33 யாரையும் எப்போதும் எந்த சந்தேகத்திற்காகவும் உடனே கைது செய்யலாம் என்ற வகையில் இயற்றப்பட்டிருந்த ஒரு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. நடந்ததை எல்லாம் பார்த்தால் ஏதோ திட்டமிட்டுக் கெடுதல் செய்ய, யாரோ முயன்று செயலாற்றுவதுபோல்தான் தோன்றியது. மங்காவும், தொண்டர்களும் எல்.எல்.ஏ. பில்டிங்கிலிருந்து விடு திரும்பித் தியாகி சிவகாமிநாதனிடம் நடந்த விவரங்களைக் கூறினார்கள். முத்துராமலிங்கம் பாடிய கவிதையின் மற்றொரு பிரதி மங்காவிடம் இருந்தது. அதை அவள் அவரிடம் கொடுத்தாள். வாங்கிப் படித்துவிட்டு. “இந்தக் கவிதையில் தேசவிரோதமாகவோ சட்ட விரோதமாகவோ எதுவுமே இல்லையே அம்மா தேசத்தைப் பற்றிக் கவலைப்பட்டு அக்கறை காட்டும் தொனி அல்லவா இதில் கேட்கிறது? எதற்காகவோ கைது செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். ‘நொண்டிக் கழுதைக்குச் சறுக்கினது சாக்கு’ என்று இதை வைத்துக் கைது செய்திருக்கிறார்கள்” என்றார் அவர்.
உடனே மங்காவை அழைத்துக் கொண்டு போய்த் தம்மேலும் தமது இயக்கத்தின் மேலும் ஈடுபாடுள்ள ஒரு வக்கீலைச் சந்தித்தார் சிவகாமிநாதன். முத்துராமலிங்கத்தின் மேல் போலீஸார் தொடுத்துள்ள வழக்கோ, குற்றச்சாட்டுக்களோ செல்லுபடியாகாதென்று வக்கீல் உறுதியாகக் கூறினார். தாமே வாதாடுவதாகவும் ஒப்புக் கொண்டார். முத்துராமலிங்கத்தைச் சென்று சந்திப்பதாகச் சிறையில் அவர்கள் முயன்றது வீணாயிற்று. அவன் பாடிய கவிதையில் ஒரு வார்த்தையும் எங்கோ நடந்த ஒரு கொலையில் சடலத்தைச் சுற்றித் தூவியிருந்த துண்டுப் பிரசுரங்களில் காணப்பட்ட ஒரு வார்த்தையும் ஒன்றாக இருக்கிறது என்பதற்காக அவனை இப்படி ஓர் ஆள் தூக்கிச் சட்டத்தின் கீழ்க் கைது செய்து கொண்டு போயிருப்பது அதியமாகப் பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்று போராடியதை விடச் சொந்த ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்று போராடுவது அதிகக் கொடுமை நிறைந்ததாக இருந்தது. அரசியல் உலகிலும் சமூகத்திலும் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருக்கும் பலர் மூலம் முயற்சி செய்தும் முத்துராமலிங்கத்தை ஜாமீனில் வெளியே அழைத்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். சிரமப்பட்டு முயற்சி செய்தும் அந்த விஷயத்தில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. “இப்படிப்பட்டவர்களைக் கொலை செய்து இவர்களின் மண்டை ஓடுகளை மியூஸியங்களில் வைத்தால் தான் சமூகப் புரட்சி விளைந்து சமத்துவம் மலரும்” என்று செந்நிறக் கையெழுத்துக்களால் கிறுக்கப்பட்ட பிரசுரங்கள் கொல்லப்பட்ட களம்பூர் மிராசுதாருக்கு அருகே கிடந்தனவாம். ‘அதிலும் மியூஸியம் என்று வருகிறது. ஆகவே தான் சந்தேகப்படுகிறோம்’ என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டவாதம் திட்டமிட்ட கட்டுக்கதை போலிருந்தது. எல்லாமே திட்டமிடப்பட்ட பயமுறுத்தல்தான் என்பது போகப் போகப் புரிந்தது. முத்துராமலிங்கம் கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு ‘நேரில்தான் பார்க்க அநுமதி இல்லை. நீங்கள் விரும்பினால் அவரோடு ஃபோனில் பேசலாம். அங்கே அவரைச் சிறைக் கண்காணிப்பாளர் அறையிலுள்ள ஃபோனில் வந்து உங்களோடு பேச ஏற்பாடு செய்திருக்கிறோம்! இதையும் நாங்கள் செய்யக்கூடாது. செய்யமுடியாது. உங்களுக்காகத்தான் இதையே செய்கிறோம் என்று நைச்சியமாகச் சொல்லிப் போலீஸ் தரப்பிலிருந்தே வந்து மங்காவைக் கூப்பிட்டார்கள். சிவகாமிநாதன், மங்கா, இருவருமே அதை நம்பி னார்கள். போலீஸ்காரர்கள் கூட மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் போனால் போகிறதென்று உதவ முன் வருகிறார்கள் போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. அரசாங்க கெடுபிடிகளையும் மீறிச் சில போலீஸ் அலுவலர்களும் உத்தியோகஸ்தர்களும் நல்லவர்களாக இருப்பதில் இரக்க குணமுள்ளவர்களாக இருப்பதையும் சிவகாமிநாதனே பொது வாழ்வில் அடிக்கடிப் பார்த்திருக்கிறார். இதைப் பற்றியும் அவர் அப்படித்தான் எண்ணினார். முதலில் தாமே போலிஸ் ஸ்டேஷனுக்கு அவளோடு கூடப் போய் வரலாமா என்று எண்ணினார். அப்புறம் மகன் பாண்டித்துரையையும், மகள் கஸ்தூரியையும் கூப்பிட்டு, “மங்கா அக்காவோட போலிஸ் ஸ்டேஷன் வரை கூடப் போயிட்டு வாங்க” என்று உடன் அனுப்பினார். அவர்கள் மூவரும் ஜீப்பில் தேடி வந்திருந்த போலீஸ் தரப்பு ஆளோடு ஸ்டேஷனுக்குச் சென்றார்கள். ஸ்டேஷனில் அவர்களுக்குப் பிரமாதமான உபசாரம் நடந்தது. மங்காவோடு உடன் வந்திருந்த பாண்டித்துரையையும், கஸ்தூரியையும் வெளியே அமர வைத்துவிட்டு மங்காவை மட்டும் தனியே_டெலிஃபோன் இருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். எதிர்ப்புறம் யாரோ லயனில் ஏற்கெனவே பேசக் காத்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக ரிஸீவர் தயாராக எடுத்து மேஜைமேல் வைக்கப்பட்டிருந்தது. “பேசுங்கம்மா! உங்களுக்குத்தான்...” என்று எடுத்து வைத்திருந்த ரிஸீவரைச் சுட்டிக்காட்டி மரியாதையாக அவளிடம் கூறினார் அழைத்து வந்த போலீஸ் அலுவலர். அவரது பவ்யமும் பணிவும் செயற்கையாக இருந்தன. ஆருயிர் கணவன் முத்துராமலிங்கத்தினிடம் பேச லாம் என்று ஃபோனை எடுத்தால் எதிர்பாராத அதிர்ச்சியாக மறு முனையிலிருந்து தந்தையின் குரல் சிறியது. “சீ! நீங்களும் ஒரு மனுஷனா? என்னை ரவை ரவையா வெட்டினாலும் அது நடக்காது” என்று கூறி எரிச்சலோடு ஃபோனை வைத்தாள் மங்கா. தான் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்து விட்டது. முத்துராமலிங்கத்தோடு பேச வேண்டும் என்ற ஆசையோ, சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ தனக்கு இருக்கும் என்ற அநுமானத்தை வைத்துப் போலீஸ்காரர்களின் உதவியோடு தந்தை தன்னை மிரட்டியிருக்கிறார் என்பதை உணர்ந்த போது அவள் குமுறினாள். அழைத்துச் சென்றது போலவே மிகவும் மரியாதையாக போலீஸ் ஜீப் மூலம் அவர்கள் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டார்கள். ஸ்டேஷனில் நடந்ததைச் சிவகாமிநாதனிடம் சொன்னாள் அவள். கேட்டுவிட்டு நிதானமாக மறுமொழி கூறினார் அவர். “உங்கப்பா அரசியல் நடத்துகிற மாதிரியே குடும்ப விஷயங்களையும் அரட்டி மிரட்டிச் சமாளித்துவிடலாம்னு நெனைக்கிறார் போல்ருக்கு.” “இனிமே இந்த ஜென்மத்திலே நான் அவர் சொல்றதைக் கேக்கப் போறது இல்லே.” “உனக்கு அந்த உறுதி இருக்கிறதுன்னாச் சந்தோஷம் தான் அம்மா.” இங்கே மங்காவின் மனத்தைக் கலைக்க இப்படி முயன்ற அதே நேரத்தில் சின்னியும் வேறு சில நண்பர்களும் மந்திரியின் ஆசியுடன் விசேஷ அநுமதி வழங்கப்பட்டுச் சிறைச்சாலைக்குச் சென்று முத்துராமலிங்கத்தைச் சந்தித்தார்கள். “உனக்கு ஏனப்பா இந்தப் பேஜார் புடிச்ச வேலையெல்லாம்? பேசாம கம்னு எனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. சிவகாமிநாதன் தான் என்னைப் பயங்காட்டி மிரட்டி இந்தக் கண்ணாலத்தைப் பண்ணி வச்சாருன்னு ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதிக் குடுத்தியானா - நிம்மதியா வெளியிலே வந்துடலாம். உன் மேலே ஒருத்தன் கை வைக்க மாட்டான். ஒரு வேலையைத் தேடிக்கினு நீ பாட்டுக்கு மெட்ராஸ்லே நிம்மதியா இருப்பே. இது இன்னாத்துக்குப்பா இந்தப் பெரிய எடத்து விவகாரத்திலே போய்த் தலையை விட்டே! கழுத்துக்குக் கத்தி வைக்கிற விரோதத்தைப் பார்த்துத் தேடிக்கிட்டியேப்பா?” என்று மிகவும் உரிமையோடு ஆரம்பித்தான் சின்னி. “நீயா வந்தியா? யாராவது சொல்லி ஏவிவிட்டு வந்தியா?” என்று கோபமாகப் பதிலுக்கு அவனைக் கேட்டான் முத்துராமலிங்கம். “யார் சொல்லியும் நான் வரலேப்பா! நம்ம தோஸ்தா கொஞ்ச நாள் பழகின ஆளாச்சேன்னு உன் கையிலே சொல்லிட்டுப் போக வந்தேன்.” “உன்னைப் பார்த்ததுலே ரொம்ப சந்தோஷம் சின்னீ! ஆனா இது மாதிரி விஷயத்திலே உன்னோட யோசனை - அறிவுரை எதுவும் எனக்குத் தேவைப் படாது. நீயும் தெரிஞ்சுக்க. உன்னை இங்கே அனுப்பிச்சு வச்சவங்களுக்கும் நல்லாத் தெரிகிற மாதிரிப் போய்ச் சொல்லு.” “இன்னா வாத்தியாரே! இதுக்குப் போயி இத்தனை கோபிக்கிறீயே...?” என்று பல்லை இளித்தான் சின்னி. அவனுடைய சாராய வியாபாரம் - விபசார விடுதி நடத்துவது எல்லாவற்றுக்கும் கட்சியும் கட்சி மேலிடமும் உதவியாயிருந்து வந்ததனால் கட்சி மேலிடத்தில் யாராவதோ அல்லது மந்திரியோ அவனைத் தூண்டிவிட்டு இங்கே அனுப்பியிருக்கக்கூடும் என்று புரிந்தது முத்துராமலிங்கத்துக்கு. தனது எஜமானர் தூண்டிவிட்டு வந்ததாக மட்டும் முத்துராமலிங்கம் கருதி விடக் கூடாது என்று எண்ணியோ என்னவோ சொந்த முறையில் அக்கறை காட்டுவது போலவும் அவனிடம் பேசினான் சின்னி. அவனைச் சுலபமாகத் தவிர்த்து அனுப்பிவிட்டான் முத்துராமலிங்கம். சிவகாமிநாதனை நம்பினால் பிழைத்துப் பணம் காசு சேர்த்து முன்னுக்கு வர இயலாது என்கிற தொனியில் சின்னி பேசியதை முத்துராமலிங்கம் இரசிக்கவில்லை. “ஒரே ஒரு வார்த்தைக்காக குற்றம் சாட்டிக் கைது செய்வதானால் நாட்டிலுள்ள புத்தகங்கள், பத்திரிகைகள் அகராதிகள் எல்லாவற்றிலும் எங்கெங்கே அந்த வார்த்தை வருகிறதோ அந்த வார்த்தையை அப்படி எழுதியவர்களை எல்லாம் ‘பிருவெண்டிங் டிடென்ஷனில்’ பிடித்து உள்ளே போட வேண்டியிருக்கும்! என்னைப் பொறுத்தவரை முத்துராமலிங்கத்தின் இந்தக் கவிதையை விட தேசத்தின் நலனில் அக்கறை காட்டிக் கவலைப்படும் இலக்கிய உத்வேகமுள்ள பகுதி வேறொன்று கிடைக்க முடியாது. இதை எழுதியவரைத் தேச விரோதியாகவும் சமூக விரோதியாகவும் சித்தரித்து வழக்குத் தொடுப்பதைப் போல அக்கிரமம் வேறு இருக்க முடியாது” - என்று வாதிட்டார் முத்துராமலிங்கத்தின் வக்கீல். கோர்ட் மறுநாளைக்கு ஒத்து வைக்கப்பட்டுக் கலைந்தது. மறுநாள் தீர்ப்பைக் கேட்கக் கோர்ட்டில் பெருங் கூட்டம் கூடிவிட்டது. குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் முத்துராமலிங்கத்தை விடுதலை செய்வதாகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி - தமது தீர்ப்பில் துணிந்து அவனது அந்தக் கவிதையைத் ‘தேசப் பக்தியை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த மனப்பாங்கோடு உள்ளமுருகி எழுதப்பட்டது’ - என்று வருணித்து ‘அதில் மோசம் காண முயன்றது கவிதையைப் புரிந்து கொள்ள இயலாத அறியாமையினால்தான் இருக்க வேண்டும்’ என்று பாராட்டியிருந்தார். மாலைப் பத்திரிகைகள் தீர்ப்பை முதல் பக்கத்தில் பிரசுரித்தன. காலைத் தினசரிகள் கோர்ட் வாசலிலேயே முத்துராமலிங்கத்தைப் பேட்டி காண முந்தின போது அங்கே ஆவல் அலை மோதியது. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
ஏறுவெயில் வகைப்பாடு : புதினம் (நாவல்) இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |