8
"நின்னாவார் பிறரன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் விபத்தும் ஆனாய் பொன்னானாய் மணியானாய் போகமானாய் பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை என்னானாய் என்னானாய் என்னில் அல்லால் ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே"
-தேவாரம் "முக்கியமான காரியம் பூரணி. எங்கே, எதற்கு என்று கேட்டுக் கொண்டிருக்காதே. மறுக்காமல் என்னோடு உடனே புறப்படு..." என்று மங்களேசுவரி அம்மாள் வந்து கூப்பிட்டபோது அவளால் அந்த அழைப்பைத் தட்டிக் கழிக்க முடியவில்லை. பழைய வீட்டிலிருந்து சாமான்களை ஒழித்துப் புது வீட்டுக்கு மாற்றும் வேலையைத் தம்பி திருநாவுக்கரசு, கமலா, ஓதுவார்க் கிழவர் ஆகியவர்களிடம் விட்டுவிட்டு அந்த அம்மாளோடு உடனே புறப்பட்டாள் பூரணி. அன்று அவள் கமலாவிடம் சிரித்துப் பேசிக்கொண்டே புது வீடு பார்த்துவிட்டு வந்தாள். உற்சாகமாக சரவணப் பொய்கைக்குக் குளிக்கப் போனாள். பழைய வீட்டுக்காரர் கொடுத்திருந்த காலத்தவணைக்கு முன்பே அதைக் காலி செய்து விடத் துணிந்தாள். உடல்தான் சுறுசுறுப்பாக இவ்வளவையும் ஊக்கத்தோடு செய்தது. இதழ்களில்தான் சிரிப்பு விளங்கியது. உள்ளம் முழுவதும் வேதனை. உள்ளம் எரிந்தது. அங்கே சிரிப்பு இல்லை. சீற்றம் இருந்தது. அமைதி இல்லை, ஆற்றாமை இருந்தது. உற்சாகம் இல்லை, அழற்றி இருந்தது. சந்தனக் காட்டில் நெருப்புப் பிடித்த மாதிரி எண்ணங்களை எரித்து அழிக்கும் அந்தத் துக்கத்தில் மனத்துக்கு இதம் அளிக்கும் மனம் ஒன்றும் இருந்தது. அரவிந்தனைப் பற்றிய நினைவுதான் அந்த மனம். அவனைப் பற்றிக் கண்ட கனவுதான் அந்த மனத்தின் சுகம். அவளுடைய நினைவுப் பசும்பயிர்களுக்கு அரவிந்தன் வித்தாக இருந்தான். பலவித நினைவுகளோடு மங்களேசுவரி அம்மாளின் காரில் உடன் சென்று கொண்டிருந்த பூரணி தானாக அந்த அம்மாவிடம் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனைகளின் போக்கிலே மௌனமாக அந்த அம்மாளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். மேற்குப்புறம் உயர்ந்த மண்மேடும் கிழக்குப் புறம் பசுமை போர்த்திய வயல்வெளிகளும் கடந்து மூலக்கரைச் சாலையின் அடர்த்தியில் திரும்பியது கார். வடக்கே ஒரே மாதிரி வரிசை வரிசையாய்த் தெரியும் சிமெண்டுக் கட்டிடங்களுடன் கூடிய மில் தொழிலாளர் குடியிருப்புத் தோன்றி மறைந்தது. பசுமலையின் பசுமைச் சூழ்நிலைக்குள் புகுந்து மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவுவரை ஒருவருக்கொருவர் பேசவில்லை. ஒருவாரத்து உழைப்பின் அலுப்பெல்லாம் கிடந்து உறங்குவது போல் கடைகள் அடைக்கப்பெற்றுச் சோர்ந்து தென்படும் ஞாயிற்றுக்கிழமையின் விடுமுறைத் தளர்ச்சி வீதிகளில் வெளிப்படையாய்த் தெரிந்தது. மங்களேஸ்வரி அம்மாள் தான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். "இப்போது உன்னை நான் எங்கே அழைத்துக் கொண்டு போகிறேன் தெரியுமா?" "தெரியாது. நீங்கள் சொன்னால்தான் தெரியும் எனக்கு." "உனக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுக்கப் போகிறேன். அதாவது வாழ்க்கை விபத்திலிருந்து உன்னைக் காப்பாற்றப் போகிறேன்." பூரணி நம்பிக்கை மலரும் முகத்தோடு அந்த அம்மாளைப் பார்த்தாள். கார் வடக்கு ஆவணி மூலவீதியில் 'மதுரை மங்கையர் கழகம்' என்று எழுதியிருந்த ஒரு பெரிய கட்டிடத்தின் முன்பு வந்து நின்றது. "வா உள்ளே போகலாம்" என்று பூரணி பின் தொடர உள்ளே சென்றாள் மங்களேஸ்வரி அம்மாள். கட்டிட வாயிலில் வேறு சில கார்களும் வரிசையாய் நின்றன. உள்ளே மங்களேஸ்வரி அம்மாளைப் போலவே பெரிய செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த முதிய பெண்கள் ஐந்து, ஆறு பேர்கள் அமர்ந்திருந்தனர். மதுரை நகரின் பிரமுகர்களாகவும் வளமுள்ளவர்களாகவும் இருந்த பெரிய மனிதர் வீட்டுப் பெண்கள் அவர்கள். பூரணி அவர்களில் பெரும்பாலோரைப் பல இடங்களில், பல சமயங்களில் பார்த்திருக்கிறாள். தெரிந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அவர்கள் அவளை இன்னாரென்று தெரிந்து கொண்டிருக்க நியாயமில்லை. ஏழைகளைப் போலத் தராதரமில்லாமல் பணக்காரர்கள் எல்லாவற்றையும் எல்லாரையும் தெரிந்து நினைவு வைத்துக் கொண்டால் பிறகு அவர்களுடைய பெருமையும் கௌரவமும் என்ன ஆவது? "பூரணி! இவர்கள் எல்லோரும் இந்த மங்கையர் கழகத்தின் நிர்வாகிகள். இவர்களுக்கு வணக்கம் சொல்லு, அம்மா!" என்று அவள் காதுக்கருகில் மெல்லச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். பூரணி மெதுவாக எல்லோருக்கும் சேர்த்து ஒருமுறை கை கூப்பினாள். "நான் சொன்னேனே, அது இந்தப் பெண் தான். காலஞ்சென்ற பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண் இவள். தமிழ் இலக்கண இலக்கியங்களெல்லாம் முறையாகவும் நன்றாகவும் படித்திருக்கிறாள். ஆங்கிலமும் வேண்டியது தெரியும். நாம் புதிதாக தை மாதத்திலிருந்து தொடங்கத் திட்டமிட்டிருக்கும் வகுப்புகளைக் கவனித்துக் கொள்ள இவளையே ஆசிரியையாக நியமித்துவிடலாம் என்று நினைக்கிறேன்" என்று பூரணியையும், அவளை அழைத்து வந்திருக்கும் நோக்கத்தையும் மங்களேஸ்வரி அம்மாள் ஒன்றாக இணைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். "எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வயது கொஞ்சமாக இருக்கும் என்று தோன்றுகிறதே?" என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு முதிய அம்மாள். மங்களேஸ்வரி அம்மாளும் இந்தச் சந்தேகத்துக்குச் சுடச்சுடப் பதில் தந்தாள். "வயதில் என்ன இருக்கிறது? இவளோடு சிறிது நேரம் பேசிப் பாருங்கள் தெரியும். உங்களுக்கும் எனக்கும் இத்தனை வயதுக்குப் பின்னும் தெரியாத அவ்வளவு அனுபவ ஞானமும் சிந்தனையும் இவள் பெற்றிருக்கிறாள். இவளுடைய தந்தை இவளுக்குப் பூரணி என்று பெயரிட்டிருக்கிறார். இவளது படிப்பும், அறிவுக் கூர்மையும் அந்தப் பெயருக்குப் பொருத்தமாகவே வாய்த்திருக்கின்றன." "நீங்கள் சொன்னால் சரிதான்; விளையாட்டுக்காகவோ பொழுது போக்குக்காகவோ நாம் நமது மாதர் சங்கத்தில் இந்த வகுப்புக்களைத் தொடங்கவில்லை. உண்மையாகவே நல்ல விதமான மாறுதல்களையும், வளர்ச்சியையும் நமது பெண்கள் இதன் மூலம் பெறவேண்டும்." மங்களேஸ்வரி அம்மாளும், மற்றவர்களும் பேச்சில் ஆழ்ந்திருந்த போது பூரணி அமைதியாகவும், அடக்கமாகவும் உட்கார்ந்திருந்தாள். அங்கேயிருந்த பெண்களின் முகங்களையும் தோற்றங்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து அவற்றின் மூலம் அவர்களுடைய உள்ளங்களையும் குணங்களையும் அனுமானம் செய்ய முயன்று கொண்டிருந்தாள். அவளைப் போல் கூர்ந்து பார்க்கும் கண்களும், ஆழ்ந்து சிந்திக்கும் மனமும் உள்ளவளுக்கு ஒவ்வொரு முகமும் ஓர் உலகம்; ஒவ்வொரு முகமும் ஒரு சுவை; ஒவ்வொரு முகமும் ஓர் அனுபவம்; ஒவ்வொரு முகமும் ஓர் வாழ்க்கை; ஒவ்வொரு முகமும் ஓர் அழகு; ஒவ்வொரு முகமும் ஓர் புத்தகம்; அவற்றை அவள் பார்த்துப் படித்துச் சிந்தித்து வைத்துக் கொள்ளவேண்டும். மங்கையர் கழகத்துக்குள் நுழைகிற இடத்துக்கு நேர் எதிரே தூய்மையே பேருருவெடுத்துப் பெரிதாய் மலர்ந்து சித்திரமானாற் போலச் சாரதாமணி தேவியாரின் படம் மாட்டியிருந்தது. சுவர்களில் விவேகானந்தர், பரமஹம்சர், திருவள்ளுவர் போன்ற வேறு பெரியோர்களின் படங்களும் காட்சியளித்தன. சாரதாமணி தேவியாரின் படத்துக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு குத்துவிளக்குகள் பொற்சுடர் பூத்து எரிந்து கொண்டிருந்தன. சந்தன வில்லைகளைக் கொளுத்தி வைத்திருந்ததால் கட்டிடம் முழுவதும் சந்தனப் புகை மணந்தது. சில பெண்கள் வைத்திருந்த மல்லிகைப் பிச்சிப் பூக்களின் மணமும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்த மணங்களும், எதிரே புனிதமான சாரதாமணி தேவியாரின் ஓவியமும் பூரணியின் உள்ளத்தை என்னவோ செய்தன. மிகப்பெரியதாக எதையோ உணர்ந்து, எதற்காகவோ தாகம் கொண்டது அவள் உள்ளம். பெண்மைப் புண்ணியமெல்லாம் சேர்ந்து பூத்தது போன்ற சாரதாமணி தேவியாரின் முகத்திலிருந்து எதையோ புரிந்து கொண்டாள் அவள். பழுக்கக் காய்ச்சிய இரும்பு நீரை இழுத்து உறிஞ்சிக் கொள்கிற மாதிரி, அந்த முகத்திலிருந்து ஏதோ சில உணர்வுகளை இழுத்து உட்படுத்திக் கொண்டாள் பூரணி. "ஆகவில்லை." "அப்படியா? வயது நிறைய ஆகியிருக்கும் போல் இருக்கிறதே?" இந்த மாதிரியே இன்னும் என்னென்னவோ கேள்விகளையெல்லாம் கேட்டார்கள்; செல்வக் குடும்பத்துப் பெண்களின் வாயரட்டைகளுக்கும் வம்புக் கேள்விகளுக்கும் கணக்கு வழக்கு ஏது? அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையாய் பதில் சொன்னாள் பூரணி. இடையிடையே பூரணிக்காக மங்களேஸ்வரி அம்மாளே ஏற்றுக்கொண்டும் பதில் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் கடைசியாக 'தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஒரு பி.ஏ. பட்டம் கூடப் பெறாதவளை எப்படி நாம் இங்கே நியமிப்பது? கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் கூட நமது மாலை நேரத்து வகுப்புகளில் கலந்து கொள்வார்களே. இவளால் சமாளிக்க முடியுமா?' என்று புதியதொரு தடையை வெளியிட்டவள் முதலில் பேசிய முதியவள். மங்களேஸ்வரி அம்மாளுக்கு அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. "பட்டம் மனிதர்கள் கொடுப்பது. நாலைந்து கனத்த புத்தகங்களை ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கைகளிலும், மனத்திலுமாக மாற்றி மாற்றிச் சுமக்கிற எல்லோருக்கும் அது கிடைக்கும். ஞானம் பிறவியிலேயே வருவது. அதை மனிதர்கள் மட்டுமே தந்துவிட முடியாது. இந்த ஞானம் இந்தப் பெண்ணிடம் குறைவின்றி இருக்கிறது. விருப்பமிருந்தால் இவளை வேலைக்கு எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 'இல்லை' என்று சொல்லிவிடுங்கள். அதற்காக எதிரே உட்கார்த்தி வைத்துக் கொண்டு இப்படி அவமானப்படுத்துகிறாற்போல் கேள்விகளையெல்லாம் கேட்கவேண்டாம்" என்று மங்களேஸ்வரி அம்மாள் பொறுக்க முடியாமல் பதிலுக்குக் குத்தலாகச் சொல்லிக் காட்டிய பின்பே அவர்களுடைய வம்புக் கேள்விகள் நின்றன. அதற்காக அந்த அம்மாளுக்கு மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக் கொண்டாள் பூரணி. அந்த வேலை தனக்கே கிடைத்துத் தானே கற்பிக்கும் பணியை ஏற்றுக்கொண்டால் பட்டம் பெற்றவர்கள் மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி வகுப்புகளை நடத்திச் சந்தேகப்பட்டவர்கள் முகங்களில் கரி பூசவேண்டும் என்றொரு கொதிப்புக் கலந்த வைராக்கியம் பூரணிக்கு அந்த வினாடியே உண்டாயிற்று. சாரதாமணி தேவியாரின் படத்தைப் பார்த்தவாறே இந்த வைராக்கியத்தை மனத்தில் உண்டாக்கிக் கொண்டாள் அவள். மங்களேஸ்வரி அம்மாளின் செல்வாக்கு வெற்றி பெற்றது. அவருடைய விருப்பத்திற்கு யாரும் குறுக்கே நிற்கவில்லை. பூரணிக்கே அந்த வேலை கிடைத்தது. தைமாதம் முதற்கொண்டு நாள்தோறும் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுமணி வரையில் அவள் வகுப்புகளை நடத்த வேண்டுமென்றும், அதற்காக அவளுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கொடுத்து விடுவது என்றும் முடிவு ஆயிற்று. முதல் தேதியன்று வந்து சந்திப்பதாக மற்றவர்களிடம் கூறி விடைபெற்றுக் கொண்டு மங்களேஸ்வரி அம்மாளோடு புறப்பட்டாள் பூரணி. வாசலுக்கு வந்து காருக்குள் ஏறிக்கொள்கிறவரை சாரதாமணி தேவியாரின் தெய்வத் திருமுகம் அவள் கண்களுக்கு முன் மலர்ச்சி காட்டிக்கொண்டு நின்றது. மாதர் சங்கத்திலிருந்து திரும்பியதும், மங்களேஸ்வரி அம்மாளின் வீட்டில் சிறிது நேரம் கழிந்தது. "பூரணி! என்னால் முடிந்தவரை சொல்லி வேலையை வாங்கிக் கொடுத்துவிட்டேன். மாதர் சங்கத்தில் எல்லோரும் வம்புக்காரிகள். நன்றாகக் கற்பித்து நல்ல பேர் எடுக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு அம்மா." "நீங்கள் சொல்லவே வேண்டாம். நான் உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவேன்." அந்த அம்மாளுக்கு உறுதிமொழி அளித்தாள் அவள். மூத்த பெண் வசந்தா மாடியறையில் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். செல்லத்தைத்தான் பூரணி காண முடிந்தது. "பூரணியக்கா! நீங்க தினம் வந்து பேசிக்கொண்டிருந்து விட்டுப் போனால் நல்லது. ரவிவர்மா படத்திலேயே சரசுவதி முகத்தைப் பார்க்கிறாற்போல் உங்க முகத்தைப் பார்த்துப் பேசினாலே மனம் பரிசுத்தமாகப் போயிடுது" என்று களங்கமின்றிச் சிரித்துக் கொண்டே சொன்னாள் செல்லம். "செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்" என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேஸ்வரி அம்மாள். "இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா" என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். "டிரைவரைக் காரை எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு" என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி. "என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா! அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிச்சைக்காரத்தனமும், பெருந்தனமும் கலந்து உயிர்களைத் துடிக்க வைக்கிறது. திறந்த புத்தகத்தின் பக்கங்களைப் போல் வாழ்க்கை எழுதுண்டு கிடக்கும். இந்தச் சீரிய வீதிகளைக் கண்களால் அனுபவித்துப் படித்து மனதில் அசைபோட்டுக் கொண்டே போவேன் நான். அது எனக்குப் பிடிக்கும். பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பின்பு பஸ் ஏறிக்கொள்வேன். எனக்குக் காரும் வேண்டாம், டிரைவரும் வேண்டாம்." தெருவில் பூரணி வேகமாக நடந்தாள். விதவையின் திலகமிழந்த முகத்தைப் போல் ஞாயிற்றுக்கிழமை கடை வீதியில் கலகலப்பு இருப்பதில்லை! களை இருப்பதில்லை! நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த விளம்பரப் பலகையைப் பார்த்துவிட்டு சிறிது திகைத்து நின்றாள். முகம் சற்றே மலர்ந்தது. 'மீனாட்சி அச்சகம், குறித்த நேரம், குறைந்த செலவு' என்று மெல்ல வாய்க்குள் படித்துக் கொண்டாள். அச்சகத்து முன் கதவு அன்று ஞாயிறு விடுமுறையின் அடையாளமாகச் சாத்தியிருந்தாலும் முகப்பு அறையில் விளக்கு எரிவதும் அரவிந்தன் அமர்ந்திருப்பதும் நடைபாதையிலிருந்தே அவளுக்கு நன்றாகத் தெரிந்தன. முதல்நாள் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாளோ, அந்த இடத்துக்கு மிக அருகில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள். இந்த இடத்தில் மயங்கி விழுந்திராவிட்டால் அரவிந்தன் என்னை அப்படிப் பாடியிருக்க மாட்டாரே என்று நினைத்துக் கொண்டபோது இன்பச் சிலிர்ப்பு சிரித்தது அவள் மனத்தில். காலையில் விசிட்டிங் கார்டு வாங்கி வைத்துக் கொண்ட போது மறுநாள் தான் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதனால் என்ன? இப்பொழுது பார்க்கக் கூடாதென்று சட்டம் ஒன்றுமில்லையே! "ஓ! நீங்களா? ஏது இந்த நேரத்தில்... நாளைக்கு அல்லவா வருவதாகச் சொல்லியிருந்தீர்கள்?" என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து வந்தான் அரவிந்தன். 'அந்த இரவு நேரத்தில் வீணாக அவரைத் தொந்தரவு படுத்தாமல், வீட்டுக்குப் போயிருக்கலாமே' என்று முன்பு நினைத்ததற்கு மாறாக இப்போது நினைத்தாள் அவள். சிறிது நாணமும் வந்து தயங்கச் செய்தது. ஒல்கி ஒதுங்கி ஒசிந்து நின்றாள். "உள்ளே வாருங்களேன்... வாசலில் நிற்பானேன்?" கதவைத் திறந்துவிட்டுக் கூப்பிட்டான் அரவிந்தன். நினைப்பவர் மனதில் வித்தாக விழுந்து கனவுகளை முளைக்கச் செய்யும் அந்த அதியற்புத மாயப்புன்னகை அவன் இதழ்களில் தோன்றி நின்றது. பூரணி உள்ளே போய் உட்கார்ந்தாள். மேஜை மேல் கொஞ்சம் நிலக்கடலைப் பருப்பும் ஒரே ஒரு மலைவாழைப் பழமும், கிளாஸ் நிறைய பாலும் வைத்திருந்தான். பூரணி அவற்றைப் பார்த்துவிட்டுக் கேட்டாள். "இதெல்லாம் என்ன?" "இவை என்னுடைய இரவு உணவு". உள்ளே வந்து அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்றுகொண்டு பதில் கூறினான் அரவிந்தன். "இந்தச் சிறிய வாழைப்பழமும், கொஞ்சம் கடலைப் பருப்பும் கொஞ்சம் பாலும் எப்படிப் போதும் உங்களுக்கு?" இதைக்கேட்டு அரவிந்தன் சிரித்தான். "போதுமா, போதாதா? என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்றுதான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் 'போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு. மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்கு சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப்பட வேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?" "அதற்காக நீங்கள் அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டுப் பட்டினிக் கிடக்க வேண்டுமென்பதில்லையே?" "தவறு! நான் பட்டினி கிடக்கவில்லை. பகல் உணவைப் பசிக்காக உண்கிறேன். மற்ற நேரங்களில் மனம் நிறைவதற்குத் தான் உண்கிறேன். வயிறு நிறைவதற்கு அல்ல. எனது இந்த உணர்வுக்கு மூன்றே அணாக்கள் தான் செலவு. இப்படி மீதம் பிடிக்கும் காசுகளை இந்தத் தெருவில் குழந்தையும் கையுமாகப் பிச்சைக்கு வரும் பெண்களுக்குத் தருகிறேன். பெண்கள் புனிதமான தாய்க்குலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தெருப் புழுதியில் நடந்து பிச்சையெடுக்கும் நிலை வருவது ஒரு நாட்டுக்கு எவ்வளவு கேவலம்? வீட்டு வாயில்படியில் வந்து நிற்கும் பிச்சைக்காரர்களுக்கு எல்லாம் உணவு அளித்து, அறம் வளர்க்கும் அன்னபூரணிகள் பெண்கள். அவர்களே வீடு வீடாகப் படியேறிப் பிச்சைக் கேட்க வரும்படி விடுவது எவ்வளவு ஈனமான காரியம்?" அரவிந்தன் கொதிப்போடு பேசினான். இதைப் பேசும்போது, முகம் சிவந்து உதடுகள் துடித்தன அவனுக்கு. "நீங்கள் கூறுவது உண்மை. இப்போதெல்லாம் மதுரையில் பெண் பிச்சைக்காரர்கள் அதிகமாகிவிட்டார்கள்" என்ற பூரணியை நோக்கி, மேலும் அவன் கூறலானான். "கோபுரமும் கடைவீதியும் பங்களாக்களும் தியேட்டர்களும் நிறைந்த அழகிய மதுரையைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். இன்னொரு மதுரையையும் இங்கே நான் பார்க்கிறேன். இரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிற வழியில் தூங்குமூஞ்சி மரங்களின் கீழ் வெய்யிலே கூரையாய், மழையே கருணையாய்ச் சேற்றிலும் புழுதியிலும் வாழ்கிற அனாதைகளின் அழுக்கு மயமான மதுரையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா? யாராவது நினைக்கிறார்களா?" அந்தக் கருத்துக்களைக் கேட்கக் கேட்க அந்த முகத்திலே ஒளிரும் இலட்சியச் சாயையைப் பார்க்கப் பார்க்க அரவிந்தனுடைய கம்பீரமும் அவனது இலட்சியமும் மனத்தின் நினைவுகளில் அடங்காத அளவுக்கு உயரத்தில் இருப்பதைப் பூரணி உணர்ந்து கொண்டாள். வெளியில் போய்ப் பக்கத்துப் பால்கடையில் இன்னொரு கிளாஸ் பாலும் இரண்டு மலைப்பழமும் வாங்கிக் கொண்டு வந்து "இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று பூரணியை உபசாரம் செய்தான் அரவிந்தன். அவள் அந்த உபசாரத்தை ஏற்றுக் கொண்டாள். அரவிந்தனைப் பற்றி நினைக்கும் போது, "உன்னைப் போன்று இன்னொருவர் இருக்க முடியாதபடி நீ உயர்ந்து நிற்கிறாய். நினைக்கின்றவர்கள் மனத்தில் வித்தாக விழுந்து எண்ணங்களாக முளைக்கிறாய்" என்று தேவாரத்தில் வருகிற கருத்துதான் பொருத்தமாகத் தோன்றியது பூரணிக்கு. அவனுடைய மனத்தின் எல்லை பெரியது. அவனோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் கழிவதே தெரியவில்லை. முகத்தையும் சிரிப்பையும் போலவே பேச்சும் கவர்ச்சியாயிருந்தது அவளுக்கு. வெளியே இருந்தாற் போலிருந்து மழை தூறத் தொடங்கியிருந்தது. முதலில் தூறலாக இருந்த மழை சிறிது நேரத்தில் தெருவில் நடந்தால் நனைந்து போய்விடுகிற அளவுக்கு வலுத்துவிட்டது. பூரணி அச்சகத்தின் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை ஆவதற்கு இருந்தது. "அடடா! உங்களோடு பேசிக் கொண்டிருப்பதில் நேரமானதே தெரியவில்லை. பத்தரை மணியோடு பஸ் போக்குவரத்து சரி. அப்புறம் நான் எப்படி ஊருக்குப் போவது?" என்று பரபரப்பாக கூறிக்கொண்டே புறப்பட எழுந்தாள் பூரணி. "மழை பெய்கிறதே. எப்படிப் போவீர்கள்? நீங்கள் பஸ் ஸ்டாண்டுக்குப் போவதற்குள் கடைசி பஸ் போய்விட்டால் என்ன செய்வீர்கள்?" "எப்படியாவது போய்ச் சேர்ந்தாக வேண்டுமே? வேறென்ன செய்வது?" அவளுடைய தவிப்பு அரவிந்தனுக்குப் புரிந்தது. உள்ளே போய் ஒரு குடை கொண்டு வந்தான். "இதை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள். நானும் பஸ் ஸ்டாண்டு வரையில் உங்களோடு வருகிறேன். கடைசி பஸ் போய்விட்டால் வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம்" என்று அவளுடைய மறுமொழியை எதிர்பாராமலே கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான் அரவிந்தன். "ஒரு குடைதானே இருக்கிறது. நீங்கள் எப்படி வருவீர்கள்? வீணாக நனைய வேண்டாம். நான் எப்படியாவது போய்க் கொள்கிறேன். நீங்கள் அலையாதீர்கள்" என்று சொல்லி விட்டுத் தெருவில் இறங்கிய பூரணியை அரவிந்தன் தனியாக விடவில்லை. பிடிவாதமாக உடன் புறப்பட்டுவிட்டான். "அதனால் பரவாயில்லை! எனக்குச் சிறு பிள்ளையிலிருந்தே மழையில் நனைவதென்றால் மிகவும் பிடிக்கும். வெய்யிலும் மழையும் வானம் பூமிக்குத் தரும் சௌபாக்கியங்கள். அவற்றை நாம் ஏன் வெறுத்துப் புறக்கணிக்க வேண்டும்!" என்று சொல்லி விட்டுச் சிறு குழந்தைபோல் சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தான் அவன். இருவரும் வேகமாக நடந்தார்கள். நல்ல மழை. அரவிந்தனை நனையவிட்டு தான் மட்டும் குடையின் கீழ் நனையாமல் போவது வேதனையாக இருந்தது பூரணிக்கு. அவனோ விளையாட்டுப் பிள்ளைபோல் உற்சாகமாக மழையில் நனைந்து கொண்டு வந்தான். 'மனத்தில் இடம் கொடுத்து விட்டேன். குடையில் இடம் கொடுக்க ஏன் நாணப்பட வேண்டும்?' என்று நினைவுகள் புரளும் மனத்தோடு தெருவிளக்கின் மங்கி நனைந்த மழை வெளிச்சத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். "நீங்களும் உடன் வரலாம். நனையாதீர்கள்" என்று அவளாகவே அருகில் நெருங்கிச் சென்று குடையை அவனுக்கும் சேர்த்துப் பிடித்தாள். வனப்புமயமான அந்தப் பெண்ணின் பொன்னுடல் தனக்கு மிக அருகில் நெருங்கிய அந்த ஒரு கணத்து அண்மையில் மல்லிகைப் பூவின் மணமும் பன்னீரின் குளிர்ச்சியும் பச்சைக் கற்பூரத்தின் புனிதமும் ஒன்றாக இணைந்த ஒரு பவித்ர மயமான உணர்வு அரவிந்தனுக்கு ஏற்பட்டது. அந்த உணர்வில் அவனுடைய நெஞ்சும் உடலும் சிலிர்த்து ஓய்ந்தன. தாமரைப்பூ மலர்வது போல் மனத்தில் ஏதோ நெகிழ்ந்து இதழ்கள் பிரிந்தது. அடுத்த கணம் தன்னுணர்வுடன், "வேண்டாம்! இந்தச் சிறிய குடையில் இரண்டு பேர்கள் போவதனால் இரண்டு பேருமே நன்றாக நனைய நேரிடும். நீங்களாவது நனையாமல் வாருங்கள்" என்று சொல்லிப் புன்னகையோடு தானாகவே விலகிக் கொண்டு நடந்தான் அரவிந்தன். ஒரே ஒரு விநாடி அன்பில் நனைந்து மூழ்கிய பெருமிதத்தோடு மறுபடியும் அவள் அருகே மழையில் நனையலானான் அவன். பூரணி அனுதாபமும் அன்பும் மிதக்கும் கண்களால் அந்த வயது வந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கன்னக்கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே நடந்தாள். அவர்கள் பஸ் ஸ்டாண்டை அடைந்தபோது கடைசி பஸ்ஸும் போய்விட்டது. அந்த நேரத்தில் தனியாக ரிக்ஷாவிலோ, குதிரை வண்டியிலோ போவதைப் பூரணி விரும்பவில்லை. தயங்கினாள். "நான் வேண்டுமானால் துணைக்கு வருகிறேன். குதிரை வண்டியில் போகலாம்" என்றான் அரவிந்தன். அவள் அதற்கும் தயங்கினாள். மழையில் அவனும், குடையில் அவளுமாக நனைந்து கொண்டும் நனையாமலும் பஸ் நிலையத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள். "நடந்தே வேண்டுமானாலும் போகலாம்; நான் துணை வருகிறேன்." "திருப்பரங்குன்றம் வரையில் நனைந்து கொண்டேயா?" "திருப்பரங்குன்றம் வரை என்ன? உங்களோடு இப்படியே கன்னியாகுமரி வரையில் கூட நனைந்து கொண்டு வர நான் தயார்" என்று கூறிச் சிரித்தான் அரவிந்தன். சர்ரென்று மழை நீரும் சேறும் வாரி இறைபட ஒரு கார் வந்து நின்றது. அரவிந்தனுடைய சட்டையில் சேறு தெறித்துவிட்டது. கோபத்தோடு அந்தக் கர்வம் பிடித்த கார்க்காரனை விசாரிக்கத் திரும்பினான் அரவிந்தன். மீனாட்சி அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி வந்தார். குறிஞ்சி மலர் : சிறப்புரை
முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
கனவு நிறைகிறது
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |