19 முதல் மாதச் சம்பளம் கைக்கு வந்ததும் மிகவும் சிரமப்பட்டு முயன்று மிச்சம் பிடித்து ஐம்பது ரூபாய் ஊருக்கு மணியார்டர் செய்திருந்தான் முத்துராமலிங்கம். தந்தை அவனைச் சென்னைக்கு அனுப்பியதே ஏதாவது பணம் சம்பாதித்து உபயோகமாகக் குடும்பத்துக்கு அனுப்புவான் என்பதற்காகத்தான். மிகக் குறைந்த தொகையான இந்த ஐம்பது ரூபாய் அவரைத் திருப்திப் படுத்தப் போவதில்லை என்றாலும் ஒன்றும் அனுப்ப முடியாமல் போவதற்கு இதையாவது அனுப்ப முடிந்ததே என்ற திருப்தி அவனுக்கு இருந்தது.
‘அஸிஸ்டெண்ட் - ஸ்டோரி டிபார்ட்மெண்ட்’ என்று அவன் பெயரை ஒரு வவுச்சரில் எழுதிக் கையெழுத்து வாங்கிக் கொண்டு முந்நூறு ரூபாயைக் கொடுத்தவுடன் வாங்கிக் கொண்டு நேரே உதவிக் காமிரா மேனும் அறை நண்பருமான சண்முகத்திடம் தான் போனான் முத்துராமலிங்கம். “அண்ணே! அறை வாடகைன்னு என் பங்குக்கு ஒரு தொகையைச் சொல்லுங்க... முழு வாடகையும் நீங்களே தரவேண்டாம்.” “இப்ப வேணாம்! சொன்னாக் கேளுங்க. பின்னாலே பார்த்துக்கலாம். இந்த முந்நூறு ரூபாயிலே ஊருக்கும் அனுப்பிச்சி அறை வாடகையும் கொடுத்திட்டீங்கன்னா அப்புறம் உங்களுக்குச் சாப்பிட ஒண்ணும் மிச்சமிருக்காது...” “பரவாயில்லை! நீங்க இதை வாங்கிக்குங்க... மீதத்தை நான் எப்படியோ நிரத்திக்கிறேன்...” “வாடகை வேணாம்னு சொல்ற இந்த உரிமையையும் நெருக்கத்தையும் அந்நியோந்நியத்தையும் நீங்க எனக்குத் தரத் தயாராயில்லேன்னா உடனே நீங்க தனியா வேற ரூம் பார்த்துக்கறதே நல்லது...” “நான் தப்பா ஒண்ணும் சொல்லல்லே...” “தப்பாவது சரியாவது? முதல்லே பணத்தை உள்ளே வையிங்க... என் கூட இந்த அறையிலே தங்க நீங்க எதுவும் இப்போ தர வேண்டாம்.” வேறு வழியின்றி முத்துராமலிங்கம் நண்பர் சண்முகத்தின் அன்புக் கட்டளைக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது. திருவல்லிக்கேணி - ராயப்பேட்டைப் பகுதியிலிருந்து அவன் கோடம்பாக்கத்துக்குக் குடிபெயர்ந்து சண்முகத்தோடு அறையில் தங்க ஆரம்பித்த பின்பு சின்னியை அடிக்கடி பார்க்க முடியவில்லை. எப்போதாவது ஸ்டூடியோவிலோ, சினிமாக் கம்பெனி அலுவலகத்திலோ, அறையிலோ வந்து பார்த்துக் கொண்டிருந்தான் சின்னி. அவனைப் பார்க்கும் போதெல்லாம் முத்துராமலிங்கம் ஒன்றை நினைப்பது வழக்கமாயிருந்தது. அவனைப் போன்ற நல்லவர்கள் கர்மயோகிகளைப் போல் யாருக்காகவோ மாற்று ஆட்களாக இருந்து லாபம் தரும் கெடுதல்களைச் செய்து வாழ்வதுதான் இந்த நகரில் வழக்கமும் நடைமுறையுமாக இருந்தது. அங்கே சிலர் தங்களுக்காக மட்டும் கெட்டவர்களாக இருந்தார்கள். வேறு சிலர் தங்களுக்காகவும் பிறருக்காகவும் சேர்த்துக் கெட்டவர்களாக இருந்தார்கள். மற்றும் சிலர் பிறருக்காகவே கெட்டவர்களாக இருந்தார்கள். கெட்டவர்களாக இராவிடிலோ அப்படிக் காண்பித்துக் கொள்ளாவிட்டாலோ தங்களைத் தலையெடுத்து வாழ விடாமல் மிதித்து நசுக்கிக் கொன்று விடுவார்கள் என்ற முன்னெச்சரிக்கை கலந்த தற்காப்பு உணர்வினால் சிலர் அப்படி இருக்க முயன்றார்கள். அந்த வடபழநிக் கூட்டம் தொடர்பாகப் போலீஸாரின் அத்துமீறலைக் கண்டித்தும், நியாயம் கோரியும் தியாகி சிவகாமிநாதன் உண்ணாவிரதம் இருந்தும் உடனே நல்ல விளைவுகள் எதுவும் நடந்து விடவில்லை. மந்திரியும் சிவகாமிநாதனின் அரசியல் எதிரிகளும் அவர் மேல் ஏராளமான பொய் வழக்குகளைப் போட்டிருந்தார்கள். வக்கீலுக்கும், வழக்குக்கும், கோர்ட்டுகளுக்கும், செலவழித்துக் கொண்டே ‘தியாகியின் குரல்’ பத்திரிகையை வெளிக்கொணரத் திணறினார் அவர். ஒரு நல்ல மனிதனைப் பொது வாழ்க்கைத் துன்பங்கள் போதாதென்று பொருளாதாரத் தொல்லைகளும் பிடுங்கித் தின்றன. முத்துராமலிங்கமே தியாகி சிவகாமிநாதனைத் தேடிச் சென்று ஒரு யோசனை சொன்னான். வழக்கு நிதிக்காக ஒரு பொதுக் கூட்டம் போட்டு அந்தக் கூட்டத்திலேயே துண்டு ஏந்தி வசூல் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தைச் சூளைமேடு பகுதியில் வைத்துக் கொள்ள ஏற்பாடாயிற்று. சிவகாமிநாதன் திடீரென்று முத்துராமலிங்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டார்: “தம்பீ! கல்லூரி நாட்களிலே மேடையிலே முழங்கியிருக்கிறதாகச் சொல்றீங்க! கவியரங்களிலே பிரமாதமாப் பாடியிருக்கிறதாச் சொல்றீங்க... இப்ப மட்டும் என்ன ஆச்சு? சூளைமேடு பொதுக் கூட்டத்திலே எனக்கு முன்னாடி நீங்க பேசணும்...” “நான் வேற எதுக்குங்க...? முழு நேரமும் நீங்களே எடுத்துக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும். ஜனங்க உங்க பேச்சைக் கேக்கத்தான் ஆர்வமா வந்து கூடுவாங்க...” “நீங்க விரும்பினால் நான் மறுக்கலே...” “நான் விரும்பறேன்! நீங்க மறுக்கக் கூடாது, மறுக்க முடியாது. நீங்களும் பேசறீங்க... போஸ்ட்டர்லே உங்க பேரைப் போடச் சொல்லிடறேன்...” தியாகி சிவகாமிநாதனின் பேரோடு முத்துராமலிங்கத்தின் பேரையும் சேர்த்துப் பெரிய பெரிய வண்ணச் சுவரொட்டிகள் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டன. சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம் பகுதிகளில் பெரிய பெரிய சுவரொட்டிகளில் முத்துராமலிங்கத்தின் பெயரைப் பார்த்ததும் ஒரு நாள் காலை பாபுராஜ் மெல்ல ஆரம்பித்தான். “இன்னாப்பா! பெரிய ஸ்பீக்கர் ஆயிட்டியாமே?” “...” முத்துராமலிங்கம் உடனே இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. “ஊர்ல இருக்கற சுவர்ல எல்லாம் பெரிசு பெரிசாப் போஸ்டர் அடிச்சு உன் பேரை ஒட்டியிருக்குதே?” “...” “இந்த சிவகாமிநாதன்கிற ஆளு பொழைக்கத் தெரியாத மனுசன்... அவங்க கட்சி இங்கயும், டெல்லியிலேயும் செல்வாக்கா இருந்தப்பவே யாரையாவது பிடிச்சுக் கையிலே கால்லே விழுந்து கெஞ்சிக் கதறி மந்திரியா வந்திருக்கலாம். அதுக்குக் கையாலாகாமே ஊருல இருக்கறவங்களை எல்லாம் பத்திக் கொறை சொல்லிக் கொறை சொல்லியே உருப்படாமப் போயிட்டாரு...” “மேய்ப்பவன் பாதையில் இழுபட்டு, அடிபட்டுப் பலியாகப் போகும் ஒரு மந்தை கொழுத்த செம்மறி ஆடுகளை விடச் சுதந்திரமாகக் கர்ஜிக்கும் ஒரு சிங்கத்தின் பசி உயர்ந்தது. சிவகாமிநாதன் ஒரு மந்தை ஆடுகளில் ஓர் ஆடு இல்லை. ஒற்றைத் தனிச் சிங்கம் அவர்...” “சிங்கமோ, அசிங்கமோ பொழைக்கத் தெரியாத மனுசன்.” “இங்கே பொழைக்கத் தெரிஞ்சவங்கிறதுதான் யாரு? கயவர்கள், கோழைகள், இடைத்தரகர்கள், அடிவருடிகள், சந்தர்ப்பவாதிகள், அரைகுறைத் திறமைசாலிகளான முழுப்பாசாங்குக்காரர்கள்... இவங்க தானே பொழைக்கத் தெரிஞ்சவங்க? சிவகாமிநாதன் இவங்கள்ளே ஒருத்தர் இல்லைங்கிறது அவருக்குப் பெருமைதானே ஒழியக் குறைவில்லை.” “சரி! சரி! போதும்ப்பா... உங்கிட்டப் பேசி மீள முடியாது. இந்தத் தெர்க்கத்திக்கார ஆளுங்கள்லாமே ஒரே வாயாடிங்கப்பா...” என்று சிரித்து மழுப்பியபடி விவாதத்திலிருந்து நழுவித் தன்னை விடுவித்துக் கொண்டான் பாபுராஜ். சூளைமேடு, கூட்ட நாளன்று மாலையிலேயே சிந்தாதிரிப்பேட்டை சென்று சிவகாமிநாதனையும் அழைத்துக் கொண்டு பொதுகூட்ட மேடைக்குச் சென்றான் முத்துராமலிங்கம். அன்று பிரம்மாண்டமான கூட்டம் திரண்டிருந்தது. முதலில் சில கல்லூரி மாணவர்கள் பேசினார்கள். சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நகரின் பொறியியற் கல்லூரி, கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தியாகி சிவகாமிநாதனின் போராட்டங்களுக்கும் இலட்சியங்களுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என்பதைத் தெரிவித்தார்கள். அவர்கள் முடித்ததும் முத்துராமலிங்கத்தைப் பேச அழைக்குமுன் தியாகி சிவகாமிநாதனே அவனைக் கூட்டத்துக்கு அறிமுகப்படுத்திச் சில வார்த்தைகள் முன்னால் பேசினார். “நண்பர்களே! பொதுமக்களே! லஞ்ச ஊழல்களையும் சந்தர்ப்பவாத அரசியலையும் எதிர்த்துச் சுமார் முப்பதாண்டுக் காலமாகத் தனித்துப் போராடி வருகிற எனக்குத் தற்செயலாக ஓர் அரிய இளம் நண்பர் சமீபத்தில் கிடைத்திருக்கிறார். அவர் அஞ்சாதவர். அறிவுக் கூர்மை உள்ளவர். சிந்திக்கத் தெரிந்தவர். தென்னாட்டுச் சிங்கமாக விளங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைப் பெற்றவர். தார்மீகக் கோபங்கள் நிறைந்த இளைஞரான அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகின்றேன்! எனது இயக்கம் சமூக சுத்திகரிப்புத் தன்மை கொண்டது. சமூகத்தைத் துப்புரவு செய்யப் புறப்படுகிறவனின் சொந்த வாழ்க்கை அபாயங்களும் எதிர்ப்புக்களும் சூழ்ந்ததாகத்தான் இருக்கும். வசதிகளும் கிடைக்காது. வசதியும், புகழும் இல்லாத இந்த அறப் போராட்ட இயக்கத்தில் என்னோடு துணிந்து இறங்க முன் வரும் இளைஞர்களைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இந்த நாடு உருப்பட்டு விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டாகிறது. இன்ஸ்டண்ட் காபி, இன்ஸ்டண்ட் டீ என்பது போல் பொது வாழ்வில் சகல துறைகளிலும் நீடித்த உழைப்போ, தியாகமோ இல்லாமல் உடனே ‘இன்ஸ்டண்ட்’ புகழுக்கு ஆசைப்படுகிறவர்கள் காத்து நிற்கிறார்கள். அப்படிச் சூழ்நிலையில் அதிகப் புகழும் விளம்பரமும் இல்லாத என்னைத் தங்கள் தலைவனாக ஏற்கும் இந்த இளைஞர்களைப் பார்த்து நான் வியந்து நிற்கிறேன். இந்த இளைஞர்களில் என்னை அதிகம் கவர்ந்திருக்கும் துணிச்சல்காரரான திரு.முத்துராமலிங்கத்தை இப்போது உங்கள் சார்பாக இங்கே பேச அழைக்கிறேன்.” இப்படிக் கூறித் தியாகி சிவகாமிநாதன் அறிமுகப்படுத்தி வைத்த போது முத்துராமலிங்கம் பேச எழுந்ததும் அவனை வரவேற்கும் கரகோஷம் வானைப் பிளந்தது. “இன்று நாம் புதிய குருட்சேத்திரத்தில் நிற்கிறோம். இலஞ்ச ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் செய்கிறவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள் என்று தயங்கி உணர்வு தளர்ந்து நம் கையிலுள்ள படைகளைக் கீழே போட்டு விட்டு நின்று விடுகிறோம். அப்போது நம்மைத் தைரியப்படுத்தி எழுப்பி நிறுத்தி, ‘வில்லினை எடடா கையில் வில்லினை எடடா - அந்தப் புல்லியர் கூட்டத்தினைப் பூழ்தி செய்திடடா!’ என்று வில்லை எடுத்துக் கொடுத்து ஊக்கப்படுத்த ஒரு துணிவான கீதாசாரியன் நமக்குத் தேவையாயிருக்கிறான். இன்று இந்தத் தமிழ்நாட்டில் எனக்கும் உங்களுக்கும் அப்படித் துணிவூட்டக்கூடிய ஒரே தலைவர் நம்முடைய சிவகாமிநாதன் அவர்கள் தான்.” இந்த வாக்கியத்தைப் பேசியபடியே மங்கா நின்றிருந்த திசையில் பார்வையை ஓடவிட்டான் முத்துராமலிங்கம். அவள் அதே பழைய உற்சாகத்தோடுதான் கேட்டுக் கொண்டிருந்தாள். “முன்பு வெள்ளைக்காரர்கள் நம்மைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள். இன்று நம்மவர்களே நம்மை ஆள்வதன் மூலம் சுரண்டப் பார்க்கிறார்கள். சுரண்டுகிறவன் விதேசியாயிருந்தால் என்ன? சுதேசியாயிருந்தால் என்ன? சுரண்டல் இருக்கிறவரையில் என்றும் நாம் பெருமைப்பட முடியாது. சுரண்டல் அடிமைத்தனத்தின் பேரால் நடந்தால் என்ன? ஜனநாயகத்தின் பேரால் நடந்தால் என்ன? சுரண்டல் என்பது ஒரு தேசத்தின் ஆரோக்கியத்தையே நலியச் செய்கிறது. சிலர் கட்சிகளின் பேரால் சுரண்டுகிறார்கள். வேறு சிலர் மந்திரி பதவியை ஒரு கேடயமாகப் பயன்படுத்தித் தங்களைக் காத்துக் கொண்டு சுரண்டுகிறார்கள்.” மறுபடியும் மங்கா நின்று கொண்டிருந்த திசையில் பார்வையை மிக அவசரமாக ஓட விட்டான் முத்துராமலிங்கம். “சிலர் மந்திரி பதவியின் பேரால் சுரண்டுகிறார்கள்” என்ற வாக்கியத்திற்காக அவளும் அவளுடைய தோழியும் மற்றவர்களோடு சேர்ந்து பலமாகக் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். முத்துராமலிங்கத்தின் உற்சாகம் அதிகமாகியது. அவன் மேலும் பேச்சைத் தொடர்ந்தான். நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
புலன் மயக்கம் - தொகுதி - 4 வகைப்பாடு : இசை இருப்பு உள்ளது விலை: ரூ. 160.00தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |