![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
செய்திகள் (Last Updated: 1 அக்டோபர் 2025 11:45 IST) | ||
|
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 16 |
5 பகல் இரண்டு மணியிருக்கும். ரங்கநாதம் முதலியவர்களைச் சுமந்து வந்த பஸ் கோவை நிலையத்தில் வந்து நின்றது. வண்டிக்காரர்களும் கூடைக்காரர்களுமாகச் கசகசவென்று குழுமியிருந்த அங்கு, விமலாவின் கணவன் மூர்த்தி தலையில் துண்டை மடித்துப் போட்டுக் கொண்டு வெயிலைத் தடுத்த வண்ணம் ஸைகிளைப் பிடித்துக் கொண்டு நின்றான். அன்றையப் பகலுக்குக் காரியாலயத்துக்கு லீவு போட்டு விட்டு அவன் அவர்களை வரவேற்க வந்திருந்தான். “மூர்த்தி வந்திருக்கிறானா பாரடா பாலு!” என்று கூவிய ரங்கநாதம் கைத்தடியை ஊன்றிக் கொண்டு பஸ்ஸைச் சுற்றிக் குழுமியிருந்த கூட்டத்தினிடையே தம் பார்வையால் துழாவினார். இதற்குள், “ஹலோ, இதோ பாலு!” என்று கூட்டத்தையும் வண்டிக்காரர்களையும் தாண்டி நடைபாதையில் நின்ற மூர்த்தியின் குரல் அந்த இடத்தின் இரைச்சல்களை எல்லாம் அமுக்கிக் கொண்டு ஒலித்து, பாலுவை அவன் இருந்த பக்கம் தாவிவரச் செய்தது. “கன்கிராஜுலேஷன்ஸ், முதல் வகுப்பு போலிருக்கிறதே?” என்று அவன் முதுகில் மூர்த்தி மகிழ்ச்சியுடன் தட்டினான். ரங்கநாதம் கழியை ஊன்றிக் கொண்டு மெள்ள நடை பாதைக்கு வந்தார். “சாமான்களைப் பார்த்து இறக்குங்கள்” என்று கூறி விட்டு மூர்த்தி, “ஏ, ஜட்கா? ‘விநாயகா காலனி’ என்ன கேட்கிறாய்?” என்று வண்டி பேசலானான். பள்ளி முடிவுப் பரீட்சை தேறிய பின் உயர் தரக் கல்வி கற்க வசதியின்றி சுருக்கெழுத்தும் ‘டைப்பும்’ பயின்று வேலை கிடைக்காமல் மாதக்கணக்கில் அலைந்த பிறகு ‘சர்வீஸ் கமிஷன்’ பரீட்சை கொடுத்து சர்க்கார் காரியாலயம் ஒன்றில் புகுந்து வேலை செய்யும் அடிப்படைக் குமாஸ்தா மூர்த்தி. முப்பது ஆண்டுகளைக் கடக்கு முன் கன்னம் ஒட்டித் தலை நரைத்து, இளமையின் கனவுகளெல்லாம் வாழ்க்கையில் பொய்த்து விடும் உன்மையை நிதரிசனமாக அநுபவித்து உணரும்படி ஒன்றையொன்று எட்டிப் பிடிக்க இயலாத குறைந்த வருமானத்துக்கும் நிறைந்த செலவுக்கும் இடையே ஒவ்வொரு மாதமும் போராடும் கோடிக்கணக்கான இந்தியப் பிரஜைகளில் ஒருவன். வாழ்க்கையின் வழவழப்பான பாதையில் உல்லாசமாகச் செல்லப் பசை இன்றியும், கரடுமுரடான கட்டை வண்டிப் பாதையில் செல்லத் துணிவின்றியும் நடுநிலையில் ஊசலாடிக் கொண்டு மாதத்தில் மூன்று வாரங்களைக் கழிந்ததே என்று தள்ளும் மத்திய தரக் குடும்பங்கள் பல நிறைந்த ‘விநாயகா காலனி’யில் அவன் குடியேறி ஐந்தாறு மாதங்களே சென்று இருந்தன. வாசலில் ஒரு சிறிய வராந்தாவும் இரண்டு அறைகளுமே கொண்ட அந்தச் சிறிய வீட்டை எத்தனை கச்சிதமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு வைத்துக் கொண்டு கூடுமானவரை அவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடன் சந்தோஷமாகவே இருந்து கொண்டிருந்தார்கள். நகர எல்லையைத் தாண்டி அந்தக் காலனி இருந்ததால் அங்கு தண்ணீர்க் குழாய் வசதி இருக்கவில்லை. பொதுவாக இருந்த கிணற்றிலும் நீர் இருக்குமிடம் தண்ணீர் இறைக்கப் புறப்படும் காட்சி ரங்கநாதத்துக்கு சகிக்க முடியாததாக இருந்தது. அவர் மகளின் வீட்டையோ, அவள் கணவனுடன் குடும்பம் நடத்துவதையோ அதற்கு முன் வந்து பார்த்தவரல்ல. தன்னைப் பற்றியே அவர் அதுவரையில் மிகவும் தாழ்வாக நினைத்திருந்தார். நீருக்கும், இடத்துக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் கூடத் தாராளம் இல்லாதபடி அவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு மிகவும் துயருற்றார். பிஞ்சு விட ஆரம்பித்திருக்கும் இள மரங்கள் சுருங்க ஆரம்பித்து விட்டால் மீதிக் காலம் எப்படி? மூர்த்தி சுபாவத்தில் மிகவும் இனியவன். விமலாவும் அவனுக்கேற்றவள். இல்லாவிட்டால் அந்தச் சிறிய வீட்டில் அவர்களை அத்தனை அன்புடன் வரவேற்று உபசரிப்பார்களா? ரங்கநாதம் மனசுக்குள் மகளைப் பற்றி இவ்வாறு சலித்து இருக்கையில் செல்லம் நேர் மாறான நிலையில் இருந்தாள். கபடில்லாது கலகலவென்று பேசும் மருமகனிடமும் அன்புடன் ஓடி ஓடி உபசரித்த மகளிடமும் அவள் மிகுந்த சந்தோஷம் கொண்டாள். பாலுவுக்கும் கூட இந்த சகஜமான, மனம்விட்டுப் பேசக்கூடிய சூழ்நிலையில் உற்சாகமாக இருக்க முடிந்தது. அன்றிரவு சாப்பிட்டான பிறகு எல்லோரும் சூழ்ந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தனர். “...அப்புறம் பாலு என்ன செய்யப் போகிறான்?” என்று மூர்த்தி சிரித்துக் கொண்டே பிரச்னையைத் துவக்கி வைத்தான். ரங்கநாதம் மௌனமாக இருந்தார். பாலு தந்தையைப் பார்த்தான். சமையலறை மறைவில் உட்கார்ந்திருந்த செல்லம் துடிப்புடன் மகனை நோக்கினாள். “என்ன, ‘ஆர்ட்ஸ் கோர்ஸா, ஸயன்ஸா’?” என்று மூர்த்தி மீண்டும் கேட்டுப் புன்னகை செய்தான். ஒன்றுமில்லை என்று சட்டென்று சொல்லி விட பாலுவுக்கு மனம் வரவில்லை. “இன்னும் ஒன்றும் நிச்சயப்படவில்லை” என்றான். “என்ன செய்வதப்பா, இந்த இரண்டு வருஷங்களே சிரமமாகப் போய்விட்டது. ஜானகிக்கும் வேறு கல்யாணம் செய்ய வேண்டும். இந்த நிலையில், நீதான் சொல்லேன், அவனை எப்படி மேலே படிக்க வைப்பது?” என்றார் ரங்கநாதம். திடுக்கிட்டவன் போல் மூர்த்தி பாலுவையும் ரங்கநாதத்தையும் மாறிமாறிப் பார்த்தான். “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள். பாதிக் கிணறு தாண்டுவதில் என்ன உபயோகம்? அப்படியானால் நீங்கள் இந்த யோசனையை அப்போதே செய்திருக்க வேண்டும். இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன, எப்படியோ முட்டி மோதிப் பாதியையும் முடிக்காமல் தளர்ந்து விட்டீர்களே? அப்படியானும் நஷ்டப்பட்டு விட்டீர்களா, முயற்சியைக் கைவிட்டு விட?” என்று அடுக்கினான். தன்னை எங்கே வந்து அண்டிவிடுவானோ என்ற பயம் கங்காதரத்தை வேறு விதமாகப் பேசச் செய்தது. மூர்த்திக்கு அந்தத் தயக்கமில்லையே? மனசில் பட்டதைச் சொல்லி விட்டான். ஆனால் அலைகடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தாலும் விட்டு விடுவானா? இந்தத் துரும்பு நம்மைக் காப்பாற்றுமா என்று அவன் சிந்திப்பதில்லையே? மூர்த்தியின் இந்தச் சொற்களே செல்லத்துக்குத் தெம்பளிக்கப் போதுமானதாக இருந்தன. “அப்போதே யோசனை இல்லை. இந்த லட்சணத்துக்குக் காலேஜிலேயே சேர்ந்திருக்க வேண்டாம்” என்று கூறுகையில் பாலுவின் முகம் வாடி விட்டது. “சே சே, நீங்கள் இப்போது விடக் கூடாது. இப்போது கஷ்டப்பட்டால் பின்னுக்கு எத்தனையோ சௌகரியம், பட்டதறி என்றால் முதலில் குமாஸ்தாவாகப் போனாலும், வருஷம் முந்நூற்றறுபத்தைந்து நாட்களும் வெறுக்காமல் அலுக்காமல் உழைக்கிறோம். என்றாலும் முன்னுக்குப் போக வழியில்லை. உயர்ந்த ஸ்தானங்களில் காலி நேரிடும் போதெல்லாம் வெளியிலிருந்து புதிய பட்டதாரிகளை எடுக்கிறார்கள். இல்லாவிட்டால் பட்டதாரியாக இருப்பவனுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கிறது. வேண்டாம், பாலுவை எப்படியேனும் இன்னும் இரண்டு வருஷங்கள் படிக்க வைத்து ஒரு பட்டதாரியாக ஆக்கி விடுங்கள். இத்தனை கேவலமில்லை. நாளைக்கு அவன் குடும்பத் தலைவனாக நான்கு குழந்தை குட்டிகளுடன் வரும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் எட்டுமுன் மாயமாகப் பறந்து விடுகையில் படும் சிரமத்தை நினைத்துப் பாருங்கள்!” என்று தன்னுடைய சொந்த அநுபவம் தரும் உணர்ச்சியின் வேகத்திலே மூர்த்தி பொழிந்து தள்ளினான். ரங்கநாதத்துக்கு இதுவும் உண்மை என்றே பட்டது. ஆசைக்கும் துன்பத்துக்கும் இடையே தொங்கலாடும் மனசுக்கு யார் யார் எவ்வெப்போது எப்படி எப்படிச் சொல்லுகிறார்களோ அதெல்லாம் அவ்வப்போது சரியானது போல் தோன்றும் போலும்! செல்லமோ தன்னையும் மீறி இரைந்து பேசியிராத அந்நிய மருமகனிடம் பேசி விட்டாள். “அதுதான் நானும் சொல்கிறேன். இதுபோல ஊருடன் வீட்டுடன் இருந்தால் படிக்க வைப்பதும் காலேஜுக்குப் போய் வருவதும் சிரமமாகத் தெரியாது. வண்டியேறிப் போக வேண்டியிருக்கிறது. என்ன செய்வது?... ஒரு உறவு மனிதர் என்று யாரேனும் ஒத்தாசை செய்தாலும் படிக்க வைக்கலாம்...!” என்று நெடு மூச்செறிந்தாள். ‘உறவு மனிதர்’ என்று அவள் குறிப்பிட்டதை லேசாகக் கங்காதரத்தைக் குற்றம் சாட்டுவதாகவே எல்லோரும் அந்தச் சமயம் நினைத்தார்கள். ‘இவளை யார் முந்திரிக் கொட்டை போல அந்த அவமானத்தை முந்திக் கொண்டு இங்கே சொல்லிக் கொள்ளச் சொன்னார்கள்’, என்று பாலுவுக்கு கோபமும் கூட வந்தது. ஆனால் அவளுடைய அந்த வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் வேறு இருந்தது. மறுநாள் அவர்கள் தங்கள் ஊரை நோக்கி ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் அவள் தன் எண்ணத்தைச் செயலாற்றும் முயற்சியில் இறங்கினாள். “விமலா என்னிடம் படித்துப் படித்துச் சொன்னாள். உடன்பிறந்தவர் என்று இருந்தால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள மாட்டார்களா? இப்போது என்னம்மா? இன்று இன்னொரு யோசனையும் கூடச் சொன்னாள்...” என்று செல்லம் பீடிகையிட்டதும் முழுப்பட்டினி கிடப்பவன் முன் ஒரு அவல் வந்து விழுந்தாற் போல் பாலுவுக்கும் ரங்கநாதத்துக்கும் ஆவல் துடித்தது. “விமலாவா? என்ன சொன்னாள்?” என்று ரங்கநாதம் முகத்தில் ஒளி படர விசாரித்தார். “ஏனம்மா, நீங்கள் சம்பளமும் கட்டிப் புத்தகமும் வாங்கித் தந்து விட்டால் வீட்டோடு வீடு, சோற்றோடு சோறு, இங்கு எனக்கென்ன அவன் தனிப்பாரமா? அதற்காக அவன் படிப்பை நிறுத்தலாமா என்று கேட்டாள்...” ரங்கநாதத்தின் ஆவல் வந்த சுருக்கில் சப்பென்று வற்றி விட்டது. “சேசே, பாவம் குழந்தை, அவளே கஷ்டப்படுகிறாள், சின்ன இடம், மட்டுச் சம்பளம், அவள் தெரியாமல் ஆதங்கத்தில் சொல்லுகிறாள், அவன் வேறு...” - அவர் முடிக்கு முன் செல்லம் குறுக்கிட்டாள். “அவரே தான் சொன்னாராம்! நானாக சொல்லுவது நன்றாக இருக்காது, நீயே சொல் என்றிருக்கிறார். சின்ன இடம் என்ன? பட்டண வாசத்தில் வாடகையை நிறையத் தந்தாலும் அப்படித்தான் கிடைக்கிறது. எப்படியோ பல்லைக் கடித்துக் கொண்டு...” “என்ன செல்லம், இங்கிதம் தெரியாமல் பேசுகிறாய்? இரண்டு வருஷ காலம் பல்லைக் கடிக்க முடியும் காலமா? அவனே சொன்னாலும் நாம் யோசிக்க வேண்டாமா?” “ஆமாம், நீங்களாகவும் ஒன்றும் செய்ய மாட்டீர்கள், பிறராகச் செய்ய வருவதையும் இப்படி ஏதானும் சொல்லித் தடுப்பீர்கள். உண்மையில் அவன் முன்னுக்கு வர வேண்டும் என்ற கருத்து உங்களுக்கே இல்லை. அவன் என் வயிற்றில் பிறந்தவன் தானே? உங்கள் பணக்கார அக்காவும் மகளும் உதவவில்லை. அதைக் குத்திக் காட்டுவது போல இந்த ஏழைப் பெண் தன்னாலானதைச் செய்கிறேன் என்று வரும்போதும் ஏற்கக் கூடாது என்கிறீர்கள்...” நிஷ்டூரத்தைச் சொற்களிலே பதித்து, கண்களிலே ஒரு துளி நீரையும் காட்டி விட்டாள் அவள். ரங்கநாதத்துக்கு அவளுடைய நிஷ்டூரம் ஒரு புறம் உறுத்தியதை விட, அவ்வளவு சுலபமாக அவளுடைய எண்ணம் எத்தனை நுட்பமாகப் போகிறது என்ற துயரம் கலந்த வியப்புத் தான் மேலோங்கியது. பெண்ணின் இந்த இறுதி அஸ்திரம் எந்தத் தாம்பத்தியப் போர்க்களத்தில்தான் தோல்வியடைந்திருக்கிறது? ஊர் வந்து சேர்ந்ததும் செல்லத்தின் வார்த்தைகளின் சாராம்சம் அடங்கியதொரு கடிதம் மூர்த்திக்குப் பறந்தது. அநுகூலமான பதில் சுருக்கமாக வரவே, பாலு கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. படிப்பது என்று முடிவாயிற்று. ‘அவர்களுடைய கண் முன்னே என் குழந்தையை அதே கோயம்புத்தூரில் படிக்க வைப்பேன்!’ என்று செல்லத்தின் உள்ளம் எக்களிப்புடன் கூறிக் கொண்டது. |