சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர். கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை. இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. கடவுள் வாழ்த்து கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்; மார்பினஃதே மை இல் நுண் ஞாண்; நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே; மூவாய் 5 வேலும் உண்டு, அத் தோலா தோற்கே; ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே செவ் வான் அன்ன மேனி, அவ் வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று, எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை, 10 முதிராத் திங்களொடு சுடரும் சென்னி, மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொல் முறை மரபின், வரி கிளர் வயமான் உரிவை தைஇய, யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன் 15 தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே. பாரதம் பாடிய பெருந்தேவனார்
களிற்றியானை நிரை 1. தலைவி கூற்று 'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண், 5 சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம் மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக, 10 அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு, அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும் வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய, 15 சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று, உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன் கடல் போல் தோன்றல காடு இறந்தோரே? பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
பாலை
மாமூலனார் 2. தோழி கூற்று கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல் 5 அறியாது உண்ட கடுவன் அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது, நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம், எளிதின், நின் மலைப் பல் வேறு விலங்கும், எய்தும் நாட! 10 குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள், நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு, இவளும், இனையள் ஆயின், தந்தை அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி, 15 கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன; நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே. பகற்குறிக் கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது
குறிஞ்சி
கபிலர் 3. தலைவன் கூற்று இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக் கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட, கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய, 5 மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி, ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, 10 கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம், கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி, பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய் வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா 15 கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய், அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம் நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே? முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் 4. தோழி கூற்று முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ, இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின், பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப, 5 மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப, கருவி வானம் கதழ் உறை சிதறி, கார் செய்தன்றே, கவின் பெறு கானம். குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி, நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய, 10 பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாது உண் பறவை பேதுறல் அஞ்சி, மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன், உவக்காண் தோன்றும் குறும் பொறை நாடன், கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது, 15 நெடும் பெருங் குன்றத்து அமன்ற காந்தட் போது அவிழ் அலரின் நாறும் ஆய் தொடி அரிவை! நின் மாண் நலம் படர்ந்தே. தோழி தலைமகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது
முல்லை
குறுங்குடி மருதனார் 5. தலைமகன் கூற்று அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள், விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல, நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ, குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற 5 வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள், கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல், வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையல்அம் காட்டு, பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி, 10 மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப, உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன், மாய்த்த போல மழுகு நுனை தோற்றி, பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல், விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர, 15 பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன ஆக' என்னுநள் போல, முன்னம் காட்டி, முகத்தின் உரையா, 20 ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி, பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு, ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை, மா மலர் 25 மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ, பிரிதும் நாம் எனினே! பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ 6. தலைவி கூற்று அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், 5 பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, வேழ வெண் புணை தழீஇ, பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாங்கு, 10 ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, 'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் 15 முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், 20 பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் இளமை சென்று தவத் தொல்லஃதே; இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது
மருதம்
பரணர் 7. செவிலித்தாய் கூற்று 'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; தலை முடிசான்ற; தண் தழை உடையை; அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; 5 காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை 10 ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, 15 பிற்படு பூசலின் வழிவழி ஓடி, மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், 20 ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த துய்த் தலை வெண் காழ் பெறூஉம் கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப் பிணாக்கண்டு, சொல்லியது
பாலை
கயமனார் 8. தலைமகள் கூற்று ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், 5 அரிய அல்லமன் இகுளை! 'பெரிய கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், 10 படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, 15 துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது
குறிஞ்சி
பெருங்குன்றூர் கிழார் 9. தலைமகன் கூற்று கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, 5 இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, ஆலி வானின் காலொடு பாறி, துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் 10 அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, 15 ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, 20 கன்று புகு மாலை நின்றோள் எய்தி, கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், 25 அம் தீம் கிளவிக் குறுமகள் மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது
பாலை
கல்லாடனார் 10. தோழி கூற்று வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! 5 நெய்தல் உண்கண் பைதல கலுழ, பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் அரிது உற்றனையால் பெரும! உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் 10 பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது
நெய்தல்
அம்மூவனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |