37
சொல்லரிய பல துறையும் துயர பெரிய தமிழ் நாட்டில் மெல்ல மெல்ல நலம்காண மேலெழுந்தமிழ்ச் செல்வன் செல்லரித்த பழமையெல்லாம் சீர்திருத்த முன் வந்தோன் புல்லரித்து மனம் வாடப் போகின்றான் போகின்றான்
திருமண ஊர்வலங்களுக்கு வழக்கமாகப் போகும் இரட்டை வெண்புரவிச் சாரட்டு மல்லிகைச் சரங்களால் அலங்கரிக்கப் பெற்று அம்மன் சந்நிதி வாயிலில் அழகாய் நின்றது. பாண்டு வாத்தியக் குழுவினரின் உற்சாக முழக்கமும் இரட்டை மேளமும் அற்புதமாய் ஒலித்தன. திருவிழாக் கூட்டம் போல் மக்கள் வெள்ளம் கூடி விட்டது. முருகானந்தம் கையில் ஒரு பெரிய தும்பிக்கை ரோஜா மாலையோடு ஊர்வலத்தின் முன் பகுதியில் நின்றான். அருகில் வேறு பலரும் மாலைகளோடு நின்றார்கள். பூரணியை வாழ்த்தியும், தேர்தல் வெற்றியைப் பாராட்டியும் வாழ்த்தொலிகள் ஒலித்தன. ஊர்வலம் ஒலிவெள்ளமாய் எழில் வெள்ளமாய் மெல்ல மெல்ல நகர்ந்தது. தெற்குக் கோபுர வாயில் வழியாகச் சுற்றி மேலக் கோபுரத் தெருவில் புகுந்து தானப்ப முதலித் தெருவில் திரும்பியது. அழகாக எடுப்பாக நீண்டு அகன்ற அலங்காரச் சாரட்டை இழுத்துக் கொண்டு கம்பீரமான வெண்புரவிகள் சென்றன. வானத்தில் வாணவேடிக்கை ஒளிக்கோலங்கள் பரப்பியது. மகிழ்ச்சி என்ற பேருணர்வு ஒளி, ஒலி வடிவமாகவே மாறிவிட்டதுபோல் பாண்டு வாத்தியக்குழு, மனமும் நடக்கும் கால்களும் குதூகலத் துள்ளல் பெறத்தக்க அற்புதமானதொரு பண்ணை முழக்கியது. நாயனக்காரர்களும் இசை மழை பொழிந்து கொண்டிருந்தார்கள். கூட்டமெங்கும் பூக்களின் மணம், செவிகள் எல்லாம் இசைகளின் ஒலி, வீதியின் இருபுறத்து வீடுகளிலும் ஊர்வலத்தைக் காண முந்தும் மலர்ந்த முகங்கள். மங்களேசுவரி அம்மாளின் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தது ஊர்வலம். வீட்டு வாயிலை அடைவதற்குச் சிறிது தொலைவே இருந்தது. இதோ வீட்டை அணுகிவிட்டார்கள். ஐயோ! அந்த மகிழ்ச்சியினிடையே இதென்ன குரல்? "நிறுத்துங்கள் நிறுத்துங்கள்" என்று தலைவிரி கோலமாக அழுது கொண்டே ஓடி வந்தாள் வசந்தா. முருகானந்தத்தின் கையிலிருந்த மாலை நழுவியது. மனமும் உடம்பும் நடுங்கின. பாண்டு மேளம், வாழ்த்தொலிகள் எல்லாம் திடீரென்று வீதியே ஊமையாகி விட்டதுபோல் ஒலியவிந்து நின்றன. ஒரே ஒரு விநாடியில் எல்லோரும் எல்லாமும் இயக்கமற்றுப் பொம்மைகளாய் பொலிவிழந்தவர்களாய் அப்படியே கட்டுண்டு நகராமல் நின்றுவிட்டார்கள். முருகானந்தம் அலறிக் கொண்டு வீட்டுக்கு ஓடினான். டாக்டர் களையற்ற முகத்துடன் தலைகுனிந்து வெளியேறிக் கொண்டிருந்தார். கீழே கூடத்தில் செல்லம், மங்கையர்க்கரசி, சம்பந்தன் ஆகியோர் இரைந்து கதறியழுது கொண்டிருந்தார்கள். மாடியில் மங்களேசுவரி அம்மாளும் பூரணியும் உரத்த குரலில் உள்ளத்தை வாள் கொண்டு அறுப்பதுபோல் அலறி அழுது கொண்டிருந்தார்கள். வானமும் பூமியும் மற்றெல்லாப் பூதங்களும் இடிந்து சிதைந்து தலைமேல் விழுந்து அமுக்குவது போலிருந்தது முருகானந்தத்துக்கு. மாடியறைக்குப் போய்ப் பார்த்ததும், 'அரவிந்தா' என்று அலறிப் பொங்கி வரும் அழுகையை அடக்கிக் கொண்டு குமுறினான் முருகானந்தம். பூரணி வேரற்ற மரம்போல் தரையில் கிடந்து கதறிக் கொண்டிருந்தாள். அந்த அறையில் கட்டிலில் அரவிந்தன் தெய்வமாகியிருந்தான். கண்ணால் பார்த்து, வாயால் பேசி, காலால் நடந்து, மண்ணில் உடம்போடு வாழும் சின்னப் பொய் வாழ்விலிருந்து விடுபட்டுப் போயிருந்தது அந்த அன்புப் பெருமகனின் நல்லுயிர். ஊராரின் துன்பங்களுக்கெல்லாம் விடிவு தேடிய நல்லவன் உடம்பாகிய துன்பத்திலிருந்து விடுதலையடைந்திருந்தான். பூரணி தேர்தலில் சத்தியத்தின் பலத்தால் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைப்பட்ட கருணை வள்ளல் அந்த வெற்றியின் மகிழ்ச்சியைத் தான் இருந்து நுகராமல் போய்ச் சேர்ந்துவிட்டான். "எல்லோர் வாயிலும் மண்ணைப் போட்டுப் போய் விட்டாயே, என் தங்கமே" என்று மங்களேசுவரி அம்மாள் கதறினாள். ஒவ்வொன்றாகப் பழைய நிகழ்ச்சிகளை நினைக்க நினைக்க அணை உடைந்த வெள்ளம் போல் அழுகை பொங்கிற்று பூரணிக்கு. நிராதரவான பேதைபோல் அவள் அலமலந்து அலறினாள். "பார்த்துக் கொண்டே இரு! தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டு அடுத்த திங்கள்கிழமை உன்னோடு போட்டி போட்டுத் திருப்பரங்குன்றம் மலையில் ஏறுகிறேன்" என்று சில தினங்களுக்கு முன் அரவிந்தன் தன்னிடம் சிரித்துக் கொண்டே கூறிய சொற்களை இப்போது அவள் எண்ணினாள், உள்ளம் துடித்தது. அப்படியே தன்னுடைய மூச்சும் நின்று போய்விடக் கூடாதோ என்று தவித்தாள் அவள். "சிலப்பதிகாரத்தில் பாண்டியன் இறந்தவுடன் அவன் தேவி தன்னுயிரைக் கொண்டு அவனுயிரைத் தேடுவாள் போல் இறந்தாளென்று இளங்கோ பாடியிருக்கிறாரே! அதே போல் என்னுயிரைக் கொண்டு நான் அரவிந்தன் உயிரினைத் தேட முடியுமா?" என்று நினைந்து நினைந்து அழுதாள். வீட்டுக்கு வெளியே மாலைகளோடு காத்திருந்த மனிதர்கள் நிழல்கள் நகர்வது போல் நடந்து மௌனமாக ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தார்கள். அந்த அறைக்கு வெளியே வந்து கண்கலங்கித் தலைகுனிந்து சோக வடிவங்களாய் நின்றார்கள். அவர்களில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் மெல்ல அறைக்குள் நுழைந்து நா தழுதழுக்க உணர்வு நெகிழ்ந்து துடிக்கும் அவலக் குரலில், "இளைஞனே நீ இன்று சாகவில்லை; சாகமாட்டாய். வறுமையும், வாட்டமும் ஏழ்மையும் ஏக்கமும் நிறைந்த இந்தத் தமிழ் மாநிலத்தில் தலைமுறைக்கு ஒரு தரம் நீ பிறப்பாய்; பிறக்க வேண்டும். பிறந்து நல்லனவெல்லாம் செய்ய வேண்டும்" என்று உருக்கமாக நிறுத்தி நிறுத்தி கூறிவிட்டுத் தம் கையிலிருந்த மாலையை அரவிந்தன் உடலில் சூட்டினார். எல்லோருடைய உள்ளத்தையும் உருகச் செய்தன அவர் செய்கையும் சொற்களும். பூரணி அழுகைக் கிடையே நிமிர்ந்து பார்த்தாள். இச்சொற்கள் அவள் மனத்தைப் பிழிந்தெடுத்தன. மாலையணிந்த தோற்றத்தில் உயிரோடும், உணர்வோடும் குறும்புநகை குலவ அரவிந்தன் படுத்திருப்பதுபோல் அவள் கண்களுக்குத் தோன்றியது. திருப்பரங்குன்றத்து மலையில் அவளோடு போட்டி போட்டுக் கொண்டு ஏறப்போவதாகக் கூறின போது இப்படித் தானே சிரித்தான் அவன்! சவமாகக் கிடக்கும் இந்த நிலையிலும் இந்த மாலை அவனுக்கு எத்தனை அழகாக இருக்கிறது? எழுந்து நிற்க முடியாதபடி, கீழே விழுந்துவிட்ட அந்தத் துக்கத்துக்கு நடுவே அவளுக்கு விந்தையானதொரு பேராசை உண்டாயிற்று. மெல்ல எழுந்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள். அறைக்கு வெளியே நிழல்கள் போல் மௌனமாக நின்று கொண்டிருந்தவர்கள் கைகளில் இருந்து பெரிய பெரிய பூ மாலைகளை ஒவ்வொன்றாக வாங்கிக் கொண்டு வந்து அரவிந்தனுடைய உடலில் சூட்டி அழகு பார்த்தாள். உயிரோடு வாழும்போதே, 'இப்படி ஒரு மண மாலையை அவனுடைய கழுத்தில் அவள் சூட்டியிருக்க வேண்டும்.' எல்லார் கையிலுமாக எல்லா மாலைகளையும் வாங்கிச் சூட்டிவிட்டு நின்று அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இப்படி நினைத்த போது மீண்டும் கண்களில் நீர் பனித்தது அவளுக்கு. பல நாட்களுக்கு முன் எப்போதோ மங்கையர்கழகத்தில் தான் உள்ளமுருகிப் பேசிய திலகவதியின் பேச்சு இப்போது அவளுக்கு நினைவு வந்தது. திலகவதியைப் போல் மனத்தால் மட்டும் வாழ்ந்து மணம் பரப்பும் வாழ்வுதான் தனக்கும் விதியால் நேரப்பட்டிருக்கிறதென்று அப்போது அவளுக்குத் தெரியாது. 'திலகவதியின் கலிப்பகை சோழ நாட்டுப் போரில் மாண்டான். என்னுடைய அரவிந்தனை வாழ்க்கைப் போரே மாய்த்துவிட்டது' என்று நினைத்த போது மேலும் துயரம் கொதித்தது. அவள் மனத்தில் 'உடலால் செத்துப் போய்க் கொண்டே உள்ளத்தால் வாழ்ந்த திலகவதி போன்ற புனிதப் பெண் தமிழ்நாட்டில்தான் அம்மா பிறக்க முடியும்' என்று தந்தை சொல்லிக் கொடுத்திருந்ததை நினைத்தபோது உடல் புல்லரித்தது அவளுக்கு. 'எனக்கும் திருநாவுக்கரசு என்ற பெயரில் தம்பி இருக்கிறான். உடன்பிறந்த தம்பிகளையும் தங்கைகளையும் காத்து வாழ வைப்பதற்காக நானும் வாழவேண்டும்' என்று அவள் உள்ளத்தில் ஒரு மெல்லிய குரல் ஒலித்தது. சிறுபிள்ளைப் பருவத்திலிருந்தே திலகவதியார் கதை தன் மனத்தைக் கவர்ந்து உருக்கி வந்திருப்பதைப் படிப்படியாக நினைத்துக் கண் கலங்கினாள். அவள் நெஞ்சை உணர்வுகள் சூழ்ந்து கொண்டு தேள்களாய்க் கொட்டின. பின்னும் சிறிதுநேரம் கழித்துப் பக்கத்து அறையிலிருந்து மீண்டும் அவள் வெளியே வந்தபோது நெற்றியில் திலகம் இல்லை. கைகளில் வளையல்கள் இல்லை. செவிகள், மூக்கு, கழுத்து எங்கும் அங்கிருந்த அணிகலன்கள் கழன்று மூளியாகியிருந்தன. அலைகள் அடங்கிய பெண் கடல்போல் மெல்ல வந்து முருகானந்தத்தை நோக்கி "மேலே நடக்க வேண்டியதைச் செய்யுங்கள்" என்று நிதானமாகச் சொன்னாள் பூரணி. அவள் முகத்தில் உலகமெல்லாம் தேடினும் கிடைக்காத சாந்தி நிலவிற்று அப்போது. நடக்க வேண்டியவைகள் நடந்தன. தேர்தல் வெற்றியைக் கொண்டாட வந்த ஊர்வலம், சோக ஊர்வலமாக மயானம் வரை தொடர்ந்தது. அந்த நள்ளிரவின் அமைதியில் முழுநிலா வானத்தின் கீழே வையையின் வடகரையிலே அரவிந்தன் என்னும் பேரெழில் வாழ்க்கை மண்ணில் கலந்து பொய்யாய்ப் போய்விட்டது. நிலவைப் பிடித்துச் சில க்றைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகத்துக்குத் திலகம் இல்லாமல் துடைத்துப் போய்விட்டான் அரவிந்தன். தரளம் மிடைத்து ஒளிதவழக் குடைந்து இருபவழமும் பதித்த இதழ்களில் சிரிப்பில்லாமல் செய்துவிட்டுப் போய்விட்டான். உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் உடன் வரும் துணையைப் பூரணி இழந்துவிட்டாள். அன்றிரவு எல்லோரும் வீடும் திரும்பும்போது இரண்டு மணிக்கு மேலிருக்கும். அரவிந்தன் இருந்த அறையில் அவனுடைய குறிப்பு நோட்டுப் புத்தகங்களும், அவற்றின் மேல் அவள் இலங்கையிலிருந்து வாங்கி வந்து அவனுக்கு அன்பளிப்பாகத் தந்த கைக்கடிகாரமும் இருந்தன. அந்த கடிகாரத்தை அவனுடைய கையில் கட்டும் போது 'காலத்தை உங்கள் கையில் கட்டி ஓடவிடுகிறேன்!' என்று அவள் கூறியதற்கு 'நாம் மனிதர்கள், காலத்தின் கையில் கட்டுண்டு ஓடுபவர்கள்' என்று அரவிந்தன் புன்னகையோடு கூறிய பதிலை நினைத்தாள் பூரணி. குறிப்பு நோட்டுப் புத்தகத்தில் தன்னைக் குறிஞ்சிப் பூவாக உருவகம் செய்து அவன் எழுதியிருந்த வாக்கியங்களைப் படித்தபோது புனிதமானதொரு உணர்வை அடைந்தாள் அவள். அன்றிலிருந்து அவள் மனமே நினைவுகளின் மயானமாகிவிட்டதோ? அங்கே புதைந்த நினனவுகளின் கழிவிரக்கத்தில் அமிழ்ந்து வாடினாள் அவள். சில வாரங்கள் கழித்துச் செய்தித்தாளில் பூரணி, தான் தேர்தலில் வெற்றி பெற்றடைந்த பதவி தனக்குத் தேவையில்லை என்று விட்டுவிட்டச் செய்தி வெளியாகியிருந்தது. அதை விடுவதற்கு முன் பலர் வேண்டிக் கொண்டிருந்தும் அவள் அரசியல் தனக்குத் தேவையில்லை என்றும் சமூகத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் தன் வாழ்வை செலவழிக்கப் போவதாகவும் கூறி மறுத்துவிட்டாள். அவள் மறுப்பு ஏனையோரை வியப்பில் ஆழ்த்தியது. ஈடுசெய்ய முடியாத அந்தப்புண் அவளைச் சிறிது காலம் துன்புறுத்தியது. துக்கத்தில் ஞானம் பிறந்தது. அகக்கண்கள் திறந்தன. வாழ்க்கையின் மெய்யான தத்துவம் புலப்பட்டது. பெண்மையின் பயனை வழிமாற்றிக் கொண்டு மணிமேகலை போல் அறச்செல்வியாக மேலெழுந்தாள் பூரணி. 'வாழ்க்கை அவரவருக்கும் நேர்ந்தபடி வருவது. தாயின் கையிலிருக்கும் தின்பண்டத்துக்கு அவசரப்பட்டு அடித்துக் கொண்டு குழந்தைகள் மாதிரி விதியின் கையிலுள்ள வாழ்வுக்கு நைப்பாசைப்பட்டுப் பயனில்லை' என்று அவள் உணர்ந்து ஆற்றிக் கொள்ள முயன்றாள். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஞான ஒளிபரப்பும் சொற்பொழிவுகளைச் செய்தாள். பொதுப்பணிகளில் ஈடுபட்டு அலைந்தாள். உலகத்து நாடுகளில் எல்லாம் அறிவு முழக்கமிட்டு வாகை சூடினாள். கைகளில் தீபத்தை ஏந்திக் கொண்டு இருளடைந்த மனிதக் கூட்டத்தின் நடுவே ஒளி சிதறி நடந்து செல்வதாக அவள் அடிக்கடி கண்ட கனவை இப்போது நனவாக்கிக் கொண்டிருந்தாள். பூரணமான ஞானத்தோடும் பூரணமான பயன்களோடும் பூரணி பெரு வாழ்வு வாழ்ந்தாள். தான் வளர்த்து வாழவிட்ட தம்பிகளும் தங்கைகளும் இன்ப வாழ்வு வாழ்வதைக் கண்டுகொண்டே தான் வாழாமல் இழந்து விட்டதை மறக்க முயன்றாள் அவள். மறைக்க முயன்றாள் எனினும் பொருந்தும். ஆனால் ஊருக்கெல்லாம் ஞானத்தைப் போதித்தும் அறிவுரை கூறியும் வாழும் தனக்குள் ஏதோ ஓர் ஆறாப்புண் இருந்து வதைப்பதை மட்டும் அவளால் மறக்க இயலவில்லை. திருப்பரங்குன்றத்து மலை ஏறும் போதெல்லாம் அங்கு சாசனம் போல் பூரணி-அரவிந்தன் என்று கல்மேலிட்ட எழுத்துக்கள் தெரிந்து அவளைக் கண்கலங்க வைத்தன. அழகும் தூய்மையும் பண்பும் உள்ள தமிழ் இளைஞர்களை எங்கு கண்டாலும் அரவிந்தனின் நினைவு வந்தது அவளுக்கு. அன்று அந்தப் பெரியவர் கூறியதுபோல், அரவிந்தன் தலைமுறை தோறும் பிறக்க வேண்டுமென்று அவள் உள்ளத்தில் ஓர் ஏக்கம் புண்ணாக இருந்தது. தத்துவத்திற்கும் ஞானத்திற்கும் ஆறவில்லை அந்தப் பெரும்புண். காலம் ஓடுகிறது. வயது ஐம்பதுக்கு மேல் ஆகியும் தளராத உடலோடும் நரையாத குழலோடும் அழகான பல் வரிசையோடும் அவள் இருப்பதைப் பார்த்து அவளுடைய தம்பியின் சிறு பெண் குழந்தை, "எங்க அம்மா இந்த வயசிலே பல்லெல்லாம் விழுந்து தலை நரைச்சுக் கிழவி ஆகிவிட்டது. நீ மட்டும் இப்படி இருக்கிறாயே!" என்று சிரித்துக் கொண்டே மழலை மொழியில் வக்கணையாகக் கேட்கிறது! அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் உட்கார்ந்து விடுகிறாள் பூரணி. அவள் மனம் துக்கத்தை உணருகிறது. கண்கள் நீர் சிந்துகின்றன. சதா காலமும் எதற்காக அவள் மனம் மௌனமாகவே அழுது கொண்டிருந்ததோ அதற்காக வாய்விட்டே அழுகிறாள். குழந்தை அவளுடைய அழுகைக்குக் காரணம் புரியாமல் மருண்டு பார்க்கிறது, மயங்கித் திகைக்கிறது! தனியாகக் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்குப் போய் அங்கே தானும் அரவிந்தனும் முன்பு அமர்ந்து பேசிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு நெஞ்சில் தாங்க முடியாமல் சுமையேறிக் கிடக்கும் துக்கங்களை அழுது கரைக்க வேண்டும்போல ஒரு துடிப்பு அவளுக்கு உண்டாகிறது. உலகத்து மக்களின் துக்கத்துக்கெல்லாம் ஆறுதல் கூறி அறிவுரை வழங்கித் தன் பார்வையாலும், பேச்சாலும், பண்பட்ட தூய வாழ்வாலும், உதாரண நங்கையாயிருக்கும் அவள் அப்போது தன் இதயச்சூடு தணியாமல் அநாதைபோல் மலைத்து மயங்கி நிற்கிறாள். குறிஞ்சியாண்டவர் கோயில் அருகில் இருந்த மேட்டில் போய் அமர்ந்து தன்னைப் பிறரும், பிறரைத் தானும் கவனிக்காத தனிமையில் வாய்விட்டுக் கதறி அழுகிறாள், பூரணி. உலகத்தில் மனிதப் பூண்டே அடியோடு அழிந்து அமிழ்ந்து மூச்சுப் பேச்சற்று மூழ்கிப் போன தனிமையில் அந்த மலைத்தொடர்கள் மட்டும் மௌனமாய்ப் பரந்து கிடப்பது போலவும் அதனிடையே எல்லா துக்கங்களுக்கும் எல்லா ஆற்றாமைகளுக்கும் எல்லா ஏக்கங்களுக்கும் எல்லா வேதனைகளுக்கும் எஞ்சி மிஞ்சிய ஒரே ஒரு சொந்தக்காரியாய் தான் மட்டுமே உட்கார்ந்து குமுறியழுது கொண்டிருப்பது போலவும் சொற்களின் துணைகொண்டு விளக்க முடியாததொரு தவிப்பை அடைகிறாள். அருகே கோயில் மணியோசை கேட்கிறது! துக்கத்திலிருந்து விடுபட்டு 'இங்கே வா' என்று குறிஞ்சி ஆண்டவனாகிய முருகனே அவளை அழைக்கிறானா! கனவில் எழுந்து நடப்பது போல் தட்டுத்தடுமாறி தயங்கி நடந்து முருகன் சந்நிதிக்கு முன் போய் நின்றாள் அவள். அர்ச்சகர் கற்பூரச் சோதியை முருகன் முகத்தருகே தூக்கிக் காண்பிக்கிறார். பூரணிக்கு மெய் சிலிர்க்கிறது. தன் கண்கள் காண்பது மெய்யா? பொய்யா? என்று விழியகல மீண்டும் பார்க்கிறாள். முருகனுடைய முகமே அரவிந்தனின் முகமாகத் தெரிகிறது அவளுக்கு. சிறிய கற்பூரச் சோதியே பெரிய சோதியாக மாறி அரவிந்தனின் முகமாகி அழகாய் நகைக்கிறது. 'துக்கத்திலிருந்து விடுபட்டு இங்கே வா' என்ற பொருளா அந்தச் சிரிப்புக்கு? 'அரவிந்தன்! உங்களுடைய சிரிப்பில் அமுதம் இருக்கிறது, அமுதம் உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது' என்று பித்து பிடித்தவள் போல் முனகிக் கொள்கிறாள் அவள். அவளுடைய இதயத்தில் சோகம் நிறைந்திருந்த இடமெல்லாம் அரவிந்தனின் சிரிப்பு நிறைந்து ஒலி பரப்புகிறது.
"பிறவாமை வேண்டும்! மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை மறவாமை வேண்டும்!" என்று மெல்லப் பாடிக்கொண்டே கண்களில் வடிந்து கொண்டிருக்கும் நீரைத் துடைத்துக் கொள்கிறாள். கண்களில் நீரையும், மனத்தில் துயரத்தையும் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கிற போது முருகனே அரவிந்தனாக மாறி நின்று மீண்டும் சிரிக்கிறான்! கைகூப்பி வணங்கிவிட்டு முடிவற்ற மலைத் தொடர்களின் தனி வழியே இறங்கி நடக்கிறாள் அவள். வழியின் இருபுறமும் வெள்ளம்போல் நிறைந்து விளங்கும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மாலைப்போது வீறுகுன்றி இருள் வீறு கொள்ளத் தொடங்குகிறது. பூரணி மெல்ல நடந்து கொண்டிருக்கிறாள். பிரபஞ்சப் பூச்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் வாடி உதிர்கிறது. குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|
மர்லின் மன்றோ ஆசிரியர்: குகன்வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு விலை: ரூ. 166.00 தள்ளுபடி விலை: ரூ. 150.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்! ஆசிரியர்: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்வகைப்பாடு : ஆன்மிகம் விலை: ரூ. 210.00 தள்ளுபடி விலை: ரூ. 190.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|