. மென்று விழுங்கியபடி திருவிடம் பேச ஆரம்பித்தார் அவர்.

     ஒரு நிமிஷம் வெளியே போய் இருக்குமாறு அவனோடு இருந்த ஆங்கிலோ இந்திய யுவதிக்கு அவர் ஜாடை காட்டினார். அதற்கு அவள் அவரைக் கொஞ்சம் முறைத்தாற் போலப் பார்த்துவிட்டு வெளியேறினாள். பதவி ஏற்ற போது நிகழ்ந்த இரகசியக் காப்புப் பிரமாணத்தை நினைவூட்டி ஃபைல்களை இப்படிப் பார்ப்பது முறையில்லை என்றார் தலைமைச் செயலாளர். அதிகம் ‘டைல்யூட்’ செய்யப்படாமல் உள்ளே போயிருந்த வெளிநாட்டுச் சரக்கின் முறுக்கிலிருந்த திரு உடனே வெளியே போயிருந்த ரோஸியைத் திரும்பவும் உள்ளே கூப்பிட்டான். “நீ இங்கேயே அருகிலிரு! நான் சொன்னால்தான் நீ போக வேண்டும். வேறு யாரோ சொன்னார்கள் என்பதற்காகப் போகக் கூடாது” - என்று அவளிடம் சொல்லிய சுவட்டோடு தலைமைச் செயலாளரின் பக்கம் திரும்பி, “நான் மந்திரியா? நீங்க மந்திரியா? நான்தான் உங்களுக்கு உத்தரவு போடனுமே ஒழிய நீங்க எனக்கு உத்தரவு போடக் கூடாது” - என்று போதை தள்ளாடும் குரலில் அதட்டினான் திரு. அதற்கு மேல் தம் மரியாதையையும், கெளரவத்தையும் இழக்க விரும்பாத தலைமைச் செயலாளர் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசாமல் அங்கிருந்து உடனே வெளியேறினார்.

     “சார்! வுட் யூ லைக் டு ஹாவ் எ டிரிங்க்?” - என்று வராந்தாவில் கூழைக் கும்பிடுதலும் சிரிப்புமாகக் குறுக்கிட்ட தாண்டவராயனைப் பொருட்படுத்திப் பதிலே செல்லவில்லை அவர். நேரே முதலமைச்சரிடம் போய், “இனித் தயவு செய்து இதுமாதிரி வேலைகளுக்கு என்னை அனுப்பி அவமானப்படுத்தக் கூடாது” - என்று வேண்டிக் கொண்டார். முதலமைச்சருக்கு அதிர்ச்சியாகி விட்டது.

     “தாண்டவராயன் மாதிரி ஆட்கள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எப்படிப்பட்ட ஆள், நிதி மந்திரி, தொழில் மந்திரியாக வந்தாலும் இப்படி எல்லாம் வலை விரிப்பார்கள். சிவாஸ் ரிகலில் வீழ்த்த முடிந்தவனுக்குச் சிவாஸ் ரீகலை வாங்கி ஊற்றுவார்கள். திருப்பதி தரிசனம் பிடிக்கிறவனுக்குத் திருப்பதி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வார்கள் ஜாக்கிரதையாயிருக்கணும் தம்பீ” - என்று முதலமைச்சரே அவனைக் கூப்பிட்டு எச்சரித்த போதும் அவன் சிரித்து மழுப்பி விட்டான். தனக்குச் செய்து கொடுத்திருக்கும் உல்லாச ராஜபோக ஏற்பாடுகளைத் தவிரத் தேர்தல் நேரங்களிலும், கட்சிக்குப் பணமுடை ஏற்படுகிற சமயங்களிலும், தாண்டவராயன் தாராளமாக வாரி வழங்குவார் என்றான் திரு. மந்திரிகள் இப்படித் தரம் தாழ்ந்து ஒழுக்கம் கெட்ட காரணத்தால் அதிகார வர்க்கம் இதைவிடக் கீழிறங்கி மரியாதை இழந்தது. கூச்சம், பயம், மான அவமானம் பார்ப்பது போன்ற அம்சங்கள் பொது வாழ்விலிருந்து மெல்ல மெல்ல மறையத் தொடங்கின. ஒவ்வொருவரும், ஒவ்வொரு முனையிலும் தவறு செய்வதற்கான வாய்ப்புக்களை தாமே வலுவில் எதிர்பார்த்துக் காத்து நிற்கிற மாதிரிச் சூழ்நிலை இயல்பாகவே உருவாகிவிட்டது.

     தவறு செய்ய முன்வராதவனும், தவறு செய்யாதவனும் தவறு செய்யத் தெரியாதவனும் அப்பாவிகள் என்று கருதப்பட்டார்கள்.

     சில வருடங்கள் ஓடின. முன்பு அவனைத் தாக்கி எழுதிய அதே பத்திரிகை மறுபடி அவன் மேல் தன் கவனத்தைத் திருப்பியது. அவனை மட்டும் ‘லிங்கிள் அவுட்’ செய்து மறுபடியும் தாக்கியது.

     ‘முந்திய ஆட்சியில் இருந்ததுபோல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ - என அமைச்சர் திரு பேசுவதில் ஓர் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் முந்திய ஆட்சியில் இருந்ததைவிட லஞ்ச ஊழல் இப்போது இந்த ஆட்சியில் பல மடங்கு அதிகரித்து ரேட்கள் மிகவும் கூடுதலாகி விட்டன. அதைக் குறிப்பாக உணர்த்துவதற்காகவே அமைச்சர் திரு அடிக்கடி ‘முந்திய ஆட்சியில் இருந்தது போல் எங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் இல்லை’ என்று சொல்கிறார். இந்தச் சமிக்ஞையை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் - என்று முன்பு எழுதி அவனை வம்புக்கு இழுத்த அதே எதிர்க்கட்சிப் பத்திரிகை இப்போது, ‘ஆசை நாயகி வீட்டில் அரசாங்க ஃபைல்கள்’ என்றொரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. முந்திய கட்டுரையை எழுதிய ‘எழில் ராஜா’ என்பவனே இந்தக் கட்டுரையையும் எழுதியிருந்தான். யார் இந்த எழில் ராஜா? இவனுக்கு ஏன் என்மேல் மட்டும் இத்தனை காட்ட மும், ஆத்திரமும்? இவற்றை எல்லாம் அறியும் ஆவலில் போலீஸ் சி.ஐ.டி. மூலமும், கட்சி உளவாளிகள் மூலமும் அந்த எழில்ராஜாவைப் பற்றித் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினான் திரு. தகவல்கள் தெரிந்தன. பணத்தை வீசி எறிந்து எழில் ராஜாவை வசப்படுத்த முடியாதென்று தெரிந்தது.

     எழில்ராஜா மாணவப் பருவத்திலிருந்தே திருவுக்கு எதிரான அரசியல் அணியில் தேசீய இயக்க ஆளாக வளர்ந்த ஓர் இளைஞன் என்பதும் பட்டப்படிப்பு முடித்து ஓராண்டு ஜர்னலிஸம் - டிப்ளமாவுக்காகப் பயிற்சியும் பெற்று முடித்து இப்போதுதான் அந்தப் பத்திரிகையில் சேர்ந்திருக்கிறான் என்றும் தெரிந்தது. ‘இன்வெஸ்டி கேடிவ்’ வாக எழுதுவதில் ஆர்வம் அதிகமென்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள். தொடர்ந்து தன்னைப் பற்றியே குறிவைத்துத் தாக்கி எழுதும் அந்தப் பொடியனை எப்படிப் பழி தீர்ப்பது என்று திரு யோசிக்கத் தொடங்கினான். இன்று அதுவும் ரோசியையும், தன்னையும் சம்பந்தப்படுத்தி அவன் எழுதியிருந்ததையும் ‘ஆசை நாயகியின் அந்தப்புரத்தில் அரசாங்க ஃபைல்கள்’ என்ற கட்டுரையைப் படித்ததிலிருந்தே திருவுக்கு அவனைத் தொலைத்துவிட வேண்டும் என்று வெறி மூண்டிருந்தது. “ஒரு கவலையும் வேண்டாம்! நீங்கள் இங்கே வருவது போவது, ரோஸியிடம் பழகுவது எல்லாம் பரம ரகசியமாக இருக்கும்” - என்று தாண்டவராயன் பலமுறை உறுதி கூறியிருந்தும் இந்த விவகாரங்கள் எப்படி லீக் ஆகின்றன என்பது திருவுக்கே புரியாத புதிராகயிருந்தது. தன் வலையில் சிக்கிய மந்திரிகள் தனக்கு எதிராகப் போய் விடக் கூடாதென்பதற்காகத் தாண்டவராயனே இரகசியமாகப் பின்னால் அவர்களைப் பிளாக்மெயில் செய்யப் பயன்படும் என்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம். திருவுக்கு ரோஸி மது ஊற்றிக் கொடுப்பது போல் தாண்டவராயன் ரகசியமாக எடுத்த புகைப்படம் ஒன்றை பிரிண்ட் போடக் கொடுத்த இடத்தில் - பிரிண்ட் போட்டவன் அதிகப்படியான பிரிண்ட் ஒன்றை எடுத்துக் கொண்டு தான் ‘நெகடிவை’ வைத் திருப்பிக் கொடுத்தான். இதை எப்படியோ மோப்பம் பிடித்துச் சில ஆயிரங்கள் வரை விலை கொடுத்து அந்த ‘பிரிண்ட்’ டை வாங்கினான் எழில்ராஜா. இரண்டு ரூபாய் பெறுமானமுள்ள பிரிண்டுக்கு ஆயிரணக்கணக்கில் பணம் கிடைக்கும்போது ஸ்டுடியோக்காரன் அதைக் கொடுப்பதற்குத் தயங்கவில்லை.

     அதுமட்டும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பத்திரிகையாக இல்லாத பட்சத்தில் திரு அந்தப் பத்திரிகை முதலாளியைக் கூப்பிட்டே அரட்டி மிரட்டி எழில்ராஜவை லேலையிலிருந்து துரத்தும்படிச் செய்திருப்பான். அல்லது மேற்கொண்டு தன்னைப்பற்றி எதுவும் எழுத முடியாதவாறு அவர்களைத் தடுத்திருப்பான்.

     அது நூற்றுக்கு நூறு அவனது எதிர்த்தரப்புப் பத்திரிகையாகவே இருந்ததனால் அப்படி ஏற்பாடு எதுவும் சாத்தியமாகவில்லை. தவிர எழில்ராஜாவின் கட்டுரைகள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு அந்த பத்திரிகையின் விற்பனையே அதன் காரணமாகப் பல ஆயிரம் பிரதிகள் கூடியிருந்தன. இன்வெஸ்டிகேஷன், பிரயாணங்கள், தடயங்கள் , தடையங்களை விலைபேசி வாங்குதல், ஆகியவைகளில் எழில்ராஜாவுக்கு ஆகிற செலவுகளையெல்லாம் அந்தப் பத்திரிகை மிகவும் தாராளமாகவே செய்வதாகத் திருவுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால் பத்திரிகை நிறுவனத்தை மிரட்டி ஒடுக்கும் செயல் பயனளிக்காது என்று புரிந்துவிட்டது. எழில்ராஜாவை எப்படித் தொலைப்பது என்று அவன் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ‘விஸ்கிக்கும் விலைமாதருக்கும் நடுவில் அரசாங்கப் ஃபைல்கள்’ என்ற மூன்றாவது கட்டுரையும், அந்தப் புகைப்படமும் வெளிவந்து திருவை ஒரு வாரகாலம் வெளியே தலை காட்ட முடியாமல் செய்து விட்டது. தாண்டவராயனின் கெஸ்ட் ஹவுஸில் மேசையில் கிடக்கும் அரசாங்கப் ஃபைல்களோடு ரோலி தனக்குப் பாட்டிலிலிருந்து மது ஊற்றிக் கொடுப்பது போன்ற அந்தப் புகைப்படத்தை யார் எப்படி எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதுதான் திருவுக்கு விளங்காத மர்மமாயிருத்தது. ஒரு கணம் தாண்டவராயன், ரோஸி, ஹெஸ்ட் ஹவுஸ் வேலையாட்கள் எல்லோர் மேலேயும் சந்தேகமாயிருந்தது. இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்ற அளவு அவனுடைய ஆத்திரம் எல்லை மீறிப் போய்விட்டது. ஒன்று - தான் உயிர்வாழ வேண்டும் அல்லது அந்தப் பொடியன் எழில் ராஜா உயிர்வாழ வேண்டும், என்ற வைராக்கியத்தோடு, ஒரு முடிவு செய்தாக வேண்டிய நிலைக்குத் தூண்டப்பட்டான் அவன், எவ்வளவு செலவானாலும் பரவயில்லை, எழில்ராஜாவைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான். உளவாளிகள் மூலம் தெரிந்த தகவலின்படி எழில்ராஜா அபாரத் துணிச்சலும் தைரியமும் உள்ளவன் என்று தெரிந்தது. திருவல்லிக்கேணியிலோ, ராயப்பேட்டையிலோ தன்னையொத்த வயதுள்ள இரண்டு மூன்று இளம் பத்திரிகையாளர்களுடன் ஒர் அறையில் தனியாக வசிக்கிறான் என்றும் தெரித்தது. எப்படிக் கண்ணி வைத்து எந்த மாதிரி ஆளைத் தீர்ப்பது என்று. திருவும் அவனுடைய அடியாட்களும் யோசித்தனர். எழில்ராஜாவின் இலக்கு திருவாக இருந்ததால் திரு மறைமுகமாகச் சம்பந்தப்பட்டிருந்த ஒரு கள்ளச் சாராயத் தொழிற்சாலை அமைந்திருந்த வளசரவாக்கத்து மாந்தோப்புக்கு அன்றிரவு திருவே வர இருப்பதாகத் தகவல் சொல்லி, எழில்ராஜாவை அங்கே இழுக்கலாம் என்று திட்டமிட்டனர். தகவலை எழில்ராஜாவிடம் போய்ச் சொல்லுகிறவர்கள் கதர்ச் சட்டை குல்லாய் அணிந்து தேசிய ஆட்கள் போலத் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றும் ஏற்பாடாயிற்று. அப்போதுதான் எழில்ராஜாவுக்கு அந்தத் தகவலில் நம்பிக்கை ஏற்பட்டு அவர்களோடு போய் அதைப் பற்றி ஒரு கட்டுரை தயாரிக்கத் தோன்றும் என்று திருவும், மற்றவர்களும். நம்பினார்கள். கூட்டிக்கொண்டு. போய் ஆளரவமற்ற பகுதியில் எழில்ராஜாவின் வரலாற்றை அன்றிரவே தீர்த்து முடிவுரை எழுதி முடித்து விடலாம் என்பது அவர்கள் திட்டமாயிருந்தது.

     ஆட்களுக்கு எல்லாம் சொல்லிப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, அவன் வேறு வேலைக்குக் கிளம்பலாம் என்று எழுந்த போது புலவர் வேணுகோபால் சர்மா அவனைத் தேடி வந்தார். “வாங்க சாமீ! ஏது ரொம்ப நாளாக் காணவே இல்லியே?” என்று அவன் புலவரை வரவேற்றான். சினிமா வேலைகள் குறைந்து அவன் பதவியேற்று மந்திரியான பின்பு எப்போதாவது அவன் எழுத வேண்டிய கட்டுரைகள், அறிக்கைகளை எழுதித் திருத்தி அளிக்க வருவதோடு இப்போது அவர் தொடர்பு மிகவும் குறைந்து போயிருந்தது.

     இன்று வந்ததும் வராததுமாக அவரே அவனை முந்திக் கொண்டு ஆரம்பித்தார். அவரது குரலிலும், முகத்திலும் ஒரே ஆச்சரிய மயம்.

     “உங்களுக்குத் தெரியுமோன்னோ? அதைச் சொல்லிட்டுப் போலாம்னுதான் வந்தேன். ஒருவகையிலே உங்களுக்கு அதிர்ச்சியாகவும், கோபமாகவும் இருக்கும். இன்னொரு விதத்திலே நீங்க பெருமைப்படவும் செய்யலாம்...” என்று தொடங்கி ஒரு கணம் நிறுத்தி விட்டுச் சர்மா சொன்ன தகவலைக் கேட்டதும் தன் தலையில் பயங்கரமான பேரிடி ஒன்று விழுந்ததுபோல் உணர்ந்தான் திரு. கண்மூன் உலகமே இருண்டு கொண்டு வந்தது.

     “பாவி மனுஷா நீர் ஒரு நிமிஷம் முன்னால் வந்து தொலைத்திருக்கக் கூடாதா?” - என்று அவனுடைய உள்ளம் கோவென்று கதறி அலறியது. ஆனால் பேசக் குரல் எழவில்லை.


மூலக் கனல் : முன்னுரை 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்
சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்
புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்
பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம் :  அபிதா
சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை
ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள்
ரமணிசந்திரன்
சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்
க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு
கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம்
மகாத்மா காந்தி :  சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி
பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி :  மதுராந்தகியின் காதல்
வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல்
கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்

எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா
கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்
ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி
ஸ்ரீகுமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்
நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா
பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தூது இலக்கிய நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது
கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்
பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா
ஆன்மீகம் :  தினசரி தியானம்


ரகசியக் கடிதங்கள்
இருப்பு உள்ளது
ரூ.180.00எம்.ஆர். ராதா
இருப்பு உள்ளது
ரூ.150.00தொழிலதிபர்கள் வணிகர் களுக்கான நினைவாற்றல்
இருப்பு உள்ளது
ரூ.70.00இயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்
இருப்பு உள்ளது
ரூ.225.00முடிசூடா மன்னர்
இருப்பு உள்ளது
ரூ.195.00மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.90.00நெப்போலியன்
இருப்பு உள்ளது
ரூ.330.00அகிலம் வென்ற அட்டிலா
இருப்பு உள்ளது
ரூ.100.00உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.160.00ஸ்டீபன் ஹாக்கிங்
இருப்பு உள்ளது
ரூ.50.00எளிய தமிழில் எக்ஸெல்
இருப்பு உள்ளது
ரூ.100.00பிசினஸ் வெற்றி ரகசியங்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.315.00மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.195.00குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
இருப்பு உள்ளது
ரூ.195.00அன்னை தெரசா
இருப்பு உள்ளது
ரூ.115.00அள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்
இருப்பு உள்ளது
ரூ.200.00குறிஞ்சித் தேன்
இருப்பு உள்ளது
ரூ.180.00ஆப்பிள் பசி
இருப்பு உள்ளது
ரூ.110.00தாவூத் இப்ராகிம்
இருப்பு உள்ளது
ரூ.390.00
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888


பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இனிப்பு நோயின் கசப்பு முகம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)