10. ஏமாறப் படைத்த இனம் அழகும் துறுதுறுப்பும் இளமையும் நிறைந்தவளாய் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் அந்தப் பெண்ணிடம் வம்பு பேசியாவது விளையாட்டாக அவள் கோபத்தை வளர்த்துப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது எனக்கு. சில அழகான குழந்தைகளைக் கிள்ளிவிட்டு அழச் செய்து வேடிக்கை பார்க்கும் ஆசை எப்போதாவது சில சமயங்களில் நமக்கு உண்டாகவில்லையா? அது போல கிள்ளி விடுவதை ஒத்த கேள்விகளால் அவளை அழ வைத்துப் பின்பு சிரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் நான். அதற்கான முயற்சிகள் என் பேச்சிலும் நிகழ்ந்தன. அவளிடம் இதைச் சொல்லும் போது எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நான் கூறிய இந்தச் சொற்களைக் கேட்டுச் சுகுணாவின் சிவந்த உதடுகள் காற்றில் அசையும் மாதுளை மொட்டுக்களைப் போல் துடித்தன. நீண்டு அகன்று குறுகுறுவென்று சுழலும் கருவண்டுகளைப் போலத் திகழ்ந்த அவளுடைய கண்கள் செவிகளைத் தொடுவதுபோல், மேலும் நீண்டன. புதிய கண்ணாடியில் தெரியும் குளித்த முகத்தைப் போல் பளீரென்று கோபம் தெரிந்தது அவள் முகத்தில். அவள் சினம் துடிக்கும் உதடுகளோடு என்னை ஏறிட்டுப் பார்த்தாள். “உங்களைப் போல் படித்துப் பண்பட்ட இலக்கிய அறிஞர்களிடமிருந்து இப்படிப்பட்ட பக்குவமில்லாத கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அழுகி ஊசிப்போன கருத்து இது. புதிய சமுதாயத்துக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டிய கருத்துக்கள் சத்தும் சாரமும் உள்ளவையாக இருக்க வேண்டுமென்று என்னைப் போன்ற பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். சகுந்தலை துஷ்யந்தனிடம் ஏமாந்து போனதற்கு அந்தக் காவியம் விதியின் சாபத்தைத் தான் காரணமாகக் கூறுகிறது. மேலும் துஷ்யந்தன் என்னும் ஆண் மகனின் மறதியைக் காரணமாகக் கூறாமல் சகுந்தலையின் ஏமாற்றத்தைக் குறை கூறிப் பேசுகிறீர்கள் நீங்கள். பெண்ணினத்தின் மேல் ஏதாவது குற்றம் சொல்ல வேண்டுமென்று உங்களுக்கே ஆசையாயிருக்கும் போய் தோன்றுகிறது.”
“எனக்கு மட்டும் அல்ல! அருணகிரிநாதரில் இருந்து பட்டினத்தார் வரையில் பலருக்கு இருந்த ஆசைதான் இது! பெண்களைக் குற்றம் சொல்லிவிட வேண்டுமென்ற ஆசை உலகத்துக்குப் புதியதில்லை. ஆனால், நான் பேசியது அப்படிப்பட்ட நோக்கத்தோடு அல்ல. உங்களோடு வம்பு பேச வேண்டுமென்று தான் வேடிக்கையாகப் பேசினேன்.”
“பேசுவதில் மட்டும் இல்லை, எழுத்திலும் நீங்கள் வம்பைத்தான் எழுதுகிறீர்கள். இல்லாவிட்டால் நான் அல்லியூரணி கிராமத்தில் பெற்ற அநுபவங்களை யாரிடமிருந்தோ கேள்விப்பட்டு இப்படிப் பட்டுப்பூச்சி என்ற பெயரில் குறுநாவலாக எழுத உங்களால் துணிந்திருக்க முடியுமா?” “ஏன் முடியாது? இந்தச் சமுதாயத்துக்கு எங்கள் பேனாவிலிருந்து துணிவைக் கொடுப்பவர்கள் நாங்கள். நான் எழுத நினைத்ததோ, அல்லது என்னுடைய கற்பனையில் உருவாகியதோ, எங்காவது ஒரு மூலையில் நடந்ததாகவோ, நடக்கிறதாகவோ, நடக்கப் போவதாகவோ இருந்தால் அதுவே என் எழுத்துக்கு வலுவைத் தருகிற அம்சமாக இருக்குமென்று நான் ஏன் கொள்ள முடியாது?” “தாராளமாகக் கொள்ளலாம். ஆனால், அப்படி நீங்கள் கற்பனை செய்கிற வாழ்வின் சாயலாக நடைமுறை உலகில் எங்கோ, ஒரு மூலையில் மெய்யாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் தாம் அதனால் வருகிற வேதனைகளை எல்லாம் பட வேண்டியிருக்கிறதென்பதை நீங்கள் மறந்தே போய் விடுகிறீர்கள். பட்டுப்பூச்சியை எழுதியதனால் சமூக சேவகிகளுக்கும் அவர்களைச் சரியானபடி புரிந்து கொள்ள முடியாமல் கெடுதல் புரியும் முரட்டு மனிதர்களுக்கும் பாடம் கற்பித்து விட்டதாக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமைக்குரிய விளைவுகள் ஏற்படுவதில்லை.” “உண்மையில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தான் சொல்லுங்களேன்! நான் தெரிந்து கொள்கிறேன்.” “எங்களுக்கு எது வாழ்க்கையா யிருக்கிறதோ அதுவே உங்களுக்குச் சிரிப்புக்குரியதாக இருக்கிறது. சிரியுங்கள். சிரியுங்கள். உங்களுக்குச் சிரிப்பு வரும்போதெல்லாம் மறைக்காமல் வெளிப்படையாகச் சிரியுங்கள். சிரிப்பும் கவலையும் தான் மனித உடம்பு என்ற கண்ணாடியில் மறைக்க முடியாமல் தெரியும் பிரதிபிம்பங்கள். அவற்றையும் கூட வலுவில் மறைப்பதற்குப் பழக்கிக் கொள்ளாதீர்கள்” - என்று என்னை நோக்கிக் குத்தலாகப் பதில் பேசினாள் சுகுணா. “நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன். கடவுள் மனித உடம்பைப் படைத்திருக்கிற விதமே சத்தியத்தைப் புறக்கணித்து விட முடியாதபடி அமைந்திருக்கிறது. உண்மையும் பொய்யுமாகிய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் முடியாதபடி முகம், கண்கள், நெற்றி, வாய், உதடுகள் எல்லாமாக ஒன்று சேர்ந்து மனிதனைக் காட்டிக் கொடுத்து விடுகிறவையாகவே, மீறிக்கொண்டு எதிரே இருப்பவர்களை நாம் ஏமாற்ற முயல்கிற சமயங்கள் உண்டு. இப்போது அந்த ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருப்பது நான் அல்ல! உண்மையில் நீங்கள் தான் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” - என்றேன் நான். இதைக் கேட்டு அவள் திடுக்கிட்டுப் போனாள். “அது எப்படி?” “என்னுடைய கதையில் நான் எழுதியிருந்த நிகழ்ச்சிகளினால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால், நீங்கள் தான் அதைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ளத் தயங்கி மறைக்கிறீர்கள். ஏமாற்றவும் செய்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட சொந்தத் துன்பத்தை ஏதோ ஒரு சமூகத்துக்கே ஏற்பட்ட பெருந்துன்பம் போலச் சுட்டிக் காட்டிப் பெரிது பண்ணுகிறீர்கள். ஒரு சிறிய துன்பத்தைத் தங்கள் மேடையாற்றல் மூலம் பெரிதாக்கிப் பரவச் செய்து அதற்காக நாட்டின் மேலேயே குற்றம் சுமத்துவது அரசியல் கட்சிகளும் செய்தித்தாள்களும், கையாளுகிற சுலபமான எதிர்ப்பு முறை. அதே வழியை இப்போது நீங்களும் கடைபிடிக்கிறீர்கள் போலிருக்கிறது.” நான் இப்படிக் கூறிக் கோண்டே வந்த போது சுகுணாவுக்குக் கண் கலங்கி விட்டது. அந்த பளிக்கு முகத்தில் கலக்கத்தைப் பார்த்த போது அவ்வளவு ஆத்திரத்தோடு அவளிடம் நேருக்கு நேர் நான் கோபத்தைக் காட்டிப் பேசியிருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. பூவை வாடச் செய்து விட்டது போல நான், அவளைக் கலங்கச் செய்து விட்டதை எண்ணி வருந்தினேன். சில விநாடிகள் எங்களுக்கிடையே மௌனம் நிலவியது. மிகவும் முக்கியமாகப் பேச வேண்டியதை எல்லாம் இனி மேல் தான் பேசப்போகிறோம் என்பது போல இருவருமே எதையோ பெரிய மீதமாக ஒதுக்கி வைத்துவிட்டுச் சாதாரணமானவற்றைப் பேசிக் கொண்டே நேரத்தைக் கழித்து விட்டது போல உணர்ந்தோம். “என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிற அந்தப் பெண்ணுக்கும் இரவுச் சாப்பாடு நம் வீட்டில் தானா?” - என்று என்னிடம் விசாரிக்கப் போகிற குறிப்போடு அறை வாசலில் வந்து நின்று கொண்டு என்னைத் தனியே அழைத்தாள் என் மனைவி. கதவுக்கு வெளியே இருந்து தலையை நீட்டி, ‘இப்படி கொஞ்சம் வந்துவிட்டுப் போங்களேன்’ - என்று பெண்கள் அழைக்கிற அழைப்புக்கெல்லாம் இதே போன்றதொரு வழக்கமான அர்த்தம் தான் இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய இல்லற வாழ்க்கையின் போது தினசரி நடைமுறை வழக்கத்திலே பழகிப் போகிற அர்த்தங்கள் இப்படி எத்தனையோ உண்டு. “வீடு தேடிக் கொண்டு வந்திருக்கிறவர்களைச் சாப்பிடுகிற நேரம் வரை இருப்பாயோ, புறப்பட்டுப் போய்விடுவாயோ, என்று எப்படிக் கேட்க முடியும்? அவளும் இங்கே சாப்பிடப் போகிறாள் என்ற திட்டத்துடனேயே சமையல் ஏற்பாடுகளைச் செய். மற்றவற்றை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று மனைவியின் அந்தரங்க அழைப்புக்கு இணங்கி அவளோடு எழுந்து சென்ற போது தனியே அவளுக்குப் பதில் சொல்லி அனுப்பினேன். “ஏதோ பேசினோம், முடித்தோம் என்று பேர் பண்ணிவிட்டு எழுந்திருந்து வாருங்கள். இப்படித் தேடி வருகிறவர்களிடம் எல்லாம் இரவு பகல் பாராமல் வழவழவென்று பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை...” என் மனைவியைச் சமையலறைக்கு அனுப்பிவிட்டு நான் மறுபடி அலுவலக அறைக்குள் நுழைந்த போது கண்டிப்பான எண்ணத்துடன் தான் நுழைந்தேன். ‘இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் இந்தப் பெண்ணிடம் பேச்சை முடித்துக் கொண்டு விட வேண்டும்’ - என்று என் மனத்தில் உறுதி ஏற்பட்டிருந்தது. எனவே அந்தப் பெண்ணின் முறையீடு எதுவோ அதையே நேரடியாகக் கூறும்படி அவளைத் தூண்டுகிற விதத்தில் அவளிடம் என் கேள்வியைப் பிறப்பித்தேன். “அல்லியூரணி கிராமத்தில் உங்களுக்கு ஏதேதோ துன்பங்கள் ஏற்பட்டதாகக் கூறினீர்களே, அவற்றை எல்லாம் மீண்டும் ஒருமுறை என்னிடம் விவரமாகக் கூறுங்கள். அவற்றிற்கு என் கதையும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்ததாகவும் கூறினீர்களே! அதையும் விளக்கமாகச் சொல்லுங்கள். உங்களுடைய குற்றச்சாட்டுக்கு நான் ஏதேனும் மறுமொழியோ, சமாதானமோ கூறுவதற்கு இடமிருந்தால் கூறிவிடுகிறேன். மற்றவற்றை அப்புறம் பேசிக் கொள்வோம்.” என் குரலில் இருந்த கண்டிப்பு அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் என்று அவள் முகபாவத்திலிருந்து எனக்குத் தெரிந்தது. “பொதுவாகக் கூற முடிந்த விவரங்களை மட்டும் இப்போது உங்களிடம் கூறுகிறேன். மற்றவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்களே ஒரு முறை என்னோடு அல்லியூரணி கிராமத்துக்கு வரவேண்டும். இப்படி நான் அழைப்பதை அதிகாரமாகவோ, கட்டளையாகவோ நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு கதாசிரியருக்குச் சமுதாய நலனில் நிரம்ப அக்கறை உண்டு, என்று சற்று முன்பு நீங்களே கூறினீர்கள் அல்லவா? சமுதாயத்தில் சுகுணா என்கிற பெயருடன் உலவும் நானும் ஒருத்திதான். என்னுடைய வாழ்விலும் உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் என்று நான் கருதினால் அது தவறான உரிமை ஆகாதென்றே நான் நினைக்கிறேன். சகுந்தலை காலத்திலிருந்து இந்தத் தலைமுறை வரை பெண்கள் காதலிலோ, இலட்சியத்திலோ, ஏதாவதொன்றில் ஏமாறிக் கொண்டு தான் வருகிறார்கள் என்று நீங்கள் கூறினீர்கள். அந்த ஏமாற்றத்தை நானும் அடைந்து விடாமலிருக்க சமூகத்தின் மனத்துக்கு டாக்டராகிய நீங்கள் என்ன மருந்து சொல்கிறீர்கள்? அந்த மருந்தை ஏற்றுக் கொள்ள நான் இந்தக் கணமே தயாராயிருக்கிறேன்” - என்று கூறிவிட்டு என்னை நோக்கி கைகூப்பினாள் சுகுணா என்னும் அந்த யுவதி. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |