17 மிகவும் அமைதியாக நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் போலீஸார் லத்திக் கம்புகளுடன் இறங்கி மந்திரியின் காருக்கு வழி உண்டாக்க முயன்றார்கள். சிவகாமிநாதன் மைக்கில் முழங்கினார்: “பெருமக்களே! இது முறைப்படி முன் அநுமதியும் லைசென்ஸும் பெற்ற பொதுக்கூட்டம். இதைக் கலைக்க யாருக்கும் உரிமை இல்லை. யார் சொன்னாலும் கேட்காதீர்கள். அப்படியே அவரவர்கள் இடத்தில் உட்காருங்கள்.” அப்போது எதையாவது சாக்கு வைத்துக் கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஆசை மந்திரிக்கே உண்டாயிற்று. ஓர் எதிர்ப்பைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்கிறவர்களை விட எதிர்ப்பவர்களையே நசுக்கிவிட முயலும் மூன்றாம் தரமான அரசியல்வாதிகள் தான் இன்று அரசியலில் பெரிய இடங்களில் இருக்கிறார்கள். அதிகாரத்தையும் பதவியையும் அடைகிறவரை வாக்காளர்களின் காலில் விழுவதும், அதிகாரமும் பதவியும் கைக்கு வந்த பின் தங்களை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரோடு எந்த மக்களின் காலில் விழுந்து பதவிக்கு வந்தார்களோ, அந்த மக்களையே ஓங்கிக் காலால் மிதித்து உதைப்பதும் வழக்கமாயிருக்கிறது. ஜனநாயக யுகத்தின் மிகப் பெரிய பாவம் என்பது அதிகார துஷ்பிரயோகம் தான். ஒவ்வோர் அரசியல் கட்சியும் தன் பங்குக்குக் குறைவின்றி அந்தப் பாவத்தைச் செய்து கொண்டிருந்தன. வெளியே இருக்கிறவரை எது சரி, எது தவறு என்று துல்லியமாகப் பிரித்து உணரவும் உரைக்கவும் முடிகிற விவரந் தெரிந்த அரசியல் தலைவர்கள் கூட ஆட்சிக்குப் போய்ப் பதவியில் உட்கார்ந்து விட்டால் நல்லது கெட்டது புரியாதவர்களாகவும் தெரியாதவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் தெரியாதது போல் கட்சி அரசியல் மூலமாகப் பதவியில் இருப்பவன் யாரோ அவனுக்குப் பொது நியாயங்கள் எவையுமே பிடிபடாமல் போய்விடுகின்றன. இந்தியாவில் கட்சி அரசியலில் இருக்கிறவரை ஒவ்வொருவருக்கும் இந்த வகை ஜலதோஷம் இருந்தே தொலைகிறது. அப்போது முத்துராமலிங்கமும் சின்னியும் கவனித்துக் கொண்டிருந்த போதே போலீசார் அந்த அமைதியான கூட்டத்தின் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். கூட்டம், தடியடி, கண்ணீர்ப் புகை வீச்சு மூலம் கலைக்கப்பட்டது. மந்திரியின் காரைக் கொளுத்துவதற்குத் தூண்டியதாகவும் முயன்றதாகவும் தியாகி சிவகாமிநாதன், அவர் மகள், மகன் மூவரும் கைது செய்யப் பெற்றுப் போலீஸ் லாரியில் கூட்டிக் கொண்டு போகப் பட்டிருந்தார்கள். கூட்டத்துக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்ட போது கூட்டத்தாரோடு கலந்து கொள்ளத் துறுதுறுத்த முத்துராமலிங்கத்தைச் சின்னி தடுத்து நிறுத்தியிருந்தான். “பொழைப்புக்கு வேலை தேடிக்கிட்டிருக்கிற நீ அடிக்கடி ஜெயிலுக்குள்ளாரப் போயிட்டாக் கிடைக்கிற வேலையும் எகிறிப் பூடும்.” “அதுக்காகக் கண்ணெதிரே நடக்கிற அக்கிரமத்தைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியாது.” “இன்னிக்கு நாட்டுல நடக்கிற இது மாதிரி அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்திட எந்தத் தனி ஆளாலேயும் முடியும்னு தோணலை தம்பீ!” நடுவே உண்டாக்கப்பட்ட வழியில் மந்திரியின் குடும்பத்தினரோடு கூடிய அந்தக் கார் போலீஸ் பாதுகாப்போடு பத்திரமாகச் சென்றது. பரபரப்பிலும் கலவரத்திலும் அந்தப் பகுதிகளில் எல்லாக் கடைகளையும் அடைத்து விட்டிருந்தார்கள். தெரு வெறிச்சோடியிருந்தது. கூட்ட மேடையைச் சுற்றி இரண்டொரு போலீஸ்காரர்கள் நின்று கொண்டு மைக்காரனையும் மேடை ஏற்பாடு செய்திருந்தவனையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அன்று வெள்ளைக்காரன் காலத்தில் இருந்த போலீஸும் தியாகி சிவகாமிநாதன் போன்ற தேச பக்தர்களையும் தொண்டர்களையும் இப்படித்தான் அடித்து விரட்டியது. இன்று இந்தச் சுதந்திர இந்தியாவின் போலீஸும் இவர்களை அடித்து விரட்டுகிறது. இவர்களுக்கு என்றுதான் விடியப் போகிறது? இந்தியர்களை அடிமைப்படுத்தி மகிழ்வதிலும் அடக்கி மகிழ்வதிலும் அந்நியர்களை விடச் சக இந்தியர்களே மேலும் மிக மோசமாக அல்லவா இருக்கிறார்கள்? அன்று வெளியாருக்கு அடிமைப்பட்டு அடங்கியிருந்தோம். இன்று வேண்டியவர்களுக்கே அடிமைப்பட்டு அடங்குகிறோம் என்பதுதான் வித்தியாசமாக இருந்தது. அங்கிருந்து கொலைகாரன் பேட்டை வீட்டில் போய் தூங்கலாமா அல்லது கிருஷ்ணாம்பேட்டை மயானத்திலேயே இரவைக் கழித்துவிடலாமா என்று சின்னி முத்துராமலிங்கத்தைக் கேட்டான். முத்துராமலிங்கம் பதில் சொன்னான்: “மனசு சரியில்லே! வா! கொஞ்ச நேரம் ‘பீச்’சிலே போய்ப் பேசிக்கிட்டிருக்கலாம். அப்புறம் தூங்கறதைப் பத்தி யோசிப்போம். “ஏன் மனசுக்கென்ன வந்திச்சு?” “வா! போகலாம்” - என்று கடற்கரையை நோக்கி நடந்தான் முத்துராமலிங்கம். சின்னி பின் தொடர வேண்டியதாயிற்று. கடற்கரைக்குச் சென்று மணலில் அமர்ந்த பின்னும் சின்னிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தான். “இந்த ஃபீல்டிலே உனக்கு நல்ல எதிர் காலம் இருக்குப்பா! நாளைக்கு நீயே தனியாக் கதை வசனம் பாடல் எல்லாம் எழுதலாம். பேர் வாங்கலாம்.” “எந்த ஃபீல்டைச் சொல்றே?” “அதான் சினிமா ஃபீல்டு?” “என்ன பாவம் பண்ணினேனோ பாபுராஜ் மாதிரி நிரட்சர குட்சிங்களுக்குப் போயி அசிஸ்டெண்டா இருக்கச் சொல்றே?” “அவன் முதலியாருக்கு ரொம்ப வேண்டியவன். இந்த ஃபீல்டுலே ரொம்ப நாளா இருக்கான்.” “அது போகட்டும்! இந்த ஊரே ரொம்ப வேடிக்கையான ஊரா இருக்குதப்பா. இங்கே தகுதியும் திறமையும் உள்ளவனை ஒதுக்கறாங்க. ஒதுக்கப்பட வேண்டிய கழிசடைகளைத் தகுதியும் திறமையும் உள்ளவனாகக் காண்பிச்சுப் பாசாங்கு பண்றாங்க.” “நெளிவு சுளிவு தெரியாத முழு நல்லவங்களை விட நெளிவு சுளிவு தெரிந்த மோசமானவங்களே போதும்னு எடுத்துக்கிறாங்க... அதுலே என்ன தம்பி தப்பு?” “இல்லே! தேச விடுதலைப் போராட்டத்துலே குடும்பத்தையும் வாழ்க்கையையும் சொத்துச் சுகங்களையும் தியாகம் பண்ணின சிவகாமிநாதன் மாதிரி ஆளுங்க இன்னும் சிரமப் பட்டுக்கிட்டே இருக்காங்க... சிரமப்படாம எப்போ எந்தக் கட்சி ஜெயிக்குமோ அதுக்கு ஜால்ரா போட்டுடறவன் வசதியா இருக்கான்.” “இதெல்லாம் நெனைச்சுப் பார்த்தாக் குழப்பம் தான் மிஞ்சும் தம்பி! நமக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்? புதன் கிழமையிலிருந்து நீ முதலியார் சினிமாக் கம்பெனியிலே பாபுராஜுக்கு உதவியாய்ப் போய்ச் சேரு. மத்ததை அப்புறம் பார்த்துக் கிடலாம்.” தன்னைப் போல் சின்னி அவற்றையெல்லாம் பற்றி அதிகம் சிந்தனை செய்து மனத்தை அலட்டிக் கொள்ளத் தயாராயில்லை என்பது புரிந்தது. கடற்கரை மணற் பரப்பில் பேசிக் கொண்டிருந்த - படுத்துக் கொண்டிருந்த ஆட்களைப் போலீஸ்காரர்கள் வந்து கிளப்பி விரட்டுகிறவரை அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் போய்க் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தின் பாழ்மண்டபத்திலே தான் இரவைக் கழிக்க நேர்ந்தது. சின்னி ஆதங்கப்பட்டுக் கொண்டான். “அங்கே கொலைகாரன் பேட்டைக்குப் போயிருந்தா கொஞ்சம் வசதியாப் படுக்கலாம்.” “பரவாயில்லே வசதிக்கென்ன வந்திச்சு இப்போ?” “அதுக்கு இல்லே. நான் எங்கே வேணாப் படுப்பேன். எனக்கு எல்லாம் பழக்கம் தான்... நீ படிச்ச ஆளு... நாளைக்கு ஒரு வேலைக்குப் போகப் போறவன் இப்பிடி எல்லாம்?...” “நான் படிச்சவன் தான். ஆனா சொகுசுக்கு அடிமைப்பட்டுப் போனவன் இல்லே. எத்தினியோ ராத்திரி தலையிலே உருமால் கட்டிக் கிட்டு பருத்திக் காட்டுக்குக் கையிலே அருவாளோட காவல் காக்கப் போயிருக்கேன்...” முத்துராமலிங்கம் இப்படிக் கூறியதற்குச் சின்னி பதிலெதுவும் சொல்லவில்லை. நிசப்த சங்கீதம் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
நிறைவுரை
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |