![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 13 ... மணிமிடைபவளம் 121. தலைவன் கூற்று நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் வேனில் நீடிய வான் உயர் வழிநாள், வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் 5 கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு செங் கோல் வால் இணர் தயங்கத் தீண்டி, சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து அல்குறு வரி நிழல் அசைஇ, நம்மொடு 10 தான் வரும் என்ப, தட மென் தோளி உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை கனை விசைக் கடு வளி எடுத்தலின், துணை செத்து வெருள் ஏறு பயிரும் ஆங்கண், 15 கரு முக முசுவின் கானத் தானே. தோழியால் தலைமகளை உடன்வரும் எனக் கேட்ட தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
மதுரை மருதன் இளநாகனார் 122. தலைமகள் கூற்று இரும் பிழி மாரி அழுங்கல் மூதூர் விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்; மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின், வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்; 5 பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்; அரவவாய் ஞமலி மகிழாது மடியின், 10 பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே; திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின், இல் எலி வல்சி வல் வாய்க் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்; 15 வளைக்கண் சேவல் வாளாது மடியின், மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்; எல்லாம் மடிந்த காலை, ஒரு நாள் நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால், அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து, 20 ஆதி போகிய பாய்பரி நன் மான் நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல் முதிர் புறங்காட்டு அன்ன பல் முட்டின்றால் தோழி! நம் களவே. தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம்
குறிஞ்சி
பரணர் 123. தலைமகன் கூற்று உண்ணா மையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் கான யானை கவின் அழி குன்றம் 5 இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என நெய் கனி நெடு வேல் எஃகிலை இமைக்கும் 10 மழை மருள் பல் தோல் மா வண் சோழர் கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை, இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங் கடல் ஓதம் போல, ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே. தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் 124. தலைவன் கூற்று 'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து சென்றீக' என்ப ஆயின், வேந்தனும் நிலம் வருந் துறாஅ ஈண்டிய தானையொடு 5 இன்றே புகுதல் வாய்வது; நன்றே. மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற, பாசறை வருத்தம் வீட, நீயும் மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை, 10 கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய, காலை எய்த, கடவுமதி மாலை அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை 15 அரமிய வியல் அகத்து இயம்பும் நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே. தலைமகன் தேர்ப்பாகற்கு உரைத்தது
முல்லை
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 125. தோழிகூற்று (அ) தலைவி கூற்று அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய், 5 வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் தாது உறு குவளைப்போது பிணி அவிழ, படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் கடாஅம் மாறிய யானை போல, பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ 10 மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, முனிய அலைத்தி, முரண் இல் காலை; கைதொழு மரபின் கடவுள் சான்ற 15 செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற 20 ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த பீடு இல் மன்னர் போல, ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது
பாலை
பரணர் 126. தலைமகன் கூற்று நினவாய் செத்து நீ பல உள்ளிப், பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் 5 கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, மால் இருள் நடுநாள் போகி, தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு, அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள், 10 நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம் பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான், 15 பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித், திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை கொல்லோ, நீயே கிளி எனச் சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப் 20 புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், மின் நேர் மருங்குல், குறுமகள் பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே? உணர்ப்புவயின் வாரா ஊடற்கண், தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; அல்ல குறிப்பிட்டு அழிந்ததூஉம் ஆம்; தோழியைப் பின்னின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
மருதம்
நக்கீரர் 127. தோழி கூற்று இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய வலம் படு முரசின் சேர லாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து 5 முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, நல் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவன் 10 நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன ஒரு நாள் ஒரு பகல் பெறினும், வழிநாள் தங்கலர் வாழி, தோழி! செங் கோல் கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர் சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி, 15 கல்லா மழவர் வில் இடம் தழீஇ, வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், பழி தீர் காதலர் சென்ற நாட்டே. பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
பாலை
மாமூலனார் 128. தலைமகள் கூற்று மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே யாமம் கொள வரின் கனைஇ, காமம் கடலினும் உரைஇ, கரை பொழி யும்மே. 5 எவன்கொல் - வாழி, தோழி! மயங்கி இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு, இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில் குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடிக், 10 கான நாடன் வரூஉம், யானைக் கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி, மாரி வானம் தலைஇ நீர் வார்பு, இட்டு அருங் கண்ண படுகுழி இயவின், இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர் 15 தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது
குறிஞ்சி
கபிலர் 129. தோழி கூற்று 'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என நள்என் கங்குல் நடுங்கு துணை ஆயவர் நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறந்து அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, 5 கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதல் கலித்த கோழ் இலைப் பருத்திப் பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி, போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் 10 நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் கலங்குமுனைச் சீறூர் கை தலை வைப்ப, கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர், செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும் அருஞ் சுரம் அரிய வல்ல; வார் கோல் 15 திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், குவளை உண்கண், இவளொடு செலற்கு' என நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே. பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை
குடவாயில் கீரத்தனார் 130. தலைமகன் கூற்று அம்ம வாழி, கேளிர்! முன் நின்று கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைப், 5 பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை எயிறுடை நெடுந் தோடு காப்பப், பல உடன் வயிறுடைப் போது வாலிதின் விரீஇ, புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம் 10 கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் நல் தேர் வழுதி கொற்கை முன் துறை வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற் போது புறங்கொடுத்த உண்கண் மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே. கழறிய பாங்கற்குத் தலைமகன் கழற்றெதிர் மறுத்தது
நெய்தல்
வெண்கண்ணனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|