11. சமுதாயத்தின் நோய்கள் சுகுணா அவ்வளவு மனம் விட்டுப் பேசிய பின் அவள் மேல் கோபம் உண்டாவதற்குப் பதிலாக நிறைந்த அநுதாபம் தான் எனக்கு உண்டாயிற்று. எனக்குத் தபாலில் வந்திருந்த கடிதங்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து அவளை படிக்கச் சொன்னேன். அவள் அந்தக் கடிதங்களை ஆர்வத்தோடு படிக்கலானாள். இரண்டாவது கடிதத்திலோ, மூன்றாவது கடிதத்திலோ, ‘இலட்சியம், இலட்சியம் என்று பறந்த சுகுணாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது கிராமங்களில் சுகுணா சந்தித்ததைப் போன்ற வடமலைப் பிள்ளைகளும் பிரமுகர்களும் தான் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டு திரிகின்றனர்’ - “கதை எழுதுகிறவர்களும் அதைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்துக் கடிதம் எழுதுகிறவர்களும், இப்படி உண்மையின் ஒரு பகுதியை மறைத்தோ மாற்றியோ தங்களுக்குத் தோன்றியபடி எழுதிக் கொண்டிருந்தால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? கிராமத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருப்பதையே மறைத்து அல்லது மறந்து எழுதுவதை என்னவென்று சொல்வது?” என்று அந்தக் கடிதத்தை மேலே படிக்காமல் கையில் வைத்துக் கொண்டே என்னைக் கேட்டாள் அவள். நான் சிரித்துக் கொண்டே அவளுக்கு மறுமொழி கூறலானேன்:- “கதையில் நல்லவர்கள் இல்லையென்று நீங்கள் எப்படிச் சொல்லிவிட முடியும்? பட்டுப்பூச்சி கதையின் தலைவியே பலருடைய அநுதாபத்தைத் தேடிக் கொள்கிறவள் தான். அதற்கு அப்புறம் ரகுராமனைப் போன்ற இலட்சிய மனிதர்களும் இதே கதையில்தானே வருகிறார்கள்? இந்தக் கடிதங்கள் எல்லாம் கதையில் வந்த நல்ல மனிதர்களைப் பாராட்டி வந்தவைகள் என்று தான் கொள்ள வேண்டும். அவர்களுடைய தோல்விக்காகவும் துயரத்துக்காகவும் வருந்தி அனுதாப்படுகிற கடிதங்கள் என்று இவற்றைப் படிக்கும் போதே நீங்கள் உணர்ந்து கொள்ள முடியுமே?” “முடியும் என்றே வைத்துக் கொண்டாலும் என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கதையின் தலைவியாக நானே வாய்த்திருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பதனால் தான் தயங்க வேண்டியிருக்கிறது. சில சோகமயமானக் கதைகளை படிக்கும் போது அந்தக் கதையில் சோகத்தை நிறைய அநுபவிக்கிறவர்கள் யாரோ, அவர்களாகவே என்னையே பாவித்துக் கொண்டு நான் படிப்பேன். இது என் வழக்கம். சரத்சந்திரருடைய கிரகதாகம், கு.ப.ரா.வினுடைய ஸ்டூடியோக் கதை இவைகளில் வருகிற அசலாவாகவும் நடிகை சீதாவாகவும், நான் என்னையே பாவித்துக் கொண்டு படித்திருக்கிறேன். நீங்கள் முன்பு எப்போதோ எழுதிய இரண்டு சிறு கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்து அப்படி தாழிட்டுக் கொண்டு தனிமையில் குமுறிக் குமுறி அழுதிருக்கிறேன் நான். உங்களுடைய அந்த இரண்டு கதைகளில் வருகிற பெண்களின் மனத்துன்பங்களை என்னுடைஅய் சொந்த துன்பங்களாகவே எண்ணி எண்ணி இன்னும் அவற்றை அநுபவித்துக் கொண்டு வருகிறேன் நான்.”
“உங்களை அழச் செய்த அந்தக் கதைகளின் பெயர்களை நான் அறிந்து கொள்ளலாம் அல்லவா? எழுத்தில் உருவாகிற கற்பனை மனிதர்களுடைய துயரங்களைத் தங்களுடைய சொந்தத் துயரமாகவே எண்ணுகிற உண்மை மனிதர்களின் தொகை அதிகமானால் அது அந்த எழுத்தை உருவாக்கியவனுக்கு வெற்றி தான். இதிலிருந்து இன்னொரு விவரமும் எனக்குத் தெரிகிறது. இந்த வருடப் புத்தாண்டு மலரில் வந்த பட்டுப்பூச்சி என்கிற கதைக்கு முன்னாலும் என்னுடைய கதைகளிலிருந்து உங்களுடைய சொந்தப் பிரச்சனைகளை நினைவு கூர்ந்து தவிக்கும் இணையான துன்ப உணர்வுகள் உங்களுக்குக் கிடைத்து வந்திருப்பதாகத் தெரிகிறது. டாக்டர்களால் தீர்க்க முடியாத நோய்கள் நம்முடைய சமுதாயத்தில் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை எழுத்தில் யாராவது எடுத்துச் சொல்லி விளக்கும் போது, “நம்மைப் போலவே இந்த நோய்களைச் சமுதாயத்திலிருந்து நீக்க இவர்களும் முயல்கிறார்கள்” - என்று அந்த எழுத்துக்கும் அதில் பாத்திரமானவர்களுக்கும் அநுதாப்படும் முனைப்பு வாசகர்களில் பலருக்கு ஏற்படுவது நியாயம் தான். சமுதாய நோய்களுக்கு மருந்து காண முடிகிறதோ, இல்லையோ, அந்த நோய்கள் இருப்பதை மறைத்து நடிப்புப் புகழ்ச்சி செய்து விடாமல் அவை இருக்கின்றன என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறோம் நாங்கள். இந்த நாட்டின் இன்றைய வாழ்க்கையில் பழமை காரணமாக வந்த நோய்களும் புதுமை காரணமாக வந்த நோய்களும் - என்று சமுதாய நோய்கள் பல விதத்தில் வளர்ந்து பெருகியுள்ளன. இதில் அல்லியூரணி கிராமத்தில் உங்களைப் பற்றிய நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்று கூற என்னால் முடியவில்லை. நீங்களே கூச்சப்படாமல் உங்கள் அனுபவங்களைக் கூறிவிட்டால் எனக்கு வசதியாயிருக்கும்...”
“அடுத்தபடியாக நீங்கள் எழுதிய ‘முத்துச் சாவடி’ என்ற சிறுகதையில் என் மனம் தவித்தது. அந்தக் கதையில் வருகிற கனகம் என்கிற பெண் பாம்பன் பாலத்தில் மேல் இந்தோசிலோன் எக்ஸ்பிரஸ் போய்க் கொண்டிருந்த போது இரயில் கதவைத் திறந்து கொண்டு கடலில் குதித்து விட்டதாகக் கதையை முடித்திருந்தீர்கள். அதே காரியத்தை அதே இரயிலில் போகும் போது அதே இடத்தில் செய்து என் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டு விட வேண்டுமென்று நான் துணிந்து ஒரு சமயம் திட்டமிட்டதும் உண்டு. ஆனால், அப்படி நடக்கவில்லை. இதில் ஒரு வேறுபாடும் உண்டு. முத்துச் சாவடி என்ற உங்களுடைய கதையில் வருகிற பெண்ணைப் போல் பைத்தியம் பிடித்து சுயபுத்தி இல்லாத நிலையில் நான் பாம்பன் கடலில் குதிக்க திட்டமிடவில்லை. சுயபுத்தியோடுதான் அதைச் செய்ய நினைத்தேன். எனக்கு அப்போது பிடித்திருந்த ஒரே பைத்தியம் உடனடியாகச் சாக வேண்டும் என்ற ஆசைதான். முறை தவறிய ஆசையைக் கூட உலக வழக்கில் பைத்தியம் என்று தான் சொல்லுகிறார்கள். அப்படி உலக வழக்கில் சொல்லுவது சரியானால் அன்று எனக்குப் பிடித்திருந்ததும் ஒரு வகையான பைத்தியம் என்பதை நான் இப்போது மறுக்காமல் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். “உங்களுடைய ‘தெருவோடு போனவன்’ கதையில் வருகிற அந்த வாத்தியாரம்மாவுக்கு ஏற்பட்ட ஆசையைப் போலச் சமூகமே கேலி செய்யத்தக்க விநோத ஆசையும் எனக்குச் சில சமயங்களிலே அந்தரங்கமாக ஏற்பட்டிருக்கிறது. ‘முத்துச் சாவடி’யில் வந்த கனகத்தைப் போல் கடலில் குதித்துச் சாக வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது. ‘குறிஞ்சி மலரி’ல் வந்த பூரணியைப் போலப் புனிதமான எண்ணங்களில் வாழ வேண்டுமென்ற ஆசையும் கோடைமழை போல் எப்போதாவது சில சமயங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே கதையில் வரும் மங்களேசுவரி அம்மாளின் மூத்த பெண் வசந்தாவைப் போல் சினிமாவில் சேர்ந்து என்னுடைய அழகை உலகத்துக்கு விளம்பரப்படுத்த வேண்டுமென்றும் நான் சில போதுகளில் ஆசைப்பட்டிருக்கிறேன். ‘மலைச்சிகரம்’ கதையில் வருகிற நளினியைப் போல் யாராவது ஓர் அழகிய இலட்சிய எழுத்தாளனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு புதுமை நிறைந்த வாழ்க்கையை அநுபவிக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டிருக்கிறேன். கடைசியாக எனக்கு ஏற்பட்ட அநுபவங்களும் பட்டுப்பூச்சியின் கதாநாயகிக்கு ஏற்பட்ட அநுபவங்கள் தான்.” எதிரே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த சுகுணா இப்படி ஆர்வத்தோடு பேசிக் கொண்டே இருந்தாள். அவளை அழ வைத்ததாகவும் அவளைச் சாகத் தூண்டியதாகவும் அவளே குறிப்பிட்ட என்னுடைய கதைகளை நானே எழுதிய காலத்துச் சூழ்நிலையை எண்ண முயன்றேன் நான். என்னுடைய கதாநாயகிகள் ஒவ்வொருத்தியும் தனித்தனித் துன்பங்களாகவோ, தனித்தனி அனுபவங்களாகவோ, அடைந்திருக்கிற வாழ்க்கையை இதோ இப்போது என் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிற சுகுணா தான் ஒருத்தியாகவே தனித்தனிக் காலங்களில் அடைந்திருக்கிறாள். இப்படி வேறுபாடும் மாறுபாடும் உள்ள பலவிதமான அநுபவங்களை அடைந்திருக்கிற வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்தது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்று எண்ணினேன் நான். அந்தச் சமயத்தில் என் மனைவி வந்து எங்கள் இருவரையும் சாப்பிட அழைத்தாள். இருவரும் சாப்பிடுவதற்காக உள்ளே எழுந்து போனோம். சாப்பிடும் போதே அவளை அழ வைத்த கதையையும் அவளைச் சாகத் தூண்டிய கதையையும் முன்பு நான் படைத்தபடியே மறுபடி நினைத்துப் பார்க்கலானேன். நான் அந்தக் கதைகளில் எழுப்பியிருந்த பிரச்னைகள் சமூக நோய்களைப் பற்றியவை. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |