18 ஆண்டு 1945, மணிக்குப் புதிய உற்சாகமளிக்கும் விதமாகவே பிறக்கிறது. இந்த ஆண்டில் மணி கவிக்குயில் சரோஜினி தேவியைப் பார்க்கப் போகிறாள்; அவர் உரையைக் கேட்கப் போகிறாள். ஜனவரி இருபத்து நான்காம் தேதி, பெரம்பூர் ரயில்வே இன்ஸ்டிட்யூட் மைதானத்தில், தொழிற்சங்க காங்கிரஸ் நடக்கிறது. தொழிற் சங்கத் தலைவராக இந்நாள்களில் ‘டாங்கே’ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், பிரிட்டனில் நடக்கும் தேர்தலை முன்னிட்டு அவர் இங்கிலாந்து சென்றிருக்கிறார். ‘கன்ஸர்வேடிவ்’ என்ற பழைமைவாதிகளின் கட்சி வீழ்ந்து, தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுக்குச் சுதந்திரம் வரும் வாய்ப்பு பெரிதும் கூடுகிறதன்றோ?
இந்தியப் பெண் குலத்தின் ஒளிவிளக்கு! தேசத் தந்தை என்று மக்கள் கொண்டாடும் காந்திஜியின் உள்ளார்ந்த செல்வி. தங்கச் சிறகுகளுடன் கவிதை வானில் வட்டமிடும் இந்தப் பெருமகள், தூசிக்காற்றுச் சூழலின் தொழிற்சங்க மாநாட்டைத் திறந்து வைத்து வாழ்த்த வருகிறார். சென்னை நகரில் கால் வைக்கும்போதே புதிய கிளர்ச்சி தோன்றுகிறது. இம்முறை அவள் ஆலிவர் ரோடு வீட்டுக்குச் செல்லவில்லை. தமக்கை மகன் மூர்த்தியும் மயிலாப்பூரில்தான் இருக்கிறான். இவனுக்குத்தான் நாகையில் கல்யாணமாயிற்று. தங்குவதற்கு ஏற்ற வீடு. தன்னுடன் வரும் இரு நண்பர்களையும் கூட்டி வருகிறாள். இந் நாட்களில், மணி எத்தனையோ மாநாடுகளில் பங்கு கொண்டிருக்கிறாள். விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடுகள் - கட்சி மாநாடுகள், தொழிற்சங்க மாநாடுகள் என்று தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று, தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பல தலைவர்கள், தோழர்களின் பரிச்சயங்கள், நட்புறவில் நனைந்திருக்கிறாள். அறிவின் விரிவும், குறுகிய எல்லைகளின் குத்தலும் அனுபவப்பட்டிருக்கிறாள். ஆனால், கவியரசியின் குரலினிமையிலும், அதன் கம்பீர முழக்கத்திலும் மணி பரவசமடைகிறாள். ஏதோ ஒரு மந்திர நாதம் வந்து கட்டிப் போடுவது போன்று அச்சொற்கள் அவளை ஈர்த்துக் கொள்கின்றன. “தொழிலாளத் தோழர்களே! இந் நாட்டின் உயிர் நாடிகள் நீங்கள். உங்களுடைய ஆக்க சக்தியும் ஒற்றுமையும் கட்டுப்பாடுமே, இந்தியாவின் உயிரோட்டமான வலிமை...!” மக்கள் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் கை கொட்டித் தங்கள் வலிமையை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். அந்த மகிழ்ச்சி அலையும், பரவசமும் எங்கு நோக்கினும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கையாகத் திகழ்கிறது. தலைவர் என்றால் இவரல்லவோ தலைவர்! தொடக்க உரை நிகழ்ந்து முடிந்ததும், தோழர் பங்கிம் சந்திரர், உரையாற்ற எழுந்திருக்கிறார். அவரது ஹிந்தி உரையை மொழி பெயர்க்க மொழி பெயர்ப்பாளர் வந்ததும், கூட்டத்தில் சலசலப்பு உண்டாகிறது. யார் யாரோ, ‘பி.ஆர். வேண்டாம்!’ என்று கூச்சல் போடுகிறார்கள். சரோஜினி எழுந்து நின்று கையமர்த்துகிறார். “என்ன விஷயம்? ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள்?” “இந்த மொழி பெயர்ப்பாளர் வேண்டாம்!” என்று எங்கிருந்தோ ஒரு தனிக் குரல் ஒலிக்கிறது. “சரி இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் நீங்கள் கூடியிருக்கிறீர்கள். இந்த மொழி பெயர்ப்பாளர் வேண்டாம் என்று சொல்பவர்கள் மட்டும் கை தூக்குங்கள்!” சரோஜினியின் குரல் கேட்டதும் கூட்டம் எப்படி அடங்குகிறது? ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களிடையே, இருபத்தைந்து கைகள் கூட அங்கே உயரவில்லை. அதே தோழர், பங்கிம் சந்திர முகர்ஜியின் ஹிந்தி உரையை மொழி பெயர்க்கிறார். அகில இந்திய அளவில், கதிரரிவாளும் சுத்தியலும் என்ற சின்னம், தொழிற் சங்கங்களின் பொது லட்சியத்தை உயிர் மூச்சென்று விளக்குகிறது. மணி, நாட்டின் இதயம் போன்ற கேந்திர ஸ்தானத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் மெல்லிய இழை போன்ற கிராம அமைப்பின் நுணுக்கமான இயல்புகளை நன்கு உணர்ந்திருக்கிறாள். கிராமத்து மக்களை ஒன்று திரட்டுவதில் நேரிடக்கூடிய பல பிரச்சினைகளில் புகுந்து புறப்பட்டுப் பக்குவப்பட்டிருக்கிறாள். இந்த மெல்லிய இழைகள், கிராம வட்டங்களில் இருந்து ‘ஜில்லா’ என்றும் ‘மாகாணம்’ என்றும் சேர்ந்து வலிமையாக இணைந்து முழுமை எய்துமுன், எத்தனை துண்டிப்புகள், கத்தி விபத்துக்கள், இரத்தப் பீறல் இழப்புகள், சாட்சி-சம்மன் வழக்கு மோதல்கள்? எங்கிருந்து நிதிபெற்று இவற்றை ஈடுகட்ட முடியும்? நிதியை யாரிடமிருந்து திரட்டுவது? நிதி வைத்திருக்கும் சுற்றத்தானும், காங்கிரஸ்காரனும், இரத்தப் பெருக்குக்கு மாற்றுக் கொடுப்பானா? இவள், உண்டியல் எடுத்துக் கொண்டு பிச்சைக்காரி போல், சிறு கடைக்காரர், தோழர், நண்பர் என்று சிறுதுளி பெருவெள்ளம் என்று அலைகிறாள்... நினைக்கையில் வியர்வை பூத்து வடிய உடலில் வெம்மை பரவுகிறது. இது போன்ற சறுக்கல்களும், தூற்றுதல்களும், ஒரு பெண் என்ற முறையில் இந்த மாதரசிக்கு அனுபவம் ஏற்பட்டிருக்குமோ?... சரோஜினி சென்னை மாநகரையே பரபரப்பு அலைகளுக்கிடையே கிளர்ச்சியூட்டுவதாக மணி உணர்கிறாள். மாணவர் கூட்டம், கல்வியாளர் கூட்டம், மகளிர் கூட்டம்... என்று எங்கு திரும்பினாலும் சரோஜினி அலை தெரிகிறது. இவர் பேசும் கூட்டங்களை ஒன்று விடாமல் மணி சென்று கலந்து கொண்டு கேட்கிறாள். வி.பி.ஹாலில், மாதருக்கான தேசியக் கல்வி குறித்து சரோஜினி உரையாற்றுகிறார். “மாதருக்குக் கல்வி அவசியம். எந்த வகையான கல்வி? ஆங்கிலம் பேசவும், மேற்கத்தியப் பண்பாடுகளை விளக்குவதற்கும் பெண் கல்வியா? ஓராணை மகிழ்விக்கக் கல்வியா? இல்லை! தேசியக் கல்வி. நாடு என்ற அளவில் எண்ணங்களை உயர்த்தும் கல்வி. தான் ஒரு தனிப் பிறவி என்ற சுயநல வட்டத்துக்கப்பால் சமுதாயப் பிரதிநிதி, நாட்டின் பிரஜை என்று உணர்விக்கும் கல்வி... இங்கு பட்டுப்பட்டாடை பூச்சு நாகரிகங்கள் தேவையில்லை. எளிமை, கதராடை, எல்லோருக்கும் எல்லாம் என்ற பரந்த மனப்பான்மை...” மணியின் அருகில் இரு பெண்கள், இவர் பேச்சைக் கேட்கவிடாமல் சளசளவென்று பேசுகிறார்கள். ஆயிரமாயிரமான மக்கள் அமர்ந்த அக் கூட்டத்தில், அவர் மந்திரக்குரல், கூட்டத்தை அமைதிக்கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், இந்தச் சில நூறு கூட வராத கூட்டத்தில் பெண்களைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. ஒவ்வொருத்தியும் என்ன ஆடம்பர வெளிச்சம் போடுகிறாள்? வயிரங்கள், தங்கங்கள், பட்டுக்கள்... “அவ ஒட்டியாணத்தைப் பார்த்தேளா? முகப்பு புது மாதிரியா இருக்கு...” “பச்சையும், சேப்பும் தெரியறது. என்ன முகப்பு?...” “டிசைன் புது மாதிரியா இருக்கு. சேப்பு பின்னணி, பச்சையும் வைரமும் வச்சு இது புது மோஸ்தர்...” “அதானே பார்த்தேன். அவா காங்கிரஸ்காரா. கதர்ப்பட்டு கட்டிண்டு இந்தப் புது மோஸ்தர் சர்க்கா டிசைன் ஒட்டியாணம் போட்டுண்டிருக்கா!” “அதில்லம்மா? சர்க்கா டிசைன் இப்ப புது மோஸ்தர் இல்ல. சேப்புல, அரிவாள் சுத்தியல் மாதிரி டிசைன் போட்டிருக்கு. இப்ப இது புது மோஸ்தராம்! சர்க்கா டிசைனை விட இது எடுப்பா இருக்கு!” “ஆமாம், இப்பல்லாம் காங்கிரஸ்காரன்னு சொல்றத விட, கம்யூனிஸ்ட்னு சொல்றது ஒரு பாஷன்!...” “எதுவாயிருந்தாலும் நாமும் காலத்துக்குத் தகுந்தாப்பில போனாத்தான் நாலு பேர் மதிக்கிறா. கிட்டப்போய்ப் பார்க்கணும். ஸுரஜ்மல்ஸில் பண்ணினாளோ, வீகம்ஸில பண்ணினாளோ?...” “அவா பாபலால்லதா வாடிக்கையா வாங்குவா!” “பாபலால்ல, எனக்கென்னவோ அவ்வளவு திருப்தி வரதில்ல. எங்க வீட்டுக்கு ஸுரஜ்மல்ஸ் வயிரம் தான் ‘ஆவி’ வந்தது...” இதற்குள் அந்தக் குழுவில் இன்னொரு இளவட்டம், ‘லாங்செயின்’ வயிரபுரோச் அணிந்து வருகிறது. “டீ, நாகமணி! அந்தம்மாவோட புது ஒட்டியாண டிசைன் பார்த்தியோ?” “ஒ, கேட்டுட்டேன், அதெல்லாம் ‘மாஸ்கோ’விலேந்து பண்ணி வந்ததாம்?” மணிக்கு எழுந்து சென்று ஆளுக்கு ஓரடி கொடுத்து அடக்க வேண்டும் போல் பரபரப்பாக இருக்கிறது. “ஏம்மா! நீங்கெல்லாம் உங்க நகைப் பெருமைகளை அவுத்துவிடவா இங்க கூட்டத்துக்கு வந்து, பேசறவங்களை அவமரியாதை பண்ணுறீங்க? நீங்க பேசுறதானா வெளில போங்க! நாங்க மேடைல பேசுறவரின் பேச்சை அமைதியாகக் கேட்போம்!” என்று ஒரு போடு போடுகிறாள். ஒரு நரைத்தலை முறைத்துப் பார்க்கிறது. “இவ யாருடிவ? ஆம்பிளயா, பொம்பிளயா...” “வேஷம் சகிக்கல?” “எவளானும் மலையாளச்சியா இருக்கும்!... அதுக்குத் தலைய எதுக்கு இப்படி கோரம் பண்ணிக்கணும்?” மணி அங்கிருந்து நகர்ந்து ஓர் ஓரம் சென்று நிற்கிறாள். எவ்வளவு முக்கியமான விஷயம் அந்த அரங்கில் பேசப்படுகிறது? அந்தப் படிப்பறியா உழவர்களை ஒன்று சேர்க்கலாம். இங்கு, அதிக வளமை, அறியாமை என்றே புரியாமல் மூழ்கிக் கிடக்கும் சுயநல ஆசைகளில் பெண்கள், ஆடம்பரம், ஃபாஷன் என்று கூடி, சந்திரனை மறைக்கும் கருமேகங்களாக சரோஜினியின் உரையைப் பயனற்றதாகச் செய்கிறார்கள்... வெளியே வருகையில், தெருவில் மூவலூர் அம்மாளைப் பார்க்கிறாள். மணியின் கரங்களைப் பற்றிக் கொள்கிறார் அந்த அம்மை. முடியை வெட்டிக் கொண்டு வெண் உடையில் திகழும் இந்த அம்மை, சுயமரியாதைக்காரிதான். ஆம், சுயமரியாதை தாசிகள் என்ற ஈனக்கறைகள் படிந்த விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டுப் புரட்சிக்கரமாகப் புறப்பட்டவள். இவள் மணலூர் மணி; அவள் மூவலூர் இராமாமிருதம். அந்நாளில் காந்தியைச் சந்திக்க மன்னார்குடியில் இக் குலத்தில் உதித்த மகளிர் சிலர் வந்ததை விமர்சித்து, ஆசாரக்காரர்கள் பேசிய சொற்கள் இவள் நினைவில் மோதுகின்றன. அந்த நினைவில் கண்கள் கசிய, அவள் கரங்களைப் பற்றி நிற்கிறாள். “அம்மா? நீங்கள் மிகப் பெரிய சேவை செய்கிறீர்! பொட்டு உடைப்பு சங்கம்... மிகப் பெரிய சேவை. கறைகள் போக்கும் சேவை.” “மணி அம்மா! உங்களை விடவா? அத்தனை பெரிய கொடிய ஆதிக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டுத் துணிகரமா வந்திருக்கிறீர்களே?... அம்மா, வீட்டுக்கு வர முடியுமா?...” “இன்னொரு தரம் வரேன். எப்போதும் நாம் பெண்கள் - சமுதாய உணர்வு, சாதிபேதமில்லா நாடு என்று நினைக்கிறோம். மனசால் ஒன்றுபட்டிருப்போம்... ரொம்ப தூரம் போகணும்... வரட்டுமா?...” மனம் நிறைவாக இருக்கிறது. இரவு நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்புகையில் நேரமாகிறது. “தோசை வார்க்கட்டுமா? சாதம் ஆறிப் போயிருக்குமே?” “வேண்டாம் அம்மா. ஒண்ணும் வேண்டாம். எல்லாம் சாப்பிட்டாச்சு...” “பால் இருக்கு, புரைகுத்தல. கொண்டு வரேனே?” “சரி, கொண்டா...” இவள் உடை மாற்றத்தை இயல்பாக எடுத்துக் கொண்டவர்கள், முற்போக்கு வட்டத்திலேயே குறைவானவர்கள் தாம். ஆனால் புருஷன் வீடு, புருஷனைச் சார்ந்தவர்கள் என்று வரும்போது, பெண்கள் எப்படி அந்த வீட்டோடு ஒன்றிவிடுகிறார்கள்? இந்த ஆண்டில் மகாமகக் கும்பல் கூடுகிறது. கலவரங்களும், நெருக்கடிகளும் மிகுந்தாலும் சனாதன நம்பிக்கைகளை யாரே துருவிப் பார்ப்பார்கள்? சென்ற மகாமகத்தில் மணியே காங்கிரஸ் பிரசாரத்துக்கென்று சென்று கடை பரப்பினாள். சுதேசிப் பொருள்காட்சி ஒரு பெரிய கவர்ச்சியாக இருந்தது. இப்போதும் மக்களின் மகாத்மாவாக விளங்கும் காந்திஜியின் அத்தாட்சியுடைய கட்சியாகவே காங்கிரஸ் விளங்குகிறது. இவர்களுக்கு எதிரிகள்போல் இப்போது அந்தக் கட்சியின் முத்திரையைப் போட்டுக் கொண்டவர்கள் செயல்படுகிறார்கள். மணலூரில் குடும்பம் வைத்திருந்த அனந்தண்ணா, திருவாரூர் பெயர்ந்து போய்விடுகிறார். அவர் பையன் தியாகராஜனுக்கு அங்கே பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்திருக்கிறது. மணியினாலும் மணலூருக்கு அன்றாடம் வராவிட்டாலும், நான்கில் எட்டில் கூட வர முடியவில்லை. “மணி, உனக்கும் திருவாரூர் நாகப்பட்டினத்தில் தான் பாதிநாளும் வேலை இருக்கு. இந்த மணலூர், நாகலூர், மயிலங்குடின்னிலாம உனக்கும் அடிக்கடி வெளிலே போகும்படி இருக்கு. ஜாகையை நீயும் திருவாருக்கு மாத்திக்கோ...” என்று யோசனை சொல்கிறார். மணி யோசனை செய்கிறாள். இந் நாள் வரையிலும், வெறும் மன்னர் குடை நிழலில் மக்கள் ஒதுங்கி நிற்கும் ஆட்சி முறையே எல்லோருக்கும் தெரியும். தரையைத் தொடாத குடை. இதன் நிழலில் ஆட்சி புரியும் செல்லப் பிள்ளைகளே அதிகாரிகள், மிட்டா மிராசு ஜமீன் எல்லாம். அந்தக் குடையைத் தூக்கி எறிந்து, மக்களாகிய அனைத்து இரத்த நாளங்களையும் இதயத்தோடு இணைத்து... மணி திருவாரூருக்கு ‘ஜாகை’யைக் கிளப்பி விடுகிறாள். தெற்குத் தெருவில் ஒரு தற்காலிக இடம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சாமான்கள் என்பது, சில தட்டுமுட்டுகள், ஒருத்தி சமைத்துச் சாப்பிடத் தேவையான கும்மட்டி அடுப்பு, குடம் என்று அடங்கியவைதாம். அதிக இடத்தை ஆக்கிரமிப்பவை, பத்திரிகைக் கட்டுகள், புத்தகங்கள், இயக்கம் சார்ந்த பதிவேடுகள்... ஆகியவைதாம். எல்லாவற்றையும் ஒழுங்காக அடுக்கி வைக்கத் தோழர்கள் உதவி செய்கிறார்கள். புதிய ஜனசக்தி இதழைக் கொண்டு வருகிறான் கோபாலன். பிரித்துப் பார்க்கிறாள். சோவியத் நண்பர்கள் சங்கம்... கிருஷ்ணகிரி மாநாடு, கிஸான் சங்க மாநாடு... தடையுத்தரவு. சடக்கென்று கண்கள் நிலைக்கின்றன. .... சரோஜினி தேவி, கம்யூனிஸ்ட் ஆதரவாளராகச் செயல்படுகிறார்... இதைப் பொருட்படுத்த வேண்டாம். ஏனெனில் சரோஜினி அம்மையாருக்கு வயதாகிவிட்டது. அதனால் அவருக்கு அரசியல் சரியாகப் பிடிபடவில்லை; பேசவரவில்லை. அவருக்கு அரசியல் தெரியாது. அவர் கவி; அவ்வளவுதான். மேலும், சரோஜினி பேசுவதை அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு ஸ்திரீயாக இருப்பதால் மட்டுமே காங்கிரசில் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். மகாத்மா காந்தியே, இவர் பேச்சுகளைப் பொருட்படுத்தவில்லை. எனவே, சரோஜினி தொழிற்சங்கவாதிகளுக்கு ஆதரவாக நடப்பதை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை... மணிக்கு உடலே பற்றி எரிகிறது. சரோஜினிக்கு அரசியல் தெரியாது? அவர் கவி... அது மட்டும்தான்! இப்படி அந்த மாதரசியை மட்டம் தட்டிய மகானுபாவன் யார்? காங்கிரசில் உனக்கு இடமில்லை. உங்கள் மரத்தில் கள் இறக்கக் குத்தகை விட்டிருக்கிறீர்கள் என்று பழி சுமத்திய மாமாவின் மருகர்... சரோஜினிக்கு வயசாகிவிட்டது. அரசியல் தெரியாது! ஸ்திரீயாக இருப்பதால் பிச்சை போட்டிருக்கிறார்கள்? இவனுக்கு என்ன வயது? அந்தப் பெருமாட்டியை, உலகுக்கே ஓர் ஒளியாக விளங்கும் கவியரசியை, பகிரங்கமாக மட்டம் தட்ட இவனுக்கு யார், உரிமை கொடுத்தார்கள்? காங்கிரஸ்... இது ஆதிக்கக் கட்சி! பெண் விரோத, மக்கள் விரோதக் கட்சி! பத்திரிகையில் செய்தியாக வெளிவந்த அந்தப் பத்தியைக் கிழித்து, கசக்கிப் பிழிந்து சாணக்கியனைப் போல் அரிந்து விட்டு இக்கட்சியை ஒழிப்பேன் என்று சூளுரை எடுக்க வேண்டுமென்ற ஆத்திரத்தில் அவள் செவி மடல்கள் சூடேறுகின்றன. பாதையில் பதிந்த அடிகள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
|
வில்லாளன் ஆசிரியர்: பாலோ கொயலோவகைப்பாடு : புதினம் (நாவல்) விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 230.00 அஞ்சல்: ரூ. 40.00 |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |
ஒளி ஓவியம் ஆசிரியர்: சி.ஜே. ராஜ்குமார்வகைப்பாடு : சினிமா விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல்: ரூ. 40.00 |
|