தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் |
வாழ்க்கைச் சுருக்கம் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நதிக்குடி இவரது பிறந்த ஊர். சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து அந்தக் கால முறைப்படி இலக்கணச் சூத்திரங்களை மனப்பாடம் செய்து கல்வி கற்றவர். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். கல்கியில் சேர்ந்து அவர் எழுதிய முதல் புதினம், குறிஞ்சி மலர். 1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார். 1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்களை தினமணிக்கதிரில் எழுதினார். கதிரிலிருந்து விலகிய பின் பத்திரிகை உலகத்தைப் பின்புலமாக வைத்து சுந்தரக் கனவுகள் என் தலைப்பில் ஒரு புதினம் எழுதினார். பயண இலக்கியம் பயணக் கட்டுரைகளும் நா.பா. நிறைய எழுதினார். ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று அவர் எழுதிய பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. விருதுகள் சாகித்ய அகாதமி பரிசு (சமுதாய வீதி), ராஜா சர் அண்ணாமலை பரிசு (துளசி மாடம்), தமிழ்நாடு பரிசு போன்ற பல பரிசுகளும் விருதுகளும் பெற்றிருக்கிறார். மறைவு நாற்பத்தைந்து வயதிற்குமேல் எம்.ஏ. படித்துத் தேறி, டாக்டர் பட்டத்திற்குப் பதிவு செய்துகொண்டார். பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்ற தலைப்பில் ஆய்வேட்டினையும் சமர்ப்பித்தார். ஆனால் டாக்டர் பட்டம் கிடைக்க இரண்டே நாட்கள் இருந்த நிலையில் இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுக் காலமானார். புதினங்கள்
1. ஆத்மாவின் ராகங்கள்
புதுமுகம்2. கபாடபுரம் 3. குறிஞ்சி மலர் 4. சமுதாய வீதி 5. துளசி மாடம் 6. நெஞ்சக்கனல் 7. பிறந்த மண் 8. ராணி மங்கம்மாள் 9. வஞ்சிமா நகரம் 10. பொன் விலங்கு 11. நித்திலவல்லி 12. சாயங்கால மேகங்கள் 13. நெற்றிக் கண் 14. வெற்றி முழக்கம் (உதயணன் கதை) 15. பாண்டிமாதேவி 16. சத்திய வெள்ளம் 17. மணிபல்லவம் 18. நிசப்த சங்கீதம் 19. அநுக்கிரகா 20. பட்டுப்பூச்சி 21. கற்சுவர்கள் 22. சுலபா 23. பார்கவி லாபம் தருகிறாள் 24. அனிச்ச மலர் 25. மூலக் கனல் 26. பொய்ம் முகங்கள் 27. முள் வேலிகள் 27. சுலட்சணா காதலிக்கிறாள் சுந்தரக் கனவுகள் மலைச் சிகரம் பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது நினைவின் நிழல்கள் மூவரை வென்றான் நீல நயனங்கள் மனக் கண் கோபுர தீபம் அறத்தின் குரல் இலையுதிர் காலத்திரவுகள் மகாத்மாவைத் தேடி சிறுகதைத் தொகுதிகள் தலைமுறை இடைவெளி 1. தலைமுறை இடைவெளி வலம்புரிச் சங்கு மூவரை வென்றான் நெருப்புக் கனிகள் மங்கியதோர் நிலவினிலே புதிய பாலம் வேனில் மலர்கள் தகடூர் யாத்திரை தமிழிலக்கியக் கதைகள் பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது இராஜ கோபுரம் காலத்துக்கு வணக்கம் கண்ணன் கதைகள் கங்கை இன்னும் வற்றிவிடவில்லை தூங்கும் நினைவுகள் தேவதைகளும் சொற்களும் ஒப்புரவு பிரதிபிம்பம் புறநானூற்றுச் சிறுகதைகள் இது பொதுவழி அல்ல கொத்தடிமைகள் ஒரு கவியின் உள் உலகங்கள் சிறுகதைகள்
கொத்தடிமைகள் ராஜதந்திரிகள் ஹைபவர் கமிட்டி சுயமரியாதைக்கும் ஒரு விலை ஒரு நட்சத்திரத்தின் தோல்வி! வசதியாக ஒரு வேலை கடைசியாக ஒரு வழிகாட்டி ஞானச் செருக்கு கூபே கடைசியாக ஓர் ஆண்பிள்ளை புகழ்த்துறவு ஒரு வெறுப்பின் மறுபுறம் பின்னக் கணக்கில் தகராறு கவிதை கட்டுரை ஆராய்ச்சி நூல்கள் செல்லின் செல்வம் மொழியின் வழியே கவிதைக் கலை நானூறில் நல்ல காட்சிகள் சரத் சந்திரர் (மொழிபெயர்ப்பு) வீரேசலிங்கம் (மொழிபெயர்ப்பு) நானாலால் (மொழிபெயர்ப்பு) பூமியின் புன்னகை (கவிதைகள்) புதிய பார்வை மணிவண்ணன் கவிதைகள் கடற்கரை நினைவுகள் சிந்தனை மேடை புது உலகம் கண்டேன் சிந்தனை வளம் ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள் திறனாய்வுச் செல்லம் |