15

     ஒவ்வொரு வாரமும், ஒரு குடித்தனப் பெண், பொதுத் தளத்தைப் பெருக்கி, மதில் போல் விளங்கும் ‘காவாயைக்’ கழுவி, குழாயடியில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றி, குளியலறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். காலையிலும், மாலையிலும் செய்ய வேண்டிய வேலை இது. இதற்கு ‘முறைவாசல்’ என்று பெயர்.

     ஒரு நாள், செல்லம்மாவின் ‘முறை வாசல்’. அவள், மார்க்கெட்டுக்குப் போய்விட்டாள். சந்திரா, தன்னைப் பார்க்க வந்த புருஷனை வழியனுப்ப பஸ் நிலையத்திற்குப் போய்விட்டாள். இதர பிள்ளைகள் எங்கோ போய் விட்டன.


பதவிக்காக
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

மனதெனும் குரங்கை வெல்லுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.205.00
Buy

உங்கள் விதியைக் கண்டறியுங்கள்
இருப்பு உள்ளது
ரூ.195.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

மரணத்துக்குப் பின்...
இருப்பு உள்ளது
ரூ.360.00
Buy

இல்லுமினாட்டி
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

மேன்மைக்கான வழிகாட்டி 1
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy

நீ பாதி நான் பாதி
இருப்பு உள்ளது
ரூ.135.00
Buy

உச்சம் தொட
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

மழைமான்
இருப்பு உள்ளது
ரூ.145.00
Buy

நரேந்திர மோடி
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சென்னையின் கதை
இருப்பு உள்ளது
ரூ.450.00
Buy

பைப்லைனில் பணம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
Buy

Seven Steps to Lasting Happiness
Stock Available
ரூ.270.00
Buy

மானுடம் வெல்லும்
இருப்பு உள்ளது
ரூ.315.00
Buy

ஏன் பெரியார்?
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy

சாம்பலிலிருந்து பசுமைக்கு
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் - பாகம் 1
இருப்பு உள்ளது
ரூ.180.00
Buy

குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy

கரைந்த நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy
     மல்லிகா, அந்த மாலைப் பொழுதில், குடித்தனக்காரப் பெண்களுடன், ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். ‘கால்வாய்’ நீர் வழிந்து கொண்டிருந்தது. களத்தில் தூசிகள் படிந்து கிடந்தன. மார்க்கெட்டுக்குப் போன செல்லம்மா, உடனே திரும்பிவிடுவாள் என்பதும், திரும்பியவுடனே, கால்வாயைக் கழுவி, தளத்தைத் தெளித்து, சகல வேலையையும் செய்துவிடுவாள் என்பதும், வீட்டுக்காரிக்குத் தெரியும். தெரிந்து கொண்டே, அவள் தெரியாதவள் போல சீண்டினாள். மாடியில் நின்று கொண்டே போர்ப் பிரகடனம் செய்தாள்.

     “பேமானி ஜனங்க முறைவாசல் செய்யாமல் போனால் என்ன அர்த்தம்? இருந்தால் ஒழுங்கா இருக்கணும். இல்லாவிட்டால் எதுக்கு இருக்கணும்? சுத்தத்தோட அருமை இவங்களுக்கு எப்படித் தெரியும்? தெரிந்திருந்தால் இப்படி இருக்க மாட்டாங்களே. இன்னைக்கு அந்தக் கிழவி வரட்டும்.

     மல்லிகா, சகப் பெண்களைப் பார்த்தாள். அவர்கள் தங்களைப் போன்ற ஏழைகள் சாகாமல் இருப்பதே தப்பு என்பது போல், அவளைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். பலவீனமாக நோக்கினார்கள். அந்த பலவீனத்தை தனது பலமாக எடுத்துக் கொண்ட வீட்டுக்காரி, இப்போது மல்லிகாவை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே மேலிருந்தபடியே கேட்டாள்:

     “மல்லிகா இது என்ன, தியாகராய நகர் வீடுன்னு நினைக்கிறியா? அம்மா தான் முறைவாசல் பண்ணலன்னா நீ கூட பண்ணப்படாதா? பெரிய ராணின்னு நினைப்போ? மரியாதையா துடைப்பத்தை எடுத்து சுத்தம் பண்ணு. இல்லைன்னால், நாளைக்கே காலி பண்ணுங்கோ. சீச்சி பேமானி ஜனங்க. சேற்றுல புரள்றவங்களை வீட்டுல வச்சால் இப்படித்தான். சீச்சீ...”

     மல்லிகாவிற்கு, கோபத்தை விட வருத்தமும், மற்ற பெண்களுக்கு வருத்தத்தை விடக் கோபமும் ஏற்பட்டன. மல்லிகாவிற்கு, ஏதோ ஒரு சோகம், ஏதோ ஒரு வெறி. மடமடவென்று எழுந்து, ஒரு மூலையில் கிடந்த பொதுச் சொத்தான ஒரு துடைப்பத்தை எடுத்துக் கொண்டு குழாயடியருகே, அவளைப் போல் காதறுந்து போய்க் கிடந்த ஒரு’பைட்டியையும்’ எடுத்துக் கொண்டு, சக பெண்களைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவள் கண்களில் தேங்கிய நீர் அந்தப் பெண்களின் கண்களில் நெருப்பாக மாறியது. அவளது தவிப்பு, அவர்களிடம் கோபத்தனலாகப் போனது. அவளது திகைப்பு, அவர்களிடம் ஒரு தீர்மானமான முடிவாகப் போனது.

     ‘கொத்து’ வேலைப் பெண்ணான ராக்கம்மாள் எல்லோருக்கும் பொதுவாக, வீட்டுக்கார அம்மாவிடம் நிதானமாகக் கேட்டாள்:

     “வீட்டுக்காரம்மா, நீ பண்றது கொஞ்சமும் நியாயமில்லை. யாரையும் இப்படி அட்டகாசமா பேசாதம்மா. அதான் சொல்லிப்புட்டேன்.”

     ‘இட்லி’ ஆயா இன்னொரு எதிர்க் கேள்வியைப் போட்டாள்.

     “குயந்தே, நீ செய்றது நல்லா இல்ல. குயந்தே நல்லா இருக்கோமுன்னு திமிரா பேசாதே குயந்தே. நானு கூடத்தான் பர்மாவுல ஒரு பங்களா வச்சிருந்தேன். ஜப்பான்காரன் குண்டுக்குப் பயந்து ஓடிவரச்ச ஆம்புடையானையும் பிள்ளைகளையும் குண்டுக்குப் பறிகொடுத்துட்டு இங்கே வந்தவள் குயந்தே! பங்களாவும் மோட்டார் பைக்கும் வச்சிருந்த போது கூட, நானு யாரையும் மதிக்காமல் பேசுனதுல்ல. எனக்கே இந்த கதின்னா உனக்கு எந்த கதின்னு நெனச்சிப்பாரு குயந்தே. இந்தப் பச்சைக் குயந்தையை இப்படி அடாவடியா பாய்றதுக்கு எப்படிக் குயந்தே மனசு வருது?”

     வீட்டுக்காரிக்கு ஆணவம், ஆத்திரமாகியது. எப்படி கெடக்கிறதுகள் எப்படி பேசுதுங்க. இதுவரைக்கும், ‘ஊட்டுக்காரம்மா, ஊட்டுக்காரம்மா’ன்னு வார்த்தைக்கு வார்த்தை பணிவோடு பேசுற சனியன்கள் எப்படிப் பேசுறது பாருங்க. இவள்களை இப்படியே விட்டு வைக்கப்படாது. முளையிலேயே கிள்ளணும். முளையோடு கிள்ளணும்.

     வீட்டுக்காரி, அவர்களைக் கிள்ளுவது போல் பேசினாள்.

     “இது நல்லா இல்லை, சொல்லிவிட்டேன். கூட்டமா நின்று, எதிர்த்துப் பேசுற அளவுக்கு தெனாவட்டா? மரியாதையா எல்லாரும் காலி பண்ணிடுங்கோ. அவளைப் பேசினால், உங்களுக்கு என்ன வந்துட்டுது?”

     ராக்கம்மாள், சற்று உரக்கவே பேசினாள்: “மல்லிகாவை பேசினால், எங்களைப் பேசினது மாதிரி. எங்களைப் பேசினால் மல்லிகாவை பேசினது மாதிரி...!”

     “யூனியன் போடுறீங்களா?”

     “அப்படித்தான் வச்சுக்கோயேன்.”

     “என்னடி... நீங்க... உங்க மனசுல என்ன தான் நினைக்கிறீங்க? உங்க ஒற்றுமைக்கு பணியுறவள் நானுல்ல. நாளைக்கே வீட்டை காலி பண்ணியாகணும். துடப்பக் கட்டை மூஞ்சிங்க வந்துட்டாளுங்க.”

     “டீ போட்டு பேசினே, செருப்பு பிஞ்சிடும்.”

     “என்னடி சொன்னே? இன்னொரு தடவை சொல்லுடி...”

     இப்போது இன்னொருத்தி சவாலிட்டாள்:

     “கீழே இறங்குடி கஸ்மாலம். கீழே இறங்குறியா, நானு மேல வரட்டுமா... இன்னொருவாட்டி துடைப்பக் கட்டைன்னு சொல்லுடி பார்க்கலாம். உன்ன கட்டையால சாத்தாட்டால், நானு ‘ஹார்பார்’ கந்தசாமியோட சம்சாரம் இல்லை. கஸ்மால முண்டைக்கு ‘வாழ்வு’ வந்தாலும் வந்தது, இந்த வீடே கஸ்மாலமா பூட்டுது” என்றவள், “மல்லிகா, நீ முறவாசல் பண்ணாண்டாம். துடப்பத்தைக் கீழே போடு. நீ அந்த துடப்பத்த கீழே எறியாட்டால், எங்களை அதனால் அடிக்கிறதுக்குச் சமானம். நீ கிளீன் பண்ணவேண்டாம். அந்த ராங்கிக்காரி செய்றதை செய்துக்கட்டும்” என்று வெடித்தாள்.

     “போனால் போகுதுன்னு, பொறுத்துப் பொறுத்துப் போனால், கடைசில, எங்க கண்ணாட்டியையே பேசுறாள். உன்னை இதுவரைக்கு ‘தெனாவட்டுல’ விட்டு வச்சதே தப்புடி. மல்லிகா, சொல்றதக் கேக்கமாட்டே...”

     கந்தசாமி மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவள் போல் மல்லிகா துடப்பத்தைக் கீழே போட்டாள். ஒரு பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டிருந்த தூசிகளும், சருகுகளும், மண் துகள்களும் அப்போதைக்கென்றே, பலமாக அடித்த காற்றில், சற்று மேலே எழும்பி, வீட்டுக்கார அம்மாவின் கண்ணில் படும்படியாக நடனமாடின. அவள் திகைத்து, திக்குமுக்காடி, ஒரு வாய்க்கு ஒன்பது வாய்கள் பதில் சொல்வதால், அதுவே அவளுக்கு ‘முதலிரவை’ப் போல் அல்லாது, முதல் அனுபவமாக இருந்ததால், கன்னத்தை உப்பி, கண்களை உருட்டி, மாடிச் சுவரில் கைகளைக் குத்தி, செல்லாக் கோபத்தை, செலவழிக்க முடியாமல் திண்டாடிய போது, இட்லி ஆயா, நிஜமாகவே சமரசம் செய்ய நினைத்துத்தான் பேசினாள்:

     “நான் அதுக்குத்தான் குயந்தே அப்போபிடிச்சே உனக்கு புத்தி சொல்றேன். நம்மோட மரியாதையை நாமதான் காப்பாத்தணும். ஏழைங்க யானை மாதுரி... உட்கார்ந்திருக்கிறது வரைக்கும், சும்மா குந்திக்கிட்டு இருப்பாங்க. எழுந்துட்டாங்கன்னா, அப்பால... யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நாங்களும் உன்கிட்ட பொறுத்துத் தானே போகிறோம். நீ குழாயடிக்கு வந்துட்டால், நாங்கள் தொலவுல போய் விடுகிறோம். நீ வாசலுக்கு வந்தால், நாங்கள் விலகி நிற்கிறோம். போன மாசம் முப்பது ரூவாய் வாடகைப் பணத்தை முப்பத்தஞ்சா ஏத்துனே, கொடுத்தோமா... இல்லையா? கார்ப்பரேஷன் காரன் வந்தப்போ, நீ முப்பத்தஞ்சு ரூபா வாங்குனாலும், நாங்க பதினைந்துன்னு சொன்னோம்! நீயே சொல்லு குயந்தே... நீயே சொல்லு...”

     “அப்படியும் நீ இந்த கக்கூஸ் கதவுக்கு ஒரு தாழ்ப்பாள் போடல. ரெண்டு மாசமா கதவு ஆடுது. இங்கே வந்து இருபது வருஷமாவுது... இன்னும் இந்த வீட்டுல வெள்ளையடிச்சத கண்ணால பார்க்கல. வெற்றிலை போடும்போது சுவர்ல பட்ட சுண்ணாம்பைத் தவிர, எந்தச் சுண்ணாம்பும் படல. இருபது வருஷத்துல ஒருக்கா கூட ஓடு மாத்தல... இதெல்லாம் ஆயா... எதுக்காகச் சொல்றேன்னா, நீ ஒண்ணைச் சொன்னால், அவளுங்க ஒன்பது சொல்ல பாயிண்ட் இருக்கு. அதனால எல்லாரும் அனுசரிச்சுப் பூடணும். நீயும்... அவர்களை... அப்படி தத்தேறித்தனமா பேசியிருக்கப் படாது... அதுகளும் உன்ன வீட்டுக்காரம்மாங்கிற மதிப்பில்லாம... புறம்போக்குத்தனமா பேசியிருக்கப்படாது... சரி... சரி... விட்டுத் தள்ளுங்கோ... வேலையைப் பாருங்கோ.”

     குடித்தனப் பெண்கள், விட்டுத் தள்ளுவது போல் தத்தம் வீட்டுக்குப் போய்விட்டார்கள். ஆனால், வீட்டுக்காரி விடத் தயாராக இல்லை. அவர்களை, அந்த வீட்டில் இருந்து தள்ளும் வரையும் அவள் விடத் தயாராக இல்லை. மனதுக்குள்ளே பேசினாள்:

     ‘என்ன ஆனாலும் பார்த்துட வேண்டியதுதான். என்னோட அண்ணன் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டராய் இருக்கான். பெரியப்பா மகன், ‘கோட்டையில’ வேலை பார்க்கிறான். பெரிய அண்ணா, நாலுலாரி வச்சுருக்கார். சின்ன அண்ணா வக்கீலாய் இருக்கார். உங்களை மாதுரி கைவண்டி இழுக்கல. கட்டிடம் கட்டுற இடத்துல செங்கல் எடுத்துக் கொடுக்கல. கோணி வாங்கப் போகல. உங்களை... போலீஸ் மருமகன் கிட்ட சொல்லி உதைத்து... ‘கோட்டை’ அண்ணன் கிட்ட சொல்லி சிதைத்து... பெரிய அண்ணாவோட லாரிங்களை வைத்து... மோதியாவது... வக்கீல் அண்ணா மூலம் கோர்ட்டு கோர்ட்டா ஏற்றியாவது... உங்களை... தொலைக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்லை... வீட்டுக்காரியே இல்லை...’

     இப்படி, தன் சொந்தக்காரர்கள் ஒவ்வொருவரையும், அவர்களின் வேலைகளையும் நினைத்துப் பார்த்த அந்த வீட்டுக்காரி, தன் வீட்டுக்காரனை மட்டும் நினைக்கவில்லை.

     சென்னைத் தமிழில் சொல்லப்போனால், அந்த ஆசாமி சரியான ‘டப்பா’. அதுவும் வீடு அவள் பெயருக்கு இருந்ததால், அவர் வெறும் தகர டப்பாவாகப் போனவர். என்றாலும் அந்த தகர டப்பாவை வைத்தாவது, அவர்களுக்கு சலசலப்பைக் காட்ட வேண்டும் என்பது போல், அப்போதுதான் உள்ளே வந்த அவரிடம், குடித்தனப் பெண்கள் சொன்னதை கூட்டி, தான் சொன்னதை ‘அமுக்கி’, அவரை ஊதிவிட்டாள்.

     அந்த ஊதலில் பருமனாய்ப் போன அவர், ஒவ்வொருத்தியின் வீட்டு முன்னாலும் வந்து நின்று, “என்ன நினைச்சீங்க. தெரியாமத்தான் கேட்கிறேன். தொலைத்துப் புடுவேன். நாங்க மனசு வச்சால் நீங்கள் இந்தத் தெருவிலே இருக்க முடியாது” என்று கத்திவிட்டு, திரும்பிப் போய்விட்டார்.

     குடித்தனப் பெண்கள், குறிப்பாக ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும் அந்தக் கிளிப்பிள்ளையைப் பார்த்து, சிரித்தார்கள். பிறகு, அவரை அனுதாபத்தோடு பார்த்தார்கள். பிறகு, ‘ஆம்புளைக்கு’ மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்து, அது ‘தெரியாம கேக்குற’ ஆம்புளையாக இருந்தாலும் பரவாயில்லை என்று மேலும் நினைத்து, பயந்து விட்டவர்கள் போல், தலைகளை கட்டாயப்படுத்திக் கீழே போட்டுக் கொண்டார்கள். தகர டப்பா, தேர்தலில் வெற்றி பெற்று விட்டவர் போல், மனைவியிடம் ‘டிபன்’ மன்றாடாமல் கிடைக்கும் என்று நினைத்து, அந்த வேகத்திலேயே மாடிக்குப் போய்விட்டார். ‘குடித்தனப்’ பெண்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

     இதற்குள் மல்லிகாவின் அம்மா செல்லம்மா வந்துவிட்டாள். நடந்த விவரத்தைக் கேள்விப்பட்டதும், இந்தப் பெண்களிடம், “அய்யோ ஆம்புளைங்களுக்கு தெரிய வேண்டாம். அப்புறம் எங்க வீட்டுக்காரரை கட்டுப்படுத்த முடியாது. என் மகன் பரமசிவம், ஒரே ஆட்டமாய் ஆடுவான்... விஷயம் நம்மோடயே இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டு ‘முறைவாசல்’ செய்யப் போனாள். வீட்டுக்காரி மாடியில் இருந்தே கத்தினாள்.

     “செல்லம்மா உன் பொண்ணை அடக்கி வை. செட்டு சேர்த்துட்டு கலாட்டா பண்றாள்... இந்தப் பருப்பு இங்கே வேகாது... ஜாக்கிரதை.”

     செல்லம்மா அவளைப் பாராமல், அவள் பேசுவது வரைக்கும் துடைப்பத்தையே பார்த்தாள். பிறகு, செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.

சமகால இலக்கியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி
     அலை ஓசை - PDF
     கள்வனின் காதலி - PDF
     சிவகாமியின் சபதம் - PDF
     தியாக பூமி - PDF
     பார்த்திபன் கனவு - PDF
     பொய்மான் கரடு - PDF
     பொன்னியின் செல்வன் - PDF
     சோலைமலை இளவரசி - PDF
     மோகினித் தீவு - PDF
     மகுடபதி - PDF
     கல்கியின் சிறுகதைகள் (75)
தீபம் நா. பார்த்தசாரதி
     ஆத்மாவின் ராகங்கள் - PDF
     கபாடபுரம் - PDF
     குறிஞ்சி மலர் - PDF
     நெஞ்சக்கனல் - PDF
     நெற்றிக் கண் - PDF
     பாண்டிமாதேவி - PDF
     பிறந்த மண் - PDF
     பொன் விலங்கு - PDF
     ராணி மங்கம்மாள் - PDF
     சமுதாய வீதி - PDF
     சத்திய வெள்ளம் - PDF
     சாயங்கால மேகங்கள் - PDF
     துளசி மாடம் - PDF
     வஞ்சிமா நகரம் - PDF
     வெற்றி முழக்கம் - PDF
     அநுக்கிரகா - PDF
     மணிபல்லவம் - PDF
     நிசப்த சங்கீதம் - PDF
     நித்திலவல்லி - PDF
     பட்டுப்பூச்சி
     கற்சுவர்கள் - PDF
     சுலபா - PDF
     பார்கவி லாபம் தருகிறாள் - PDF
     அனிச்ச மலர் - PDF
     மூலக் கனல் - PDF
     பொய்ம் முகங்கள் - PDF
     நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)
ராஜம் கிருஷ்ணன்
     கரிப்பு மணிகள் - PDF
     பாதையில் பதிந்த அடிகள் - PDF
     வனதேவியின் மைந்தர்கள் - PDF
     வேருக்கு நீர் - PDF
     கூட்டுக் குஞ்சுகள்
     சேற்றில் மனிதர்கள் - PDF
     புதிய சிறகுகள்
     பெண் குரல் - PDF
     உத்தர காண்டம் - PDF
     அலைவாய்க் கரையில்
     மாறி மாறிப் பின்னும்
     சுழலில் மிதக்கும் தீபங்கள் - PDF
     கோடுகளும் கோலங்களும் - PDF
     மாணிக்கக் கங்கை
     குறிஞ்சித் தேன் - PDF
சு. சமுத்திரம்
     ஊருக்குள் ஒரு புரட்சி - PDF
     ஒரு கோட்டுக்கு வெளியே - PDF
     வாடா மல்லி - PDF
     வளர்ப்பு மகள் - PDF
     வேரில் பழுத்த பலா - PDF
     சாமியாடிகள்
     மூட்டம் - PDF
புதுமைப்பித்தன்
     சிறுகதைகள் (108)
     மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)
அறிஞர் அண்ணா
     ரங்கோன் ராதா - PDF
     வெள்ளை மாளிகையில்
     அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)
பாரதியார்
     குயில் பாட்டு
     கண்ணன் பாட்டு
     தேசிய கீதங்கள்
பாரதிதாசன்
     இருண்ட வீடு
     இளைஞர் இலக்கியம்
     அழகின் சிரிப்பு
     தமிழியக்கம்
     எதிர்பாராத முத்தம்
மு.வரதராசனார்
     அகல் விளக்கு
     மு.வரதராசனார் சிறுகதைகள் (6)
ந.பிச்சமூர்த்தி
     ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)
லா.ச.ராமாமிருதம்
     அபிதா - PDF
சங்கரராம் (டி.எல். நடேசன்)
     மண்ணாசை - PDF
ஆர். சண்முகசுந்தரம்
     நாகம்மாள் - PDF
     பனித்துளி - PDF
     பூவும் பிஞ்சும் - PDF
ரமணிசந்திரன்
சாவி
     ஆப்பிள் பசி - PDF
     வாஷிங்டனில் திருமணம் - PDF
க. நா.சுப்ரமண்யம்
     பொய்த்தேவு
கி.ரா.கோபாலன்
     மாலவல்லியின் தியாகம் - PDF
மகாத்மா காந்தி
     சத்திய சோதனை
ய.லட்சுமிநாராயணன்
     பொன்னகர்ச் செல்வி - PDF
பனசை கண்ணபிரான்
     மதுரையை மீட்ட சேதுபதி
மாயாவி
     மதுராந்தகியின் காதல் - PDF
வ. வேணுகோபாலன்
     மருதியின் காதல்
கௌரிராஜன்
     அரசு கட்டில் - PDF
     மாமல்ல நாயகன்
என்.தெய்வசிகாமணி
     தெய்வசிகாமணி சிறுகதைகள்
கீதா தெய்வசிகாமணி
     சிலையும் நீயே சிற்பியும் நீயே - PDF
எஸ்.லட்சுமி சுப்பிரமணியம்
     புவன மோகினி - PDF
     ஜகம் புகழும் ஜகத்குரு
விவேகானந்தர்
     சிகாகோ சொற்பொழிவுகள்
கோ.சந்திரசேகரன்
     'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்


பழந்தமிழ் இலக்கியம்
எட்டுத் தொகை
     குறுந்தொகை
     பதிற்றுப் பத்து
     பரிபாடல்
     கலித்தொகை
     அகநானூறு
     ஐங்குறு நூறு (உரையுடன்)
பத்துப்பாட்டு
     திருமுருகு ஆற்றுப்படை
     பொருநர் ஆற்றுப்படை
     சிறுபாண் ஆற்றுப்படை
     பெரும்பாண் ஆற்றுப்படை
     முல்லைப்பாட்டு
     மதுரைக் காஞ்சி
     நெடுநல்வாடை
     குறிஞ்சிப் பாட்டு
     பட்டினப்பாலை
     மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு
     இன்னா நாற்பது (உரையுடன்) - PDF
     இனியவை நாற்பது (உரையுடன்) - PDF
     கார் நாற்பது (உரையுடன்) - PDF
     களவழி நாற்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF
     ஐந்திணை எழுபது (உரையுடன்)
     திணைமொழி ஐம்பது (உரையுடன்)
     கைந்நிலை (உரையுடன்)
     திருக்குறள் (உரையுடன்)
     நாலடியார் (உரையுடன்)
     நான்மணிக்கடிகை (உரையுடன்)
     ஆசாரக்கோவை (உரையுடன்)
     திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்)
     பழமொழி நானூறு (உரையுடன்)
     சிறுபஞ்சமூலம் (உரையுடன்)
     முதுமொழிக்காஞ்சி (உரையுடன்)
     ஏலாதி (உரையுடன்)
     திரிகடுகம் (உரையுடன்)
ஐம்பெருங்காப்பியங்கள்
     சிலப்பதிகாரம்
     மணிமேகலை
     வளையாபதி
     குண்டலகேசி
     சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்
     உதயண குமார காவியம்
     நாககுமார காவியம்
     யசோதர காவியம்
வைஷ்ணவ நூல்கள்
     நாலாயிர திவ்விய பிரபந்தம்
சைவ சித்தாந்தம்
     நால்வர் நான்மணி மாலை
     திருவிசைப்பா
     திருமந்திரம்
     திருவாசகம்
     திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை
     திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை
மெய்கண்ட சாத்திரங்கள்
     திருக்களிற்றுப்படியார்
     திருவுந்தியார்
     உண்மை விளக்கம்
     திருவருட்பயன்
     வினா வெண்பா
கம்பர்
     கம்பராமாயணம்
     ஏரெழுபது
     சடகோபர் அந்தாதி
     சரஸ்வதி அந்தாதி
     சிலையெழுபது
     திருக்கை வழக்கம்
ஔவையார்
     ஆத்திசூடி
     கொன்றை வேந்தன்
     மூதுரை
     நல்வழி
ஸ்ரீ குமரகுருபரர்
     நீதிநெறி விளக்கம்
     கந்தர் கலிவெண்பா
     சகலகலாவல்லிமாலை
திருஞானசம்பந்தர்
     திருக்குற்றாலப்பதிகம்
     திருக்குறும்பலாப்பதிகம்
திரிகூடராசப்பர்
     திருக்குற்றாலக் குறவஞ்சி
     திருக்குற்றால மாலை
     திருக்குற்றால ஊடல்
ரமண மகரிஷி
     அருணாசல அக்ஷரமணமாலை
முருக பக்தி நூல்கள்
     கந்தர் அந்தாதி
     கந்தர் அலங்காரம்
     கந்தர் அனுபூதி
     சண்முக கவசம்
     திருப்புகழ்
     பகை கடிதல்
நீதி நூல்கள்
     நன்னெறி
     உலக நீதி
     வெற்றி வேற்கை
     அறநெறிச்சாரம்
     இரங்கேச வெண்பா
     சோமேசர் முதுமொழி வெண்பா
இலக்கண நூல்கள்
     யாப்பருங்கலக் காரிகை
உலா நூல்கள்
     மருத வரை உலா
     மூவருலா
குறம் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF
பிள்ளைத் தமிழ் நூல்கள்
     மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
நான்மணிமாலை நூல்கள்
      திருவாரூர் நான்மணிமாலை - PDF
தூது நூல்கள்
     அழகர் கிள்ளைவிடு தூது - PDF
     நெஞ்சு விடு தூது - PDF
     மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF
கோவை நூல்கள்
     சிதம்பர செய்யுட்கோவை
     சிதம்பர மும்மணிக்கோவை
கலம்பகம் நூல்கள்
     நந்திக் கலம்பகம்
     மதுரைக் கலம்பகம்
சதகம் நூல்கள்
     அறப்பளீசுர சதகம் - PDF
பிற நூல்கள்
     திருப்பாவை
     திருவெம்பாவை
     திருப்பள்ளியெழுச்சி
     கோதை நாய்ச்சியார் தாலாட்டு
     முத்தொள்ளாயிரம்
     காவடிச் சிந்து
     நளவெண்பா
ஆன்மீகம்
     தினசரி தியானம்