5. அவதூறு கார்த்திகை மாதத்தின் நடுவிலே மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் கன்னிகாபுரம் முதியோர் கல்வி நிலைய ஆண்டு விழாவுக்குப் போயிருந்த சுகுணா இரவில் அங்கேயே தங்கும்படி நேர்ந்து விட்டது. சாயங்காலம் சுமாராக இருந்த மழை, இரவில் பெருமழையாக ஓங்கி வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. எனவே ஊர் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு ரகுராமனுடைய ஏரித் திடலுக்குப் போய் அவருடைய தாயாரோடு தங்கி விட்டாள் அவள். திட்டத்தோடும் நேரக் கட்டுப்பாட்டுடனும் அந்த விழா முடிந்திருந்தால் மழைக்கு முன்னாலேயே அவள் வீடு திரும்பியிருக்க முடியும். முதியோர் கல்வி நிலைய விழா என்பதிலுள்ள முதுமையை விழாவுக்கே உரியதாக்கி விட்டாற் போல் மெல்ல மெல்ல ஏற்பாடுகள் தளர்ந்து நடந்தன. மாலை ஐந்து மணிக்கு விழா என்று அழைப்பிதழ் அச்சிட்டு விட்டு நேரிலும் போய்ச் சொல்லியும் வற்புறுத்தித் தலைவராக ஏற்பாடு செய்திருந்த பிரமுகரொருவர் ஆறரை மணிக்குத்தான் விழா நடக்கிற இடத்துக்கே வந்து சேர்ந்தார். பழைய வழியிலும் ஒட்டாமல் புதிய வழியிலும் அதிக ஆதரவின்றி இப்படிப்பட்ட சமூகப் பொது விழாக்களை ஓர் இந்திய நாட்டுக் கிராமத்தில் நடத்துவதைப் போலச் சிரமமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. புறக்கணிப்புகளையே இலட்சியம் செய்யாமல் துணிந்து புறக்கணிக்கிற தைரியசாலியால் அது எளிதாக முடியும். அன்றும் கன்னிகாபுரத்தில் ஆண்டு விழா முடிந்ததும் இரவு எவ்வளவு நாழிகையானாலும் திரும்பி விடுவதென்று தான் அவள் போயிருந்தாள். கன்னிகாபுரத்துக்கும், தாமரைக் குளத்துக்கும் ஏழே மைல் தான். சைக்கிளில் வர ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஆனால், மழை பெய்து விட்டால் காட்டு ஓடைகள் எல்லாம் உடனே பெருக்கெடுத்து விடும். ஏழு மைலுக்குள் இருபது காட்டு ஓடைகளுக்கு குறைவில்லை. ஆகவே தான் அன்றிரவு அவள் ரகுராமன் வீட்டில் தங்கினாள். இருட்டிலும் மழையிலும் பயணம் செய்வதற்கு வேறு வழி எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை. மறுநாள் அதிகாலையில் அவள் கன்னிகாபுரத்திலிருந்து புறப்பட்டுத் தாமரைக் குளத்துக்கு வந்துவிட்டாள்.
திரும்பிய தினத்தன்று காலை பத்து மணிக்கு அவள் தனது சேவாதள வேலையாகப் பஞ்சாயத்துப் போர்டு ஆபீசுக்குப் போக வேண்டியிருந்தது. அவள் அங்கே போய்ச் சேர்ந்த போது பஞ்சாயத்து அலுவலகத்தில் வடமலைப் பிள்ளை, கிராம முன்சீப், பஞ்சாயத்துத் தலைவர் மூன்று பேருமே இருந்தார்கள். அவளைக் கண்டதும் ‘வாருங்கள்’ என்று கூட மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்கள். வடமலைப்பிள்ளை அவளைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரித்தார். மற்ற இரண்டு பேரும் அவளைப் பார்த்து “பட்டுப்பூச்சி வந்திருக்கிறது” - என்று அவள் காதிலும் கேட்கும்படி சில்லறையான வார்த்தைகளை விஷமமான குரலில் கூறினார்கள். சுகுணா சீற்றத்தோடு பதில் கூறலானாள்: - “ஐயா! தயவு செய்து நீங்கள் பிறரிடம் மரியாதையாகப் பேசுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். மரியாதை தந்துதான் பிறரிடமிருந்து மரியாதை வாங்க வேண்டும்.”
பேசும் போது ஆத்திரத்தில் சுகுணாவின் உதடுகள் மேலும் சிவப்பேறித் துடித்தன. “என்னடீ? உடம்புக்கு என்ன? ஏன் என்னவோ போலிருக்கிறாய்” - என்று வரவேற்ற தன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் சுகுணா. எவ்வளவோ நெஞ்சழுத்தக் காரியான பெண் தனக்கு முன் முதல் முறையாகப் பொங்கிப் பொங்கி அழுததைப் பார்த்த போது அம்மாவுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. என்னவோ? எது நடந்ததோ? என்று பதறிப் போய்விட்டாள். “என்னடீ? என்ன நடந்ததென்று தான் சொல்லேன்? இப்படி அழுதால் நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?” பதில் ஒன்றும் சொல்லாமல் குமுறிக் குமுறி அழுதாள் சுகுணா. இது நடந்த நாளுக்கு மறுநாள் நண்பகல் கழிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சுகுணாவின் வீட்டு வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அந்த வண்டிக்குள்ளேயிருந்து கன்னிகாபுரம் ரகுராமனின் தாயார் கீழே இறங்கினாள். உள்ளே வராமல் வண்டியிலிருந்து கீழே இறங்கின வேகத்தில் வாயிற்படியில் நின்று கொண்டு, “அடி பெண்ணே! உனக்கு மானம் ரோஷம் இருந்தால் நீ அந்த ஊர்ப் பக்கம் வரப்படாது. ஊரெல்லாம் என் பிள்ளை தலை உருளுகிறது. நீ நல்லவளாவே இருக்கலாம். ஆனால், ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. இனிமேல் அந்தப்பக்கம் வராதே. ஊருக்கே தெய்வம் போலப் பேரும் புகழுமாக இருந்தான் என் பிள்ளை. கால் நொண்டியானாலும் எல்லாரும் மெச்சும்படி இருந்தான். நீ அதையும் நொண்டியாக்கிப் போட்டுட்டே” - என்று இரந்தாள் அந்த அம்மாள். சுகுணாவின் அம்மா அவளருகே சென்று, “உள்ளே வந்து விவரமாகச் சொல்லுங்களம்மா! என்ன நடந்தது?” - என்று நிதானமாகவே அந்த அம்மாளை அழைத்துக் கேட்டாள். “ஒண்ணும் நடக்கலை. உங்கள் பெண் மகாலட்சுமி மாதிரி இலட்சணமாக இருக்கிறாள். அவளுக்கு மனசும் நேர்மையாக இருக்கிறது. அதுவே ஊருக்கும் பொறாமை. உங்கள் பெண்ணுக்கு இந்த உத்தியோகம் வேண்டவே வேண்டாம். பேசாமல் இன்னும் பத்து வருஷம் அப்பளம் வடாம் இட்டுச் சேர்த்தாவது நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணி வையுங்கள். மானமாக வாழ முடியாத உத்தியோகமெல்லாம் பெண்களுக்கு வேண்டாம்” - என்று சீற்ற வேகம் தணிந்த குரலில் சொல்லிக் கொண்டே, போகும் போது விடைபெறவும் செய்யாமல் வண்டியில் ஏறிவிட்டாள் கன்னிகாபுரத்து அம்மாள். வண்டி மறைந்ததும் சுகுணாவின் அம்மா உள்ளே வந்து சற்றே கடுமை மாறாத குரலில் சுகுணாவைக் கேட்டாள். “இதெல்லாம் என்ன நாடகமடீ பெண்ணே?” “வாழ்க்கை நாடகம்” - என்று வெறுப்பாகப் பதில் வந்தது சுகுணாவிடமிருந்தது. “எனக்கு அப்பவே தெரியுமடிம்மா! உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் பார்க்க வேண்டும். மனம் குறுகினவர்கள் இருக்கிற இடத்திலே ஒழுங்காக நடந்து கொண்டாலும் தப்புத் தான்! ஒழுங்காக நடக்காவிட்டாலும் குறைதான். ஒழுங்காகவும் கண்டிப்பாகவும் நடந்ததால் அப்படி நடப்பதும் குறைதான்.” “நீ ஆயிரம் தடவை சொன்னாலும் இதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் அம்மா. நான் செய்தது தப்புத்தான். இங்கே மனம் விரிந்தவர்கள் இல்லை. நியாயமாக நடந்து கொள்வதை விடத் தவற்றை அநுசரித்துப் போகிறவர்கள் தான் இன்றைய மனிதர்களுக்குத் தேவையாயிருக்கிறது. இந்தத் தலைமுறையில் எல்லார் தப்புக்களையும் கண்டும் காணாத மாதிரி இருந்துவிட்டால் ‘நல்லவள்’ என்பார்கள். தப்பைத் துணிந்து தப்பென்று சொன்னால் அப்படிச் சொன்னவளைக் கெட்டவளாக்கிக் காட்டி விடுவார்கள். அப்பப்பா! பிறருக்கு அவதூறு உண்டாவதில் எத்தனை ஆசை இவர்களுக்கு?” - என்று மனம் நொந்து போய்த் தன் தாயிடம் அலுத்துக் கொண்டாள் சுகுணா. இந்த மாதிரிச் சிறிய ஊர்களில் அவதூறுதான் பொழுது போக்கு! வம்புதான் இங்கெல்லாம் நாவுக்குச் சுவையான பலகாரம். வம்பு பேசுவதும் புறம் பேசுவதும் பாவம் என்று சொல்லிக் கொண்டே அவற்றை நாத்தழும்பேறப் பேசுவதன் மூலம் அந்தப் பாவத்தையே செய்து கொண்டிருப்பார்கள். அன்றைக்குத் தாமரைக் குளத்திலிருந்து வெளியேறிய மெயில் பையில் சுகுணாவின் ராஜிநாமாக் கடிதமும் இருந்தது. மேலதிகாரிக்குத் தனியே எழுதிய தபாலில் தன்னை எப்படியாவது ஒரு வாரத்துக்குள் அந்தப் பதவியிலிருந்து விலகல் பெறுமாறு ரிலீவ் செய்துவிட்டால் தனக்கு மிகவும் நல்லதென்று சுகுணா கேட்டிருந்தாள். ஆயிரம் பேர் இதே வேலைக்கு மனுப்போட்டு முந்திக் கொண்டு நிற்கும் போது மேலதிகாரிகள் ராஜிநாமாவை மறுக்கவா செய்வார்கள்? சுகுணாவின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு மூன்று நாளில் புதிய சேவாதளத் தலைவி தாமரிஅக் குளத்துக்கு அனுப்பப்படுவாள் என்றும் அவளிடம் ‘சார்ஜ்’ கொடுத்துவிட்டுச் சுகுணா ரிலீவ் ஆகலாம் என்றும் சுகுணாவுக்கு மேலதிகாரியிடமிருந்து தபால் வந்திருந்தது. தாமரைக் குளத்துக்குப் பிரமுகர்கள் சிறகு ஒடித்து அனுப்புவதற்கு புதிய பட்டுப்பூச்சி ஒன்று பறந்து வருகிறதே என்று சுகுணா தன் மனதுக்குள் அநுதாபப்பட்டு வரப்போகிற துர்ப்பாக்கியவதிக்காக வருந்தினாள். பட்டினத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக கன்னிகாபுரம் போய் ரகுராமனை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரலாமா என்று சுகுணா அம்மாவைக் கேட்ட போது, “கண்டிப்பாகக் கூடாது பெண்ணே! மறுபடியும் வம்பு வளர்க்காதே?” - என்று அவளுடைய அம்மா அதற்கு மறுத்துவிட்டாள். |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |