சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 34 ... 331. தலைமகள் கூற்று நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் 5 கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, குன்றகச் சிறுகுடி மறுகுதொறும் மறுகும் சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய, சென்றோர் அன்பு இலர் தோழி!என்றும், அருந் துறை முற்றிய கருங் கோட்டுச் சீறியாழ்ப் 10 பாணர் ஆர்ப்ப, பல் கலம் உதவி, நாளவை இருந்த நனை மகிழ்த் திதியன், வேளிரொடு பொரீஇய, கழித்த வாள் வாய் அன்ன வறுஞ் சுரம் இறந்தே! தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
மாமூலனார் 332. தலைமகள் கூற்று முளை வளர் முதல மூங்கில் முருக்கி, கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, 5 கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால் யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து, வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் நின் புரை தக்க சாயலன் என, நீ 10 அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப் படாஅ முயக்கமும், தண்டாக் காதலும், தலை நாள் போன்மே! 15 இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது.
குறிஞ்சி
கபிலர் 333. தலைமகள் கூற்று ''யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர, அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் 5 எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, நீடலர் வாழி, தோழி! கோடையில், குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, 10 வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, யானைப் பெரு நிரை வானம் பயிரும் மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, நாள் இடைப்படாமை வருவர், நமர்'' என, பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா 15 நின் வாய் இன் மொழி நல் வாயாக வருவர் ஆயினோ நன்றே; வாராது, அவணர் காதலர்ஆயினும், இவண் நம் பசலை மாய்தல் எளிதுமன் தில்ல சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, 20 மறுதரல் உள்ளத்தர்எனினும், குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாலை
கல்லாடனார்
334. தலைமகன் கூற்று ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, 5 இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி, பெயல் தொடங்கின்றால், வானம்; வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப, 10 நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது, இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து, நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப, ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப் 15 பொலிவன அமர்த்த உண்கண், ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே! வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
மதுரைக் கூத்தனார் 335. தலைமகன் கூற்று இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் யானும் அறிவென்மன்னே; யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, 5 இன்னா வேனில் இன் துணை ஆர, முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்ட, புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெஞ் சுரம் அரிய அல்லமன், நமக்கே விரி தார் ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் 10 மாட மூதூர் மதிற்புறம் தழீஇ, நீடு வெயில் உழந்த குறியிறைக் கணைக் கால், தொடை அமை பன் மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓரன்ன கோள் அமை எருத்தின் பாளை பற்று அழிந்து ஒழிய, புறம் சேர்பு, 15 வாள் வடித்தன்ன வயிறுடைப் பொதிய, நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின், ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ வார் உறு கவரியின் வண்டு உண விரிய, முத்தின் அன்ன வெள் வீ தாஅய், 20 அலகின் அன்ன அரி நிறத்து ஆலி நகை நனி வளர்க்கும் சிறப்பின், தகை மிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசுங் காய் நீரினும் இனிய ஆகி, கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ் வாய், 25 ஒண் தொடி, குறுமகட் கொண்டனம் செலினே! தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினைக் கழறிச் செலவு அழுங்கியது.
பாலை
மதுரைத் தத்தங் கண்ணனார் 336. பரத்தை கூற்று குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், 5 தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇ, பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி, அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் 10 தேர் தர வந்த நேர் இழை மகளிர் ஏசுப என்ப, என் நலனே; அதுவே பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல்மாறே; தாமும் பிறரும் உளர்போல் சேறல் 15 முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின், யான் அவண் வாராமாறே; வரினே, வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல, என்னொடு திரியானாயின், வென் வேல் மாரி அம்பின் மழைத் தோற் சோழர் 20 வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை, ஆரியர் படையின் உடைக, என் நேர் இறை முன்கை வீங்கிய வளையே! நயப்புப் பரத்தை இற் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.
மருதம்
பாவைக் கொட்டிலார் 337. தலைமகன் கூற்று ''சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த மாரி ஈர்ந் தளிர் அன்ன மேனி, பேர் அமர் மழைக் கண், புலம்பு கொண்டு ஒழிய, ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று; ஆகலின் அவணது ஆக, பொருள்'' என்று, உமணர் 5 கண நிரை அன்ன, பல் கால், குறும்பொறை, தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி, ''உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு'' என, கொன்னே 10 தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர், திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி, செங் கோல் அம்பினர் கைந் நொடியாப் பெயர, கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ, வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை, 15 வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை, கள்ளி நீழல் கதறுபு வதிய, மழை கண்மாறிய வெங் காட்டு ஆர் இடை, எமியம் கழிதந்தோயே பனி இருள் பெருங் கலி வானம் தலைஇய 20 இருங் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே! முன்னொரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ 338. தலைமகன் கூற்று குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் மறம் கெழு தானை அரசருள்ளும், அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் 5 அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் இயையாதுஆயினும், என்றும், 10 வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் அகல் இருங் கானத்துக் கொல்லி போல, தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் 15 அறாஅலியரோ, தூதே பொறாஅர் விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, வழங்கல் ஆனாப் பெருந் துறை 20 முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே! அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குறிஞ்சி
மதுரைக் கணக்காயனார் 339. தலைமகன் கூற்று வீங்கு விசை, பிணித்த விரை பரி, நெடுந் தேர் நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில், பாம்பு என முடுகுநீர் ஓட, கூம்பிப் பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப, அற்சிரம் நின்றன்றால், பொழுதே; முற்பட 5 ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து ஆண்மை வாங்க, காமம் தட்ப, கவை படு நெஞ்சம்! கண்கண் அகைய, இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி, ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம்; 10 நோம்கொல்? அளியள் தானே யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின், அவ் உயிர் வாழ்தல் அன்ன காதல், சாதல் அன்ன பிரிவு அரியோளே! போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
நரை முடி நெட்டையார் 340. தோழி கூற்று பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து, புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி, மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து, வலவன் வண் தேர் இயக்க, நீயும் செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம 5 ''செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன் பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள் நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென, கழியே ஓதம் மல்கின்று; வழியே வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்; 10 சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது'' என, நின் திறத்து அவலம் வீட, இன்று இவண் சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப! பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே; 15 வடவர் தந்த வான் கேழ் வட்டம் குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில் எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன், 20 கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு, முன்றில் தாழைத் தூங்கும் தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே? பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது.
நெய்தல்
நக்கீரர் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |