15 தங்கை கிளியாம்பாள், முன்னறிவிப்பேதும் இன்றி மணி வந்து இறங்கியதும் சிறிது திகைப்படைகிறாள். “என்ன மணி? மதுரையில் ஏதானும் கூட்டமா?...” மணி பையை வைத்துவிட்டு பெஞ்சில் உட்காருகிறாள். தங்கை கிளியாம்பாளின் கணவரும் மதுரையில் புகழ்பெற்ற வக்கீல்தாம். இந்த வீட்டுக் கூடத்திலும் காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் வரிசையாகத் தொங்குகின்றன. நூக்கமர மேசை, கண்ணாடி அலமாரி, வெள்ளிப் பாத்திர பண்டங்கள், சமையல்காரர் என்று செல்வச் செழிப்பை விள்ளும் வீடு.
“ஆட்சேபம்னு யார் சொன்னா, மணி?” “என் காதில் விழுந்ததைச் சொல்றேன். அவள் கல்யாணமாகாமல் நிற்பதற்கு நான் ஒரு காரணம்னு காதில் விழுந்தது. குழந்தைகள் இருவரும் வந்து போய்ப் பழகியிருக்கிறவாதான். இப்படி நான் ஒரு காரணம்னு கேட்டது நெஞ்சில் முள்ளாய்த் தைக்கிறது...” மணியின் குரலில் துயரம் முட்டினாலும் காட்டிக் கொள்ளாத ஒரு வீறாப்புடன் பேசுகிறாள். கிளி தமக்கையை ஆசுவாசப்படுத்துகிறாள். “காபியைக் குடி, முதலில்... யாரோ ஏதோ சொன்னா நீ ஏன் எடுத்துக்கணும் மணி? ஊரில நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவா. அதை ஏன் நாம எடுத்துக்கணும்?” “கிளி உனக்குத் தெரியாது... நீ எடுத்துக்காம இருக்கலாம்... இந்த வீட்டிலே, அக்கா தம்பி, சகோதர பாசம் கூட இல்லை. வெறும் பணம் தான் பந்தமா இருக்கு...” “என் காதுலயும் விழுந்தது. ரெண்டு வருஷத்துக்கு முன்னயே, வேடிக்கையா பிரஸ்தாபிக்கிறாப்பல, அம்மா சொன்னா. நானும் அதுக்கென்னம்மா, வெளியில எதற்குப் போகணும், கட்டிப்போட்டா உறவு விட்டுப் போகாதுன்னேன். அவளுக்கும் இஷ்டந்தான். ஆனா... அப்புறம் அவான்னா வரணும்? ஒருவேளை மோகனுக்குக் குடுக்கிறாளோன்னு சந்தேகம் இருந்தது. அது அப்பவே நீத்து போச்சு... ஒண்ணுமே போடாம நாங்க வலியப்போய்க் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிருக்காளோ என்னமோ? இங்கே ஜோசியர்ட்ட ஜாதகத்தைக் கூடப் பார்த்து வச்சிருக்கு. பண்ணலாம்னார்...” “சரி, கிளி, இப்ப நான் வந்து கேட்டாச்சு. பெரிசு பண்ணாதே. ஆனிக்குள்ள கல்யாணம் நடக்கணும்...!” நெஞ்சில் ஏறிய பளு இறங்குகிறது. தம்பிக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்ததுமின்றி, கல்யாணத்துடன், அவன் நிலம், பண்ணை என்ற பந்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறாள். அவர்கள் அந்தப் பூர்வீகமான வீடு, பண்ணை இரண்டையும் பிரம்ம தேசத்துக் குடும்பம் ஒன்றுக்கு உரித்தாக்கிவிட்டு மணலூர் பிசுக்கை, ஒட்ட அழித்துக் கொள்கிறார்கள். மணிக்கோ, இப்போது மணலூர் மட்டுமின்றி, கோயில்பத்து, உழனி, மயிலாங்குடி என்று சுற்றுவட்ட கிராமங்கள் தவிர, கீழ்த்தஞ்சையின் பல மிராசு பண்ணை உழவர் மக்களும் உறவினராகிவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் நாட்டு அரசியல் நிலையும் மிக நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திருச்சி கல்லூரி மாணவர்களும் தீவிர தேசிய இயக்கம் அமைத்து சமுதாயத்தின் மெத்தனமான உறக்கத்தை உலுக்கிக் கலைக்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கூட்டுப் போரில் அந்த ஆதிக்க அரசுக்கு இந்தியா உதவி செய்யக்கூடாது என்ற நிலைமையும் மாறி வருகிறது. சோவியத் யூனியனில் ஜர்மனியின் ஆக்கிரமிப்பும், கீழை நாடுகளில் ஜப்பானிய ஆக்கிரமிப்பும், இந்தியாவை, பிரிட்டன் - நேச நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அரசியல் சூழலையே மாற்றி விடுகின்றன. ஜனசக்தி இதழ்கள் சமத்துவம் கண்ட சோஷலிச நாடான சோவியத் யூனியனில், ஜர்மானியப் படையினரை எதிர்த்துத் தாயகம் காக்க தீவிரமாகப் போராடும் சோவியத் மக்களின் வீரசாகசங்களைப் பற்றிப் பத்தி பத்தியாக விவரிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவுக்குச் சுதந்திரம் என்பது எளிதாகி விடக்கூடாது என்ற முன்னுணர்வுடன் பிரிட்டன், ஹிந்து - முஸ்லிம் என்ற பிரிவினைச் சூழ்ச்சியையும் தூண்டிவிடாமலில்லை. இப்போது, மணி சார்ந்திருக்கும் கட்சி ஒரே குரலாக “காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய்! அடக்குமுறைகளை நிறுத்து! முஸ்லீம் லீக் - காங்கிரஸ் ஒற்றுமை ஓங்கட்டும்!” என்று முழங்குகிறது. மணி இத்துணை நெருக்கடியிலும், பரபரப்பிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை அல்லல்களைப் போக்குவதற்கு முனைந்து செயல்படுகிறாள். நாகப்பட்டினத்தில், ‘ஸ்டீல் ரோலிங் மில்’ என்ற தொழிற்சாலை, தனியார் தொடங்கி நடத்தப்படும் நிறுவனமாகும். இந்தியாவில் தொழில்கள் பெருக வேண்டும் என்ற ஆர்வத்துடன், வண்டிப்பட்டைகளை எஃகுக் கம்பிகள் போன்ற சிறுசிறு தடவாளங்களை உற்பத்தி செய்யும் இத்தொழிலகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இந்தத் தொழிலாளிகள் இருக்கைகளை மணி சென்று பார்க்கிறாள். உழவர் குடிகளிலேனும் சிறிது பசுமை இருக்கும். வயலில் சென்று சேம்போ, கருணையோ, தானியக் கதிரோ திருடிப் பசியாறுவதற்கேனும் வழி உண்டு. தென்ன மரத்திலேறி இரண்டு காய்களைப் பறித்து அருந்தலாம். பிறகு பண்ணைக்காரன் கட்டி வைத்து அடிப்பான். கோயில்பத்து ஊரில், தேங்காய் திருடுவதற்காக அடிப்பதற்கே பெயர் போன பண்ணை உண்டு. ஆனால், இந்தத் தொழிலாளர் குடும்பங்களில்...? ஆறணா கூலி, அதையும் முழுசாக ஒரு தொழிலாளியும் பெறமாட்டான். சாராயக் கடைக் கடனே கூலியின் பெரும் பகுதியை விழுங்கி விடும். இந்தப் பட்டணத்துச் சந்தியில், காசில்லாமல், ஒரு வாழைத் தண்டு கூடக் கிடைக்காது. போர்க்காலம், விளக்கெரிக்கவே மண்ணெண்ணெய் இல்லை. பரட்டை முடியில் புரட்டக்கூட நல்லெண்ணெய் வாங்க இயலாத நிலையில், அதைக் கொண்டு விளக்கெரிக்க முடியுமா? மாலை ஏழு மணியளவில் இந்தக் குடியிருப்புகளைச் சென்று பார்க்கையில் மணியின் உள்ளம் கனலுகிறது. பசி பசி என்று எலும்பும் தோலுமாகப் பிய்த்தெடுக்கும் குழந்தைகள், சொறி சிரங்குடன் குப்பை மேட்டுக் கழிவுகளுடன் குந்தி விளையாடிவிட்டு, எண்ணெய்ப் பசையில்லா உடலைப் பறட்டு பறட்டென்று சொறிகின்றன. போதையில் தள்ளாடி விழும் தொழிலாளி, மனைவியை “ஏண்டி சோறாக்கவில்லை” என்று எட்டி உதைக்கிறான். “அடப்பாவி, அடிக்கிறியே? நொய்க்குருண கூட படி முக்கால் ரூபா விக்கிது. அதுவும் கிடைக்கிறதில்ல!...” என்று அழுகிறாள். “ஏப்பா? மாசி? குடிச்சி ஏன் பாழா போறீங்க?” “தாயி, குடிக்கிறது கேடுன்னு தெரியும். ஆனா... வேலை ரொம்ப சாஸ்தி. யுத்தம்னு சொல்லி ஆறுமணிக்கு மேலும் வேலை வாங்கறாங்க. கொஞ்சம் சரக்கு எடுத்திட்டாத்தான் ஒடம்பு ஒடம்பாயிருக்கு...” மணி மறு பேச்சுப்பேச நாவெழாமல் நிற்கிறாள். இவர்களுக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்று தெரியாது. இவர்கள் உழைப்பை இப்படி முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். காலை எட்டு மணியில் இருந்து மாலை ஏழு மணி வரை - உழைப்பு. இடைவேளை ஒரு மணி என்று வைத்துக் கொண்டாலும், ஒன்பது மணி நேரத்துக்கு மேல், ஏறக்குறைய பத்து மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், கூலியோ, அதே ஆறணா... இவர்கள் உழைப்பின் லாபத்தில் தான் முதலாளிகள், கார் சவாரி செய்வதும், முதல் வகுப்பில் பயணம் செய்வதும், பெண்டு பிள்ளைகள் வயிரம் பட்டு என்று கொழிப்பதும். “ஏம்ப்பா, நீங்களும் மனிதங்கதானே?” “என்னம்மா இப்படிக் கேக்குறீங்க? நாங்க... வேறென்ன செய்வோம்...” “வேறென்ன செய்வோமா, ‘வெந்ததைத் தின்னிட்டு விதி வந்தாச் சாவோம்’னிருக்கிறவங்கல்லாம், அறிவு கொண்டு யோசிக்க வேணாமா? உங்க பொழுது மூச்சுடும் நீங்க அந்த ஆலைக்காக உழைக்கிறீங்க. அதுக்குப் பயனா, உங்கள் குழந்தை குட்டிகளோடு மானமா வாழ வேணுங்கற அளவு கூலி கிடைக்க வேணாமா? இல்ல, இதில ஒரு நாலு மணி நேரந்தான் வேலை, பிறகு மீதி நேரத்த்க்கு ஏதானும் எங்கியும், ஏரோட்டுவோம்னு போறீங்களா? இல்லையே? முழு நாள் வேலைன்னா, உங்களுக்கு எல்லாச் சலுகைகளும் வேண்டும். குடியிருக்க நல்ல வீடு, பசியாறச் சோறு, மானமாகப் பிழைக்கத் துணி போன்ற தேவைகள், உடம்பு அசௌக்கியமானல் வைத்தியப் பராமரிப்பு பெண்க்ளுக்குப் பிரசவம், ஒரு நல்லது பொல்லாததுக்குமான பொறுப்பு இதெல்லாம் அந்த உழைப்புக்குள் அடக்கமாகணும். உங்க ஜீவனம் இந்த உழைப்புக்கு ஈடாகிறது. நீங்கள் இதை எல்லாம் கேட்கணும், தோழர்களே!” ”கிழிக்கமாட்டாங்க. எப்படிக் கிழிக்க முடியும்? சீட்டுக்கட்டை அப்பிடி இலகுவாகக் கிழிக்க முடியாதுப்பா! நீங்க ஒத்தச் சீட்டில்ல! சீட்டுக்கட்டு! எத்தினி தொழிலாளிங்க?” “இருக்குறாங்க, நானூறு, அந்நூறு பேருங்க...” “பொம்பளை எத்தினி பேரு...” “ஸ்வீப்பருங்க ஏழுபேரு... ந்தா, பாக்கியம், வா இங்கிட்டு! அம்மா வந்திருக்காங்க சொல்லு?” என்று பின்னே ஆவலுடன் எட்டிப் பார்க்கும் ஒரு பெண்ணைக் கூப்பிடுகிறான். “ஏம்மா உங்களுக்கும் கூலியா மாசச் சம்பளமா?...” “ஒருக்க மூணரை ரூபா வரும்! நாலு ரூபா விழும்.” “நீங்களும் வேலை செஞ்சிகிட்டே இருக்கணும்?” “ஆமாங்கம்மா, ஃப்ளோர் முழுதும் கூட்டணும், தண்ணி கொண்டாற, வேலை சரியா இருக்கும்...” “அதுக்கு இந்தக் கூலி வாங்குறியே உனக்குப் போதுமா?” ”எங்கங்க! போன வருசம், புருசன் கட்டர் கையில வுழுந்து காயமாகி சீப்புடிச்சிச் செத்துப் போயிட்டாரு. பெறகுதா எனக்கு சூப்ரவைசர் சொல்லி மானேஜர் இந்த வேலை போட்டுக்குடுத்தாரு. அஞ்சுபுள்ளங்க... இதா... ரூபாக்கி எட்டுப் படி அரிசி வித்திச்சி. இன்னிக்கு குத்தாத புழுத்த அரிசி ரெண்டு படி போடுறாங்க. அதுக்குக் கூட்டத்தில் இடிச்சித் தள்ளிட்டுப் போயி இதா காயம்பட்டுக்கிட்டு கெடக்கிறான். அதையும் தண்ணிய ஊத்தித் தாரான்...” “இப்ப நீங்கள் எல்லாரும் ஒண்ணுசேரறீங்க. உங்கள் குறைகளை, வேண்டிய சாமான்களை, சலுகைகளைக் கேட்டு, ஒரு மகஜர் தயார் பண்ணுவோம். அதை எடுத்திட்டு நாம எல்லாரும் தெரு வழியே நடந்து ஊர்வலமாப் போய் அந்த மானேஜரைப் பார்த்துக் கொடுப்போம்...” முதற்பொறிகளை அத்தொழிலாளிகளின் நிராசையை விரட்டியடிக்க அவர்கள் நெஞ்சங்களில் விதைத்த பின், மணி ஊரைச் சுற்றிச் சுற்றி, இன்னும் அன்றாடம் கூலியை நம்பிப் பிழைப்பு நடத்தும் பல மக்களைப் பற்றி விவரம் சேகரிக்கிறாள். இந்த நாகையில் இவள் சார்ந்த கட்சியின் பொறுப்பாளியாக, குமாரசாமி என்ற தோழன் இவளுக்குப் பல வகையிலும் உதவுகிறான். வெளிப்பாளையத்தின் பக்கம் கடற்கரைப் பகுதியின் பல பங்களாக்களின் வழியே நடக்கிறான். சூழ்ந்துள்ள வறுமைக்கு நடுவே செல்வத் திட்டுகள் அவை. ஒரு காலத்தில், அந்தத் தீவுச்சிறையில் இவள் வைக்கப்பட்டிருந்தாள். வெளிக்காற்று அவள் மூச்சில் புகுந்ததில்லை; மேனியில் பட்டதில்லை. வெளியே பயணம் செய்தாலும் பட்டுத்திரை தொங்கிய மூடு ‘கோச்’ வண்டியினுள்ளேதான் அடைந்திருந்தாள்... துறைமுகப் பண்டகசாலையைப் பார்த்துக் கொண்டு வெளியே நிற்கிறாள். துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் வாயிலில் நிற்கின்றனர். துறைமுகத் தொழிலாளரைச் சந்திப்பது இலகுவானதாக இல்லை. மகஜரை எழுதுகிறார்கள். ஆங்காங்கு, ‘சர்க்கார் டிப்போக்கள் திறக்கப்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் சீராக உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும். ரூபாய்க்கு எட்டுப்படி என்று நல்ல அரிசி, மண்ணெண்ணெய், அடுப்பெரிக்க நியாயவிலையில் விறகு, சர்க்கரை ஆகிய முக்கியப் பொருள்கள் மக்களுக்கு எந்நாளிலும் எப்போதும் கிடைக்க சர்க்கார் வகை செய்ய வேண்டும்.’ இதை எழுதி, டைப் அடித்து அந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு சென்று மணி ஒவ்வொரு ஆளாக ரேகை இடச்செய்து கையொப்பம் பெறுகிறாள். மோட்டார் தொழிலாளர் 120 பேர் கையொப்பமிடுகின்றனர். தொழிலாளர் நிரம்பிய பகுதியில் இருந்து, இன்னும் 320 பேர் கையொப்பமிடுகின்றனர். பல துறைமுகத் தொழிலாளிகள் கையொப்பமிடுகின்றனர். ஒரு பிரதியை பதிவுத் தபாலில் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு அவர் பார்வைக்கு அனுப்பி வைக்கிறாள். இரண்டு வாரங்கள் ஓடிவிடுகின்றன. ஒரு தகவலும் இல்லை. “குமாரசாமி!... வரும் திங்கட்கிழமை நாம் ஊர்வலம் போக வேண்டியதுதான். வேலைநாளில் ஊர்வலமாகச் சென்று பார்க்கமுடியுமா?” ”வாணாம்மா, மானேஜ்மெண்ட் வுடாது. சப்கலெக்டருக்குப் பேட்டி வேணும்னு முதல்ல கேட்டு கடிதாசி அனுப்பி இருக்கிறோமே? இப்ப ஞாயித்துக்கிழமை ஊர்வலம் வச்சிட்டாத்தான், மத்த எல்லாத் தொழிலாளிகளும் வர்றதாச் சொல்லியிருக்காங்க. இதுவரையிலும் ஊர்வலம்னா, பொண்ணு மாப்பிள ஊர்வலம் தான் தெரியும் ஊர்க்காரர்களுக்கு, இப்ப புதுசா நாம இதத் தயார் பண்ணுறோம்...” இந்த ஊர்வலம் பற்றிக் கேள்விப்பட்டதும், ஆலைத் தொழிலாளிகள் எளிதில் சம்மதம் தெரிவிக்கவில்லை. “காந்தி கட்சி ஊர்கோலத்துக்கெல்லாம் வரமாட்டமுங்க... போலீசு புடிச்சி அடிச்சா என்னங்க செய்கிறது?” என்று மீனாட்சி என்ற தொழிலாளிப் பெண் கூறுகிறாள். “ஏழு மணி வரையிலும் வேலைய செஞ்சிட்டுப் போன்றாங்க. போன மாசம், நூறு ரூவாதா கூலி வந்திருக்கு. ஊர்கோலம் வம்பெல்லாம் வாணாமுங்க. உள்ளதும் போயிடிச்சின்னா...” மணி அந்தப் பெண்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்கிறாள். “இது காந்தி கட்சி இல்ல. எந்தக் கட்சியும் இல்ல. உங்களுக்காக நாங்க, அரிசி விறகு மண்ணெண்ணெய் நியாயமா கிடைக்கணும் இல்ல? ஏம்மா, இதை நீங்க கேக்கலன்னா, நசுங்கிச் சாவுறதத் தவிர வேறுவழியில்ல. அப்படித் தொல்லைப்படுறதுக்கு நியாயம் கேட்டோம்னு ஓர் ஆறுதல் இருக்கில்லையா? நான் பொறுப்பேத்துக்கிறேன், நீங்க இதனால வேலை போயிடுமோன்னு பயப்படாதீங்க... வாங்கம்மா... எல்லாரும் கூட்டமா வரணும். பெண்பிள்ளைங்க குஞ்சு குழந்தைகளோடு எப்படிக் கஷ்டப்படுறாங்கங்கற விவரம், காரில குந்திட்டு ஆபீசுக்குப் போறவங்களுக்கு இருக்குமா?...” ஒரு வாரம் எடுத்துச் சொன்னபிறகு, மாட்டுப் பொங்கல் கழிந்து கரிநாளும் இல்லாமல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, ஊர்வலம் ஏற்பாடு செய்கிறார்கள். ‘எங்களுக்கு அரிசி வேண்டும்! வேண்டும், வேண்டும் அரிசி! பசி தீர்க்க அரிசி! டிப்போக்கள் திறவுங்கள்! எட்டுப்படி அரிசி! அடுப்பெரிக்க விறகு! விளக்கெரிக்க மண்ணெண்ணெய்!’ நாகை தெருக்களில் ஏறும் இதமான பனிவெயிலில், மக்கள் திரண்டு சர்க்காருக்குக் குரல் கொடுப்பதை ஒரு வியப்பாக வீடுகளின் இரு மருங்கிலும் இருந்து பார்க்கிறார்கள். “அதா, ஆம்பிள வேஷத்தில் இருக்கிறவங்கதா மணியம்மா” துப்புரவுத் தொழிலாளர் இருவர் பேசிக் கொள்வதை மணியம்மா செவியுறுகிறாள். “நீங்களும் வாங்க!” பெண்களுக்கு வாய் திறந்து கத்திக் குரலெழுப்பும் இந்தச் சந்தர்ப்பமே உற்சாகமாக இருக்கிறது. சப்கலெக்டர், அலுவலகத்தில் இருக்கிறார். வாயிலில் வரும் கும்பலை, காவலாளிகள், ஒரு ஃபர்லாங் முன்பே தடுத்து நிறுத்துகின்றனர். “நாங்கள் சப்கலெக்டரைப் பார்க்கவேணும்!” “... ஒரே ஒராள், காரியதரிசி மட்டும்தான் வரலாம்...” என்று அரைமணி காத்திருந்த பிறகு, டவாலிச் சேவகனும், குமாஸ்தாவும் வந்து சொல்கிறார்கள். மணி, அவரைக் காண, மகஜரின் பிரதிகள் அடங்கிய பையுடன் உள்ளே செல்கிறாள். அலுவலக அறை... பிரிட்டிஷ் சர்க்காரின் பிரிதிநிதியாக அமர்ந்திருக்கும் சப்கலெக்டர், முன்பெல்லாம் இந்தப் பகுதியில் வெள்ளைக்காரன் தான் இருப்பான். இவன் இந்தியன். அறிவும் திறமையும் உள்ள இளைஞர்கள், தேசசேவைக்கு வராமல், பதவி கருதி நம்மை ஆளும் சர்க்காருக்கு அடிபணியப் போய்விடுகிறார்கள்... இவன் மனச்சாட்சி உள்ளவனாக இருப்பானா? “...நமஸ்காரம். எங்களை வரச்சொன்னதற்கு வந்தனம். நான் ஸ்டீல் ரோலிங் மில் வொர்க்கர்ஸ் யூனியன் பிரதிநிதியாக அதன் காரியதரிசியாக உங்களைப் பார்த்துப் பேச வந்திருக்கிறேன். உங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு மகஜர் அனுப்பி இருந்தோம்...” அவன் புன்னகை செய்து, “உட்காருங்கள்” என்று மரியாதையுடன் ஓர் ஆசனத்தைக் காட்டுகிறான். “வந்தனம்!” என்று அமர்ந்தவாறு, அந்த விவரங்கள் அடங்கிய தாள்களையும் மகஜரையும் அவனிடம் கொடுக்கிறாள் மணி. சேலை உடுத்திராமல், ஆண் கோலத்தில் பேச வந்திருக்கும் இப் பெண்மணி தரும் மகஜரை இன்னும் வியந்த நிலையில் பார்க்கிறான். புன்னகை - மரியாதை கலந்த பணிவு இரண்டும் போட்டி போடும் முகம் கண்டு மணியும் தெம்பு கொள்கிறாள். “இந்த... அறிக்கை, மகஜரைத் தயாரித்தவர்... நீங்கள்தாமா?” “... நான் மட்டும் எப்படித் தயாரிக்க முடியும்? அத்தனை தொழிலாளர்களும் சேர்ந்துதான் தயாரித்திருக்கிறோம்!” இந்த விடை அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது போலும்! “நீங்கள்... யூனியனில்... செகரிடரியா?” “ஆமாம். அவர்களுக்கு ஒருவராகக் கேட்கத் தெரியாது. அவர்களுக்காக யூனியன் கேட்கிறது. உணவு நெருக்கடி, உடனடிப் பிரச்சினை. இதில் ஒத்திப்போடக் கூடிய தடை எதுவுமில்லை. இந்தக் கோரிக்கைகள் நியாயமானவை இல்லையா?...” “உணவுப் பொருளுக்காகக் கோரிக்கை வைக்கும் மகஜரில் இருப்பவர்கள் பலர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால் வொர்க்கர்ஸ் குறைகள் பற்றிய கோரிக்கைகள் தனியாக இருக்கிறது, பாருங்கள்...!” அவன் பார்க்கிறான். “இவர்கள் எல்லாரும் தொழிலாளரா? தினக்கூலியா?...” “ஆமாம். இவர்களின் சம்பள விகிதம் சராசரி, மாதத்துக்கு நாலரை ரூபாய்தான் வருகிறது. மாசத்தில் கச்சாப் பொருள் இல்லை என்று நிர்வாகம் பாதிநாள்கள் வேலை கொடுப்பதில்லை. ஆனால் யுத்தகாலம் என்று, பாதி நாள்களில் அதே கூலிக்குப் பத்துமணி நேரமும் வேலை வாங்குகிறது.” “சரி... நல்லதம்மா, இந்த மகஜரை நீங்கள் மில் மானேஜர் மூலமாக எங்களுக்கு அனுப்புங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்...” பந்து திருப்பியடிக்கப்படுகிறது. எனினும், சப்கலெக்டர் மரியாதையுடன் விவரம் கேட்டாரே! மணி நம்பிக்கை கொள்கிறாள். பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |