சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 40 ... 391. தலைமகள் கூற்று பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய நுண் கொடி அதிரல் மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, 5 தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் பழ அணி உள்ளப்படுமால் தோழி! இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி படாஅவாகும், எம் கண்ணே கடாஅ 10 வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை குன்று புகு பாம்பின் தோன்றும், என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
காவன் முல்லைப் பூதனார் 392. தோழி கூற்று தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, பின்னிலை முனியானாகி, ''நன்றும், 5 தாது செய் பாவை அன்ன தையல், மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் தீது இன்றாக, நீ புணை புகுக!'' என என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே 10 ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் கண மழை பொழிந்த கான் படி இரவில், தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, 15 மறப் புலி உரற, வாரணம் கதற, நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், 20 வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, 25 விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் கான் அமர் நன்னன் போல, யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது.
குறிஞ்சி
மோசிகீரனார் 393. தோழி கூற்று கோடு உயர் பிறங்கற் குன்று பல நீந்தி, வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய, முதைச் சுவற் கலித்த ஈர் இலை நெடுந் தோட்டுக் கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி, 5 கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ, வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்ப, சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் 10 தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி, உரல்முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை, ஆங்கண் இருஞ் சுனை நீரொடு முகவா, களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி, இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின், 15 குடவர் புழுக்கிய பொங்கு அவிழ்ப் புன்கம், மதர்வை நல் ஆன் பாலொடு, பகுக்கும் நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர், வேங்கடம் இறந்தனர்ஆயினும், ஆண்டு அவர் 20 நீடலர் வாழி, தோழி! தோடு கொள் உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப, தகரம் மண்ணிய தண் நறு முச்சி, புகர் இல் குவளைப் போதொடு தெரி இதழ் வேனில் அதிரல் வேய்ந்த நின் 25 ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே. பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
பாலை
மாமூலனார் 394. தோழி கூற்று களவும் புளித்தன; விளவும் பழுநின; சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு 5 சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, இளையர் அருந்த, பின்றை, நீயும் இடு முள் வேலி முடக் கால் பந்தர், புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, 10 பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் மன்ற இரும் புதல் ஒளிக்கும் 15 புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது.
முல்லை
நன்பலூர்ச் சிறுமேதாவியார் 395. தலைமகள் கூற்று தண் கயம் பயந்த வண் காற் குவளை மாரி மா மலர் பெயற்கு ஏற்றன்ன, நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் பனி வார் எவ்வம் தீர, இனி வரின், நன்றுமன் வாழி, தோழி! தெறு கதிர் 5 ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின், வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழிற் கலை, அறல் அவிர்ந்தன்ன தேர் நசைஇ ஓடி, புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு, 10 மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் அருஞ் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும், திருந்து அரை ஞெமைய, பெரும் புனக் குன்றத்து, ஆடு கழை இரு வெதிர் நரலும் கோடு காய் கடற்ற காடு இறந்தோரே! 15 பிரிவிடைத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் 396. பரத்தை கூற்று தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், ''அஞ்சல்'' என்ற ஆஅய் எயினன் இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, 5 தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; 10 இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, 15 ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது.
மருதம்
பரணர் 397. செவிலித்தாய் கூற்று என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், மணன் இடையாகக் கொள்ளான், ''கல் பகக் கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் 5 எளியவாக, ஏந்து கொடி பரந்த பொறி வரி அல்குல் மாஅயோட்கு'' எனத் தணிந்த பருவம் செல்லான், படர்தரத் துணிந்தோன்மன்ற துனை வெங் காளை கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, 10 போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் கோடை வெவ் வளிக்கு உலமரும் 15 புல் இலை வெதிர நெல் விளை காடே. மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
பாலை
கயமனார் 398. தலைமகள் கூற்று ''இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர, படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ, மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து, 5 இன்னேம் ஆகிய எம் இவண் அருளான், நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று, அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க, நன்று புறமாறி அகறல், யாழ நின் குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ? 10 கரை பொரு நீத்தம்! உரை'' எனக் கழறி, நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப் பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி, மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி, நயன் அறத் துறத்தல் வல்லியோரே, 15 நொதுமலாளர்; அது கண்ணோடாது, அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ, மாரி புறந்தர நந்தி, ஆரியர் பொன் படு நெடு வரை புரையும் எந்தை பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண் 20 சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ? குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து, உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை வாங்கு அமைக் கழையின் நரலும், அவர் ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே! 25 காமம் மிக்க கழி படர் கிளவியால், வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து, சொல்லியது.
குறிஞ்சி
இம்மென்கீரனார் 399. தோழி கூற்று சிமையக் குரல சாந்து அருந்தி, இருளி, இமையக் கானம் நாறும் கூந்தல், நல் நுதல், அரிவை! இன் உறல் ஆகம் பருகுவன்ன காதல் உள்ளமொடு, திருகுபு முயங்கல் இன்றி, அவண் நீடார் 5 கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த உடைக்கண் நீடு அமை ஊறல் உண்ட, பாடு இன் தெண் மணி, பயம் கெழு பெரு நிரை வாடு புலம் புக்கென, கோடு துவைத்து அகற்றி, ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇ, 10 பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர்ந் தீம் குழற் புலம்பு கொள் தெள் விளி, மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி, மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், 15 காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல், வேய் கண் உடைந்த சிமைய, வாய் படு மருங்கின் மலை இறந்தோரே. தலைமகன் பிரிவின்கண் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார் 400. தோழி கூற்று நகை நன்று அம்ம தானே ''அவனொடு, மனை இறந்து அல்கினும் அலர், என நயந்து, கானல் அல்கிய நம் களவு அகல, பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை, நூல் அமை பிறப்பின், நீல உத்தி, 5 கொய்ம் மயிர் எருத்தம் பிணர் படப் பெருகி, நெய்ம்மிதி முனைஇய கொழுஞ் சோற்று ஆர்கை நிரல் இயைந்து ஒன்றிய செலவின், செந் தினைக் குரல் வார்ந்தன்ன குவவுத் தலை, நல் நான்கு வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇ, 10 பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி, மதியுடை வலவன் ஏவலின், இகு துறைப் புனல் பாய்ந்தன்ன வாம் மான் திண் தேர்க் கணை கழிந்தன்ன நோன் கால் வண் பரி, பால் கண்டன்ன ஊதை வெண் மணல், 15 கால் கண்டன்ன வழி படப் போகி, அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண், இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தி, துறை கெழு மெல்லம் புலம்பன் வந்த ஞான்றை, பூ மலி இருங் கழித் துயல்வரும் அடையொடு, 20 நேமி தந்த நெடுநீர் நெய்தல் விளையா இளங் கள் நாற, பலவுடன் பொதி அவிழ் தண் மலர் கண்டும், நன்றும் புதுவது ஆகின்று அம்ம பழ விறல், பாடு எழுந்து இரங்கு முந்நீர், 25 நீடு இரும் பெண்ணை, நம் அழுங்கல் ஊரே! தலைமகன் வரைந்து எய்திய பின்றை, தோழி தலைமகட்குச் சொல்லியது.
நெய்தல்
உலோச்சனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |