12

     கணவன், அண்ணனை எதுவும் செய்துவிடப் போகிறாரோ என்று கண்கலங்க, வாசல் திண்ணையைப் பிடித்துக் கொண்டு நின்ற செல்லம்மாவுக்கு, மனம் மரண அவஸ்தைப்பட்டாலும், லேசான ஆறுதல். அண்ணனைச் சுற்றி எப்போதும் ஆள் இருக்கும். இவரால் அடிக்க முடியாது. அதோடு இவ்வளவு ரவுடித்தனம் செய்யும் இவரும், அண்ணனைக் கண்டதுமே, பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகிறவர். ஒரு வேளை, இவர் கலாட்டா செய்து, இவரையே போலீசில் பிடித்துக் கொடுத்து... இருக்காது... இருக்காது. என் அண்ணனைப் பற்றி எனக்குத் தெரியும். அடிப்பதற்கு முதுகைக் காட்டினாலும் காட்டுவாரே தவிர, முதுகில் குத்த மாட்டார். ஒருவேளை, அண்ணன் இல்லாமல்... வேறு யாராவது இருந்து... அட கடவுளே...


கடவுளின் நாக்கு
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

கொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

ஆரோக்கிய பெட்டகம்
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

பலன் தரும் ஸ்லோகங்கள்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

குறள் வானம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

மன இறுக்கத்தை வெல்லுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சிந்தித்த வேளையில்
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

அதிர்ந்த இந்தியா
இருப்பு உள்ளது
ரூ.165.00
Buy

நலம், நலம் அறிய ஆவல்!
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
இருப்பு உள்ளது
ரூ.415.00
Buy

செஹ்மத் அழைக்கிறாள்
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

பதினாறாம் காம்பவுண்ட்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

ஜென் தத்துவக் கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.160.00
Buy

வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

பங்குக்கறியும் பின்னிரவுகளும்
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

விடை
இருப்பு உள்ளது
ரூ.265.00
Buy

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நதிமேல் தனித்தலையும் சிறுபுள்
இருப்பு உள்ளது
ரூ.120.00
Buy
     தவித்துக் கொண்டிருந்த செல்லம்மாவுக்கு, முதலில் எதிரே வந்து கொண்டிருந்த ரிக்‌ஷா மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது. பிறகு அதிலிருந்து உருவங்களைப் பார்க்கப் பார்க்க ரிக்‌ஷா மறைந்து, பெருமாளும், மல்லிகாவும் மட்டுமே தெரிந்தார்கள். பின்னர் மல்லிகா மட்டுமே அவள் கண்களில் நிறைந்தாள்.

     ரிக்‌ஷா வந்து நின்றவுடனேயே, செல்லம்மாவின் கண்களில் நீர் கீழே விழுந்தது. மல்லிகாவை, முதுகோடு சேர்த்து அணைத்து, தன் கைகளாலேயே இறக்கிவிட்டு, பின்னர் அவளை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு “என் ராசாத்தி... என் ராசாத்தி... வந்துட்டியாம்மா...” என்று கதறினாள்.

     சத்தங்கேட்டு, அவளின் பையன்களும், பெண்களும் வந்தார்கள். பிரசவத்திற்காக வந்திருக்கும் அவள் மூத்த மகள் சந்திரா, தங்கையின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள். ஏழைகள், தங்களுக்கு இஷ்டப்பட்டவர் வேதனையில் வேகும்போது, தங்களால் செய்யக்கூடிய ஒன்று, அந்த வேதனையைப் பகிர்ந்து கொள்வது போல், அழத்தான் முடியும் என்பது போல், அத்தனை பேரும் அழுதார்கள். இதனால், தெருக்கூட்டம் அங்கே திரண்டு வந்தது. உள்ளே இருந்த இருபது குடித்தனக்காரர்களும், அங்கே குழுமினார்கள். ‘டிக்னிட்டி’ பார்க்கும் ‘வீட்டுக்கார அம்மா’ கூட தெருவுக்கே, அதுவும் நடுத் தெருவுக்கே வந்து விட்டாள்.

     பெருமாளுக்கு என்னவோ போலிருந்தது. படித்த பெண் முன்னால், இப்படியா, ‘ரீசன்ட்’ இல்லாமல் அழுவது? அவள் என்ன நினைப்பாள்? அதோடு, அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவர்களே அழுதால்... அவர், வழக்கமாகக் கத்தாமல், படித்த மகளுக்கு மரியாதை கொடுப்பவர் போல் பேசினார்.

     “நம்ம பொண்ணு... நம்மகிட்ட வந்திருக்காள். எங்கே வரணுமோ... அங்கே வந்திருக்காள். சந்தோஷப் படாமல் அழுதால் எப்படி...”

     மல்லிகா, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். அவர்கள் அனைவரும், அவளுக்கு முன்பு பார்த்தறியாத புது மனிதர்களாகத் தெரிந்தார்கள். அந்த எலும்புக் கூடுகளுக்குள்ளும், இதயங்கள் இருப்பதை, அவள் தேடாமலே கண்டாள். அக்காளின் தோளில் கை போட்டுக் கொண்டு, அம்மாவின் கண்களை, இடுப்பில் செருகியிருந்த தன் கைக்குட்டையை எடுத்து, துடைத்தாள்.

     எப்படியோ, மல்லிகா, அந்த முட்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தாள். அவள் அக்காள், அவள் உட்காருவதற்கு முன்பே, தனது கல்யாணப் புடவையை, நன்றாக மடித்து அடுப்புத் திட்டை ஒட்டியிருந்த மந்திட்டில் அதைப் போட்டு பரப்பிவிட்டு, தங்கையை உட்காரச் சொன்னாள். தம்பி ஒருவன், மல்லிகாவிற்கு வெளியே இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஒரு ஓலை விசிறியை எடுத்து வீசினான். செல்லம்மா, தன் புது மகளையே பார்த்தாள். அவள் பிறந்த போது, குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலில், பிரசவ மயக்கம் தீர்ந்த மறுநிமிடமே, எப்படி பார்த்தாளோ, அப்படிப் பார்த்தாள். பெருமாள், தலையில் கை வைத்து, யோசித்துக் கொண்டிருந்தார். இனிமேல் குதிரையை விடணும்... ‘பட்டையை’ ஒழிக்கணும்.

     மல்லிகாவும், அவர்கள் அன்பில் கட்டுண்டு, மெய்மறந்து இருந்தாள். அந்த வீட்டைப் பார்த்து முன்பு முகஞ்சுழித்த அவளுக்கு, அந்த வீட்டு மனிதர்களைப் பார்க்கப் பார்க்க நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவரவர், தத்தம் வேலைகளைப் பார்க்கத் துவங்கிய போது அவளுக்குத் தனிமை வாட்டியது. தான் செய்தது சரியா என்று கூடத் தோன்றியது. எங்கேயோ போய்விட்டதாக நினைத்த அவள் அம்மா, ஒரு மசால் தோசையுடன் வந்து மகள் முன்னால் காணிக்கை செலுத்துபவள் போல் நின்றதைப் பார்த்ததும், அவள், தாயாகி தாயாகாமல் போன அந்த காய்ந்தவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். பிறகு, மசால்தோசையை வேண்டாமென்று சைகை செய்தாள்.

     வருவோர் - போவோர், “இப்படியா செய்துட்டாங்க” என்போர், “இருந்தாலும் நீ வரப்படாது” என்போர் இப்படியாக பலர் வந்து பேசியதைக் கேட்டுக் கேட்டு, ஏதோ ஒரு பெரிய ஜனச்சங்கிலியில், தான் ஒரு வட்டமாக இருக்கும் லேசான - மிக லேசான பெருமிதத்தில் மல்லிகா அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

     இரவு வந்தது. எங்கே படுப்பது? உள்ளே மூட்டைப் பூச்சிகள். வெளியே கொசுக்கள். ‘டன்லப் பில்லோ’ கட்டில் கிடையாது. மேலே மின்விசிறிக்குப் பதிலாக, ஒரு பெருச்சாளிதான் சுற்றிக் கொண்டு வந்தது. மல்லிகா தயங்கிக் கொண்டே நின்ற போது, ‘பிள்ளைத் தாய்ச்சியான’ அவள் அக்காள் சந்திரா, கோரப்பாயை விரித்து தன் கல்யாணப் பட்டுப் புடவையை, இரண்டாக மடித்து, கைகளால் தேய்த்து, பாயின் மேல் விரித்தாள். செல்லம்மாள், ஒரு கிழிந்த தலையணையை எடுத்து, வீட்டுக்காரரின் துண்டால் அதைச் சுற்றி, பாயின் விளிம்பில் வைத்தாள். பையன்கள் அக்காளுக்கு, யார் விசிறி வீசுவது என்ற சர்ச்சையில் ஈடுபட்டார்கள். ஒருவனுக்கொருவன், அடித்துக் கொண்டிருப்பான். வெளியே அப்பா இருப்பது தெரிந்து, வெறும் சர்ச்சையில் தான் இருந்தார்கள். பெருமாளோ, இவர்கள் அடித்துக் கொண்டிருந்தாலும், கண்டிக்க மாட்டார். அவர் பிரச்சினை அவருக்கு. மல்லிகாவின் எதிர்காலத்தை நினைக்க நினைக்க அவருக்கு தனக்கு நிகழ்காலமே இல்லாதது போல் தோன்றியது. தாங்க முடியாத இதயச் சுமை ஒரு கிளாஸ் போட்டுட்டு வரலாமா... ஒரே ஒரு கிளாஸ்... இன்னைக்கு மட்டும்... நாளையில் இருந்து நிறுத்திடலாம்.

     லாந்தர் விளக்கு அணைக்கப்பட்டது. அந்த இரவில், மல்லிகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த குடித்தனக்காரர்கள், வெளித்தளத்தில், கணவன் மனைவி சகிதமாய், ரெட்டை ரெட்டையாகவும், பிள்ளைகள் சகிதமாகவும், வரிசை வரிசையாகப் படுத்தார்கள். மல்லிகாவும் படுத்தாள். அப்படியே தூங்கிப் போனாள். பட்டு மெத்தை கொடுக்காத சுகத்தை, அந்தப் பாய் கொடுத்தது. தப்பு... பாய் கொடுக்கவில்லை. அந்தப் பாயை விரித்த ஜீவன்களின் பாசம் கொடுத்தது.

     நள்ளிரவு.

     குடித்தனக்காரர்களின் குழந்தைகளில் ஒன்றோ, இரண்டோ இப்பாரி போட்ட போது, திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்தாள் மல்லிகா. கட்டில் மெத்தையில் படுத்திருப்பதாக நினைத்து எழுந்தவள், பாயைப் பார்த்துத் திடுக்கிட்டாள். அன்றைய தினம் நடந்தவை அனைத்தும் உறக்கம் கலைந்து ஒரு கணம் நிர்மலமாக இருந்த அவள் மனதில், உலுக்கிக் கொண்டே வந்து உட்கார்ந்தது. தலையில் இருந்து வந்ததா, வயிற்றில் இருந்து வந்ததா என்று இடம் தெரியாத அந்த சுமை நிகழ்ச்சிகளின் - அனலான நெருப்புக் கட்டிகள் அவள் இதயத்தில் சட்டென்று பட்டு சரியாகப் பிடித்துக் கொண்டது.

     மல்லிகா, அம்மா பார்வதியை நினைத்த போது, முடங்கிக் கிடந்த செல்லம்மாவின் முகமே தெரிந்தது. அப்பா சொக்கலிங்கத்திற்குப் பதிலாக, பெருமாள் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவளுக்கு, தியாகராய நகரில் இருக்கும் அப்பாவையும், அம்மாவையும் உடனே பார்க்க வேண்டும் போலிருந்தது. அவர்கள் கால்களைக் கட்டிக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது. அவர்கள், இவள் தலையை ஆதரவாகக் கோதிவிட வேண்டும் போலவும் துடித்தாள். எதையும் எதிர்பார்க்காத பாசத்தின் உச்சக்கட்டத்திற்கு வந்தவளாய், அவள் செல்லம்மாவை எழுப்பினாள்.

     கண்ணைக் கசக்கிக் கொண்டே எழுந்த செல்லம்மா “என்னம்மா” என்றாள்.

     “அம்மாவிடம் போகணும்... அப்பாவைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்.”

     “இப்போ எப்டிம்மா முடியும்...”

     “அப்பாவைப் பார்க்கணும்... அம்மாகிட்ட போகணும்...”

     “இன்னைக்கு மட்டும் பொறும்மா...”

     “முடியாது. இப்பவே பார்க்கணும்.”

     “கவலைப்படாதம்மா... நாளைக்கு... எப்பாடு பட்டாவது ஒரு கட்டில் வாங்கிடுறோம். ரெண்டு நாளையில்... மெத்தை வாங்கிடுறோம்...”

     “அய்யோ... நான் கட்டில் மெத்தைக்காக... அவங்களை பார்க்கணுமுன்னு சொல்லல... தெருவுல நின்றாவது நான், என் அப்பாவையும், அம்மாவையும் பார்க்கணும்... பார்த்தே ஆகணும்... இப்பவே பார்க்கணும்...”

     “இப்போ எப்படிம்மா முடியும்... நடு ராத்திரி...”

     “பரவாயில்ல... பார்க்கணும்...”

     “அது எப்படிம்மா...”

     “அப்பா... அம்மா...”

     “ஏம்மா அழுகிற?”

     “அப்பா... அம்மா... வாங்கப்பா... வாங்கம்மா... என்னால அங்க வர முடியல... நீங்களாவது வாங்க...”

     “மல்லிகா... அம்மா சொல்றதக் கேளும்மா...”

     “அப்பா... அம்மா... அம்மா... அம்மா... அப்பா...”

     மல்லிகா போட்ட கூச்சல் அழுகையில், அப்போது அழுது கொண்டிருந்த சின்னப் பிள்ளைகள், தாங்கள் அவளை விட பெரிய பிள்ளைகள் என்பது போலவும், அவள், தங்களை பெரிய பிள்ளைகளாய் ஆக்கிவிட்டது போலவும், அவர்கள் அழுகையை நிறுத்திய போது, அவள் மேலும் பலமாக அழுதாள்.

     “அப்பா... அம்மா... அப்பா... என் அப்பா... என் அம்மா...”

     எல்லோருமே, அங்கே கூடிவிட்டார்கள். வேறு வேறு வீடுகளில் இருந்தவர்கள் கூட, வெளியே வந்து, நடைக் கதவைத் தட்டினார்கள். மல்லிகா, அழுகையை நிறுத்தவில்லை.

     “அப்பாவைப் பார்க்கணும். அம்மாவைப் பார்க்கணும். யாராவது கூட்டிட்டுப் போங்க... அய்யோ... எங்க அப்பாவைப் பார்க்கணும்... அம்மாவை...”

     பெருமாள், மகளையே பார்த்துக் கொண்டு நின்றார். உள்ளம் கலங்கியதால், கண் கலங்கியது. பிறகு, இந்தக் கலக்கத்திற்குக் காரணமான சொக்கலிங்கத்தின் மீது கொலைத்தனமான கோபம் ஏற்பட்டது. கோபத்தை சிறிது குறைத்துக் கொண்டே பேசினார்.

     “உன் இஷ்டம்... உனக்கு இங்க இருக்கிறது பிடிக்கலன்னா, இப்பவே கொண்டு விடத் தயாராய் இருக்கேன்... என் மானத்தை விட்டு, உன்னை... அங்கே கொண்டு விட்டுட்டு, அவன் கிட்டே மன்னிப்பு வேணுமுன்னாலும் கேட்கிறேன். ஏன்னா... இந்த அம்பது வருஷமா மானத்தோட வாழ்ற எனக்கு, அந்த மானத்தை விட நீதான் முக்கியம். ஆனால் ஒண்ணு. உன்னை அந்த கேடு கெட்ட ரவுப் பயலுக்கு கட்டிக் கொடுக்கத் துணிந்தவங்க. எதுக்கும் துணிந்த பாவிங்களாத்தான் இருப்பாங்க... நீ மட்டும் அவங்க சொந்த மகளாய் இருந்தால் இப்படி அந்த சோதாப் பயலுக்கு காவு கொடுக்கிற எண்ணம் வருமா? இனிமேல், அந்த வீட்ல, நீ, ராமன் பயலை கட்டிக்காம இருக்க முடியாது. இனிமேல் நீ அங்கே போனால், அவளுக்கு இளக்காரமாய் போய்விடும். உன்னை... எப்படி வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற தைரியம் வந்துவிடும். என்னாலயும் தட்டிக் கேட்க தகுதியில்லாமல் போயிடும். இவ்வளவு நீ அழுறே... சொக்கலிங்கத்துக்கோ, அவன் பெண்டாட்டிக்கோ... நிஜமாகவே உன் மேல் பாசம் இருந்தால் இங்கே வந்து கூட்டிட்டுப் போகலாமே? என்னை, ரெண்டு அடி அடித்துவிட்டு கூட கூட்டிட்டுப் போகலாமே... நான் திருப்பியா அடிப்பேன்? உன்னை இங்கே கொண்டு வந்ததுல நான் சந்தோஷப் படுறேன்னு நினைக்கிறியா... நீ நல்லா இருக்கணும் என்கிறதுதான் எனக்கு முக்கியம்மா... நான் பாவி... நான் பாவி...!”

     பெருமாள், தன் தலையிலே அடித்துக் கொண்டார். ஆனால் அழவில்லை.

     மல்லிகா, அப்பாவையே பார்த்தாள். அவருக்குள்ளே எவ்வளவு பாசம். எவ்வளவு அன்பு. தியாகராய நகருக்குப் போனால், அப்பா, அம்மாவோடு, ராமனையும் பார்க்க வேண்டியதிருக்குமே...

     மல்லிகா முடங்கிப் படுத்தாள். செல்லம்மா, மகள் தலையை எடுத்து, தன் மடியில் போட்டுவிட்டு, குழந்தையை குலுக்குவது போல் குலுக்கினாள். மல்லிகா, கை கால்களைச் சுருட்டிக் கொண்டு, முடங்கிக் கொண்டே இருந்தாள்.
சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி :  அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி :  ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் :  கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் :  ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் :  புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா :  ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் :  குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் :  இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் :  அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி :  ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் :  அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) :  மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் :  நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி :  ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் :  பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் :  மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி :  சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் :  பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் :  மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி :  மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் :  மருதியின் காதல் | கௌரிராஜன் :  அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி :  தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி :  சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் :  புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் :  சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் :  'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்
பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை :  குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு :  திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு :  இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் :  சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் :  உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் :  நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் :  நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் :  திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் :  கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் :  ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் :  நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் :  திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் :  திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி :  அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் :  கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் :  நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் :  யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் :  மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் :  மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் :  திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் :  அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் :  சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் :  நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் :  அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் :  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் :  தினசரி தியானம்