6. பட்டுப்பூச்சி பறந்தது ஒவ்வொரு நாளும் பட்டினம் போகிற பாசஞ்சர் வண்டி இரவு ஏழரை மணிக்குத் தாமரைக் குளத்துக்கு வருகிறது. சுகுணா அங்கு வந்து இறங்கிய நாளைப் போலவே அன்றும் பௌர்ணமி தான்! சரத்காலத்து வானத்தின் மங்கலில் சந்திரன் மென்மையழகோடு நளினமாகத் தோன்றினான். மஸ்லின் துணியினால் போர்த்திய முகம் போல அந்த மழை நிலவு அழகாக இருந்தது. தென்னை மரங்களும், நீலமலைத் தொடரும், தாமரைக் குளம் ஊரும் அன்று போலவே பாற்கடலில் முழுகியெழுந்தவை போல் கொள்ளையழகோடு தோற்றமளித்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் சொல்லிற் சொல்ல வராததாகிய ஏதோ ஒரு சோகம் இன்று மட்டும் வந்து தேங்கிக் கொண்டாற் போல் சுகுணாவுக்குத் தோன்றியது. தன்னை விட்டுப் பிரியப் போகிற பொருளைக் கடைசியாகப் பார்ப்பது போலச் சுகுணா ஸ்டேஷனிலிருந்து ஊரைப் பார்த்தாள். முதல் தடவை வந்திறங்கிய அன்றும் அதே பழைய நிலையில் மனத்துக்குள் கொண்டு வந்து கற்பனை செய்ய முயன்றாள். அவளோடு வேலை பார்த்த கிராம சேவகிகள் கோமளாவோ, பரிமளாவோ ஒருத்தியும் ஸ்டேஷன் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பட்டினத்திலிருந்து வந்த வண்டியில் பார்சல் எடுத்துக் கொண்டு புறப்பட்ட நியூஸ் ஏஜெண்டு ராமலிங்க மூப்பனார், ‘இந்த அம்மா ஊருக்குத் திரும்பிப் போறாங்க. நாளையிலிருந்து எல்லாப் பத்திரிகைகளும் ஓரோரு பிரதி விற்பனை குறைந்து விடுமே!’ - என்று மனத்துக்குள் சொந்த நஷ்டத்தை வியாபாரக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். சொந்த நஷ்டம் தான் ஒவ்வொருவருக்கும் கவலை. மற்றவர்களுடைய நஷ்டத்தைப் பற்றி யாராவது கவலைப்படுவார்களோ! “மறுபடியும் எங்க ஊருக்குத் திரும்ப வருவீங்களா அக்கா?” - என்று அழுகை கலந்த குரலில் சுகுணாவைக் கேட்டாள் ஓர் அரிசனச் சிறுமி. அந்தச் சிறுமிக்கு வருவேன் என்று பதில் சொல்வதா? வரமாட்டேன் என்று பதில் சொல்வதா? அல்லது இரண்டையுமே சொல்லாமல் சும்மா இருந்துவிடுவதா? - என்று சுகுணாவுக்குப் புரியவில்லை. அவள் ஒன்றுமே சொல்வதற்குத் தோன்றாமல் அந்தச் சிறுமியைப் பார்த்துக் கண்கலங்கி நின்றாள். ஸ்டேஷனில் புங்கமரத்துக் காற்றுச் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த தந்திக் கம்பங்களிலிருந்து சோ என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. திடீரென்று இருந்தாற் போலிருந்து ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய், ‘கம்ப்ளெயிண்ட்’ புத்தகம் கேட்டாள் சுகுணா. அவர் தயங்கினாற் போல் அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கம்ப்ளெயிண்ட் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அவள் அந்தப் புத்தகத்தில் முத்து முத்தாகக் கீழே கண்டபடி எழுதலானாள்: என்று எழுதி முடித்தாள் சுகுணா. - ‘இப்படிக்குக் கால்களை ஒடித்துக் கொண்ட ஓர் அபலை’ - என்று கீழே கையெழுத்தும் போட்டு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அதைத் திருப்பிக் கொடுத்தாள். இவர் அதைப் படித்துவிட்டுச் சிரித்தார். “என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள்?” “பின் வேறு எப்படி எழுதச் சொல்கிறீர்கள்?” “இரயில்வே கம்ப்ளெயிண்ட் புஸ்தகத்தில் ஏதோ சம்பந்தமில்லாததை எழுதி...?” “சம்பந்தமில்லை என்று யார் சொன்னது சார்! இந்த ஊர்க்குத் தொண்டு செய்யும் ஆசையோடு என்னைப் போல் பேதைகள் யாராவது வந்தால் இரயிலிலிருந்து இறங்கியதுமே நீங்கள் இதைக் காட்டிவிட்டு அடுத்த இரயிலுக்கு உடனே டிக்கெட்டும் கொடுத்து விடுங்கள்” என்று அவள் கூறியதைக் கேட்டு ஸ்டேஷன் மாஸ்டர் மறுபடியும் சிரித்தார். “நீங்களாவது இப்படி எழுதியிருக்கிறீர்கள். சில பேர் இந்த ஊருக்கு ஸ்டேஷன் இருப்பதையே பெரிய கம்ப்ளெயிண்டாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்” என்று அந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷன் மாஸ்டராகத் தாம் வந்து மாட்டிக் கொண்ட அவஸ்தையைச் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டார் அவர். சுகுணா போக வேண்டிய இரயில் வந்தது! சாமான்களை ஏற்றிவிட்டு அம்மாவும் பெண்ணும் ஏறிக் கொண்டார்கள். கருப்பு நிறக் கிராதியின் அருகே அதன் நிறத்துக்கும் தங்கள் உடலுக்கும் அதிக வித்தியாசம் தெரியாதபடி சேரிக் குழந்தைகள் நின்று கொண்டு அவளை ஏக்கத்தோடு பார்த்தன. கருப்புத் தகரக் கிராதியின் இடைவெளியில் ஒவ்வொரு குழந்தை முகமாகத் தெரிவதைச் சுகுணாவும் பார்த்தாள். சாரு, மீனு, குப்பன், கருப்பண்ணன் - ஒவ்வொரு குழந்தைகளின் பெயரும் அவளுக்கு நினைவு வந்தது. “மறுபடி இங்கே திரும்ப வருவீங்களா அக்கா?” சாரு மறுபடியும் இரயிலில் சன்னலோரமாக உட்கார்ந்திருந்த சுகுணாவுக்குக் கேட்கும்படி கீழே கிராதியருகேயிருந்து கத்தினாள். இப்போதும் அவள் சும்மா இருந்தாள். அந்தச் சிறுமிக்கு வருவேன் என்று பதில் சொல்வதா? வரமாட்டேன் என்று பதில் சொல்வதா? என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? இரயில் புறப்பட்டது. பெரிதாக இரயில் கரி ஒன்று வந்து விழியில் புகுந்து தாமரைக்குளத்தை அவள் பார்வையிலிருந்து மறைத்தது. “ஜன்னலை மூடு! பனியடிக்கிறது” - என்றாள் அம்மா. சுகுணா ஜன்னலைப் போட்டாள். அந்த இரயில் சுகுணா என்னும் அழகிய பட்டுப்பூச்சியோடு தாமரைக்குளத்தைக் கடந்து பறந்தது. இரயிலில் எதிரே பேப்பர் வைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து வாங்கி மேலோட்டமாகப் பார்க்கலானாள் சுகுணா. அவளுடைய பட்டமளிப்பு விழாவில் பேசிய அதே பேரறிஞர் வேறு ஒரு பல்கலைக் கழக விழாவில் பேசியிருந்த பேச்சு அன்றைய பேப்பரில் வந்திருந்தது. முதலில் அவருடைய அகக்கண்ணை யாராவது திறந்து விட வேண்டுமென்று தோன்றியது சுகுணாவுக்கு. தங்களுடைய அகக்கண்களே சரியாகத் திறக்கப் பெறாதவர்கள் மற்றவர்களுடைய அகக்கண்களைத் திறக்க வருவதால் எவ்வளவு தொல்லைகள் ஏற்பட முடியும் என்பதை அவள் இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்துவிட்டாள். மேடை அறிவுரைகள் நடைமுறை வாழ்வைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக சீர்கேட்டைச் செய்து விடுவதும் இதனால் தானோ என்று சுகுணாவுக்குத் தோன்றியது. அநுபவப்படாத மனத்துக்கு அனுபவப்படாத நாவிலிருந்து கிடைக்கும் உபதேசம் இரட்டைக் குருடர்கள் ஏதோ ஒன்றைக் காணத் தவித்தது போல ஆகிவிடுகிறது. இலட்சியங்கள் நினைக்கிறபடி நடப்பதில்லை. குறி வைத்து நடக்கும் போது பசுமையாய்த் தோன்றி அருகில் போனவுடன் பசுமையின்றித் தெரியும் சில மலைகளைப் போல வாழ்க்கையில் சில உயர்ந்த இலட்சியங்களும் எண்ணத்துக்கு வளமானதாகவும் நடைமுறைக்கு வறண்டதாகவும் மாறிவிடுகின்றன. தாமரைக் குளத்தின் கடந்த கால அநுபவங்களில் இத்தகைய இலட்சிய முரண்பாடுதான் அவளுக்குத் தெரிந்தது. இரயில் போய்க் கொண்டிருக்கிற வேகம் அந்தப் பொய்ம்மை நோக்கத்திலிருந்து மெய்யுணர்வு நல்கித் தன்னைப் பிரித்துக் கொண்டு போகிற அநுபவத்தின் வேகமாக அவளுக்குத் தோன்றியது. தாமரைக்குளம் அவளுடைய வாழ்க்கையின் இளமை வேகத்துக்கு ஒரு பாடமாயிருக்கலாம். இவ்வளவு விரைவில் அந்தப் பாடம் கிடைத்து வாழ்க்கையின் இலட்சியத்தைப் பற்றிய தனது சுறுசுறுப்பை அடக்கி விட்டதில் அவளுக்கு வருத்தமும் உண்டு. ஆனால் அது மிகச் சிறிய வருத்தம் தான். சுதந்திரம் பெற்ற நாட்டின் சின்னஞ்சிறு கிராமங்களில் பிறருடைய எண்ணங்களுக்குக் கூடச் சுதந்திரம் தர விரும்பாத முரட்டு மனிதர்கள் இன்னும் இருப்பது தவிர்க்க முடியாதுதான். தோற்றத்தினால் நாகரிகமாக இருக்கப் பழகி விட்டாலும் முரட்டுத்தனம் என்பது மனத்தை பொறுத்து இருக்க முடியும். தடித்தனம் என்று ஒரு குணம் உண்டே; அது தோற்றத்தினால் தடியாயில்லாதவனிடமும் உண்டு. தாமரைக்குளத்தில் சுகுணாவுக்கு அபவாதம் ஏற்படக் காரணமாயிருந்த தாமரைக் குளத்துப் பிரமுகர்கள் யாவரும் தோற்றத்தினால் நாகரிகமானவர்கள் தாம். ஆனால் மனத்தினால் நாகரிகம் அடையாதவர்கள். ‘அடிமைப்பட்டிருந்த நாட்டு மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விடலாம். ஆனால் மனத்தைச் சுதந்திரமாகவும், தன் நினைவோடு சிந்திக்கப் பழகுவதற்கு அடிமைத்தனம் நீங்கிய பின்னும் எத்தனையோ பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். சில பல தலைமுறைகள் கூட ஆகலாம். இலட்சியமும் நல்லெண்ணமும் கொண்டவர்கள் அதுவரை காத்திருக்க வேண்டும் போலத்தான் தெரிகிறது. என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கினாள் அவள். இந்த மாதிரி எத்தனை எத்தனையோ சிந்தனைகள் இரயிலோடு போட்டி போட்டுக் கொண்டு சுகுணாவின் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தன. அவளுடைய அம்மாவோ தன் பெண்ணின் மனத்தில் ஓடும் இத்தகைய சிந்தனை ஓட்டங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தூங்கத் தொடங்கியிருந்தாள். இரயிலின் நெருக்கடிக்குள்ளே மேலே ஏறிப் படுத்திருந்தவர்கள், கீழே உட்கார்ந்திருந்தவர்கள், ஒண்டிக் கொண்டிருந்தவர்கள், சாய்ந்து கொண்டிருந்தவர்கள், தொத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே தூங்குவதற்குத் தான் முயன்று கொண்டிருந்தனர். ஆழமான சுக நித்திரை அந்தப் பாஸ்ட் பாஸஞ்சர் வண்டியில் கிடைக்காதென்று தெரிந்திருந்தும் கிடைத்ததை அனுபவிக்க எல்லாருக்கும் ஆசையிருப்பதைக் காட்டிக் கொள்வது போல இரயில் பெட்டியில் தூக்கம் வந்து கவிந்திருந்தது. கிடைத்ததை வைத்துக் கொண்டு சமாளிப்பது என்கிற வாழ்க்கையின் பொது நிலையை இந்தக் காட்சியிலிருந்து எண்ணினாள் சுகுணா. எதையும் அடையும் வேகமும், போட்டி பொறமைகளும் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், எதையும் ஆழமாக அறிந்து நிறைவாக அடைவதற்குக் காத்துக் கொண்டிருக்க முடியாது போல் தெரிந்தது. இரயில் பயணம் போல நடுவழியில் கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டுக் கிடைத்த இடத்தில் தூங்கிக் கிடைத்த வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். தனி ஆசைகள், தனி இலட்சியங்கள், மிகவும் கூராகச் சிந்திக்கிற மனம். இவைகளோடு தான் தேடியது கிடைக்கிற வரை மெல் வருத்தம் பாராமல் பசி நோக்கம் இன்றித் தூக்கமும் இல்லாமல், எதிர்த்து வருகிற தீமைகளையும் இலட்சியம் செய்யாமல் வாழ்வதற்குள் பொறுமை இழந்துவிட நேரும் என்று தோன்றியது அவள் மனத்தில். சிறிது நேரத்தில் உட்கார்ந்த படியே அவளும் கண் அயர்ந்தாள். ‘படிப்பினால் பிறருடைய அகக்கண்களைத் திறக்கும் புனிதமான பணியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்’ - என்று கூறிய அறிஞர் மைக் முன் நின்று கம்பீரமாகப் பேசும் கோலத்தில் அவள் கண்களுக்குத் தெரிகிறார். அவரிடம் ஏதேதோ கேள்வி கேட்க வேண்டுமென்று அவளுடைய உதடுகள் துடிக்கின்றன. ஆனால், அப்படிக் கேட்கவும் வரவில்லை. “உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் நினைவும் நம்பிக்கைகளும் நிறைந்து மலர்ந்தவர்களிடையே பார்க்க வேண்டுமடி பெண்ணே!” - என்று அம்மா வந்து நின்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள். இந்தச் சில மாதங்களில் பழகிய இடங்கள், பழகிய மனங்கள், எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இரயில் சக்கரங்கள் ஓடும் பழகிப் போன போக்கு தடக் தடக் என்று இருளில் ஒலித்தபடியே தொடர்கிற ஓசை அந்தத் தூக்கத்திலும் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விடாமல் நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இரும்பின் மேல் இரும்பு சுழன்று ஓடும் அந்த ஓசை விகாரமாயிருக்கலாம். ஆனால், அது ஓடுகிறது என்பது தான் அதன் இலட்சணம். உலகத்தின் கலகலப்பில் வேகமாக வாழலாம். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைவிருக்கும்படியாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் மந்தமாக ஏதோ நடக்கிறதென்ற நினைப்புதான் இருக்கும். பலருக்கு நினைவூட்டும்படி வாழ்வது வேண்டுமானால் பெருவாழ்வாயிருக்கலாம். ஆனால் தனக்கே நினைவில்லாதபடியாகவும் வாழக் கூடாது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |