![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 23. ‘விடுதலை’ |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 24 ... 231. தோழி கூற்று ''செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, நல் இசை வலித்த நாணுடை மனத்தர் கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், 5 படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் கள்ளி அம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ, உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை வெஞ் சுரம் இறந்தனர்ஆயினும், நெஞ்சு உருக வருவர் வாழி, தோழி! பொருவர் 10 செல் சமம் கடந்த செல்லா நல் இசை, விசும்பு இவர் வெண் குடை, பசும் பூட் பாண்டியன் பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் ஆடு வண்டு அரற்றும் முச்சித் தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே. 15 தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாலை
மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் 232. தோழி கூற்று காண் இனி வாழி, தோழி! பானாள், மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், மாஅல் யானை புலி செத்து வெரீஇ, இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, 5 குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண், மன்ற வேங்கை மண நாட் பூத்த மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் வியல் அறை வரிக்கும் முன்றில், குறவர் மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் 10 ஆர் கலி விழவுக் களம் கடுப்ப, நாளும், விரவுப் பூம் பலியொடு விரைஇ, அன்னை கடியுடை வியல் நகர்க் காவல் கண்ணி, ''முருகு'' என வேலற் தரூஉம். பருவமாகப் பயந்தன்றால், நமக்கே. 15 தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்,சொல்லியது.
குறிஞ்சி
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் 233. தோழி கூற்று அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் அலர் முலை நனைய, அழாஅல் தோழி! எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, ஊன் இல் யானை உயங்கும் வேனில், 5 மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், துறக்கம் எய்திய தொய்யா நல் இசை முதியர்ப் பேணிய, உதியஞ் சேரல் பெருஞ் சோறு கொடுத்த ஞான்றை, இரும் பல் கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு, 10 குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த சுரன் இறந்து அகன்றனர்ஆயினும், மிக நனி மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ, பொருள்வயின் நீடலோஇலர் நின் இருள் ஐங் கூந்தல் இன் துயில் மறந்தே. 15 பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாலை
மாமூலனார் 234. தலைமகன் கூற்று கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய 5 பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, கால் என மருள, ஏறி, நூல் இயல் கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடுந் தேர் வல் விரைந்து ஊர்மதி நல் வலம் பெறுந! ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை 10 ஏறு புணர் உவகைய ஊறு இல உகள, அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத, எல்லை போகிய புல்லென் மாலை, புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர், 15 கழி படர் உழந்த பனி வார் உண்கண் நல் நிறம் பரந்த பசலையள் மின் நேர் ஓதிப் பின்னுப் பிணி விடவே. தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
பேயனார் 235. தலைமகள் கூற்று அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, விண்டு முன்னிய கொண்டல் மா மழை 5 மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப, வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழ, சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ விசும்பு அணி மீனின் பசும் புதல் அணிய, 10 களவன் மண் அளைச் செறிய, அகல் வயல் கிளை விரி கரும்பின் கணைக்கால் வான் பூ மாரி அம் குருகின் ஈரிய குரங்க, நனி கடுஞ் சிவப்பொடு நாமம் தோற்றி, பனி கடி கொண்ட பண்பு இல் வாடை 15 மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய, ''நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு தொல் நலம் சிதையச் சாஅய், என்னள்கொல் அளியள்?'' என்னாதோரே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூர, தோழிக்குச் சொல்லியது.
பாலை
கழார்க்கீரன் எயிற்றியார் 236. தலைமகள் கூற்று மணி மருள் மலர முள்ளி அமன்ற, துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் 5 பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் காமம் பெருமை அறியேன், நன்றும் உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் 10 அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அறியாமையின் அழிந்த நெஞ்சின், ''ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, 15 ஆட்டன் அத்தியைக் காணீரோ?'' என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், ''கடல் கொண்டன்று'' என, ''புனல் ஒளித்தன்று'' என, கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த ஆதிமந்தி போல, 20 ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மருதம்
பரணர் 237. தோழி கூற்று ''புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து 5 இன்னா கழியும் கங்குல்'' என்று நின் நல் மா மேனி அணி நலம் புலம்ப, இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, 10 இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து 15 ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
பாலை
தாயங்கண்ணனார் 238. தோழி கூற்று மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, மட மான் வல்சி தரீஇய, நடு நாள், இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, 5 மடக் கண் ஆமான் மாதிரத்து அலற, தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு, நனந்தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி, இருங் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் பெருங் கல் நாட! பிரிதிஆயின், 10 மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு இழை அணி நெடுந் தேர் களிறொடு என்றும் மழை சுரந்தன்ன ஈகை, வண் மகிழ், கழல் தொடித் தடக் கை, கலிமான், நள்ளி நளி முகை உடைந்த நறுங் கார் அடுக்கத்து, 15 போந்தை முழு முதல் நிலைஇய காந்தள் மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே? இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது.
குறிஞ்சி
கபிலர் 239. தலைமகன் கூற்று அளிதோதானே; எவன் ஆவதுகொல்? மன்றும் தோன்றாது; மரனும் மாயும் ''புலி என உலம்பும் செங் கண் ஆடவர், ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய 5 விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, புள்ளித் தொய்யில், பொறி படு சுணங்கின், ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய, 10 ஈட்டு அருங்குரைய பொருள்வயிற் செலினே, நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்?'' என, குறு நெடும் புலவி கூறி, நம்மொடு நெருநலும் தீம் பல மொழிந்த சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே! 15 பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
எயினந்தை மகன் இளங்கீரனார் 240. தோழி கூற்று செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் 5 பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, யாயும் ஆயமோடு அயரும்; நீயும், தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, 10 கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், பூ வேய் புன்னை அம் தண் பொழில், வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. 15 தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது.
நெய்தல்
எழுஉப்பன்றி நாகன் குமரனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|