உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
GPay Ph: 9444086888 ((Name: Businesses: Gowtham Pathippagam) | UPI ID: gowthampub@indianbank
பேசி: +91-9444086888 (Whatsapp) | மின்னஞ்சல்: dharanishmart@gmail.com |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 20 ... 191. தலைமகன் கூற்று அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ, வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி, தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர் 5 ஊர் கண்ட அன்ன ஆரம் வாங்கி, அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர் மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி, ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு 10 ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை, அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி, சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும், உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, 15 அறல் என விரிந்த உறல் இன் சாயல் ஒலி இருங் கூந்தல் தேறும்' என, வலிய கூறவும் வல்லையோ, மற்றே? தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது
பாலை
ஒரோடோ கத்துக் கந்தரத்தனார் 192. தோழி கூற்று மதி அரும்பு அன்ன மாசு அறு சுடர் நுதல் பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின் எய்யா வரி வில் அன்ன பைந் தார், 5 செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல் வளை சிறை வாரணம் கிளையொடு கவர, ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை 10 மை படு விடரகம் துழைஇ, ஒய்யென அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்கு உறுத்தலின், இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல் உரும் இறை கொண்ட உயர்சிமைப் 15 பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக் குறி மறுத்தது
குறிஞ்சி
பொதும்பில்கிழான் வெண்கண்ணனார் 193. தலைமகன் கூற்று கான் உயர் மருங்கில் கவலை அல்லது, வானம் வேண்டா வில் ஏர் உழவர் பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், 5 பொறித்த போலும் வால் நிற எருத்தின், அணிந்த போலும் செஞ் செவி, எருவை; குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி 10 தொல் பசி முது நரி வல்சி ஆகும் சுரன் நமக்கு எளிய மன்னே; நல் மனைப் பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, முருந்து ஏர் முறுவல், இளையோள் பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது
பாலை
மதுரை மருதன் இளநாகனார் 194. தலைவி கூற்று பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், 5 வித்திய மருங்கின் விதை பல நாறி, இரலை நல் மான் இனம் பரந்தவைபோல், கோடுஉடைத் தலைக்குடை சூடிய வினைஞர், கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கி, களை கால் கழீஇய பெரும் புன வரகின் 10 கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட, குடுமி நெற்றி, நெடு மாத் தோகை காமர் கலவம் பரப்பி, ஏமுறக் கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த வல் இலைக் குருந்தின் வாங்குசினை இருந்து, 15 கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் கார்மன் இதுவால் தோழி! 'போர் மிகக் கொடுஞ்சி நெடுந்தேர் பூண்ட, கடும் பரி, விரிஉளை, நல் மான் கடைஇ வருதும்' என்று அவர் தெளித்த போழ்தே. பருவம் கண்டு ஆற்றாமை மீதூரத், தலைமகள் சொல்லியது
முல்லை
இடைக்காடனார் 195. நற்றாய் கூற்று 'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோள் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வரும்' எனத், தாயே, புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, 5 உவந்து, இனிது அயரும் என்ப; யானும், மான் பிணை நோக்கின் மட நல்லாளை ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள், கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய 10 நலம் புனை உதவியும் உடையன் மன்னே; அஃது அறி கிற்பினோ நன்றுமன் தில்ல; அறுவை தோயும் ஒரு பெருங் குடுமிச், சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங் கோல், ஆகுவது அறியும் முதுவாய், வேல! 15 கூறுக மாதோ, நின் கழங்கின் திட்பம்! மாறா வருபனி கலுழும் கங்குலில், ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர், எம் மனை முந்துறத் தருமோ? தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே? மகட் போக்கிய நற்றாய் சொல்லியது
பாலை
கயமனார் 196. தலைவி கூற்று நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி 5 ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, விடியல் வைகறை இடூஉம் ஊர! தொடுகலம்; குறுக வாரல் தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, 10 ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை அன்னி மிஞிலியின் இயலும் நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி சொல்லியது
மருதம்
பரணர் 197. தோழி கூற்று மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் 5 இனையல் வாழி, தோழி! முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், மறம் மிகு தானைக், கண்ணன் எழினி தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ 10 தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் மடவோள் தழீஇய விறலோன் மார்பில் புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்குக், கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, 15 பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் வினை வலி யுறூஉம் நெஞ்சமொடு இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது
பாலை
மாமூலனார் 198. தலைவன் கூற்று 'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக் கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது, நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; 5 கார் விரை கமழும் கூந்தல், தூ வினை நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் இள மழை சூழ்ந்த மட மயில் போல, வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, வில் வகுப்புற்ற நல் வாங்கு குடச் சூல் 10 அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், ஆன்ற கற்பின் சான்ற பெரிய, அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், 15 கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், நேர் மலர் நிறை சுனை உறையும் சூர்மகள் மாதோ என்னும் என் நெஞ்சே! புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
குறிஞ்சி
பரணர் 199. தலைமகன் கூற்று கரை பாய் வெண் திரை கடுப்பப், பல உடன், நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, உயங்கல் யானை நீர் நசைக்கு அலமரச், 5 சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் அலங்கல் உலவை அரி நிழல் அசைஇத், திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், 10 வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய கெடுமான் இன நிரை தரீஇய, கலையே கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் செல்வேம் ஆயின், எம் செலவு நன்று' என்னும் 15 ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், 20 பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது
பாலை
கல்லாடனார் 200. தோழி கூற்று நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், புலால் அம் சேரிப், புல் வேய் குரம்பை, ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து, இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம் 5 ஒரு நாள் உறைந்திசி னோர்க்கும், வழி நாள், தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப! பொம்மற் படு திரை கம்மென உடைதரும் மரன் ஓங்கு ஒரு சிறைப் பல பாராட்டி, 10 எல்லை எம்மொடு கழிப்பி, எல் உற, நல் தேர் பூட்டலும் உரியீர்; அற்றன்று, சேந்தனிர் செல்குவிர் ஆயின், யாமும் எம் வரை அளவையில் பெட்குவம்; நும் ஒப்பதுவோ? உரைத்திசின் எமக்கே. தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குக் குறை நயப்பக் கூறியது
நெய்தல்
உலோச்சனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|