சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 22 ... 211. தோழி கூற்று கேளாய், எல்ல! தோழி! வாலிய சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் பறை கண்டன்ன பா அடி நோன் தாள் திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், தண் மழை ஆலியின் தாஅய், உழவர் 5 வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனி படு சோலை வேங்கடத்து உம்பர், மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,10 கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில், மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,15 நீர் ஒலித்தன்ன பேஎர் அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே. பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.
பாலை
மாமூலனார் 212. தலைமகன் கூற்று தா இல் நல் பொன் தைஇய பாவை விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், 5 நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், 10 இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, படை நிலா இலங்கும் கடல் மருள் தானை 15 மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் 20 கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது எளியள் அல்லோட் கருதி, விளியா எவ்வம் தலைத் தந்தோயே. அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.
குறிஞ்சி
பரணர் 213. தோழி கூற்று வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, 5 இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, 10 அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை 15 வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், சென்று, தாம் நீடலோஇலரே என்றும் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, 20 வலம் படு வென்றி வாய் வாள், சோழர் இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த அறல் என நெறிந்த கூந்தல், உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
பாலை
தாயங்கண்ணனார் 214. தலைமகன் கூற்று அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம் இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, 5 விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை, அடு புகழ் மேவலொடு கண்படை இலனே; அமரும் நம் வயினதுவே; நமர் என நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி யாங்கு ஆகுவள்கொல்தானே ஓங்குவிடைப் 10 படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ, பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப, ஆர் உயிர் அணங்கும் தெள் இசை மாரி மாலையும் தமியள் கேட்டே? 15 பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
முல்லை
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் 215. தோழி கூற்று ''விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், வேறு பல் மொழிய தேஎம் முன்னி, வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே, 5 வலன் ஆக!'' என்றலும் நன்றுமன் தில்ல கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி, கொடுமரம் பிடித்த கோடா வன்கண், வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர், 10 ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை, கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ, மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு, வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண், 15 கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே. செலவு உணர்த்திய தோழி, தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு அழுங்குவித்தது.
பாலை
இறங்கு குடிக் குன்ற நாடன் 216. பரத்தை கூற்று ''நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் 5 பெட்டாங்கு மொழிப'' என்ப; அவ் அலர்ப் பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்; கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளையும், கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு, 10 பல் இளங் கோசர் கண்ணி அயரும், மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெருங் களிற்று எவ்வம் போல, 15 வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே. தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத், தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது.
மருதம்
ஐயூர் முடவனார் 217. தலைமகள் கூற்று ''பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, துவலை தூவல் கழிய, அகல் வயல் நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, 5 பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, 10 புலம்தொறும் குருகினம் நரல, கல்லென அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, எப் பொருள் பெறினும், பிரியன்மினோ'' எனச் செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; 15 நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, எயிறு தீப் பிறப்பத் திருகி, நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. 20 பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது.
பாலை
கழார்க்கீரன் எயிற்றியார் 218. தோழி கூற்று ''கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து, 5 புயல் ஏறு உரைஇய வியல் இருள் நடு நாள், விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல், தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை, படாஅவாகும், எம் கண்'' என, நீயும், ''இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி, 10 வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் பெரு மலை விடரகம் வர அரிது'' என்னாய், வர எளிதாக எண்ணுதி; அதனால், நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் தண்ணிது கமழும் நின் மார்பு, ஒரு நாள் 15 அடைய முயங்கேம்ஆயின், யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும்; அதுவே அன்னை அறியினும் அறிக! அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க! வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு, 20 ஒண் பூ வேங்கை கமழும் தண் பெருஞ் சாரல் பகல் வந்தீமே! தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தலை மகனை வரைவு கடாயது.
குறிஞ்சி
கபிலர் 219. நற்றாய் கூற்று சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், ''வாராயோ!'' என்று ஏத்தி, பேர் இலைப் பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, 5 ''என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், நுந்தை பாடும் உண்'' என்று ஊட்டி, ''பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் அறனிலாளனொடு இறந்தனள், இனி'' என, 10 மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் ''பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் பொரி அரை விளவின் புன் புற விளை புழல், அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் 15 குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, மடத் தகை மெலியச் சாஅய், நடக்கும்கொல்? என, நோவல் யானே. மகட் போக்கிய தாய் சொல்லியது.
பாலை
கயமனார் 220. தோழி கூற்று ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் 5 முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி, கயிறு அரை யாத்த காண் தகு வனப்பின், அருங் கடி நெடுந் தூண் போல, யாவரும் காணலாகா மாண் எழில் ஆகம் உள்ளுதொறும் பனிக்கும் நெஞ்சினை, நீயே 10 நெடும் புற நிலையினை, வருந்தினைஆயின், முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும், பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண், நோலா இரும் புள் போல, நெஞ்சு அமர்ந்து, காதல் மாறாக் காமர் புணர்ச்சியின், 15 இருங் கழி முகந்த செங் கோல் அவ் வலை முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் நெடுங் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து, யாணர்த் தண் பணை உறும் என, கானல் ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் 20 நல் எழில் சிதையா ஏமம் சொல் இனித் தெய்ய, யாம் தெளியுமாறே. இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டுத் தோழி சொல்லியது.
நெய்தல்
மதுரை மருதன் இளநாகனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |