![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
முன்னுரை அரசியல், அரசியலால் பாதிக்கப்படும் சமூக நியாயங்கள், மனிதர்கள் இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக்கவும் படுகிறது. கல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவ்ர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்குகிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் எழுதக் கூடாதாம். இந்தத் தயக்கத்தைக் கூடியவரை தவிர்த்திருப்பவன் நான். தகர்த்திருப்பவன் என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம். என்னுடைய நெஞ்சக்கனல், சத்திய வெள்ளம், பொய் முகங்கள், நிசப்த சங்கீதம் ஆகிய நாவல்கள் இதற்குச் சாட்சியாக நிற்பவை. சும்மா கதை பண்ணுவது எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. வாழ்க்கையிலும் அதன் அன்றாட யதார்த்தங்களிலும் காலூன்றி நிற்காத கதாபாத்திரங்களால் எந்தப் பயனுமில்லை என்பதைப் படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் புரிய வைத்தாக வேண்டும். இலஞ்சம், பதவிப் பித்து, பேராசை, ஏமாற்று, துரோகம், வஞ்சகம் ஆகிய எதிர் மறைக் குணங்களைப் பற்றி எதை எழுத முயன்றாலும் நம்முடைய அன்றாட யதார்த்தங்களைத் தொடாமல் அதைச் செய்ய முடியாது. நம்முடைய அன்றாட யதார்த்தங்களை எழுதக் கூசினால் மேற்படி விவகாரங்களை எழுத்திலிருந்தே ஒதுக்கி விட வேண்டியதுதான். அன்றாட யதார்த்தங்களை ஒதுக்குவதோ, அவற்றிலிருந்து தானே ஒதுங்குவதோ சமூகப் பொறுப்புள்ள ஒரு படைப்பாளி செய்யக்கூடாத காரியமாகும். இப்படி ஒதுங்குவதாலும், ஒதுக்குவதாலும் தான் பல எழுத்தாளர்களுக்கு இப்போது கருத்துப் பஞ்சம் அல்லது உள்ளடக்க வறுமை (Poverty of Ideas) அல்லது சித்தாந்த மலட்டுத்தனம் ஏற்படுகிறது. இந்தச் சித்தாந்த வறுமையின் காரணமாக ஓர் இளைஞனும், யுவதியும் சுற்றுப்புற உலகத்தைப் பற்றிய கவலையோ அக்கறையோ இன்றிப் பூங்காக்களிலும், கடற்கரைகளிலும் சந்தித்துச் சௌந்தரிய அவஸ்தைகளைப் பற்றி நுனி நாக்கால் உரையாடிக் கொள்ளும் பூஞ்சையான வெற்றுப் பொலிவுக் கதைகளையே தீட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. ஒரு வளமான மொழிக்கு இதைவிடப் பெரிய பஞ்சம் வேறு எதுவும் இருக்க முடியாது. கதாபாத்திரங்கள் வெறும் செலூலாய்ட் பொம்மைகளாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் நான். ஆனால் தமிழில் அதன் வலுவற்ற திரை உலகப் பிரதிபலிப்பாக இலக்கிய உலகின் கதாபாத்திரங்களும் செலூலாய்ட் படைப்புக்களாக மாறி வருகிறார்கள். இந் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஆற்றோடு அடித்துக் கொண்டு போகப்படும் சத்தில்லாத சோனி மனிதர்கள் இல்லை. இவர்கள் எதிர் நீச்சலிடும் சக்தி படைத்தவர்கள். எதிர் நீச்சலிடுகிறார்கள். இவர்களுடைய எதிர் நீச்சலே இந்த நாவல். வெறும் ஓய்வு நேர நொறுக்குத் தீனியாக அல்லாமல் வாசகர்களுக்கு வைட்டமின் சத்து நிறைந்த விருந்தாக இதைப் படைப்பதில் பெருமைப்படுகிறேன். முன்பு கதிரில் தொடர் நாவலாக வெளிவந்த இக் கதை இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக நூல் வடிவில் வருகிறது. கருத்துப் பஞ்சமில்லாத இலக்கியங்களைத் தேடி நுகர்ந்து மகிழும் ஆரோக்கியமான வாசகர் கூட்டத்துக்கு இதை உரிமையாக்குவதில் மகிழ்கிறேன்.
நா. பார்த்தசாரதி
சென்னை31-12-81 நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|